Tamil Star |
- காத்திருந்த இந்த பூனைக்கு பலன் கிடைச்சிருக்குமா?…..
- போட்ட காசை எடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு!….
- கிரேட் எஸ்கேப்னு சொல்றது இதைத் தானோ?….
- ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்! கப்டன் ரகீம்
- வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்
- நடந்து சென்ற மனிதரை ஒரே தருணத்தில் இரு கார்கள் பதம் பார்த்த சோகம்….
- தேனின் தித்திக்கும் இனிப்பு
- ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை கட்டிடம் தரைமட்டமாகும் காட்சி……
- கணவன் கண்முன்னே நண்பரோடு உல்லாசமாக இருந்த மனைவி….. நாடு தாங்குமா?….
- விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீகள்!
- ரஷ்யாவின் அத்துமீறல்: சர்வதேச வர்த்தக மாநாட்டை புறக்கணிக்கும் ஒபாமா
- இலங்கை அபிவிருத்தி பணிக்கு உலக வங்கி கடன் வழங்க முடிவு
- சோகத்தில் முடிந்த கேளிக்கை திருவிழா
- விடுதலைப்புலிகள் தோல்வியை தமிழர்களால் ஏற்கமுடியவில்லை: அமைச்சர் அமுனுகம
- புலிகளே அதிகளவிலான காணாமல் போதல் சம்பவங்களுக்கு பொறுப்பு என்கிறது அரசாங்கம்!
- பெண்களை கொடூரமாக கொன்ற குற்றவாளி சிக்கினார்
- சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பிரசாரம்
- டார்க் சொக்லேட் சாப்பிடுங்க..இதயத்துக்கு ரொம்ப நல்லது
- இலங்கையில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பாவனை
- தேர்தல் ஆணையாளரின் தடையை மீறுமாறு ஜனாதிபதி உத்தரவு!- சிங்கள இணையத்தளம்
| காத்திருந்த இந்த பூனைக்கு பலன் கிடைச்சிருக்குமா?….. Posted: 02 Mar 2014 04:36 AM PST |
| போட்ட காசை எடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு!…. Posted: 02 Mar 2014 04:35 AM PST |
| கிரேட் எஸ்கேப்னு சொல்றது இதைத் தானோ?…. Posted: 02 Mar 2014 04:34 AM PST |
| ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்! கப்டன் ரகீம் Posted: 02 Mar 2014 04:33 AM PST
ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்தை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆசிய கிண்ணப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணி 47.5 ஓவரில் 222 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஐ.சி.சி.யின் குழு உறுப்பினராக உள்ள அணிகளில் ஒன்றை முதல்முறையாக வீழ்த்தி இருக்கிறோம். ரசிகர்களும், நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். எங்கள் ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள், எங்களை நேசிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து வங்கதேச அணியின் அணித்தலைவர் முஷ்பிகுர் ரகீம், ஆப்கானிஸ்தானிடம் தோற்றது மிகவும் அவமானமாகும். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 முறைகளிலும் நாங்கள் செயல் இழந்து விட்டோம். எங்களது பந்து வீச்சு முதல் 30 ஓவர் வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். 254 ஓட்டங்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி வரை வெற்றிக்காக போராடினோம். மூத்த வீரர்களான சகீப்–அல்– ஹசன், தமிம் இக்பால் இல்லாதது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது, இனிவரும் ஆட்டங்களில் முன்னேற்றம் அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் Posted: 02 Mar 2014 04:31 AM PST வங்கதேச அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 255 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 47 தசம் 5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது. இதன் பிரகாரம் ஆப்கானிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடந்து சென்ற மனிதரை ஒரே தருணத்தில் இரு கார்கள் பதம் பார்த்த சோகம்…. Posted: 02 Mar 2014 04:30 AM PST |
| Posted: 02 Mar 2014 04:29 AM PST
இதை இன்வெர்டேஸ் என்கிற நொதியால் சிதைத்தால், குளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற இரு சிறு சர்க்கரை பொருட்கள் கிடைக்கும். இவற்றில் ஃப்ரக்டோஸ் எல்லாவித பழங்களிலும் இருக்கிறது. பழங்களின் சுவைக்கு இவை தான் காரணம், இதுதவிர பூவிலுள்ள மதுவிலும் இந்த சர்க்கரை தான் நிரம்பியுள்ளது. தேன் எப்படி கிடைக்கிறது? தேனீக்கள் மலர்களின் மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில் தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன. தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது. தேனின் தரம் தேனில் இனிப்பு சத்து அதிகம். ஃப்ரக்டோஸ், குளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன. அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும். தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில் தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது. ஈரப்பதம் 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால், அது 'ஸ்பெஷல்' கிரேடு தேன் எனவும், 20 முதல் 22 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால், அது 'A' கிரேடு தேன் எனவும், 22 முதல் 25 சதம் ஈரப்பதம் இருந்தால் அது 'ஸ்டாண்டர்ட்" கிரேடு எனவும் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை கட்டிடம் தரைமட்டமாகும் காட்சி…… Posted: 02 Mar 2014 04:26 AM PST |
| கணவன் கண்முன்னே நண்பரோடு உல்லாசமாக இருந்த மனைவி….. நாடு தாங்குமா?…. Posted: 02 Mar 2014 04:25 AM PST |
| Posted: 02 Mar 2014 04:22 AM PST நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். இருப்பினும் இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் […] |
| ரஷ்யாவின் அத்துமீறல்: சர்வதேச வர்த்தக மாநாட்டை புறக்கணிக்கும் ஒபாமா Posted: 02 Mar 2014 04:15 AM PST
யுக்ரேன் விவகாரங்களில் ரஷ்யா தலையீடு செய்வதை அடுத்து , ரஷ்யாவிற்கான விஜயத்தை இரத்து செய்யக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேனில் தொடரும் வன்முறைகளை அனுமதிக்க முடியாது எனவும், மோதல்களை கண்டிப்பதாகவும் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார். அத்துடன் யுக்ரேன் மக்களுக்காக ரஷ்யாவுடன் இணங்கி செயற்படுவதற்கு அமெரிக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து. அமெரிக்க புலனாய்வு தகவல்களை கசிய விட்ட எட்வர்ட் ஸ்நோவ்டனுக்கு ரஷ்யா புகலிடம் வழங்கியமையை அடுத்து ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி இரத்து ஏற்கனவே இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யுக்ரேன் ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து யுக்ரேனில் ஆரப்பாட்டங்கள் மற்றும் கட்டங்களை கைப்பற்றும் முயற்சிகள் ரஷ்ய ஆயுததாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இவ்வாறான சம்பவங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவிற்கான தனது பயணத்தை இரத்து செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தமது நாட்டு பிரஜைகளை யுக்ரேன் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக்' கொள்ளுமாறு அமெரிக்கா மக்களை அறிவுறுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அபிவிருத்தி பணிக்கு உலக வங்கி கடன் வழங்க முடிவு Posted: 02 Mar 2014 04:13 AM PST இலங்கையின் நகர அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக உலக வங்கி 147 மில்லியன் டாலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. 2020 ஆண்டு பூர்த்தி செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்காக இந்த கடனை வழங்க, உலக வங்கி தீர்மானித்துள்ளதாக, அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹம்பாந்தொட்டை மற்றும் கொழும்பு ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோகத்தில் முடிந்த கேளிக்கை திருவிழா Posted: 02 Mar 2014 04:11 AM PST
பொலிவியாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஒரூரோ நகரில் கேளிக்கை திருவிழா தொடக்க நாள் நிகழ்ச்சியையொட்டி நேற்று பிரம்மாண்ட பேரணி நடந்தது. இதில் 35 ஆயிரம் நடன கலைஞர்களும், 6 ஆயிரம் இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர், அதை கண்டுகளிக்க 3 லட்சம் பேர் திரண்டனர். இந்த கோலாகலத்திற்கு இடையில் பேரணி சென்று கொண்டிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இசைக் கலைஞர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து பேரணி வேறு வழியாக திருப்பி விடப்பட்டது, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விடுதலைப்புலிகள் தோல்வியை தமிழர்களால் ஏற்கமுடியவில்லை: அமைச்சர் அமுனுகம Posted: 02 Mar 2014 04:08 AM PST விடுதலைப்புலிகள் தோல்வியை தமிழக கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கையை குறை கூறுகின்றனர் என அந்நாட்டு துணை நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, இலங்கை துணை நிதியமைச்சர் சாரத் அமுனுகம இந்தியா சென்றுள்ளார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, இலங்கையில் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது எந்தவித மனித உரிமை மீறலும் நடைபெறவில்லை. இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகள் தோல்வியடைந்ததை தமிழக அரசியல் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புலிகளே அதிகளவிலான காணாமல் போதல் சம்பவங்களுக்கு பொறுப்பு என்கிறது அரசாங்கம்! Posted: 02 Mar 2014 04:05 AM PST நாட்டில் இடம்பெற்ற அதிகளவான காணாமல் போதல் சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என அரசாங்கம் அறிவித்துள்ளது. போர் இடம்பெற்றக் காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 80 வீதமான சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு என தெரிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவங்களில் அதிகமானவை சிறுவர் கடத்தப்பட்டவை தொடர்பானது. போர் இடம்பெற்ற காலத்தில் புலிகள் சிறுவர் போராளிகளை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அதிகளவில் அரசாங்கப் படையினரே […] |
| பெண்களை கொடூரமாக கொன்ற குற்றவாளி சிக்கினார் Posted: 02 Mar 2014 04:03 AM PST ஜேர்மனியில் சட்டநிறுவன பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த 28ம் திகதி யான்குயிங் என்கிற 48 வயது நிரம்பிய சீன நபர், சட்டநிறுவன பெண் ஒருவரை தாக்கி கொலை செய்துள்ளார். அத்துடன் அருகிலிருந்த மற்றொரு ஆண் நபரையும், கொலையை நேரடியாக பார்த்த பெண்ணையும் தாக்கியுள்ளார். மேலும் இதேபோன்று எர்காத் என்ற பகுதியில் பெண் ஒருவரை கொன்று, வேறொரு ஆணையும் தாக்கியுள்ளான். இதனையடுத்து ஹெலிகாப்டரின் மூலம் தீவிர தேடுதல் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பிரசாரம் Posted: 02 Mar 2014 03:58 AM PST ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 25 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அதன் அனுசரணையில் வெளியாகியுள்ள புத்தகம் மூலம் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அந்த தொலைக்காட்சி மறுத்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி ஊழல் ஊடகவியலை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குறித்த புத்தகம் மூலம் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி இறுதிக்கட்ட போரில் இலங்கை […] |
| டார்க் சொக்லேட் சாப்பிடுங்க..இதயத்துக்கு ரொம்ப நல்லது Posted: 02 Mar 2014 03:56 AM PST டார்க் சொக்லெட்டுகள் சாப்பிட்டால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றும் நுண்ணூட்டக் கழகம் மற்றும் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் டார்க் சொக்லேட் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற்கண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், டார்க் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பாவனை Posted: 02 Mar 2014 03:54 AM PST இலங்கையில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்பாட்டாளர்களாக உள்ளதாக இலங்கையின் இணையத்தள பாவனை தொடர்பாக ஆய்வு செய்யும் இலங்கை ஆய்வு முன்னேற்ற நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14 வீதத்தினர் இணையத்தள பாவனையாளர்களாகவுள்ளனர். 18 வயதிற்கும் 24 வயதிற்குமிடைப்பட்ட 696,571 இலங்கையர் பேஸ்புக் பாவனையாளர்களாகவுள்ளதுடன். இவர்களில் 68 வீதமானோர் ஆண்களாவும் 32 வீதமானோர் பெண்களாகவும் உள்ளதாக தரவுகள் குறிப்படுகிறது. இவற்றுடன் 78 வீதமான கட்டிளமைப் பருவத்தினர்; நாளொன்றுக்கு சராசரி […] |
| தேர்தல் ஆணையாளரின் தடையை மீறுமாறு ஜனாதிபதி உத்தரவு!- சிங்கள இணையத்தளம் Posted: 02 Mar 2014 03:51 AM PST அரசியல் கட்சிகளின் தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கு தடைவிதித்து தேர்தல் ஆணையாளர் பிறப்பித்த உத்தரவை மீறி செயற்படுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் உட்பட தனது ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













