Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவும், குஜராத் போல மாறிவிடும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தாக்கு

Posted: 11 Mar 2014 09:18 AM PDT

மைசூர்,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர்,  பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மைசூருக்கு வந்தார். பின்னர் அவர் மைசூர்–குடகு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விசுவநாத்தை ஆதரித்து காரில் இருந்தபடி மைசூரில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:–

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமள்ள 14 தொகுதிகளில் நாளை  12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 60 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதனால் தொண்டர்கள் பொதுமக்களிடம் காங்கிரஸ் அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

நரேந்திர மோடி இதுவரை 4 முறை கர்நாடகத்துக்கு வந்து உள்ளார். அவர் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்து வாக்கு சேகரித்தாலும் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது. அவர் தன்னை பெரிய 'நட்சத்திரம்' என்று நினைத்துக் கொண்டு நாடு முழுவதும் சென்று வருகிறார். ஆனால் அவர் குஜராத் மாநிலத்துக்கு என்ன செய்தார்.தான் பிரதமரானால் இந்தியாவை, குஜராத் போல் ஆக்குவதாக கூறுகிறார். அவர் கூறுவது சரி தான். ஏனெனில் குஜராத் மாநிலம் தற்போது எந்த வித வளர்ச்சியும் இன்றி உள்ளது. மேலும் அந்த மாநிலம் ஊழலில் தலை சிறந்து விளங்குகிறது. இதனால் மோடி பிரதமரானால் இந்தியா, குஜராத்தை போல் ஆகிவிடும்.இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

category:

News Group Category:

தமிழக கவர்னர் டாக்டர் ரோசையா

Posted: 11 Mar 2014 09:16 AM PDT

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே.கட்டோச் நேற்று சென்னையில் தமிழக கவர்னர் டாக்டர் ரோசையாவை சந்தித்தபோது எடுத்தபடம்.

4

அமெரிக்காவின் நாசகார கப்பல்

Posted: 11 Mar 2014 09:05 AM PDT

மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுவதற்காக தாய்லாந்து வளைகுடாவில், அமெரிக்காவின் நாசகார கப்பல் யு.எஸ்.எஸ். பிங்க்னேயில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய காட்சி இது.

8

தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி

Posted: 11 Mar 2014 09:01 AM PDT

குஜராத் மாநிலம் பலசினோர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். பிறகு அவர் தடுப்பு கட்டைகளை நெருங்கி வந்து, தொண்டர்களுடன் பேசியதை படத்தில் காணலாம்.

7

காங்கிரஸ் தொண்டர்

Posted: 11 Mar 2014 08:53 AM PDT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

2

தேர்தல் புறக்கணிப்புக்காகவே பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல்: மத்திய அரசு

Posted: 11 Mar 2014 08:52 AM PDT

புதுடெல்லி,

சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மீது நகசலைட்டுகள் நடத்திய தாக்குதல் தேர்தல் புறக்கணிப்புக்காக நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட  தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. அதேபோல், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் நக்சலைட்டுகள் குறிவைத்து திட்டமிட்டுள்ளனர். நக்சலைட்டுகளின் இந்த சதித்திட்டம்  குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே உள்துறை அமைச்சகம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 9 மாநிலங்களில் உள்ள தலமை செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டிய முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதில், வரும் பாரளுமன்ற தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் திட்டம் வகுத்துள்ளதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.மேலும், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சி தலைவர்களையும் நக்சலைட்டுகள் குறிவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

category:

News Group Category:

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற சீக்கியர்களை அனுமதிக்க வேண்டும்: 105 எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 11 Mar 2014 08:22 AM PDT

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்கள் தங்களது மத சம்பிரதாயப்படி தலைப்பாகை, தாடி வைத்திருக்க அனுமதிப்பதில்லை. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ராணுவ வீரராகும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இந்தியா, கனடா, இங்கிலாந்து ராணுவத்தில் சீக்கியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்க ராணுவத்திலும் அனுமதி வழங்க வேண்டும் என்று அங்குள்ள சீக்கியர்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்ததுடன் எம்.பி,க்களை சந்தித்து முறையிட்டார்கள்.

இதனை அடுத்து ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த 105 எம்.பி.க்கள் அமெரிக்க ராணுவ மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக் கொண்டு ராணுவத்தில் பணியாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை சீக்கியர் கூட்டமைப்பின் சட்ட, கொள்கை பிரிவு இயக்குனர் ராஜ்தீப் சிங் வரவேற்று, இது எங்கள் முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் சேர எங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
 

image: 

category:

News Group Category:

மாவோயிஸ்டுகள் தாக்குதல்: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

Posted: 11 Mar 2014 08:10 AM PDT

புதுடெல்லி,

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை செயல் என்றும்  இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

 

category:

News Group Category:

தேவைப்பட்டால் காங்கிரசின் ஆதரவை கூட பெற்று கொள்வீர்களோ? பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி

Posted: 11 Mar 2014 07:54 AM PDT

மும்பை,

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மராட்டிய நவநிர்மாண் சேனா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து, சிவசேனா போட்டியிடும் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுக்கும் வகையில், மும்பை தாதரில் உள்ள கட்சி அலுவலகம் சேனா பவனில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ஆட்சி அதிகாரம் சிலரது கையில் சென்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள் என்று ராஜ் தாக்கரேயை மறைமுகமாக தாக்கி பேசினார். மேலும் அவர் கூறியதாவது:–

மாநில பா.ஜனதா கட்சியில் முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை எனக்கு விளக்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவுடன் எனக்கு பரஸ்பர உறவு இருக்கிறது. இருப்பினும், திடீரென சிலர் தங்களுக்கு பேரும், புகழும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இப்படித்தான் டெல்லியின் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசின் ஆதரவை பெற்றார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ராஜீவ் காந்தியின் ஆதரவை பெற்றார். தேவைப்பட்டால் நீங்கள் (பா.ஜனதா) காங்கிரசின் ஆதரவை கூட பெற்று கொள்வீர்களோ? அப்படி என்றால், நமக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இந்துத்வாவில் நிகழும் பிரச்சினைகளை களையவே நாம் கூட்டணி அமைத்தோம். கட்சியில் என்ன தான் நெருக்கடி ஏற்பட்டாலும், நான் உங்களுடன் தான் இருப்பேன். இந்த பிரச்சினையில், கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச இருக்கிறேன்.இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

category:

News Group Category:

கோடியக்கரையில் 250 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

Posted: 11 Mar 2014 07:49 AM PDT

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 250 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆலிவர்ரெட்லி ஆமைகள்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரியவகையான ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், மணியன்தீவு உள்ளிட்ட 5 இடங்களில் ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்கின்றன. இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர். இதுவரை வனத்துறையினரால் சுமார் 8 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு கோடியக்கரை ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர். இந்த முட்டைகளில் இருந்து 45 முதல் 55 நாட்களுக்குள் குஞ்சுகள் வெளிவரும்.

கடலில் விடப்பட்டது

அவ்வாறு வைக்கப்பட்ட முட்டைகளில் சுமார் 250 முட்டைகள் பொறிந்து ஆமைக்குஞ்சுகளாக வெளிவந்தன. இதனை வனத்துறையினர் எடுத்து கடலில் விட்டனர். இதுவரை இந்த வருடத்தில் மட்டும் சுமார் ஆயிரம் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. அழிந்து வரும் இனமான இந்த ஆலிவர்ரெட்லி ஆமையை மீனவன் நண்பன் என்றும், கடலை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்வதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது இவ்வாறு பல வகைகளில் மீனவர்களுக்கு உதவி செய்யும் ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகளை கடற்கரையில் கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆமை முட்டை விற்பனை செய்வது சட்டபடி குற்றமாகும். இது வனத்துறை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என கூறினர்.

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™