Daily Thanthi |
- முன்னாள் தலைமை நீதிபதியின் குடும்பத்தினர் பத்மபூஷண் விருது பெற மறுப்பு
- இந்தி தெரியாததால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை ப.சிதம்பரம்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசா குறைவு
- 20 ஒவர் உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இலங்கை
- இளநீர் கடையில் மாணவிகள்
- வருமான வரிக் கணக்கு தாக்கல்
- மு.க.அழகிரி நாமக்கல்லில் தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்தபோது எடுத்த படம்
- வைகோ நடுரோட்டில் உட்கார்ந்து மறியல்
- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி செல்போன்கள் விற்பனை; 3 பேர் கைது
- நடிகையை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம்
| முன்னாள் தலைமை நீதிபதியின் குடும்பத்தினர் பத்மபூஷண் விருது பெற மறுப்பு Posted: 31 Mar 2014 09:03 AM PDT புதுடெல்லி, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா. இவர் டெல்லி மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக, கடும் சட்டங்களை இயற்ற அமைக்கப்பட்ட அரசு குழுவுக்கு தலைமை வகித்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் 22–ந்தேதி மரணமடைந்துவிட்டார். அவருக்கு பத்மபூஷண் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக அவரது வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், பத்மவிபூஷண் விருது வழங்குவதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுவதாக கூறினர். இதனைத் தொடர்ந்து பத்மபூஷண் விருதை ஏற்க அவரது மனைவி மற்றும் மகள் மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கும் நீதிபதியின் மனைவி கடிதம் எழுதினார். எனவே அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குடியரசுதினத்தன்று 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் 66 பேருக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். மற்றவர்களுக்கு ஏப்ரல் 26–ந்தேதி நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்குகிறார்.
image: category:Tagging:News Group Category: |
| இந்தி தெரியாததால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை ப.சிதம்பரம் Posted: 31 Mar 2014 08:28 AM PDT புதுடெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று கூறினார். எனக்கு இந்தி தெரியாததால், வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை. மோடிக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட முன்வர மாட்டார் என்று ப.சிதம்பரம் கூறினார். image: News Group Category: |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசா குறைவு Posted: 31 Mar 2014 08:25 AM PDT புதுடில்லி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. image: category:News Group Category: |
| 20 ஒவர் உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இலங்கை Posted: 31 Mar 2014 08:15 AM PDT சிட்டகாங், 20 ஒவர் உலக கோப்பை போட்டியின் சிட்டகாங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 25 ரன்கள் எடுத்தார். image: category:News Group Category: |
| Posted: 31 Mar 2014 08:05 AM PDT |
| Posted: 31 Mar 2014 08:03 AM PDT |
| மு.க.அழகிரி நாமக்கல்லில் தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்தபோது எடுத்த படம் Posted: 31 Mar 2014 07:59 AM PDT |
| வைகோ நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் Posted: 31 Mar 2014 07:58 AM PDT |
| பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி செல்போன்கள் விற்பனை; 3 பேர் கைது Posted: 31 Mar 2014 07:54 AM PDT மும்பை, மும்பை குர்லா மேற்கு பகுதியை சேர்ந்தவர் சாம்லால் குப்தா. இவர் குர்லா மேற்கு ரெயில் நிலையம் அருகில் உள்ள கடையில் இருந்து புதிய செல்போன் ஒன்று வாங்கினார். அந்த செல்போன் திடீரென பழுதானது. இதையடுத்து அந்த செல்போனை சேவை மையத்தில் கொடுத்து பழுதுபார்க்க சென்றார். அப்போது அந்த செல்போன் போலியானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்லால், அதே கடைக்கு சென்று பழுதான செல்போனை கொடுத்துவிட்டு மற்றொரு செல்போன் வாங்கினார். ஆனால் அந்த செல்போனும் போலியானது என தெரியவந்தது. இது குறித்து சாம்லால் கொடுத்த புகாரின் பேரில் குர்லா நேருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரை போலி செல்போன்களில் ஓட்டி விற்று வந்த ஜிதேந்திர குமார்(22), முகமது குரோஷி(22), முகமது முஸ்தாக்(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கடையில் இருந்த ஏராளமான போலி செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். image: category:Tagging:News Group Category: |
| நடிகையை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம் Posted: 31 Mar 2014 07:45 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




