Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேண்டாம் வெளிநாட்டு மோகம்!

Posted: 26 Mar 2014 09:18 AM PDT

அண்மையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, வளைகுடா நாடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் இருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சிறையில் இருப்பவர்களை மீட்பது தொடர்பான அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என உறுப்பினர்கள் முன்பே கவலை தெரிவித்திருந்தனர். "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளம், தமிழகத்தில் இருந்து ...

பணி நிரந்தரம் இனி சாத்தியமில்லையா?

Posted: 26 Mar 2014 09:08 AM PDT

அரைக்காசு உத்யோகம்னாலும் அரசாங்க உத்யோகம் வேணும் என்பார்கள். கடைசி வரை சம்பளம், பென்ஷன் உண்டு. வாழ்க்கை நிரந்தரமானது. அந்த குடும்பம் என்றும் வருமானம் இல்லாமல் போகாது. தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பிக்கும் வரை அரசாங்க வேலை என்பதுதான் திருமண சந்தையில் முதல் சாய்ஸாக இருந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் சரசரவென்று வெளிநாட்டு கம்பெனிகள் எல்லாத்துறையிலும் நுழைய அந்த ஆரம்ப சம்பளமும் பகட்டும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் ஐ.டி. என்கிற சுனாமி வந்து வர்க்க பேதம் இல்லாமல் வந்தார் அனைவரையும் ...

சகுனம் !

Posted: 26 Mar 2014 07:52 AM PDT

சந்தானம், வீட்டுக்குள் நுழைந்தபோது, இரவு, 7:00 மணி; அவன் அம்மா, காபி கோப்பையுடன் தயாராய் நின்றாள். காபியில் இருந்து ஆவி வெளிவந்தது போல், அவன் மனதிலிருந்து, உணர்ச்சிகள் பீறிட்டன. காபியை குடித்து முடித்தவன், கோப்பையை அம்மாவிடம் தந்தபடியே, ''அம்மா, வசந்தி வீட்டுக்குப் போயிருந்தேன்,'' என்று சொல்லி, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். ''வசந்தியா... எந்த வசந்தி?''''அதாம்மா, எனக்குப் பெண் பார்த்தோமே...'' ''அங்கே உனக்கென்னடா வேலை?'' என்று, எரிச்சலுடன் கேட்டாள் அம்மா.''வசந்திய கல்யாணம் செய்துக்கறேன். ...

வீட்டுக்கு ஒரு மாமியார் !

Posted: 26 Mar 2014 07:43 AM PDT

சிவராமன், விரக்தியுடன் காணப்பட்டான். குடும்பத்தில், அப்பப்போ சின்ன சின்ன பிரச்னைகள், வானவில் போல் வந்தாலும், உடனே, மறைந்து விடும். ஆனால், இப்போது, ஒரு வாரமாகியும் மனைவிக்கும், அவனுக்கும் ஏற்பட்ட பிரச்னை, ஒரு முடிவுக்கும் வரவில்லை. மனைவியின் சுயரூபம், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.ஜெயதேவிக்கு, மாமியார் என்றாலே, விஷம்; பார்க்கும் போதெல்லாம், முகச்சுளிப்பு. இருவருக்கும் சண்டை வந்துவிட்டால், ஜெய தேவிக்கு, வாயிலிருந்து தகாத வார்த்தைகளாகத் தான் வரும். மருமகளின் குணம், பேச்சு, நடவடிக்கைகள் குறித்து, ...

அமீர்கான் வாங்கிய, 10 கோடி ரூபாய் கார்!

Posted: 26 Mar 2014 07:39 AM PDT

பாலிவுட் நடிகர் அமீர் கான், 'சத்யமேவ ஜெயதே' என்ற தலைப்பில், 'டிவி' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில், கருக்கலைப்பு, கவுரவ கொலை, மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடு, அரசியல்வாதிகளின் அத்து மீறல் போன்றவற்றை அம்பலப்படுத்துகிறார். இதனால், அமீர்கானுக்கு, மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையின்படி, தன் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெர்சிடிஸ் பென்ஸ் கார்' ஒன்றை வாங்கியுள்ளார். துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத வகையில், இந்த ...

படித்ததில் பிடித்தது :) - உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....

Posted: 26 Mar 2014 07:37 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!

Posted: 26 Mar 2014 06:45 AM PDT

விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட இன்னும் கையில் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்னவானது என்பதும் புரியவில்லை. தனது அன்பிற்குரியவர்கள் இறந்துவிட்டார்கள் என்று உறவினர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களையும் மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனால் MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில விழுந்து விட்டது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று திடீரென அறிவித்துள்ளது பயணிகளின் உறவினர்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே ...

வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.

Posted: 26 Mar 2014 06:42 AM PDT

வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது. அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு ...

தேர்தல் நகைச்சுவை

Posted: 26 Mar 2014 06:18 AM PDT

தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே






கேரட் பேரீச்சம்பழம் கேக்

Posted: 26 Mar 2014 04:27 AM PDT

மைதாமாவு -1 கப் பொடித்து சர்க்கரை -1 கப் சன்பிளவர் எண்ணெய் -3/4 கப் முட்டை -2 பேரீச்சம்பழம் -12 கேரட் துருவியது -1 பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி முந்திரிபருப்பு -1 மேஜைக்கரண்டி வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி Vanilla essence -1 tspn மாவு மற்றும் பேக்கிங்பவுடரை மூன்று முறை சலித்துக்கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் முட்டையை அடித்துக் கொள்ளவும். எண்ணெய் சர்க்கரை எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். மாவை சிறிது சிறிதாக கலந்த பின் பேரீச்சம்பழம் கேரட் முந்திரிபருப்பு சேர்க்கவும். 180 டிகிரி ...

நலம் நலமறிய ஆவல்!

Posted: 26 Mar 2014 03:51 AM PDT

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் ...

ரமண மகரிஷி

Posted: 25 Mar 2014 10:25 PM PDT

ரமண மகரிஷி இந்த ஓவியத்தில் உள்ள மகான் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. காரணம் , பால்பாயிண்ட் பேனாவால் வரையபட்டது.பால்பாயிண்ட் பேனாவால் வரையும்போது குற்றம் குறை இருந்தால் திருத்தமுடியாது. உருவத்தை மனதில் எவ்வளவு ஆழமாக பதிவு செய்து இருந்தால் ,இவ்வளவு சிறப்பாக , வரையமுடியும், என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன். கைத்திறன்,தவறின்றி வரையும் திறன் ,அவரை வாழ்த்த தோன்றுகிறது . அவர் தொழில் முறை ஓவியர் இல்லை. அவர் மருத்துவ விஞ்ஞானி தூரத்து ...

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 25 Mar 2014 09:37 PM PDT

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் * இருட்டில் பாதை தெரியவில்லை டார்ச் அடித்து வரும் மின்மினிப் பூச்சிகள். * கடலை உருண்டை காட்பரீஸ் இனிப்பிலும் வர்க்க பேதம். * கண்ணாடி நீருக்குள் விடுதலைக்குப் போராடும் பொன்னிற மீன்கள். * அழகான வீடு கட்டிய பின் அடிவயிற்றைக் கலக்கியது வாங்கிய கடன். * வீதியில் முடவன் வரைந்த ஏசு ஓவியம் நெஞ்சின் மீது நிறையச் சில்லறைகள். * என்ன தவறு செய்ததற்காக இநத தணடணை? மரக் கிளையில் தலைகீழாய் வௌவால் * இறந்தநாள் இருபதாம் தேதி சம்பளம் வா.ங்க சந்தோஷமாய் உயிர்த் ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 25 Mar 2014 06:44 PM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 25 Mar 2014 06:35 PM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™