Daily Thanthi |
- உலகம் முழுவதும் மகளிர் தினம்
- நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: நாட்டுப்படகை கவிழ்க்க முயற்சி 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
- தொண்டி அருகே பயங்கர விபத்து: பள்ளிக் குழந்தைகள் 3 பேர் பலி வேன் மீது லாரி மோதல்
- தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உறுதி சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தகவல்
- தேர்தல் விதிமுறைகள் அமல் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி மும்முரம்
- தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் நெல்லை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பி.எச்.பாண்டியன் பேச்சு
- நீதிபதிகளுக்கு எதிராக முஷரப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி தனிக்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
- மண்டைக்காட்டில் கடல் சீற்றம் அலை இழுத்து சென்ற கேரள பெண்ணை நீச்சல் வீரர்கள் மீட்டனர்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது
- பாராளுமன்ற தேர்தல்: மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
| Posted: 07 Mar 2014 11:40 AM PST |
| நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: நாட்டுப்படகை கவிழ்க்க முயற்சி 6 மீனவர்கள் உயிர் தப்பினர் Posted: 07 Mar 2014 11:36 AM PST ராமேசுவரம் நடுக்கடலில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டுப்படகினை கவிழ்க்க நடந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர். கவிழ்க்க முயற்சி பாம்பன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மெரில்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பால முருகன், குமார், பாலா, பிரான்சிஸ், நாகராஜ் உள்பட 6 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர் கள் தென் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த னர். பின்னர் நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெ டுக்கும் பணியில் ஈடுபட்ட னர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வழியாக வந்த விசைப்படகு நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகு மீது மோதுவது போல் வந்த பின்னர் நங்கூரம் கட்டப் பட்டிருந்த கயிற்றின் மீது உர சியதால் அந்த நாட்டுப்படகு கவிழும் நிலை ஏற்பட்டது. இதில் படகில் இருந்த ஒரு மீனவர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார். உடனே மற்ற மீனவர்களை கடலில் தத்த ளித்த மீனவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த னர். கண்டனம் இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் கூறியதாவது:- பாம்பன் அருகே தென் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை கவிழ்க்க அந்த வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் முயற்சி செய்துள்ளனர். நள் ளிரவு நேரம் என்பதால் சம் பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு எண்ணையோ, மீன வர்களையோ சரியாக அடை யாளம் காண முடியவில்லை. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசால் தடை செய்யப் பட்ட வலைகளை பயன்ப டுத்தி மீன்பிடிப்பதை கண் டித்து நாட்டுப்படகு மீனவர் கள் போராட்டம் நடத்தி னோம். இதனால் ஆத்திரம டைந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகு மீன வர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தற் போது இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாசில்தார் மற்றும் மீன் துறை அதிகாரிகளிடம்மனு கொடுத்துள்ளோம். மேலும் நாட்டுப் படகு மீன வர் களுக்கு மீன்துறையினரும், கடலோர போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். image: category:Tagging: |
| தொண்டி அருகே பயங்கர விபத்து: பள்ளிக் குழந்தைகள் 3 பேர் பலி வேன் மீது லாரி மோதல் Posted: 07 Mar 2014 11:34 AM PST தொண்டி, தொண்டி அருகே வேன் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர், மாணவி சாவு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவைச் சேர்ந்த குழந்தைகள் தொண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களை தினமும் காலை, மாலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனியார் மினி வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை 12 மாணவ–மாணவிகளை ஏற்றி வந்த மினி வேன் வழக்கம்போல் கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளைக்கு சென்றுகொண்டு இருந்தது. கொத்துவாபள்ளி அருகே பாலத்தில் சென்றுகொண்டு இருந்தபோது எதிரே கொல்லத்தில் இருந்து வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் வேன் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வேனின் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பயணம் செய்து வந்த படையாச்சி தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணகுமார் (வயது9), 6–ம் வகுப்பு மாணவியான கோவிந்தன் மகள் பிரியா(11) ஆகியோர் மூளை சிதறி வேனுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மாணவி பலி இதைகண்ட மற்ற மாணவ–மாணவிகள் அலறியபடி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு உடனே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேனில் இருந்து அப்பாஸ் மகள் 5–ம் வகுப்பு மாணவி ஆர்த்தி (10), பெரியசாமி மகள் 1–ம் வகுப்பு மாணவி ஜீவிதா (6), சேகர் மகள் 11–ம் வகுப்பு மாணவி சரவணபிரியா (17) ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். வேன் டிரைவரும் மற்ற பள்ளி குழந்தைகளும் லேசான காயங்களுடன் தப்பினர். இவர்கள் அனைவரும் தொண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மாணவி ஆர்த்தி பரிதாபமாக இறந்து போனார். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். டிரைவர் கைது இந்த பயங்கர விபத்து பற்றி தகவல் அறிந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலியான மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். டிரைவரான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் பால்ராஜ் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்து தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category: |
| Posted: 07 Mar 2014 11:25 AM PST சென்னை, பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் தேர்தல் கமிஷனால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டம் தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதி அளித்ததுடன், சில ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அமைதியாக நடைபெற அதற்கு தலைமை தேர்தல் அதிகாரியும் தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற உறுதி பூண்டுள்ளதாக கூறினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், வி.எஸ்.சேதுராமன், தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ஐ.பரந்தாமன், தே.மு. தி.க. சார்பில் வி.சி.சந்திரகுமார், ப.பார்த்தசாரதி, காங்கிரஸ் சார்பில் கோவை தங்கம், பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் சரவணபெருமாள், கே.டி.ராகவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனிச்சாமி, சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகநயினார், ரமணி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் செந்தில்குமார், மகேந்திரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரஜினிகாந்த், ஒய்.ஏ.நாதன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கட்சிகளின் கருத்துகளை எடுத்துரைத்தனர். நேர்மையான தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது. அதன் பின்னர் நிருபர்களுக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் அளித்த பேட்டி வருமாறு:- தி.மு.க:- தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று பிரவீன்குமார் விளக்கி கூறினார். எங்களது சந்தேகங்களை எழுப்பியபோது அதற்கு தகுந்த பதிலை அவர் கொடுத்தார். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கும் அவர் உறுதி அளித்தார். இரட்டை இலை சின்னத்தை மறைப்பதற்கு தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தோம். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதை அனுப்பி வைத்திருப்பதாகவும், அங்கிருந்து பதில் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். அதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். தவறான புகாரால் சோதனை காங்கிரஸ்:- வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்திக்க செல்லும்போது, போட்டி வேட்பாளர் வேண்டுமென்றே பறக்கும் படைக்கு தவறான தகவல் கொடுத்துவிடுகின்றனர். எனவே வேட்பாளரின் கார்களை தடுத்து நிறுத்தி பணம் இருக்கிறதா என்று சோதனை செய்கின்றனர். பணம் இல்லை என்று உறுதி செய்த பிறகு அனுப்பிவிடுகின்றனர். இரண்டு தெருக்கள் தாண்டிய பிறகு மீண்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்கின்றனர். அதுபற்றி கேட்டால் மீண்டும் புகார் வந்துள்ளதாக கூறுகின்றனர். பொய்யான புகாரை வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு 15 முறை இப்படி சோதனை செய்தால் எப்படி வாக்கு சேகரிக்க செல்ல முடியும்? எனவே இதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இது நியாயமில்லை என்று பிரவீன்குமார் குறிப்பிட்டார். வேட்பாளரின் பெயர் இரண்டு இடத்தில் இருந்தால், பட்டியலில் இருந்து பெயரை நீக்கி விடுகின்றனர். இதனால அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். அவருக்கு தெரியாமலே மற்றொருவர் சேர்த்திருந்தால், அந்த வேட்பாளர் பாதிக்கப்படுவார் என்று கூறினோம். வேட்புமனுவில் உள்ள கையெழுத்தை சரிபார்த்து பாதிப்பை தவிர்த்துவிடுவோம் என்று பிரவீன்குமார் உறுதி அளித்தார். பிரசார செலவு தே.மு.தி.க:- வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் அந்த வேட்பாளரின் தேர்தல் செலவை கணக்கில் எடுக்கின்றனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளரை அறிவித்துவிட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். எனவே தற்போது செய்யும் பிரசார செலவையும் அந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறினோம். சட்ட விதிகளில் இதுபோன்ற குறைகள் இருப்பதை உணர்ந்து, இதற்கான திருத்தங்களை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று பிரவீன்குமார் கூறினார். இங்குள்ள போலீசார், ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கிறார்கள். ஏற்காடு இடைத்தேர்தலில் அமைச்சர் ஒருவரை வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) சந்தித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர் அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இப்படி இருந்தால் யார்தான் தேர்தல் கமிஷனை கண்டு பயப்படுவார்கள்? ஆளும் கட்சியை கண்டுதான் பயப்படுவார்கள். எனவே மத்திய அரசு அலுவலரை வைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கண்காணிப்பைபலப்படுத்த வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சி:- இந்த தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், புதிய தேர்தல் விதிகளைப் பற்றியும் பிரவீன்குமார் விளக்கம் அளித்தார். தற்போதுள்ள தேர்தல் கண்காணிப்பு போதாது. அதை மேலும் பலப்படுத்தவும், தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். பதற்றமுள்ள பகுதிகளில் அதிக பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு எதிர்ப்பு இருந்தால் அந்த மக்கள் இருக்கும் பகுதியிலேயே வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்று கோரினோம். அதை பரிசீலிப்பதாக பிரவீன்குமார் உறுதி அளித்தார். இவ்வாறு அரசியல் கட்சிகள் சார்பில் கூறப்பட்டது. ஆம் ஆத்மிக்கு மறுப்பு முன்னதாக அனைத்து கட்சிகள் கூட்டம் தொடங்கும்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த காஜா முகைதீன், ஷபி ஆகியோர் தங்களையும் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அங்கீகாரம் பெற்ற கட்சிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று பிரவீன்குமார் கூறி, அனுமதி மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த அவர்கள், எங்களின் ஜனநாயக உரிமையை பறித்துவிட்டனர்; உரிமையை பெற போராடுவோம் என்று குறிப்பிட்டனர். News Category:Hot Topic Icon : News Group Category: |
| தேர்தல் விதிமுறைகள் அமல் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி மும்முரம் Posted: 07 Mar 2014 11:23 AM PST நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளின் படி அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விளம்பரங்கள் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர் விளம்பரம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துடன் கூடிய விளம்பரங்களை மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் அழித்து வருகிறார்கள். பல விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தினார்கள். இதனை மாவட்ட கலெக்டர் கருணாகரன் பார்வையிட்டார். பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் விளம்பர போர்டுகளை அகற்றும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மு.கருணாகரன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 3 குழுக்கள் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளது. அதன் அடிப்படையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் சுவர் விளம்பரங்களை தாமாகவே முன்வந்து நீக்கிட அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் அரசு மூலம் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அரசு ஊழியர்கள் மூலம் அகற்றப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை அகற்றி வருகின்றனர். இனி எழுதப்படும் சுவர் விளம்பரங்கள், வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களை நீக்கும் பணிக்கான செலவினத் தொகை அந்தந்த கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தில் சேர்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார். இந்த ஆய்வின்போது, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் லட்சுமி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பெருமாள், தாசில்தார் சுவர்ண கோமதிநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயக சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். விக்கிரமசிங்கபுரம் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு, விக்கிரமசிங்கபுரம் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அதிகாரி தர்மன் ஆகியோர் தலைமையில் நேற்று நகரசபைக்கு உட்பட்ட பகுதியான பாபநாசம்-அம்பை மெயின் ரோட்டில் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த கட்சி விளம்பரங்களை நகரசபை ஊழியர்கள் அழித்தனர். இதே போல பேனர்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளையும் அப்புறப்படுத்தினர். மேலும் மெயின் ரோட்டிலும், தெருக்களிலும் உள்ள அந்தந்த கட்சிக் கொடி கம்பங்களில் கட்சி வர்ணம் தெரியாத அளவுக்கு கட்சி நிர்வாகிகள் மறைத்தனர். மேலும் தலைவர்களின் சிலைகளும் துணியால் மூடப்பட்டது. image: category: |
| Posted: 07 Mar 2014 11:18 AM PST நெல்லை, "பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்" என்று நெல்லை சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பி.எச்.பாண்டியன் பேசினார். செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஆர். கே.வி. மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்காக உழைத்த குடும்பத்தைச் சேர்ந்த கே.ஆர்.பி.பிரபாகரனை, நெல்லை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறுத்தி உள்ளார். அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதில் நெல்லை சட்டசபை தொகுதியின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். நெல்லை தொகுதி அ.தி.மு.க. தொகுதியாகவே இருந்து உள்ளது. எம்.ஜி.ஆரால் வெற்றிப் பாதையில் அழைத்து செல்லப்பட்ட தொகுதி. எனவே எம்.ஜி.ஆருக்கு காணிக்கையாக ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க நெல்லை தொகுதியில் வெற்றியை தேடித் தரவேண்டும். ஓட்டு திரட்ட வேண்டும் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தலைவர்கள், நிர்வாகிகள் பதவிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார். உங்களை நம்பித்தான் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. வருகிற 29-ந் தேதிக் குள் யார்-யாருடன் சேருகிறார்கள்? என்பது தெரிந்துவிடும். அவர்களின் ஓட்டுகள் பிரியும் போது அ.தி.மு.கவுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். 4 முனையாக ஓட்டுகள் பிரியும் போது நமக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். நமது ஓட்டுகளை எந்த பக்கமும் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓட்டு வங்கியை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த கட்சி எங்கு சென்றாலும் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் இல்லை. எனவே கழக நிர்வாகிகள் தேர்தல் பணியை வேகமாக செய்யுங்கள். ஒவ்வொருவரும் வாக்காளர்களை சந்தித்து பேசி ஓட்டு திரட்ட வேண்டும். அரசியலை வியாபாரமாக்குவதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது. தி.மு.க.வில் ரூ.10 கோடியை கட்டி விட்டு இங்கு வருகிறவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். பண மூட்டையை கட்டிக் கொண்டு வருகிறவர்களை மக்கள் திருப்பி அனுப்ப வேண்டும். கைமாறு மக்களுக்காக உழைப்பவர்களையே தேர்ந்து எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட கே.ஆர். பி. பிரபாகரனை நெல்லை தொகுதியில் ஜெயலலிதா நிறுத்தி உள்ளார். அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா நெல்லை மாவட்டத்துக்கு மட்டும் 4 மேல்சபை எம்.பி.க்களை தந்து உள்ளார். இந்திய வரலாற்றில் ஒரே மாவட்டத்தில் இத்தனை எம்.பி.க்கள் கிடையாது. அதற்கு கைமாறாக நெல்லை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க வேண்டும். இவ்வாறு பி.எச்.பாண்டியன் பேசினார். கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், நெல்லை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சி ஆகும். யார், யாருடன் சென்றாலும் பரவாயில்லை. இன்று முதல் தேர்தல் முடியும் வரை மற்ற பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு முழுநேரமும் நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும்" என்று கூறினார். இந்த கூட்டத்தில், மனோஜ் பாண்டியன் எம்.பி., நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன் எம்.பி., நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., விஜிலா சத்தியானந்த் எம்.பி., மேயர் (பொறுப்பு) ஜெகநாதன், வேட்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். image: category: |
| நீதிபதிகளுக்கு எதிராக முஷரப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி தனிக்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Posted: 07 Mar 2014 11:15 AM PST இஸ்லாமாபாத், நீதிபதிகள் ஒருதலைப் பட்சமாக நடப்பதாக முஷரப் தாக்கல் செய்த மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. முஷரப் புதிய மனு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப்(70) மீது பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன. இதில் ஒன்றான தேசதுரோக வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட தனிக்கோர்ட்டு விசாரிக்கிறது. இந்த கோர்ட்டில் முஷரப் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனிக்கோர்ட்டு நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மனு தள்ளுபடி இந்த மனுவை தனிக்கோர்ட்டு நீதிபதி பைசல் அராப் தள்ளுபடி செய்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கினார். முஷரப் தாக்கல் செய்த மனுவில் எவ்வித அடிப்படை தகுதியும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என குறிப்பிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மற்றொரு வழக்கு மேலும் 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தது தொடர்பாக முஷரப் மீது தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு இஸ்லாமாபாத்திலுள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் போராட்டம் காரணமாக முஷரப் சார்பு வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனை அடுத்து விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். image: category:Tagging:News Group Category: |
| மண்டைக்காட்டில் கடல் சீற்றம் அலை இழுத்து சென்ற கேரள பெண்ணை நீச்சல் வீரர்கள் மீட்டனர் Posted: 07 Mar 2014 10:05 AM PST மணவாளக்குறிச்சி, மண்டைக்காட்டில் நேற்று திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது ராட்சத அலை பெண் பக்தரை இழுத்து சென்றது. அவரை நீச்சல் வீரர்கள் மீட்டனர். திருவிழா மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஏராளமான கேரள பக்தர்கள் இருமுடிகட்டி வந்து அம்மனை தரிசித்து வருகிறார்கள். தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடாவிட்டாலும், கால்களை நனைத்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கேரள பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கடற்கரையில் போலீசாரும், நீச்சல் படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றம் இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மண்டைக்காடு கடலில் திடீர் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி வந்தன. இதனால் கடற்கரை அருகில் பக்தர்கள் செல்லவேண்டாம் என்று பாதுகாப்பு படை போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் எச்சரித்தனர். கடற்கரையில் தடுப்பு கயிறும் கட்டினர். இருந்தாலும் பக்தர்கள் கடலுக்கு சென்று கால்களை நனைத்து சென்றனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த ராதிகா (வயது 50) என்று பக்தர் கால்களை நனைக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி கொண்டார். அப்போது அங்கு நின்ற நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவரை பத்திரமாக மீட்டனர். தடை இதைத்தொடர்ந்து பக்தர்கள் கடலில் குளிக்கவும், கால்களை நனைக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். image: category: |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது Posted: 07 Mar 2014 09:30 AM PST பொள்ளாச்சி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்சேர்ப் பதற் கான சிறப்புமுகாம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) அனைத்து வாக்குச் சாவடி மையங் களிலும் நடைபெறு கிறது. கடைசி வாய்ப்பு தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 24–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால் பாறை (தனி), ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் இடம் பெற செய்ய கடைசியாக வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இது குறித்து பொள்ளாச்சி சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே கூறியதாவது:– பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள (பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகா) அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 10.1.2014 அன்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதில் பெயர் விடுபட்டு, 18–வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம்–6 பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங் களுடன் அங்குள்ள வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர இதுவே கடைசி வாய்ப்பாகும். இவ்வாறு அவர் கூறினார். image: category: |
| பாராளுமன்ற தேர்தல்: மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு Posted: 07 Mar 2014 09:16 AM PST சென்னை, அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார். அப்போது 24–4–2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
