Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தடை : டீக்கடைகளில் பிரசாரம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு

Posted:

மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல் நடத்தும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்கு, தமிழகத்தில், பல இடங்களில் அனுமதி அளிக்கவில்லை. "டீக்கடைகளில் நடக்கும் இந்த பிரசாரத்தை, தமிழக அரசு முடக்குகிறது' என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றஞ்சாட்டு கின்றனர்.நல்ல நிர்வாகம் : "மோடி டீக்கடை நடத்தியவர். அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது நிறைவேறாது' என்ற, காங்., தலைவர் மணிசங்கர் அய்யரின் விமர்சனத்தை, தன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த பா.ஜ., முடிவு செய்தது. டீக்கடைகளில் இருக்கும், சாதாரண மக்களுடன் கலந்துரையாடும், "வீடியோ கான்பரன்ஸ்' ...

தடுக்கிறது தன்மானம்... தயக்கத்தில் தோழர்கள்! : நாடி வந்தால் அரவணைக்க தி.மு.க., தயார்

Posted:

கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., கழற்றி விட்ட பின், "இணைந்து செயல்படுவோம்' என, அறிவித்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தன்மானம் தடுப்பதால், எதிரெதிர் திசையில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. "அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்' என, கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.தயக்கம் : அந்த அழைப்பை ஏற்று, தமிழகத்தில், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்துள்ளது. அதேநேரத்தில், தன்மானப் பிரச்னையில், தி.மு.க., அணியில் சேர, ...

ஆரத்தி எடுப்போருக்கு பணம் கொடுப்பது குற்றம் : வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Posted:

சென்னை: ""தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டாலோ, ஏதேனும் அரசியல் கட்சிக்கு, சாதகமாக செயல்பட்டாலோ, அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பேனர்களை அகற்ற, மூன்று நாட்கள், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறைய இடங்களில், பேனர்களை அகற்றி வருகின்றனர். நாளை, பேனர் அகற்றப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்படும்.பறக்கும் படை : அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பறக்கும் ...

ரேபரேலியில் சோனியா அமேதியில் ராகுல் : காங்கிரஸ் பட்டியல் "ரிலீஸ்'

Posted:

புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, காங்., கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 194 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. காங்., தலைவர் சோனியா, மீண்டும், உ.பி., மாநிலம், ரேபரேலியிலும், கட்சியின் துணைத் தலைவர் ராகுல், மீண்டும், அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகா மாண்டியா தொகுதியில் நடிகை 'குத்து' ரம்யாவும், பெங் களூரு தெற்கு தொகுதியில், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவராக இருந்த, நந்தன் நிலேகனியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில், இன்று தான், நிலேகனி முறைப்படி சேருகிறார். அதற்குள், அவரின் பெயர், வேட்பாளர் ...

சமூக வலைதளங்களில் கடும் மோதல் : பா.ஜ., - ஆம் ஆத்மி கட்சியினரால் பரபரப்பு

Posted:

புதுடில்லி: பா.ஜ., - ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையே, சமீபத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இரு கட்சியினரும், சமூக வலைத் தளங்களிலும், சூடான கருத்துக்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.முற்றுகை : ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் குஜராத்துக்கு சென்ற போது, கைது செய்யப்பட்ட தாக, வதந்தி பரவியது. இதனால், ஆத்திரம் அடைந்த, ஆம் ஆத்மி கட்சியினர், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமையகத்தை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தினர். பா.ஜ.,வினரும், அவர்களை திருப்பி தாக்கினர். இந்த வன்முறை, உ.பி.,யிலும் எதிரொலித்தது. அங்கு, பா.ஜ., அலுவலகம் முன், ...

மனைவிக்கு மாலை மாற்றி தொகுதியை ஒப்படைத்த லாலு

Posted:

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், வழக்கமாக போட்டியிடும் தொகுதியை, தன் மனைவிக்கு மாலை மாற்றி, விட்டு கொடுத்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழலில் சிக்கியதால், சிறை தண்டனை வழங்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்; 11 ஆண்டுகளுக்கு, தேர்தலில் போட்டியிட இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரான லாலு, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், மனைவிக்கும், மகளுக்கும், "சீட்' கொடுத்துள்ளார். வழக்கமாக இவர், போட்டியிடும், சரண் தொகுதியை இந்த முறை, ...

மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை கண்டு கவலைப்படவில்லை : இலங்கை அதிபர் ராஜபக் ஷே கொக்கரிப்பு

Posted:

கொழும்பு: ""சர்வதேச மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை கண்டு கவலைப்படவில்லை,'' என, இலங்கை அதிபர், ராஜபக் ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையில், விடுதலை புலிகளுடன் சண்டை நடந்த காலங்களில், பலர் காணாமல் போயினர். சரணடைய வந்தவர்களை, ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் புகார் உள்ளது. "இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, சர்வதேச மனித உரிமை கவுன்சில் தலைவர், நவநீதம் பிள்ளை, ஐ.நா.,வில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தற்போது ஜெனிவாவில் நடைபெறும், மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு ...

239 பேருடன் நடுவானில் மலேசிய விமானம் மாயம்: சென்னை பெண் உட்பட 5 இந்தியர்கள் கதி என்ன?

Posted:

கோலாலம்பூர் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்ற போது, நடுவானில் மாயமானது. பல மணி நேரமான பின்பும் விமானத்தின் கதி என்ன ஆனது என, தெரியவில்லை. சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து இந்தியர்களும், பல வெளிநாடுகளைச் சேர்ந்த, 23௯ பேரும் இந்த விமானத்தில் பயணித்தனர்.மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, இந்திய நேரப்படி, 11:10க்கு சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். ...

விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம்: ஓட்டுப்போட கடைசி வாய்ப்பை தவற விட்டுடாதீங்க!

Posted:

சென்னை : லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளன. மத்தியில், நிலையான நல்ல ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? முதலில், உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள். பெயர் இல்லாவிட்டாலும், கவலை வேண்டாம். வேட்பு மனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோரிடம், விண்ணப்பம் பெறப்படும் என, முதல் முறையாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேலும், இன்று 9ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, சிறப்பு முகாம் ...

மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted:

சென்னை: இலங்கையில் நடக்க உள்ள, மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன், இலங்கை அரசு சிறைபி டித்துள்ள, 177 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.நேற்று அனுப்பிய கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இரண்டு நாட்களுக்கு முன், உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன்பிறகும், இரண்டு கைது சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது, 177 தமிழக மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான, 44 படகுகளையும், பறிமுதல் செய்துள்ளனர். கொழும்பில், வரும் 13ம் தேதி, ...

வாரணாசியில் மோடி போட்டியா? : முரளி மனோகர் ஜோஷி அதிருப்தி

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உ.பி., மாநிலம், வாரணாசியில் போட்டியிடப் போவாக வெளியாகும் செய்திகளால், அந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி.,யும், பா.ஜ., மூத்த தலைவருமான, முரளி மனோகர் ஜோஷி, அதிருப்தி தெரிவித்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, நரேந்திர மோடி, இந்த லோக்சபா தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை, கட்சி மேலிடம், இன்னும் அறிவிக்கவில்லை. பா.ஜ.,வின் கோட்டையாக விளங்கிய, உ.பி.,யில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வளர்ச்சியால், பா.ஜ., செல்வாக்கு இழந்துள்ளது. நாட்டின் அதிக லோக்சபா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™