Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 07 Mar 2014 02:45 PM PST

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 07 Mar 2014 12:52 PM PST

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

வெப்பநிலை உயர்வால் மலேரியா தாக்கம் அதிகரிக்கும்

Posted: 07 Mar 2014 12:41 PM PST

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மலேரியா நோய்த்தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். எத்தியோப்பியா மற்றும் கொலம்பியாவின் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கீடுகளைக் கொண்டு அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டில் மலேரியா நோயினால் 6,27,000 பேர் இறந்துள்ளதாக இந்தக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 1990 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலான மேற்கு கொலம்பியாவின் ஆன்டிகுவா பகுதியின் மலேரியா பதிவுகளையும், 1993 ஆம் ...

வெரிகோஸ் வெயின்ஸ் - Varicose veins

Posted: 07 Mar 2014 12:38 PM PST

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு சுருட்டி கொள்ளும் ஒரு வகை நோய். இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சனை என்பது கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது. இதயம் தான் உடல் உறுப்புக்கள் அத்தனைக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பு‌கிற முக்கிய இடம்னு எவ்லோருக்கும் தெரியும். ...

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Posted: 07 Mar 2014 12:32 PM PST

பாரீஸை சேர்ந்த நிறுவனமொன்று உலகெங்கும் உள்ள 29 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், இந்திய ஆண்கள் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவது, தூங்குவது மற்றும் தங்களது தோற்றத்தை பேணிக்காப்பது போன்றவற்றில் செலவழிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், வீட்டில் பெண்களுக்கு உதவியாக இருப்பதிலும், அவர்களின் வேலையை பகிர்ந்து கொள்வதிலும் மிக குறைவான நேரத்தில் செலவிடும் இவர்கள் டிவி பார்ப்பது, ரேடியோ கேட்பது போன்ற பொழுதுபோக்கும் செயல்களில் நாளொன்றுக்கு 1 மணி நேரத்தை செலவிடுகின்றனராம். பாரீஸை சார்ந்த பொருளாதார மேம்பாட்டு ...

அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு அம்பலம்!

Posted: 07 Mar 2014 12:31 PM PST

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார். பின்னர் ...

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Posted: 07 Mar 2014 12:25 PM PST

பொதுவாக சிறிய குடும்பங்களில் எளிதாக நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட குழந்தையின் மனதை வெகுவாக பாதித்துவிடும். அதாவது பெற்றோர் தங்களது குழந்தைகளின் முன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். வீட்டில், ஆண் - பெண் என்ற வேறுபாட்டை பற்றி பெரிதாகப் பேசக் கூடாது. அதாவது, நான் ஆண், அதனால் இதை செய்வேன், நீ இதை செய்யக் கூடாது என்று பேசுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவையும், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். நான் பெண் என்பதால் அவருக்கு அடங்கிப் ...

தில்லையாடி வள்ளியம்மை

Posted: 07 Mar 2014 12:23 PM PST

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி'வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை. வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடி அலைந்தனர். ...

ராணி மங்கம்மாள்

Posted: 07 Mar 2014 12:21 PM PST

பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்ட பெண்மணி ராணி மங்கம்மாள். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. ...

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Posted: 07 Mar 2014 11:41 AM PST

இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர். புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற ...

பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த்

Posted: 07 Mar 2014 11:32 AM PST

சென்னை: ஒரு பெண் முதலமைச்சராக இருக்கின்ற தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பெண்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தான் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மகாத்மாவின் ...

காணாமல் போகும் கண்மாய்கள்!

Posted: 07 Mar 2014 11:24 AM PST

தமிழ்நாடு முழுவதும் கண்மாய்கள் நீர் தேக்கமில்லாமல் குப்பைகளைச் சேகரிக்கும் இடமாக மாறியிருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் அள்ளி வீசுகின்றனர் "விழித்தெழு மதுரை' அமைப்பினர். கண்மாய்கள், நாள்தோறும் நெகிழிக் (பிளாஸ்டிக்) குப்பைகள், மிருகக் கழிவுனுகள் டன் கணக்கில் கொட்டும் இடங்களாக உருமாறியுள்ளது. எல்லா கண்மாய்களும் கருவேல மரப் புதர்கள் மண்டி, நிலத்தடி நீரை முழவதும் உறிஞ்சப்பட்டு மண் வெடித்து, வறண்டு கிடக்கிறது. இதனால் வரும் காலங்களில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்கின்றனர். வைகை ...

ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்!

Posted: 07 Mar 2014 11:22 AM PST

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத, கொடிய நிகழ்வு நடந்த ஓர் இடத்தில் நிற்கிறேன் என்ற எண்ணம் மனதை வலிக்கச் செய்தது. 2000க்கும் அதிகமான மக்கள் ரௌலட் சட்டத்தை அமைதியான முறையில் எதிர்ப்பதற்காக 13 ஏப்ரல் 1919 அன்று கூடியிருந்தனர். சர் மைக்கேல் டயர், கேட்டை இழுத்து மூடி விட்டு நாலாபுறமும் சூழ்ந்திருந்த சிப்பாய்களுக்கு ஷூட்டிங் ஆர்டர் கொடுக்க, அதன் பின் அடர் மழை போல நடந்த துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள். ரத்தக் கறை படிந்த இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் ...

அசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்

Posted: 07 Mar 2014 11:19 AM PST

அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகிய தளங்கள் கோலோச்சி இருந்தன. ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை ...

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களைத் தோற்கடிப்போம்!

Posted: 07 Mar 2014 11:15 AM PST

'குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால்தான் நிகழ்கிறது!' - உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு என்னென்ன தொற்றுநோய்கள் பரவுகின்றன, அதில் இருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது? வேம்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் முரளிதரன் ஆலோசனை தருகிறார்... சளி, இருமல் : வைரஸ், பாக்டீரியா ...

தொடர் நடையால் மூட்டு தேயுமா ?

Posted: 07 Mar 2014 11:12 AM PST

'எனக்கு 45 வயது. உடல் எடை 76 கிலோ இருக்கிறேன். நீண்ட நேரம் நடந்தால் மூட்டு வலிக்கிறது. மூட்டு வலிப் பிரச்னை வருவதற்கு உடல் பருமன் ஒரு காரணமாக இருக்குமா?' டாக்டர் செந்தில்வேலன், எலும்பு மூட்டு மருத்துவர், சென்னை 'மூட்டு வலிக்கு மிக முக்கியக் காரணமே உடல் பருமன்தான். உடலின் எடையை நம் கால் மூட்டுகள் தாங்குகின்றன. உடல் எடையைத் தாங்கும் விதத்தில், மூட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக உடல் பருமனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டு, குறுத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால், ...

தரையில் படுப்பது தவறா?

Posted: 07 Mar 2014 11:08 AM PST

'கட்டாந்தரையில் படுத்தால், உடலில் சக்தி குறைந்துவிடும் என்கிறார் என் அம்மா. எனக்கு வெறும் தரையில் படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் சித்தர்கள், யோகிகள் எல்லோருமே தரையில்தான் படுத்தனர். இதற்கு விளக்கம் தர இயலுமா?'' டாக்டர் ஆர்.கணேசன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், உடுமலைப்பேட்டை. ''பொதுவாக மனித உடலானது பல வளைவுகளையும் நெளிவு சுளிவுகளையும் உள்ளடக்கியது. அதிலும் நமது முதுகுத் தண்டுவடம் S வடிவத்தில் அமைந்திருக்கும். நாம் தரையில் படுத்து உறங்கும் நேரத்தில் அது ...

அவளுக்கும் தெரியும் ..

Posted: 07 Mar 2014 11:04 AM PST

கண்ணாடி முன் நின்று கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள் அவளுக்கும் தெரியும் ... வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு குடைபிடித்து தெருவில் நடந்தாள் அவளுக்கும் தெரியும் ... அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள் தெரு முனையில் அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து சென்ட்டால் அவனோடு அவளுக்கும் தெரியும் .. காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள் ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு. அப்போதும் தெரியும் அவளுக்கு அவன் இச்சை தீர அவளை இம்சித்து முடித்து அவள் ...

வெப்ப நோய்களுக்கு வெட்டி வேர்!

Posted: 07 Mar 2014 10:54 AM PST

கோடைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே அனல் அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும். பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் தலைகாட்டத் தொடங்கிவிடும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் இதை உபயோகப்படுத்தலாம். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்துமே மகத்தானவை. வெட்டி வேரை குரு வேர், விழல் வேர், வீரணம், ...

உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Posted: 07 Mar 2014 10:52 AM PST

குடும்பத்தில், மகள், மனைவி, சகோதரி, தாய், பாட்டி என்று எந்த வடிவத்தில் இருந்தாலும், பெண் பெருமைக்குரியவள். அழகு, செயல், நளினம், கூர்ந்த அறிவு இவற்றுடன் இயற்கை தந்திருக்கும் 'தாய்மை' என்னும் பெருங்கொடை. பிறந்தது முதல் பெண் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள், எச்சரிக்கை விதிமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் எக்கச்சக்கம்.  இன்று, எல்லா வயதுப் பெண்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்னைகளும் சவால்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. வீடு, குழந்தைகள், வேலை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து வாழ்வது ...

சிறுதானிய சமையல்

Posted: 07 Mar 2014 10:44 AM PST

சோளப் பாயசம் தேவையானப் பொருட்கள்: நாட்டுச் சோளம் - 2 கப் பார்லி - 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன் கேசரி பவுடர் - சிறிதளவு பனை சர்க்கரை - தேவைக்கேற்ப செய்முறை: நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, நீர் சேர்த்து மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும். பிறகு, அரைத்த பார்லி மற்றும் நாட்டுச் சோளத்தை, பெரிய கண்ணுள்ள  வடிகட்டியில் வடிகட்டினால், அதிலுள்ள சக்கைகள் நீங்கி விடும். பிறகு அந்தக் கலவையில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, ...

மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்!

Posted: 07 Mar 2014 10:36 AM PST

ஷிவானிக்கு 32 வயது. ஒரு பிரபல ஸ்பாவில் பியூட்டிஷியனாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் ஷிவானி, இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். முதல் பிரசவம்போல இல்லாமல், இந்த முறை அவரது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கச் செய்துவிட்டது கர்ப்பம். எதைச் சாப்பிட்டாலும், சாப்பிட நினைத்தாலும்... வாந்தி. அவரைப் பாடாய்ப்படுத்தியது, மார்னிங் சிக்னஸ் எனப்படும் மசக்கைப் பிரச்னை. பொதுவாக, 300 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு, மசக்கைப் பிரச்னை மிக மோசமாக இருக்கும். இந்தக் காலத்தில் இடைவிடாத ...

திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்

Posted: 07 Mar 2014 10:33 AM PST

நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்? முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்? சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்? சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த ...

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Posted: 07 Mar 2014 10:10 AM PST

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ...

உலகச் செய்திகள்!

Posted: 07 Mar 2014 10:04 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஈகரை சகோதரிகளுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்

Posted: 07 Mar 2014 09:58 AM PST

ஈகரை சகோதரிகளுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்



  ரமணியன்

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Posted: 07 Mar 2014 09:56 AM PST

அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மீதிலான வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. கடந்த 2008ஆம் ஆண்டில் தனது உதவியாளர் முகமட் சைபுல் புக்காரி மீது ஓரினப் புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது மீதிலான வழக்கில் உயர் நீதிமன்றத்தால் அன்வார் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து மத்திய அரசாங்கம் செய்திருந்த மேல் முறையீடு மீதிலான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்று வழக்கின் முடிவில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மூன்று ...

2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் ஏன் செல்லாது தெரியுமா?

Posted: 07 Mar 2014 08:57 AM PST

கடந்த, 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை ஏப்ரல் 14க்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என, முதலில் அறிவித்தது. இரண்டே நாட்களில் ஒரு சூப்பர் 'குட்டிக்கரணம்' அடித்து ஜூலை 1ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ...

ஒரு போலீஸ் = 551 பேருக்கு பாதுகாப்பு – மத்திய ஹோம் செகரட்டரி தகவல்!

Posted: 07 Mar 2014 08:25 AM PST

இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 106 போலீசார் என்ற அளவில் போலீஸ்-மக்கள்தொகை விகிதம் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் இது ஐ.நா பரிந்துரைத்துள்ள தேசிய சராசரியான 222 போலீஸ் என்ற அளவிற்கு பாதியாகும் என்பதுடன் அண்மையில் வெளியான அரசின் புள்ளி விபரங்களில் சுமார் 1093 ஐ.பி.எஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்தியாவில் வசித்து வரும் மக்களில் 551 பேருக்கு ஒரு போலீஸ் காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறைசெயலாளர் அனில் ...

+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அசிஸ்டென்ட் பணி வாய்ப்பு!

Posted: 07 Mar 2014 08:23 AM PST

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8243 பணி: 01. Postal Assistant 02. Sorting Assistant வயதுவரம்பு: 27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி ...

திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு வீரப்பெண் விருது!

Posted: 07 Mar 2014 08:13 AM PST

உலக அளவில் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச வீரப்பெண்மணி என்ற விருதை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்காக இந்தியாவில் தலைநகர் டெல்லியை சேர்ந்த லட்சுமி என்ற 25 வயதுப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.லட்சுமிக்கு 16 வயதாக இருந்தபோது, காதலிக்க மறுத்ததால் 32 வயது வாலிபர் ஒருவர் (லட்சுமியின் தோழியின் சகோதரர்) அவர் மீது திராவகம் வீசினார். இதனால் அவருடைய முகம் உருக்குலைந்து போனாலும் மனம் தளராத அவர், இதுபோன்ற திராவகம் ...

சர்வ தேச மகளீர் தினம் 8th March 2014

Posted: 07 Mar 2014 08:10 AM PST

சர்வ தேச மகளீர் தினம் சர்வ தேச மகளீர் தினம் ஆர்வமிக்க உலகம் வருடமொரு முறை கொண்டாடி பெண்களை வாழ்த்தி பரிசளித்து மற்ற நாட்களில் மாற்றம் மிகக்கொண்டு மமதையுடன் அவலம் பல செய்து அபலை யாக்கிடும் ஆண்கள் உலகம் இது. மகேஸ்வரிகளும் நிர்பயாக்களும் தினம் தினம் தினசரியில்  வரக்கூடாத வருத்தம் தரும் நாயகிகள் . இவர்கள் பெயர்கள் வராத நாளே இம்மையில் சர்வ தேச மகளீர் தினம். ரமணியன்

மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!

Posted: 07 Mar 2014 08:10 AM PST

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில். முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி. இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ...

தேர்வு காலம்: எது ஆரோக்கியமான உணவு? ..........

Posted: 07 Mar 2014 08:04 AM PST

சமீபத்தில் ஒரு மாணவனை பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். மறுநாள் அவனுக்கு பிளஸ் 2 தேர்வு. அந்தப் பையன் என்னிடம், ''டாக்டர், என்னமோ தெரியல. படபடப்பா இருக்கு. இதயம் வேகமா துடிக்குது. கை கால் நடுங்குது. மூச்சு முட்டுது. மயக்கமா இருக்கு. வயித்தைப் புரட்டுது. சாப்பிட முடியல..'' என்று ஏகப்பட்ட உபாதைப் பட்டியலை வாசித்தான். கடும் சோர்வில் இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கண்ணைச் சுற்றி கருவளையம் வேறு! என்னவென்று விரிவாக விசாரித்ததில் உண்மை விளங்கியது. மாணவன் தேர்வுக்காக கடந்த சில நாட்களாகவே ...

மனைவிக்குக் கல்யாணம் (பெண்ணியம்)

Posted: 07 Mar 2014 06:36 AM PST

என்னால் என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்று மருத்துவம் கைவிட்டுவிட்டது. என்ன செய்வேன் என் மனைவிக்கு வேறொரு திருமணம் செய்து வைப்பதைத் தவிர! அவள் வாரிசு தரணியில் தவழட்டும் அவளின் பெண்மை புனிதமாகட்டும்!! 'மாங்கல்யம் தந்துநானே…'!!! முடிந்ததும் செய்திகள் பரபரத்தன… இப்படியுமா செய்வான் அவனுக்குப் பைத்தியம் கீய்த்தியம் பிடிச்சிப்போச்சா என்று பெண்களும் பெண்ணியவாதிகளும் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் ஆண்கள் சிலர் நானும் என் மனைவிக்குத் திருமணம் செய்துவைப்பேன் ...

ஜனாதிபதியைக் கொஞ்சிய சந்திரபாபு! .....

Posted: 07 Mar 2014 06:36 AM PST

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார். "உன் பெயர் என்ன?'' "சந்திரபாபு'' "தற்கொலைசெய்துகொள்ள விஷம் குடித்தாயா?'' "ஆமாம்'' "ஏன்'' "சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ...

கை கிரிக்கெட் சொல்லும் சேதி .............

Posted: 07 Mar 2014 06:24 AM PST

கிரிக்கெட் இன்று நம் அன்றாடத்தோடு கலந்துவிட்ட விளையாட்டு. அதைப் பற்றிப் பெயரளவுக்காவது தெரியாதவர்கள் இல்லை. ஆனால், கை கிரிக்கெட் என்னும் விளையாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதுவும் இன்று பிரபலமான விளையாட்டுதான். பொதுமக்களுக்குத் தெரியாது, ஊடகங்களுக்கும் அவ்வளவாகத் தெரியாது. குறிப்பிட்ட வட்டத்துக்குள் பரவலாக விளையாடப்படுகிறது கை கிரிக்கெட். என்ன விதிகள்? இதை விளையாடக் குறைந்தபட்சம் இரண்டு பேர் போதும். இரண்டு பேரும் எதிரெதிர்க் குழு. ஒவ்வொரு குழுவிலும் மேலும் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளலாம். ...

இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்!

Posted: 07 Mar 2014 06:04 AM PST

மெய்யன்பர்களே! எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் குருவருளினாலும் மேன் மேலும் நன்மைகள் உண்டாகட்டும். பெறுவதற்கு அரிய பிறவியாகிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள், மானிடத்தின் இலட்சியமாகிய மரணமிலாப் பெருவாழ்வாகிய கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பெருநிலையை அடைவதற்கு வள்ளல் பெருமானார் உலகத்துக்குக் கொடுத்த பெருநெறிதான் இல்லற மார்க்கமாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் திருநெறியாகும். எல்லா உயிர்களும் நமது ஆன்ம சகோதர, சகோதரிகளே எனச் சமரசமாய்ப் பொதுவென ஒருமையுடன் கண்டு ...

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்

Posted: 07 Mar 2014 05:48 AM PST

கையறுநிலை அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா எனும் பாடல் ஒரு திரைப்படத்தில் சோகமயமான சூழலிலும் பாடப்படும் இந்தப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பிரதிபலிப்பு. "அற்றைத்திங்கள் அவ்வெண்ணி லவில் எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே" (112) இந்தப்பாடல் பாரி மகளிர் பாடியது. இது கையறுநிலை எனும் துறையைச் சேர்ந்தது. கடையேழு வள்ளல்களில் ஒருவனாம் பாரியை மூவேந்தர்களும் ...

அதான் பயமா இருக்கு ஃபாதர் -----

Posted: 07 Mar 2014 04:42 AM PST

கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க..  போன இடத்துல மனைவி இறந்துட்டா.  அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்... 'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்..  இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'  கணவன் சொன்னான்..  'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'  பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா... ' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்..  இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்..  அதான் ...

சாம்சுங் s duos 2 s7582..............

Posted: 07 Mar 2014 03:21 AM PST

நண்பர்களே .....,
சாம்சுங் s duos 2 s7582..............எப்படி இருக்கு புதிய போன் வாங்கலாம் என்று உள்ளேன்..

உங்கள் கருத்துகளை சொல்லவும் ....

உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்!

Posted: 07 Mar 2014 03:09 AM PST

உலக அளவில் இந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என வழக்கம் போல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதே சமயம் கடந்தாண்டு மிக காஸ்ட்லியான நகரம் ஆஸ்லோ என்றும், டெல்லி, மும்பை ஆகியவை வாழ்வதற்கு மலிவான நகரங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்க்து. பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க ...

கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு

Posted: 07 Mar 2014 02:56 AM PST

2014 பிப்ரவரி வெளியான படங்கள் கிட்ட தட்ட 18 . ( சில படங்கள் எந்த தியேட்டரிலாவது வெளியானதா என தெரியவில்லை ) 1. கோவலனின் காதலி 2. பண்ணையாரும் பத்மினியும் 3. புலி வால் 4. ஊ (vu) 5. சந்திரா 6. இது கதிர்வேலனின் காதல் 7. மாதவனும் மலர் விழியும் 8. ரெட்டை கதிர் 9. ஆஹா கல்யாணம் 10. பிரம்மன் 11. சித்திரை திங்கள் 12. மனைவி அமைவதெல்லாம் 13. நிலா காய்கிறது 14. வெண்மேகம் 15 . அமரா 16. பனி விழும் மலர் வனம் 17 வல்லினம் 18 தெகிடி -இவற்றில் 100 சதவிகிதம் நஷ்டம் அடைந்த படங்கள் 9. அவையெல்லாம் அனுபவம் இல்லா தயாரிப்பாளர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™