Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ராஜராஜ சோழனின் முதல் போர்!

Posted: 11 Mar 2014 09:25 AM PDT

காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது. காந்தளூர்ச் சாலை காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது ...

எது நோய்?

Posted: 11 Mar 2014 09:20 AM PDT

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது என்று சரியாகத் தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் நமது உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும், அதாவது இருபத்தி நாலு மணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லாததுகளை உற்றுக் கவனிக்கிறார். எங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அப்படிக்கூடச் சொல்லமுடியாது ஒரு கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு ...

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி

Posted: 11 Mar 2014 07:46 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் 20 பேர் பலியாகினர். இது குறித்து அம்மாநில ஏ.டி.ஜி.பி. முகேஷ் குப்தா தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், "பலியான 20 வீரர்களில் 5 பேர் சுக்மா மாவட்ட காவல்துறையினர், 15 பேர் சி.ஆர்.பி.எப். வீரர்கள். இந்தத் தாக்குதலில் இருந்து 44 வீரர்கள் தப்பிவிட்டனர்" என்று தெரிவித்தார். சாலை திறப்புக்கான ஏற்பாடுகளை பார்வையிட மத்திய ரிசர்வ் போலீஸ், சுக்மா மாவட்ட போலீசார் உள்ளிட்ட வீரர்கள் ...

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Posted: 11 Mar 2014 06:48 AM PDT

'பதினாறு வயதுக்குட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்' என்கிற அறிவிப்பு இல்லை. இருட்டோ இருட்டில், ஓபனிங் ஷாட் வைக்கவில்லை. சின்ன வெளிச்சத்தில் மோப்ப நாய் ஓடுவதைக் காட்டவில்லை. கேமராவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை. ரெயின் கோட், தலையில் தொப்பி சகிதம் ஓர் உருவம் மழையில் நனைந்தபடி நடந்துவரவில்லை. 'வீல்ல்ல்' என அலறல் சத்தத்துக்கு 'டி.டி.எஸ். எஃபெக்ட்' கொடுக்கவில்லை. முத்தக் காட்சியோ... மொத்தமாக இல்லை. இத்தனை 'இல்லை'களுடன், ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே, ...

அந்தாதி

Posted: 11 Mar 2014 06:26 AM PDT

யுத்தங்கள் எங்கள் புத்தகத்தின் பக்கங்கள் ==பக்கங்கள் தொடர்ந்தும் வலிகளின் இரத்தங்கள் இரத்தங்களின் காடுகளாய் ஆன உலகம் ==உலகத்தில் இல்லை மாண்புமிகு மனிதம் மனிதம் இருக்குமிடத்தில் மாறாத மனிதன் ==மனிதன் ஆகவில்லை இன்னும் மாபெரும் புனிதன் புனிதனாக வாழ்ந்து காட்ட எங்கே இங்கு யாரும் ==யாருமில்லா உலகத்திலே வந்ததுண்டா யுத்தங்கள். மதபேதம் பார்த்து நிற்கும் மனித குலம் == குலமே இன்றி இன்னிசை பாடும் பறவைக்கூட்டம் கூட்டம் போட்டு ஓட்டு கேட்கும் மனித சாதி ==சாதி பார்த்தே ஊரைக் ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 11 Mar 2014 06:01 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மாம்பழம்!

Posted: 11 Mar 2014 04:56 AM PDT

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, அன்னாசி போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் ...

பிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்!

Posted: 11 Mar 2014 04:51 AM PDT

க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது. நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், ...

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !

Posted: 11 Mar 2014 04:16 AM PDT

உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும்.                     இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.   ...

உதடுகளாவது சிரிக்கட்டும்

Posted: 11 Mar 2014 01:41 AM PDT

இதயத்தின் வழிகளை உதடுகளிடம்
தெரிவிக்காதே ,தெரிந்தால்
அவை புன்னகைக்க மறுத்து விடும்.

அதை விட  புன்னகைத்தல் நலமே
உள்ளங்கள் அழுதாலும்
உதடுகளாவது சிரிக்கட்டும் ..

< < < பாரதியார் பாடல்கள் தேவை > > >

Posted: 10 Mar 2014 10:25 PM PDT

.  .  .  . பாரதியார் பாடல்கள் தேவை அனைவருக்கும் வணக்கம். பாரதியார் பாடல்கள் பற்றிய செய்திக்கு முன்பு ஒரு தன்னிலை விளக்கம். யாம் தொகுத்து உருவாக்கிய; 1.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 1) 2.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 2) 3.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 3) 4.தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 1) 5.தஞ்சை ராமையாதாஸ். திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 2) 6.கு.மா.பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள் ஆகிய 6 நூல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்து 7.பட்டுக்கோட்டை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™