Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்"

Posted: 08 Mar 2014 09:03 AM PST

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. - அவ்விதமாக மாநில அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தால்தான், தமிழ் எழுத்துருக்களும், தமிழ் உள்ளீடு முறைகளும் அனைத்து நவீன கருவிகளிலும் இடம்பெறுகின்ற ...

சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல் டிமென்ஷியா நோயை தோற்றுவிக்கும்

Posted: 08 Mar 2014 08:48 AM PST

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, ...

கிரிக்கெட்: ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை

Posted: 08 Mar 2014 08:47 AM PST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தை இலங்கை வென்றுள்ளது. மீர்பூரில் சனியன்று நடந்த பந்தயத்தின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார். இலங்கை ...

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Posted: 08 Mar 2014 08:29 AM PST

ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லக்கூடிய எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிகட்டத்தை தாங்கள் அடைந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தாம் கருத்தரித்திருக்கலாம் என்று நினைத்தால், கடையில் இருந்து ஒரு சிறு பட்டியை வாங்கிவந்து அதனை தமது சிறுநீரில் நனைத்து பின்னர் அதில் ஒரு கோடு தெரிகிறதா அல்லது இரண்டு கோடுகள் தெரிகிறதா என்பதை வைத்து தாம் கருத்தரித்துள்ளோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுபோல, ஒருவருக்கு ...

‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது

Posted: 08 Mar 2014 07:50 AM PST

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil_Daily_News_96411859990.jpg - உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரே கேமரா மூலம் ஒரே ஷாட்டில், 23 நிமிடங்கள் 25 வினாடிகள் கொண்ட காட்சி, சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, 'நாதஸ்வரம்' தொடருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு 'நாதஸ்வரம்' தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது பகுதியையொட்டி, கடந்த 5ம் தேதி 'நாதஸ்வரம்' தொடர், காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 08 Mar 2014 07:21 AM PST

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

எல்லா நாளும் நல்ல நாளே...

Posted: 08 Mar 2014 07:19 AM PST

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகின்றது. நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரே கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு ...

ஆன்மிக தகவல்கள்!!!

Posted: 08 Mar 2014 07:14 AM PST

*வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா? - காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது ...

நவீன அபிமன்யுக்கள்

Posted: 08 Mar 2014 06:59 AM PST

நவீன அபிமன்யுக்கள் சிறிய வட்டம் o குறுகிய விட்டம் - அறிந்தோ அறியாமலோ, நுழைந்து விட்டாய் உள்ளே. அழைத்தாலும் வர மறுக்கிறாய் ! . படிக்கா பாமரன் எனில், அறியாமை என்றிடலாம். படித்த பட்டதாரியாயின் , பீடித்த முதிர்ச்சிக்குறையோ ? சிறிய வட்டமோ o பெரிய வட்டமோ O நுழையாதீர் உள்ளே X குறுகிய மனப்பான்மை என்ற கள்ளம் மிகு குணக்கேடு அது. தெள்ளத்தெளிவான உண்மையிது தென்றலை ஒத்த ஈகரை உறவுகளே. ரமணியன்

மலேசியாவில் கடும் அதிர்ச்சி : மாயமான விமானம் விபத்துக்குள்ளானது

Posted: 08 Mar 2014 06:48 AM PST

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை பெய்ஜிங் நோக்கி புறப்பட்டு காணாமல் போன விமானம் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு விமானத் துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் வியட்நாமின் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு படகுகளில் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ...

தாயில்லாமல் நான் இல்லை !!

Posted: 08 Mar 2014 06:44 AM PST



உங்கள் மதிப்பு

Posted: 08 Mar 2014 06:42 AM PST

ஒரு பிரபல பேச்சாளர் ஒரு செமினாரில் இருபது டாலர் பில்லை உயர்த்திக் காட்டி, "இந்த இருபது டாலர் பில் உங்களுக்கே உரியது நீங்கள் இதை வைத்து இருபது டாலருக்கு இந்த ஹோட்டலில் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். உங்களில் யாருக்கு இது வேண்டும்?" என்று கேட்டார். இலவசாமாக கிடைக்கிற எந்தப் பொருளுக்கும் எப்போதும் ஒரு டிமாண்ட் இருக்குமே… அதனால், எல்லோரும் கை உயர்த்தினார்கள். உடனே அந்தப் பேச்சாளர், "சரி… உங்களில் ஒருவருக்கு இந்த $20ஐ நான் கொடுக்கத்தான் போகிறேன். ஆனால் அதற்கு முன் ஒன்று செய்யப் போகிறேன்." என்றவர், ...

விரைவில் இரண்டு இயங்குதளங்களுடன் கூடிய திறன்பேசிகள் அறிமுகம்!

Posted: 08 Mar 2014 02:41 AM PST

இன்னும் 6 மாதங்களில் விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட டூயல் பூட் (Dual boot) திறன்பேசிகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது. இந்தியாவைச் சேர்ந்த கார்போன் நிறுவனம் இந்த வகை செல்பேசியை வெளியிடவுள்ளதாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கார்போன் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டு இயங்குதளங்களையும் பயன்படுத்தும் வகையிலான செல்பேசிகளை இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -102)

Posted: 08 Mar 2014 01:51 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

"ஈகரையின் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் "

Posted: 08 Mar 2014 12:14 AM PST

ஈகரை சகோதரிகளுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்



  ரமணியன்

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.

Posted: 07 Mar 2014 08:04 PM PST

* நகரங்கள் * கோயில் நகரம் மதுரை. மாங்கனி நகரம் சேலம். முத்து நகரம் தூத்துக் குடி . பஞ்சாலை நகரம். கோiவை. பட்டு நகரம் காஞ்சி . பின்னலாடை நகரம் திருப்பூர் . பூக்கள் நகரம் உதகை. நெற் களஞ்சிய நகரம் தஞ்சாவூர் . அல்வா நகரம் திருநெல்வேலி . வெயில் நகரம் வேலூர் . நகரின் பெயரை மனனம் செய்து மனதில் நன்குப் பதிப்பீரே மதிப்பெண் நன்று பெறுவீரே…!

மிகவும் பிரபலமான ஓம் நமசிவாய டிவி தொடர் மீண்டும் தமிழில்

Posted: 07 Mar 2014 07:31 PM PST

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான ஓம் நமசிவாய டிவி தொடர் மீண்டும் தமிழில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரபாகிறது .அதை youtube  மூலமும் காணலாம் அனைத்து வீடியோகளையும் காண http://www.youtube.com/channel/SW6I13Ph2vTk8

இலவச மென்பொருள் - Photo Pos Pro

Posted: 07 Mar 2014 07:14 PM PST

அன்பு நண்பர்களே, சில காலம் முன்பு வரை $59.90 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த Photo Pos Pro என்ற மென்பொருள் இப்போது இலவசமாக கிடைக்கிறது. நிழற்படம், வரைகலை, படங்கள் ஆகியவற்றில் பொருத்தமான மாற்றங்களை செய்ய தேவையான வசதிகள் இதில் உள்ளன. இந்த மென்பொருளைக்குறித்து சில கணினி வல்லுநர்களால் நல்ல மென்பொருள் என்ற பாராட்டுதலைப் பெற்றுள்ளது. கோப்பின் கொள்ளளவு 45.66 எம்.பி. பதிவிறக்கி பயன்படுத்த விளைவோர் செல்ல வேண்டிய முகவரி: http://www.photopos.com/Photo-Pos-Pro-Image-Editor.asp

ந.க.துறைவன் புதுக்கவிதை

Posted: 07 Mar 2014 07:08 PM PST

காதல் இந்திய இளைஞனின் இதய பூர்வமான காதலை இணைத்துப் பார்ப்பதைவிட-இங்கே பிரித்து வைக்கப் பிரியப்படுகிறவர்களே அதிகம் . இப்படிச் செய்வது பொறாமையால் அல்ல. அறியாமையால் தான். சாதிகளுக்கும் மதங்களுக்கும் கைவிலங்கிடப்படக் காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதுவே மொழிகளையும் தேசியத்தையும் கூட இணைக்கும் பாலமாகும் . இது விரும்புகிறவர்களுக்கு கரும்பின் இனிப்பாகும். நடிப்பவர்களுக்கு வெறுப்பாகும். எவருக்கு வெற்றியடைகிறதோ அதுவே மனித நேயக் காதல். டிசம்பர்-1988 . இனி்-கவிதை ...

வேலன்:-வித்தியாசமான யூடியூப் வீடியோ டவுண்லோடர்.

Posted: 07 Mar 2014 07:05 PM PST

சாதாரண யூடியூப் டவுண்லோடர் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நவீன வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது.அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள்.பகிரப்பட்ட வீடியோக்கள்.என அதிக வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர்  உள்ளது. 11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் பார்க்கவிரும்பும் வீடியோவின் யூஆர்எல் காப்பிசெய்து இதில் உள்ள டவுண்லோடு லிங்க்கில் பேஸ்ட் செய்யவும்.இதில் டவுண்லோடின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™