Daily Thanthi |
- தாயார் தயாளுஅம்மாளுடன் அழகிரி சந்திப்பு
- இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையா? ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் நாளை ஓட்டெடுப்பு
- தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு
- நாந்தெட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அசோக் சவான் வேட்பு மனு தாக்கல்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது ஒரு பவுன் தங்கம் ரூ.21,888-க்கு விற்பனை
- லோக்சபா தேர்தலுக்கான செலவு 5ஆயிரம் கோடி: தேர்தல் கமிஷன்
- சர்ச்சைக்குரிய பேச்சு தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்தார் சரத் பவார்
- ஓட்டுக்காக கண்ணீர் சிந்தும் அவசியம் எனக்கு இல்லை சித்தராமையாவுக்கு தேவேகவுடா பதிலடி
- பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பாலகிருஷ்ணன் சொத்து மதிப்பு ரூ.190 கோடி
- பாரதீய ஜனதாவின் பிரச்சார பலூன் விரைவில் வெடிக்கும்: ராகுல் காந்தி
| தாயார் தயாளுஅம்மாளுடன் அழகிரி சந்திப்பு Posted: 26 Mar 2014 09:26 AM PDT சென்னை, தி.மு.க.விலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்டார். இந்நிலையில்,மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று, தன்னுடைய தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார். தன்னுடைய தாயாரிடம் அரசியல் எதுவும் பேசாமல், தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஏறத்தாழ அரை மணி நேரம் தன்னுடைய தாயாருடன் இருந்து விட்டு அழகிரி புறப்பட்டு சென்றார். image: category:Tagging:News Group Category: |
| இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையா? ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் நாளை ஓட்டெடுப்பு Posted: 26 Mar 2014 09:08 AM PDT ஜெனீவா, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வ தேச விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தின்மீது ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் நாளை (வியாழக்கிழமை) ஓட்டெடுப்பு நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. image: category:News Group Category: |
| தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு Posted: 26 Mar 2014 08:46 AM PDT வாரணாசி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார். அவர் வாரணாசியில் பல்வேறு பகுதிகளுக்கும் வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். அவரது வாகனத்துடன் ஏராளமான வாகனங்கள் சென்றன. பிரசாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூடுதல் வாகனங்கள் சென்றதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கொத்வாலி போலீசார் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். image: category:Tagging:News Group Category: |
| நாந்தெட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அசோக் சவான் வேட்பு மனு தாக்கல் Posted: 26 Mar 2014 08:35 AM PDT மும்பை, மராட்டிய முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் மும்பையில் நடந்த ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் சிக்கியவர். இந்த ஊழல் புகாரை தொடர்ந்து அவர் கடந்த 2010–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்–மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது. இந்த ஊழல் தொடர்பாக அசோக் சவான் மீது கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்தது.இந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தேர்தல் டிக்கெட் வழங்கி உள்ளது. அவர் நாந்தெட் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக தேர்தல் அதிகாரியை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அசோக் சவானுக்கு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அசோக் சவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எனது மனசாட்சிபடி ஆதர்ஷ் ஊழல் வழக்கில் நான் எந்த தவறும் செய்வில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த பிரச்சினையை கையில் எடுப்பது சரியல்ல. இதுபற்றி பேச அவர்களுக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை. ஊழல் பற்றி பேசும் பா.ஜனதா, எடியூரப்பாவுக்கு டிக்கெட் கொடுத்தது ஏன்?. எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் பிரச்சினையில் பா.ஜனதா விளக்கம் அளிக்க தயாரா?. ஆதர்ஷ் ஊழல் வழக்கில் எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் நான் தண்டிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட எனக்கு தேர்தல் ஆணையம் தடை ஏதும் விதிக்கவில்லை. நீங்கள் (நிருபர்கள்) சட்ட விதிமுறையை பாருங்கள். எனக்கு ஆதரவாக சட்டம் உள்ளது. எனவே, நான் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை.இவ்வாறு அசோக் சவான் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது ஒரு பவுன் தங்கம் ரூ.21,888-க்கு விற்பனை Posted: 26 Mar 2014 08:26 AM PDT சென்னை, சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 749 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு பவுன் தங்கம் விலை 21 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்று ரூ.2,749-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 13 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் நேற்று 21 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று 47.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, இன்று 46.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 44 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளியின் விலை 440 ரூபாய் குறைந்து, இன்று 43 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. image: category:Tagging:News Group Category: |
| லோக்சபா தேர்தலுக்கான செலவு 5ஆயிரம் கோடி: தேர்தல் கமிஷன் Posted: 26 Mar 2014 08:02 AM PDT புதுடெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கி 9 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு, மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் என தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.1000 கோடி செலவாகும் என்று கூறினார்.மேலும், இந்த தேர்தலில் வேட்பாளர் செலவின தொகை, பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ரூ.54 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| சர்ச்சைக்குரிய பேச்சு தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்தார் சரத் பவார் Posted: 26 Mar 2014 07:14 AM PDT மும்பை, வரும் மக்களவைத் தேர்தலில், பணியாற்றும் இடத்தில் ஒருமுறையும், சொந்த ஊரில் ஒரு முறையும் வாக்களிக்க வேண்டும்' என்று தனது கட்சித் தொண்டர்களிடம் தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் பேசியதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கான முகாந்திரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வியாழக்கிழமை மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் பவாருக்கு கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு சரத் பவார் இன்று விளக்கமளித்துள்ளார்.அதில், குழப்பத்திற்கும், தவறான புரிதலுக்கும் காரணமான எனது பேச்சுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். தேர்தல் அதிகாரிகள் இந்த பிரச்சினையை இதோடு முடித்துவிடுங்கள். என்று தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| ஓட்டுக்காக கண்ணீர் சிந்தும் அவசியம் எனக்கு இல்லை சித்தராமையாவுக்கு தேவேகவுடா பதிலடி Posted: 26 Mar 2014 06:56 AM PDT பெங்களூர், ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளராக அந்த கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா களம் இறங்கி இருக்கிறார்.இந்த நிலையில், சமீபத்தில் முதல்–மந்திரி சித்தராமையா, தேவேகவுடாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதாவது, தேவேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் அழுவது கெட்ட பழக்கம் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தேவேகவுடா பதிலடி கொடுத்து உள்ளார். இதுகுறித்து தேவேகவுடா கூறியதாவது:– நான் ஒருபோதும் ஓட்டுக்காக அழவில்லை. அழுவதும் இல்லை. மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கும்போது அழுகிறேன். ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நபரும் இதுபோன்று பேசி இருக்க மாட்டார்.சித்தராமையாவுக்கு மக்களின் உணர்வுகள், சுகம், துக்கம் பற்றி எதுவும் தெரிவது இல்லை. அவரது நடவடிக்கைகள் மூலம் இது தெரிகிறது. இதுகுறித்து நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. எனது பொது வாழ்வில் நான் வெற்றியும் அடைந்து உள்ளேன். தோல்வியும் கண்டு இருக்கிறேன். தோல்வி அடைந்ததும் பயந்து ஓடி விடவும் மாட்டேன். வெற்றி பெற்றதும் மார்தட்டிக் கொள்ளவும் மாட்டேன். மூத்த காங்கிரஸ் தலைவர் ஜாபர் ஷெரீப் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேருவதாக கூறியதும் உண்மை. அவரை மதசார்பற்ற கட்சிக்கு வந்து பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் எடுக்கலாம்.இவ்வாறு தேவேகவுடா கூறினார். image: category:Tagging:News Group Category: |
| பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பாலகிருஷ்ணன் சொத்து மதிப்பு ரூ.190 கோடி Posted: 26 Mar 2014 06:48 AM PDT பெங்களூர், பெங்களூர் மத்திய தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் இன்போசிஸ் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.190 கோடி என குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலகிருஷ்ணன் பெயரில் மொத்தம் ரூ.154 கோடி அளவுக்கு சொத்து உள்ளதாகவும், அதில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.103 கோடி மதிப்புக்கு பங்குகள் இருப்பதாகவும், இந்த நிறுவனத்தின் அமெரிக்க வைப்புத்தொகை வரவாக ரூ.5 கோடியே 26 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி சித்ரா பாலகிருஷ்ணன் பெயரில் ரூ.19 கோடியே 34 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருக்கிறது. பாலகிருஷ்ணனுக்கு பெங்களூரில் ஒரு குடியிருப்பும், அவரது மனைவி பெயரில் சென்னையில் ஒரு வீடும் இருக்கிறது. ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 720 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளதாகவும் அவர் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார். பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீல்கேனியின் சொத்து மதிப்பு ரூ.7,700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| பாரதீய ஜனதாவின் பிரச்சார பலூன் விரைவில் வெடிக்கும்: ராகுல் காந்தி Posted: 26 Mar 2014 06:29 AM PDT புதுடெல்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 2004 ஆம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை போல் பாரதீய ஜனதாவின் பிரச்சார பலூனும் இம்முறையும் வெடிக்கும் என்று தெரிவித்தார். மேலும், மோடியின் சித்தாந்தம் இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சித்தாந்தத்தை வெல்ல காங்கிரஸ் உறுதியான முறையில் போராடும் என்றார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |