மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பீகாரில் மோடி–பஸ்வான் ஒரே மேடையில் பேசுகிறார்கள்
- நரேந்திரமோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி?
- ஐதராபாத்தில் போட்டியிட தயாரா?: மோடிக்கு முஸ்லிம் கட்சி சவால்
- கேரளா: மனைவி, கள்ளக்காதலனை கொன்று வாலிபர் தற்கொலை
- பாராளுமன்ற தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு
- ஜெகன்மோகன் விதிகளை மீறவில்லை: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விளக்கம்
- ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் 20 ஜோடி இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
- தெலுங்கானா ராஷ்டிர சமிதி காங்கிரசில் இணையுமா?: இன்று முடிவு
- ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம் இல்லை
- என்ஜின் வாங்கியதில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
- சர்ச்சையில் சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி
- பிரதமர் மன்மோகன் சிங் இன்று மியான்மர் பயணம்
- கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கவில்லை: இலங்கை மந்திரி சொல்கிறார்
- காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் மீது நரேந்திரமோடி கடும் தாக்கு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல் வேட்பாளர் பட்டியல்
- எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பகோளாறு: மும்பையில் அவசரத் தரையிறக்கம்
- பா.ஜ.க சார்பில் கெஜ்ரிவாலை எதிர்த்து கிரண் பேடி போட்டி?
- உ.பி.யில் 150 வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது: மோடி குற்றச்சாட்டு
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நிதிஷ் தர்ணா
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்க மொய்லி அனுமதி
| பீகாரில் மோடி–பஸ்வான் ஒரே மேடையில் பேசுகிறார்கள் Posted: 02 Mar 2014 11:21 PM PST பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் உத்தரபிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். நரேந்திர மோடி இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். முஷாபர்பூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். சமீபத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்த லோக் ஜனசக்தி கட்சி |
| நரேந்திரமோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி? Posted: 02 Mar 2014 10:19 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சொந்த மாநிலத்தில் போட்டியிடுவதை விட நாட்டிலேயே அதிக தொகுதிகள் உள்ள மாநிலமான உத்தரபிரதேசத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த மாநிலத்தில் தனக்கு செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்வு செய்து வருகிறார். இதற்காக தனது நெருங்கிய ஆதரவாளரான அமித்ஷிவை |
| ஐதராபாத்தில் போட்டியிட தயாரா?: மோடிக்கு முஸ்லிம் கட்சி சவால் Posted: 02 Mar 2014 10:13 PM PST ஆந்திராவில் மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிக்கு (எம்.ஐ.எம்.) ஐதராபாத்தில் செல்வாக்கு உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஒவைசி அசாதுதீன் ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். மஜ்லிஸ் கட்சியின் 56–வது ஆண்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் பேசிய ஒவைசி அசாதுதீன் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால் விட்டு பேசினார். அவர் கூறியதாவது:– |
| கேரளா: மனைவி, கள்ளக்காதலனை கொன்று வாலிபர் தற்கொலை Posted: 02 Mar 2014 10:00 PM PST கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ராஜகுமாரி என்ற இடத்தை சேர்ந்தவர் சஜி (வயது 47). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அஞ்சுமோள், அலினா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜிஜீ (48). இவர் மலை பகுதி கிராமங்களுக்கு ஜீப் ஓட்டும் தொழில் செய்து வந்தார். சஜியும், ஜிஜீயும் உறவினர்கள் என்பதால் சஜி வீட்டிற்கு ஜிஜீ அடிக்கடி வந்து செல்வார். அப்போது சஜியின் மனைவி சிந்துவுடன் ஜிஜீக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சஜி அதிர்ச்சி அடைந்து தனது மனைவியையும், ஜிஜீயையும் கண்டித்தார். ஆனால் சஜியின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதனால் சஜி ஆத்திரத்துடன் இருந்தார். |
| பாராளுமன்ற தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு Posted: 02 Mar 2014 09:48 PM PST 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 1–ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கு முன்பு தேர்தல் முடிந்து எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16–ந்தேதி முதல் மே 13 வரை 5 கட்டங்களாக நடத்தப்பட்டது |
| ஜெகன்மோகன் விதிகளை மீறவில்லை: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் விளக்கம் Posted: 02 Mar 2014 09:44 PM PST ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றார் ஏழுமலையான் மீதான தங்களது நம்பிக்கையை தெரிவிக்கும் வகையில் அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவரான ஜெகன்மோகன் ரெட்டி இதனை பின்பற்றாமல் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு தேவஸ்தான அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு ஜெகன்மோகன் ரெட்டி செருப்பு அணிந்தபடி கியூ காம்ளக்சில் |
| ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் 20 ஜோடி இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 02 Mar 2014 09:28 PM PST ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9–வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது கோவில் வளாகம், நான்குமாட வீதிகளில் கூடியிருந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட புதுமண ஜோடிகள் உறவினர்கள், நட்பும் சூழ திருமணம் |
| தெலுங்கானா ராஷ்டிர சமிதி காங்கிரசில் இணையுமா?: இன்று முடிவு Posted: 02 Mar 2014 08:35 PM PST ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்காக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தீவிரமாக போராடி வந்தது. பலத்த எதிர்ப்புக்கு இடையே தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் சம்மதித்தால் அந்த |
| ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம் இல்லை Posted: 02 Mar 2014 08:15 PM PST மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டில் ஊழலை ஒழிக்கும் முயற்சியாக பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு திருத்த மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். |
| என்ஜின் வாங்கியதில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு Posted: 02 Mar 2014 07:03 PM PST இந்திய விமானப்படையில் 2007-2011-ம் ஆண்டுகளில், போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வந்த ஒரு கடிதம் மூலம் இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. முதல் கட்டமாக இதுகுறித்து விசாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் |
| சர்ச்சையில் சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி Posted: 02 Mar 2014 06:58 PM PST ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஆனால் இது ஒரு சர்ச்சைக்கு வழி வகுத்து விட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால், ஏழுமலையான் மீதுள்ள தங்களின் நம்பிக்கையை தெரிவிக்கும் விதத்தில் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று நிரப்பி கையெழுத்து போட்டு கொடுக்க |
| பிரதமர் மன்மோகன் சிங் இன்று மியான்மர் பயணம் Posted: 02 Mar 2014 03:28 PM PST பிரதமர் மன்மோகன் சிங் தனது கடைசி வெளிநாட்டுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) மியான்மர் செல்கிறார். வங்கக்கடல் நாடுகள் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார். 'பிம்ஸ்டெக்' என்ற பெயரில், பல்துறை தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக வங்கக்கடல் நாடுகள் ஓரணியாக செயல்பட்டு |
| கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கவில்லை: இலங்கை மந்திரி சொல்கிறார் Posted: 02 Mar 2014 02:24 PM PST மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர், போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை சர்வதேச நிதி ஒத்துழைப்பு மந்திரி சரத் அமுனுகாமா கலந்து கொண்டார். அதன் இடையே அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- |
| காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் மீது நரேந்திரமோடி கடும் தாக்கு Posted: 02 Mar 2014 01:36 PM PST உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், பாரதீய ஜனதாவின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. பெருந்திரளாகக்கூடிய மக்கள் வெள்ளத்தில், அந்தக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் வெப்பத்தின் தீவிரம் இனிதான் உணரப்பட வேண்டும். சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் தோல்வி நிச்சயம். எங்கும் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அலை வீசுகிறது. அந்தக் கட்சிகளைப் |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல் வேட்பாளர் பட்டியல் Posted: 02 Mar 2014 01:03 PM PST பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, 24 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. அசாம், அரியானா, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா உள்பட 12 மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். |
| எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பகோளாறு: மும்பையில் அவசரத் தரையிறக்கம் Posted: 02 Mar 2014 05:21 AM PST இன்று காலை துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. 231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் |
| பா.ஜ.க சார்பில் கெஜ்ரிவாலை எதிர்த்து கிரண் பேடி போட்டி? Posted: 02 Mar 2014 03:04 AM PST ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய அண்ணா ஹசாரேவை பின்பற்றும் கிரண் பேடியை பாரதீய ஜனதா கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அவர் கெஜ்ரிவால் அரசியல் அனுபவமற்றவர் என்றும் மோடி தான் நாட்டை திறம்பட நடத்துவார் என நம்புவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது |
| உ.பி.யில் 150 வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது: மோடி குற்றச்சாட்டு Posted: 02 Mar 2014 02:47 AM PST பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- |
| பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நிதிஷ் தர்ணா Posted: 02 Mar 2014 01:52 AM PST பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி அம்மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் 5 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி நீண்ட நாளாக மத்திய |
| மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்க மொய்லி அனுமதி Posted: 01 Mar 2014 11:56 PM PST மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மனித ஆரோக்கியத்திற்கு எதிரானது என்று நாடெங்கும் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த போது அதற்கான தடையில்லா சான்றிதழை வழங்கி கையெழுத்திடவில்லை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |