Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி பாக். த்ரில் வெற்றி; இந்தியாவின் இறுதி சுற்று வாய்ப்பு பறிபோனது

Posted: 04 Mar 2014 08:19 AM PST

டாக்கா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை எதிர் கொண்டது. முதலில் பேட்டிங் செய்து விளையாடிய வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 326 ரன்கள் குவித்தது. அணியில் அனாமுல் ஹக் சதம் அடித்தார். காயெஸ் 59 ரன்களும் மொமினால் ஹக் 51  ரன்களும் ரகிம் 51 ரன்களும் ஹாசன் 44 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உமர் அக்மல் 14 ரன்களுடனும், உமர் குல் ரன் எதுவும் எடுக்காமலும் கடைசியில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக அகமத் சாகித் 103 ரன்களும் ஹபிஸ் 52 ரன்களும் அடித்தனர். பாவத் ஆலம் 74  ரன்களும், அப்ரிடி 59 ரன்களும் அடித்தனர். கடினமான நிலையில் பாவத்தும், அப்ரிடியும் அபாரமாக ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வழிசெய்தனர்.

வங்காளதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம் தோல்வியுற்றதால் இந்தியாவின் இறுதி சுற்று வாய்ப்பு பறிபோனது.

category:

News Group Category:

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது

Posted: 04 Mar 2014 07:59 AM PST

மும்பை,

செம்பூரில், கூடுதல் வரதட்சணைகேட்டு மனைவியை மொட்டை அடித்து கொடுமை படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கூடுதல் வரதட்சணை

மும்பை செம்பூர் பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் சபிக்(வயது24). கார் டிரைவர். இவர் தனது அக்காள் சமா(42) என்பவர் வீட்டில் வசித்து வருகிறார். சபிக்கிற்கு கடந்த ஆண்டு மே மாதம் சபியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அப்போது, சபியாவின் தாய் ரூ.5 லட்சம் நகை, பணத்தை வரதட்சணையாக கொடுத்தார்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் வரை சபியா எந்த பிரச்சினையும் இல்லாமல் சபிக்குடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் சபிக் சொந்த வீடு வாங்க விரும்பினார். இதற்காக ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி சபியாவை அவரது கணவர் துன்புறுத்தி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சபியாவின் தாய் வங்கியில் கடன் வாங்கி பணம் தருவதாக கூறினார். ஆனால் பணம் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது.

மொட்டை அடித்து கொடுமை

இதனால் ஆத்திரம் அடைந்த சபிக்கும், அவரது அக்காள் சமாவும் சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த முகமது கரீம் சேக்(32) என்பவரை வீட்டிற்கு அழைத்து சபியாவிற்கு மொட்டை அடித்து கழிவறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தினர்.

இதனால் விரக்தி அடைந்த சபியா போனில் தனது தாயை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சபியாவின் தாயார் உடனே ஆர்.சி.எப். போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் சமாவின் வீட்டிற்கு சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சபியாவை மீட்டனர். மேலும் சபியாவின் கணவர் சபிக், அக்காள் சமா மற்றும் முகமது கரீம் சேக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

category:

News Group Category:

சுப்ரதா ராயின் மீது மை வீச்சு

Posted: 04 Mar 2014 07:52 AM PST

சுப்ரீம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது, மை வீசப்பட்டதால் சுப்ரதா ராயின் முகம் கறுப்பு மையுடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.

6

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

Posted: 04 Mar 2014 07:48 AM PST

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

1

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரச்சார கூட்டம்

Posted: 04 Mar 2014 07:45 AM PST

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்தார். பிரச்சார கூட்டதில் கலந்து கொண்ட பொதுமக்களின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

2

ஆசிய கோப்பை கிரிக்கெட்; 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆட்டம்

Posted: 04 Mar 2014 07:38 AM PST

டாக்கா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை எதிர் கொண்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்து விளையாடிய வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 326 ரன்கள் குவித்தது. அணியில் அனாமுல் ஹக் சதம் அடித்தார். காயெஸ் 59 ரன்களும் மொமினால் ஹக் 51  ரன்களும் ரகிம் 51 ரன்களும் ஹாசன் 44 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்து விளையாடிவரும் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் ஆலம் 46 ரன்களுடனும், அப்ரிடி 35 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.  பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக அகமத் சாகித் 103 ரன்களும் ஹபிஸ் 52 ரன்களும் அடித்துள்ளனர்.
 

category:

News Group Category:

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டு முகாம்களில் ரூ.29 லட்சம் பணம், ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 04 Mar 2014 07:23 AM PST

ராய்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்தோ–திபெத் எல்லை போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் கூட்டாக நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அவுந்தி போலீஸ் நிலைய எல்லையில் உள்ள நிடெலி வனப்பகுதியிலும், சிதகான் போலீஸ் நிலைய எல்லையில் அமகோடா வனப்பகுதியிலும் இருந்த நக்சலைட்டுகள் முகாம்களில் இருந்து பணம் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ரூ.28 லட்சத்து 95 ஆயிரம் பணம் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் உள்ளூர்வாசிகளிடம் மிரட்டி பறிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

category:

News Group Category:

சரியாக தேர்வு எழுதாததால் ஷார்ஜாவில் இந்திய மாணவன் தற்கொலை

Posted: 04 Mar 2014 07:11 AM PST

துபாய்,

ஷார்ஜாவில் இந்திய பள்ளிக்கூடத்தில் 11ம் வகுப்பு படித்து வந்த ஏ.எஸ். என்ற கேராளாவைச் சேர்ந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். சி.பி.எஸ்.இ. தேர்வில் அவன் சரியாக எழுதவில்லை. இதனால் கவலை அடைந்த அவன், தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றள்ளான். ஆனால், அவன் பள்ளிக்குச் செல்லவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகம், அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அம்மாணவன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலேயே அவன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

category:

News Group Category:

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு விடுதலை பெற்று தரும் தேர்தலாக வரும் தேர்தல் அமையும்; ஜெயலலிதா

Posted: 04 Mar 2014 07:00 AM PST

சென்னை,

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மார்ச் 3–ந் தேதி முதல் ஏப்ரல் 5–ந் தேதி வரை, 16 நாட்கள் 19 தொகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி தனது சூறாவளி பிரசாரத்தை கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். இன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனை ஆதரித்து மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். அப்போது; காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு விடுதலை பெற்று தரும் தேர்தலாக வரும் தேர்தல் அமையும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்தியா தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை போன்ற மோசமான அரசை இதுவரை பார்த்ததில்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பங்கு கொண்ட தி.மு.க. 2ஜி ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மீனவர்கள் இலங்கை கடற்படையால் சந்திக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

category:

News Group Category:

அமெரிக்காவில் சம்பவம் விமானத்தில் பெண்ணுக்கு ‘செக்ஸ்’ தொல்லை; 61 வயது இந்தியர் கைது

Posted: 04 Mar 2014 06:39 AM PST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் இருந்து நெவார்க் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியான தேவிந்தர் சிங் (61) என்பவர் பயணம் செய்தார். இவரது பக்கத்து இருக்கையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் சாய்ந்து தூங்கினார். இதை தேவிந்தர் சிங் தனக்கு சாதகமாக பயன்படுத்துக் கொண்டு சில்மிசம் செய்வதில் ஈடுபட்டார்.

முதலில் பெண்ணின் முகத்தில் முத்தம் கொடுத்தார். பிறகு செக்ஸ் தொல்லையில் ஈடுபட பெண் கண்விழித்து விட்டார். பெண்ணோ கொந்தளித்து போய் அவரை தள்ளிவிட்டு, தூரே எழுந்து போங்கள் என்று கூறினார். ஆனால் அவர் கண்டுகொள்ளாததால் அந்த பெண் தனக்கு நேரிட்ட செக்ஸ் தொல்லை குறித்து விமான ஊழியர்களிடம் கூறினார். உடனே அவர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் விமானம் நெவார்க் விமான நிலையில் போய் தரை இறங்கியதும் போலீசார் விரைந்து வந்து தேவிந்தர் சிங்கை கைது செய்து நியூ ஜெர்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி செக்ஸ் தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தினர். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1½ கோடி அல்லது அதைவிட இரட்டிப்பு தொகை அபராதமாக விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™