ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி
- இன்று பிறந்த நாள் காணும் " கல்வியாளர் " தவமணி அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்....!!!!
- வதைபடுதே வளர் இளம் பருவம்???!!!
- கவனம் நண்பர்களே
- இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்
- ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
- சிவபெருமான் அந்நியரா??
- ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !
- தேங்காய் நல்லதா, கெட்டதா?????
- அறிமுகம்
- வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி ??????
- பிஸ்கட் நன்மையா? தீமையா?
- உயிருக்கு ஆபத்தான உணவு வகைகள்!!!!
- மனதைத் தொட்ட குழந்தைகள்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -100)
- சமூக (க)வலைதளங்கள்???.
- நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - தீராத விளையாட்டுப்பிள்ளை !
- வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !
- நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?
- அந்த நாள் ஞாபகம்..
- விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
- ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம்
- தோள் கொடுக்கும் தோழி!
- உங்க செல்போனின் கதிர்வீச்சு (எஸ். ஏ. ஆர்.) வேல்யூ தெரியுமா?
- நவகிரகங்களை முறையாக எப்படி வழிபட வேண்டும்:
- இசை இன்பம்
- மின்னணுக் கழிவுகள்: ஓர் எச்சரிக்கை
- இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்...
- சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- 2000 பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் M.M.SENTHIL...
- மனம் நிம்மதி அடைய...
- அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து!!
- தேர்வு முடிவு -நொச்சி இதழ்
- நாளும் ஒரு அழகின் அலை
- கமலின் உத்தம வில்லன்
| பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி Posted: 04 Mar 2014 10:00 AM PST பொதுவாக சமுகவலைதளங்களில் இந்த பேக் ஐடி அதாவது போலி நபர்கள் தொல்லை அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது அதிலும் Facebookல் அதிக அளவான பேக் ஐயடிகள் நாளுக்கு நாள் உருவாக்க படுகின்றது என்பது ஒவ்வொரு பேஸ்புக் பாவனையாளர்களும் அறிந்த உண்மை இது ஒரு விதமான மன நோய் என்று கூட கூறி விடலாம் . இவ்வாறான போலி ஐயடிகள் பல விதமான தேவைகள் கருதி உருவாக்க படுகின்றது அதில் அதிக பயங்கரமானது நம் கணக்கு போல நமது பெயரில் ஆரம்பிப்பது இது கொடுமையானது சரி இதனை தடுக்க வழி இருக்கின்றதே Report பண்ணினால் போதும் ... |
| இன்று பிறந்த நாள் காணும் " கல்வியாளர் " தவமணி அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 04 Mar 2014 09:51 AM PST இன்று பிறந்த நாள் காணும் " கல்வியாளர் " தவமணி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் |
| கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்....!!!! Posted: 04 Mar 2014 09:43 AM PST உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ஏனெனில் கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நொதியான பைல் என்பதை உற்பத்தி செய்கிறது. இந்த நொதி இல்லாவிட்டால், உடல் இயங்காது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றை பிலிரூபின் என்னும் இரத்தக்கூறு கொண்டு கண்டறியலாம். அதிலும் மஞ்சள் காமாலையா அல்லது ஏதேனும் கொழுப்புகள் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் ஜங்க் உணவுகள், அதிகமான கொழுப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால் பருகுவது தான். சுவாரஸ்யமான வேறு: கல்லீரல் ... |
| வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Posted: 04 Mar 2014 09:03 AM PST எந்த சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும் சம உரிமைகளோடும் வாழ்கிறார்களோ, அந்த சமூகத்தில் தான் நல்ல தலைமுறை உருவாகும் என்பார்கள். இலக்கியங்களிலும் புராணங்களிலும் பெண்களை உச்சத்தில் வைத்துப் போற்றுகிற நம் சமூகத்தில் யதார்த்த நிலை மிகவும் சோகமயமானது. குழந்தைப்பருவம் தொட்டு முதுமை வரை எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் பெண்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் உருவாகும் எல்லா அழுத்தங்களும் பெண்களையே பெருமளவில் பாதிக்கிறது. மதுரையைச் சேர்ந்த லிட்டில்ஸ் குழந்தைகள் மைய'மும் சமகல்வி இயக்கமும் ... |
| Posted: 04 Mar 2014 08:53 AM PST ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு ... |
| இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ் Posted: 04 Mar 2014 08:53 AM PST ஒரு காலத்தில் நோய் இல்லாமல் வாழ்ந்தவன் மனிதன். ஆனால் இன்றைக்குள்ள நடைமுறையில் மனிதனோட வாழ்வில் நோய் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் வயது பாரபட்சம் இன்றி வரும் நோய் இதயத்தில் ஏற்படும் நோய் தான். இதை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதயத்தின் வால்வுகளில் ஏற்படுவது மற்றும் இதய தசைகளில் ஏற்படும் பிரச்னை. இதில் இதய தசைகளில் உருவாகும் பிரச்னை காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்கம். இதுபோன்ற பிரச்னைகளை உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் ... |
| ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Posted: 04 Mar 2014 08:51 AM PST காலை நடைப் பயிற்சிக்குப் புறப்பட்ட போது எதிர்வீட்டிலிருந்து டிராக் சூட் போட்ட ஒரு உருவம் சேர்ந்து கொண்டது. உருவம் என்று ஏன் சொன்னேனென்றால் ஆம்பிளையா பொம்பிளையா தெரியவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் போல தலையில் ஒரு மஃப்ளர் சுற்றி வாய் மூக்கு எல்லாவற்றையும் மூடி அதே கண்கள் படத்துக் கொலைகாரன் போல கண்கள் இரண்டு மட்டும்தான் தெரிந்தது. "என்ன சார், Walking ஆ ?" என்று கேட்டு படு intelligent ஆக நான் ஊகித்து விட்டதை ஒரு பெருமிதச் சிரிப்பில் வெளிப்படுத்தினேன். அந்த உருவம் மஃப்ளரை லேசாக நீக்கி "குட் ... |
| Posted: 04 Mar 2014 08:48 AM PST "ஆங்கிலேயர்கள் காலத்தில் சாலைகளுக்கும், தெருக்களுக்கும் வைக்கப்பட்ட பெயர்களை மாற்றிகிட்டே வர்ராங்க. இந்த ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டை எப்போ மாத்துவாங்க?" "எதுக்காக மாத்தணும்?" "எதுக்காகவா? அந்நியர்கள் வெச்ச பேரை நாம ஏன் உபயோகப் படுத்தணும்? ஆர்மேனியன்ங்கிறது யாரோ, எவரோ. நம்ம நாட்டுக்காரங்க யார் பேராவது வைக்கலாமே, மற்ற சாலைகளுக்கு மாற்றின மாதிரி" "சிவபெருமான் அந்நியரா?" "இல்லையே?" "அப்ப இதே பேர் இருந்துட்டுப் போகட்டும்" "ஆர்மேனியன்ங்கிறது சிவபெருமானா?" "ஆமாம்" "யார் சொன்னது?" ... |
| ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Posted: 04 Mar 2014 08:34 AM PST உலக அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த ஆபத்தான இடமாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குண்டுவெடிப்பு புள்ளி விவர மையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் உலகளவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை பொறுத்தவரை மூன்றாவது ஆபத்தான இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட பின்தங்கியே உள்ளஇதன்படி, 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் 212 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ... |
| Posted: 04 Mar 2014 08:28 AM PST தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... 'கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் ... |
| Posted: 04 Mar 2014 08:17 AM PST பெயர்: அனிருத் இராமகிருட்டிணன் சொந்த ஊர்: கோவை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: தமிழ், வரலாறு தொழில்:பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மேலும் என்னைப் பற்றி:உறுப்பினராக இணைத்து கொண்டதற்கு மிக மிக நன்றிகள் |
| வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி ?????? Posted: 04 Mar 2014 08:06 AM PST இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது. அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும். இந்தியாவில் ... |
| Posted: 04 Mar 2014 07:50 AM PST • பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது. பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் பயணத்தின்போது துணை உணவாக ... |
| உயிருக்கு ஆபத்தான உணவு வகைகள்!!!! Posted: 04 Mar 2014 07:47 AM PST வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள். `இவர்களெல்லாம் தங்களுக்குத் ... |
| Posted: 04 Mar 2014 07:15 AM PST அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். ரெடி, ஸ்டிடி, கோ.. விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது. கீழே விழுந்தது அடிபட்டக் காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. பின்னால் ஏதோ அழுகை சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனை த்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -100) Posted: 04 Mar 2014 07:03 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 04 Mar 2014 06:26 AM PST மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட நட்புக்கு, புதிய வடிவமாகத்தான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பேனா நட்பு என்ற முகமறியா நண்பர்கள் வட்டம் உருவானது. பலரும் பல்வேறு ஊர்களில் வசித்தாலும், நேரில் சந்தித்துக் கொள்ளாமலே தங்களது நட்பினை கடிதங்கள் மூலம் வளர்த்து வந்தனர். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, பேனா நட்பு என்பது, வடிவம் மாறி, இன்று சமூக வலைதளங்களாக உருப்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் நம் சிறு வயது நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி தோழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து அவர்களுடைய ... |
| நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - தீராத விளையாட்டுப்பிள்ளை ! Posted: 04 Mar 2014 06:24 AM PST முன்பு வந்த நாட்டியப்பாடல்கள் முலம் நாம் பல புராணக்கதைகள், நாயன்மார்கள் கதைகள் என பலதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்ட சில பாடல்கள் இந்த திரி இல் போடுகிறேன் பார்த்து மகிழுங்கள் முதலில்............ குலதெய்வம் படத்தில் குமாரி கமலா ஆடும் " தாயே யசோதா உந்தன்" பாடல் |
| வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Posted: 04 Mar 2014 06:20 AM PST வெளிநாட்டுக் கல்வியில் பொருளாதாரமே முக்கிய பங்காற்றுகிறது. அதுவும் இந்திய பொருளாதாரம் தளர்ச்சி அடைந்து இருக்கும் இது போன்ற காலங்களில் பொருளாதார முக்கியத்துவம் மிகவும் அதிகமாகிறது. கல்விக் கட்டணம் என்பதையும் கடந்து தங்குமிடம் மற்றும் உணவுக் கட்டணம் அதிக செலவினை உருவாக்குவதாக அமைகிறது. நாடுகளுக்கு நாடு செலவுத் தொகையின் அளவு மாறுபடுகிறது. மேலும் ஒரே நாட்டிற்குள்ளும் காலநிலை, அமைவிடம், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் பணத்தின் அளவு மாறுபடுகிறது. எந்த நாட்டில் எவ்வளவு செலவாகிறது ... |
| நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Posted: 04 Mar 2014 05:58 AM PST அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் 'இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்' பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். 'உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்' என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு ... |
| Posted: 04 Mar 2014 05:31 AM PST 1. டூரிங்க் டாக்கீஸ்.!. கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப.. ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா ... |
| விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன? Posted: 04 Mar 2014 05:24 AM PST பூர்வ ஜென்மத் தொடர்பையே 'விட்டகுறை தொட்டகுறை' என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டு விட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது. தொட்டு வந்த துறை, விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது/கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை ... |
| ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம் Posted: 04 Mar 2014 05:17 AM PST ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது. ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது. இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போன்று அருந்தும் போதும் எல்லா ... |
| Posted: 04 Mar 2014 04:43 AM PST "நாலு பேருக்கு நன்றி. ஆளில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் அந்த நாலுப் பேருக்கு நன்றி' என்ற கவிஞரின் உணர்வுப் பூர்வமான வரிகள் கோவை வாசகி லதா சாந்த குமாருக்கு மிகவும் பொருத்தமானது. அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனை சவக்கிடங்குகளில் மாதக்கணக்கில் வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் பிணங்களைக் கூட, தன் சகாக்களுடன் இணைந்து அடக்கம் செய்வதை புனிதப் பணியாக செய்து வருகிறார். "என் கணவர் சாந்தகுமார் பொதுநலச் சேவையில் அதிகமாக ஈடுபாடுள்ளவர். ஒருமுறை இவர் தமது நண்பர்களுடன் இரத்த ... |
| உங்க செல்போனின் கதிர்வீச்சு (எஸ். ஏ. ஆர்.) வேல்யூ தெரியுமா? Posted: 04 Mar 2014 04:30 AM PST செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள். செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் ... |
| நவகிரகங்களை முறையாக எப்படி வழிபட வேண்டும்: Posted: 04 Mar 2014 04:26 AM PST நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும். சிலர் அப்படி சுற்ற தேவையில்லை என்கிறார்கள். மொத்தம் ஒன்பது முறை நவக்கிகரங்களை சுற்ற வேண்டும் எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு கடைசியாக நவக்கிரகங்களை ... |
| Posted: 04 Mar 2014 04:19 AM PST சிறுவர் பாடல் இசை இன்பம் காற்றின் இசையைப் பறவைகள் கேட்கும் அருவியின் இசையை மலைகள் கேட்கும் கடன் இசையை சிப்பிகள் கேட்கும் படகின் இசையை மீன்கள் கேட்கும் இடியின் இசையை மேகங்கள் கேட்கும் மழையின் இசையை தவளைகள் கேட்கும் குயில்களின் இசையை மரங்கள் கேட்கும் மயில்களின் இசையை மான்கள் கேட்கும் நதியின் இசையை நாணல்கள் கேட்கும் வண்டின் இசையை பூக்கள் கேட்கும் இலைகளின் இசையை அணில்கள் கேட்கும் வளைகரங்களின் இசையை பயிர்கள் கேட்கும் இசையின் உள்ளொளி உணர்வில் இயங்கும் இசையில் ... |
| மின்னணுக் கழிவுகள்: ஓர் எச்சரிக்கை Posted: 04 Mar 2014 03:58 AM PST கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, தொலை நகலி, கால்குலேட்டர், தொலைபேசி, செல்போன், ரிமோட், கைக்கடிகாரங்கள், பிசிபி(பிரிண்டட் சர்க்யூட் போர்டு) எனப்படும் எலக்ட்ரானிக் போர்டுகள், அச்சிடும் கருவிகள் (பிரிண்டர்), எம்பி3 பிளேயர், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் காலாவதியான கழிவுகள் மின்னணுக் கழிவுகள் ஆகும். மேலும் பயன்படுத்த முடியாத செயலிழந்த மின்கலங்களையும் (பேட்டரி) இவற்றுடன் சேர்க்கலாம். உலக நாடுகளிடையே சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது, தனது நாட்டில் ... |
| இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Posted: 04 Mar 2014 03:42 AM PST வங்கி டெபாஸிட்தாரர்களின் விழிப்புணர்வு மேம்பாட்டு நிதியம் (Depositor Eduction and Awareness Fund) அமைக்கப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட்டுகளை ஒன்று திரட்டி இந்த நிதியம் அமைக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர்களில் ஒருவர் தலைமை வகிக்கும் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். வங்கி டெபாஸிட்தாரர்கள் சார்ந்த நலத்திட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிதியத்திலிருந்து அவ்வப்போது நிதி ஒதுக்கீடு ... |
| சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? Posted: 04 Mar 2014 03:33 AM PST சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா... ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட கிடுக்குப் பிடியால்தான் இன்று ராய் போலீஸிடம் சிக்கியுள்ளார். தான் புத்திசாலி என்று ராய் கில்லாடித்தனமாக செயல்பட்டால் அவரை விட தான் அதி புத்திசாலி என்பதை ஆப்ரகாம் நிரூபித்து விட்டார். தனி மனிதராக இவர் எடுத்த அதிரடி மற்றும் அயராத நடவடிக்கைகள் காரணமாகத்தான் இன்று ... |
| Posted: 04 Mar 2014 02:39 AM PST µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| 2000 பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் M.M.SENTHIL... Posted: 04 Mar 2014 12:42 AM PST 2000 பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் M.M.SENTHIL வாழ்த்தலாம் வாங்க. மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில் |
| Posted: 04 Mar 2014 12:33 AM PST மனம் நிம்மதி அடைய... ************************************** எந்த நிகழ்வுக்கும் நான் காரணமல்ல என்பதை உணருங்கள். வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பார்வையாளராக இருந்து வாழ்க்கை நாடகத்தை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். சூழ்நிலைகளுக்கேற்ப மாறவும் தயங்கதீர்கள். ஆசைப்படுவதற்கும்..அருளப்படுவதற்கும் உள்ள வித்தியாசமே கவலையாக மாறுகிறது. நியாயமான ஆசைகள் நிறைவேற முறையான வழிபாடுகள் செய்க. |
| அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து!! Posted: 03 Mar 2014 11:35 PM PST நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்.....இது தான் உடலின் சங்கேத பாஷை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம். ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட.. ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். ... |
| Posted: 03 Mar 2014 11:26 PM PST காத்திருப்பவன் பருவத்தே பயிர் செய்யும் உழவன் மட்டுமல்ல நாங்களும்தான் வருவது மழையோ? புயலோ? - வி.பப்பிதா |
| Posted: 03 Mar 2014 10:52 PM PST ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| Posted: 03 Mar 2014 10:45 PM PST விஸ்வரூபம்-2 பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. நண்பர் ரஜினிகாந்தின் கோச்டையான் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் கமல். கோச்சடையானும், விஸ்வரூபம் 2வும் மோதவேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். கோச்சடையான் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு அதற்கு முன்பா, பின்பா என்பதை கமல் முடிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில் தனது அடுத்த படமான உத்தம வில்லனை துவக்கி விட்டார். இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலத்தில் முறைப்படி படப்பிடிப்பு துவங்கியது. ஒரே ஷெட்யூலில் அதாவது 40 நாட்களில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |