Daily Thanthi |
- தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்
- முதல்-அமைச்சர் ஜெயலலிதா
- ஆன்லைன் மூலம் விபசாரம் செய்த 2 பேர் கைது மாடலிங் அழகிகள் உள்பட 8 பெண்கள் மீட்பு
- ஏப்ரல் 1–ந்தேதி முதல் மின்தடை நேரம் மாற்றம்
- உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி பதிலடி ‘‘நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்’’
- விருதுநகர் தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்தால் யார் காயப்பட்டு கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் வைகோ பேச்சு
- இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? கருணாநிதி கேள்வி
- மிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் வர்கீஸ் சுங்கத் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
- மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதாவின் படம் தோல்வி அடையும் ராகுல் காந்தி பேச்சு
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் சகோதரர் ஏ.பால்ராஜ் மற்றும் அவருடைய மனைவி
| தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் Posted: 29 Mar 2014 06:21 AM PDT |
| Posted: 29 Mar 2014 06:20 AM PDT |
| ஆன்லைன் மூலம் விபசாரம் செய்த 2 பேர் கைது மாடலிங் அழகிகள் உள்பட 8 பெண்கள் மீட்பு Posted: 29 Mar 2014 06:02 AM PDT சென்னை, ஆன் லைன் மூலம் வெளிமாநில மாடலிங் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்து விபசாரம் செய்து வந்த வாடகை கார் டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாடலிங் அழகிகள் சென்னையில், 'ஆன்லைன்' மூலம் ஒரு கும்பல் விபசாரம் செய்து வருவதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த 'மாடலிங்' அழகிகளை வைத்து, ஆன்லைன் மூலம் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த ரவீந்திரன் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அழகிகளுடன் நட்பு அவரிடம் இருந்து 4 மாடலிங் பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் போலீசார் அடைத்தனர். பின்னர், ரவீந்திரனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:– சென்னை விமான நிலையத்தில் வாடகை கார் டிரைவராக முதலில் வேலை செய்து வந்தேன். அப்போது, 'ஆன்லைனில்' விபசாரம் செய்யும் கும்பல், வெளிமாநிலங்களில் இருந்து, 'மாடலிங்' அழகிகளை சென்னைக்கு, விமானத்தில் அனுப்பி வைப்பார்கள். அந்த பெண்களை, நட்சத்திர ஓட்டலிலும், சொகுசு பங்களாக்களிலும் காரில் அழைத்து சென்று விட்டு வந்தேன். இதன்மூலம், 'மாடலிங்' அழகிகளின் நட்பு கிடைத்தது. இதையடுத்து, நானே 'ஆன்லைன்' மூலம் சென்னையிலுள்ள வாடிக்கையாளர்களை பிடித்து, அழகிகளை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக விபசார தொழில் செய்து வருகிறேன். இதில், பெரும் தொகையை நான் சம்பாதித்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, அவர் மீது விபசார வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் போலீசார் அடைத்தனர். மசாஜ் சென்டரில் விபசாரம் அதேபோல, வேளச்சேரி பகுதியில், 'மசாஜ் சென்டர்' நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த சுனில் தாமஸ் (30) என்பவர், 'ஆன்லைன்' மூலம் விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து, சென்னையை சேர்ந்த 4 பெண்களை மீட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் போலீசார் அடைத்தனர்.
image: category:Tagging:News Group Category: |
| ஏப்ரல் 1–ந்தேதி முதல் மின்தடை நேரம் மாற்றம் Posted: 29 Mar 2014 05:58 AM PDT சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் 2 மணி நேர மின்தடை நேரத்தை ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி 2014 ஏப்ரல் 1–ந்தேதி முதல் மின்தடை நேர மாற்றம் குறித்த விவரம் வருமாறு:– மார்ச் மாதம் அமலில் இருந்த மின்தடை நேரம் – ஏப்ரல் மாதம் அமலுக்கு வரப்போகும் புதிய மின்தடை நேரம் காலை 8 மணி – 10 மணி – 10 மணி – மதியம் 12 மணி 10 மணி – மதியம் 12 மணி –12 மணி – 2 மணி 12 மணி – 2 மணி –2 மணி – மாலை 4 மணி 2 மணி – 4 மணி –4 மணி – 6 மணி 4 மணி – 6 மணி –காலை 8 மணி – 10 மணி இவ்வாறு மின்தடை நேரம் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு வருகிறது.
image: category:Tagging:News Group Category: |
| Posted: 29 Mar 2014 05:29 AM PDT பாக்பத்,- நாட்டுக்காக வாழ்வதும், உயிர் விடுவதும்தான் எங்கள் சித்தாந்தம் என்று உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்திக்கு நரேந்திரமோடி பதிலடி கொடுத்தார். ராகுலுக்கு பதிலடி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ''ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் நரேந்திரமோடிக்கு எதிராக என்னிடம் ஏதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான அவரது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். மோடி, ஒரு பிரத்யேகமான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார். அது, மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளச்செய்யும் சித்தாந்தம்'' என கூறினார். உத்தரபிரதேச மாநிலம், பாக்பத்தில் (முன்னாள் பிரதமர் சரண்சிங் தொகுதி) நரேந்திரமோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது சித்தாந்தம் பற்றி ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:– நான் ஒரு சித்தாந்தத்தில் இருந்து தோன்றியவன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதப்படுகிறேன். ஆமாம். எங்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது. குடும்பத்தை விட சமூகம் மேலானது என்பதுதான் எங்கள் சித்தாந்தம். இந்தியத் தாய்நாடுதான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பது எங்கள் சித்தாந்தம். இந்த நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம். நீங்கள் போட்டி போட முடியாது எனவேதான் நீங்கள் இந்த சித்தாந்தத்துடன் போட்டி போட முடியாது. உங்கள் (ராகுல் காந்தி) ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த சித்தாந்தத்துடன் போட்டி போட இயலாது. இந்த சித்தாந்தத்துக்கு அடிப்படை, தியாகம், சேவை என்ற வழிபாட்டுக்குரிய அம்சங்கள்தான். விவசாயிகள் பலன்பெறத்தக்க விதத்தில், காங்கிரசின் கொள்கைகளை எதிர்த்த சவுத்ரி சரண்சிங்கை நாங்கள் மதிக்கிறோம். தனது பெற்றோரின் கனவுகளை குழந்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவரது மகன் (அஜித் சிங்), தனது தந்தையின் பாதையில் இருந்து தடம் புரண்டு விட்டார். சமூகத்திலும்கூட, தந்தையின் பாதையை விட்டுச்செல்லும் பிள்ளையை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. பாக்.குடன் மென்மையான போக்கு ஆட்சி அதிகாரத்துக்காக தந்தையின் கொள்கைகளைவிட்டு மட்டுமல்லாமல், தன் தந்தைக்கு கஷ்டங்களை தந்த கட்சிக்கே போய்விட்டவரையா நீங்கள் நம்பப்போகிறீர்கள்? பாக்பத்துக்கு தேவை அடிமட்டத் தலைவர்தான். நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்கள், தங்களுக்கு உரிய மரியாதையைப் பெறுவதில்லை. பாகிஸ்தான் மீது மத்திய அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் நமது வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்கிறது. ஆனால் அந்த நாட்டுத்தலைவருக்கோ மத்திய அரசு அறுசுவை விருந்து படைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். image: News Group Category: |
| Posted: 29 Mar 2014 05:16 AM PDT விருதுநகர்,- விருதுநகர் தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டு கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோ, திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– ஆலமரங்களின் கூட்டம் குஜராத் மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது, இன்றைய பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப்பேரணியில் அவருடன் நானும் நடந்துவர ஏற்பாடு செய்தார். அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோரா என்ற ஊருக்குச் சென்றோம். 'வதோரா' என்றால் ஆலமரங்களின் கூட்டம் என்று அர்த்தம் பேரணியில் சென்ற நாங்கள் பகல் 12 மணிக்கு, வெயிலான வேளையில் ஆலமரங்களின் நிழலில் போய்ச்சேர்ந்தோம். அந்த இடத்தில் தலைவர்கள் வரிசையாக பேசிவிட்டு, என்னை பேச சொன்னபோது, நான் ஆங்கிலத்தில் பேச தொடங்கினேன். அப்போது முன்னாள் மத்திய மந்திரி முரளிமனோகர் ஜோஷி என்னுடைய பேச்சை இந்தியிலும், குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி என்னுடைய பேச்சை குஜராத்தி மொழியிலும் மொழி பெயர்த்தனர். மதங்கள் அரவணைப்பு அப்போது நான் சொன்னேன். ஆலமரங்களின் கூட்டத்துக்கு கீழே நாம் உட்கார்ந்திருக்கிறோம். இந்த ஆலமரங்களில் எண்ணற்ற விதவிதமான வண்ணப்பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. அந்த பறவைகளுக்கு பசியைப்போக்க ஆலமரம் கனிகளை தருகிறது. எப்படி ஒரு ஆலமரத்தில் பல்வேறு விதமான பறவைகள் இருக்கிறதோ, அதைப்போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மதங்களையும் அரவணைக்கின்ற விதத்தில் அரசும் நாடும் இருக்க வேண்டும் என்று நான் பேசினேன். சாதாரண ஒருவர் பேசியதை ஒரு முதல்–அமைச்சர் மொழிபெயர்த்ததை இதுவரை நான் கண்டது இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். எனக்கு அவ்வளவு பெரிய பெருமையைத் தந்தார். இந்த ஊருக்கு வந்தவுடன் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது. வேப்பம் பூ மாலை நான் மனிதாபிமானம் மிக்கவன். விருதுநகர் தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டு கிடந்தாலும், சாதி, மதம் பார்க்காமல் போய்க்காப்பாற்றுவேன். மது குடிக்க வேண்டாம் என்று வெயிலிலும், மழையிலும் நடைபயணம் சென்றேன். மது குடித்தால் குடும்பம் சீரழியும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மது வாங்கிக்கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச்செல்கிறார்கள். தாய்மார்கள் இதையெல்லாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்த ஊரில் எனக்கு வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. இது பாண்டிய மன்னர்கள் அணிந்த மாலை. இவ்வாறு அவர் பேசினார். image: category:News Group Category: |
| இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? கருணாநிதி கேள்வி Posted: 29 Mar 2014 05:08 AM PDT சென்னை,- இலங்கை தமிழர்களுக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. ஆட்சி கலைப்பு கேள்வி:–''இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிவில்லை, இந்த பயத்துக்கு காரணம் தன்னலம்'' என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? பதில்:–இலங்கை தமிழர்களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29–1–1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப்பொறுப்பிலே இருந்த போது 23–8–1990 அன்று சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறேன். அதை காரணமாக காட்டித்தான் 1991–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி இரண்டாவது முறையாக கலைக்கப்பட்டது. ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? 23–4–2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத்தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்து நிறைவேற்றிட செய்தேன். 12–11–2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். என்னை கேள்வி கேட்ட முதல்–அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியை திருப்பிக்கேட்கிறேன். நீங்கள்(ஜெயலலிதா) இலங்கை தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தீர்கள்? இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்தபட்சம் உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையாவது ராஜினாமா செய்திருக்கிறீர்களா?. மின்வெட்டு கேள்வி:–மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, ''யாரும் கவலைப்பட வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும்'' என்று உறுதி கொடுத்திருக்கிறாரே? பதில்:–கடந்த மூன்றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்ப திரும்பச்சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சினையில் இந்த ஆட்சியினர் தொடர்ந்து மூன்றாண்டு காலமாக கவலை வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் ஆகும், மின்மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப்பிடித்துத் தருவதாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்குறுதிகளைக்கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக்காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலிகள், இவருடைய பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் இனியும் ஏமாறமாட்டார்கள். இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். image: category:News Group Category: |
| Posted: 29 Mar 2014 04:55 AM PDT |
| மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதாவின் படம் தோல்வி அடையும் ராகுல் காந்தி பேச்சு Posted: 29 Mar 2014 04:54 AM PDT காசியாபாத், காசியாபாத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது; வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை நிராகரிக்க வேண்டும். பாரதீய ஜனதா கட்சி 2004-ல் இருந்து ஒளிர்கிறது என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த துவருகிறது ஆனால் மக்கள் அதை நம்பவில்லை அதனால் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் வேலை வாத உத்ரதவாத சட்டம் கோண்டு வந்துள்ளது என்று குறிபிட்டார். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 90 சதவீதம் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று கூறினார்.நடுத்தர மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு நலதிட்டங்களை வகுத்துள்ளது என்று கூறினார். image: category:News Group Category: |
| தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் சகோதரர் ஏ.பால்ராஜ் மற்றும் அவருடைய மனைவி Posted: 29 Mar 2014 04:53 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



