மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- புதிய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு
- சிரஞ்சீவி தம்பி நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி தொடங்குகிறார்
- மோடி வீட்டுக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போலீசார் தடை
- மனைவி, மகளுக்கு சீட்: லல்லு மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி
- பாராளுமன்ற தேர்தல்: கேரளாவில் களம் இறங்கும் சினிமா நட்சத்திரங்கள்
- 6 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவேண்டாம்: நடிகை ரீமா கல்லிங்கல் கருத்து
- வீட்டை காலி செய்யுமாறு கெஜ்ரிவாலுக்கு டெல்லி அரசு நோட்டீஸ்
- திருப்பதி கோவிலில் உள்ள பழங்கால நாணயங்கள் புத்தகமாக தயாரிப்பு
- பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை கண்காணிக்க குழு
- சொத்து தகவலை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய புதிய முறை
- நீதித்துறையின் மூலமே ஊழலை ஒழிக்க முடியும்: சிதம்பரம்
- ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேருக்கு ஜாமீன்
- ஜெ.பிரதமரானால் ஆதரவு தருவேன்: மம்தா பானர்ஜி
- குஜராத்தில் மனிஷ் சிசோடியா கார் மீது தாக்குதல்
- காந்தியைக் கொன்றதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் :ராகுல் கடும் தாக்கு
- கொலை வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை
- ம.பி. முதல்வர் சவுகான் உண்ணாவிரதம்: மத்திய அரசு மீது தாக்கு
- பா.ஜ.க. வலையில் விழுந்து விடாதீர்கள்: நிதிஷ்குமார்
- உங்கள் வீட்டில் யாராவது இறந்தார்களா?: நிருபரிடம் முலாயம் பாய்ச்சல்
- ஒடிசா தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டு சதி: போலீசார் தகவல்
| புதிய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு Posted: 06 Mar 2014 11:24 PM PST புதிய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு |
| சிரஞ்சீவி தம்பி நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி தொடங்குகிறார் Posted: 06 Mar 2014 11:11 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்தார். அதோடு காங்கிரசில் இருந்தும் விலகினார். இப்போது அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார். ராஜமுந்திரியில் வருகிற 12–ந்தேதி புதிய கட்சியின் பெயர், கொடியை கிரண்குமார் ரெட்டி அறிவிக்கிறார். கிரண்குமார் ரெட்டியை தொடர்ந்து மத்திய |
| மோடி வீட்டுக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போலீசார் தடை Posted: 06 Mar 2014 11:06 PM PST குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நரேந்திர மோடியை சந்திக்க இன்று அவரது வீட்டுக்கு சென்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டார். அரசு நிர்வாகம் தொடர்பான தனது 16 கேள்விகளுக்கு மோடியிடம் பதில் பெறும் நோக்கில் அவரது வீட்டிற்கு கெஜ்ரிவால் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். |
| மனைவி, மகளுக்கு சீட்: லல்லு மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி Posted: 06 Mar 2014 11:00 PM PST பாராளுமன்ற தேர்தலில் மனைவி, மகளை லல்லு பிரசாத் யாதவ் வேட்பாளராக அறிவித்துள்ளதால் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நேற்று லல்லு பிரசாத் யாதவ் தனது கட்சி போட்டியிடும் 25 |
| பாராளுமன்ற தேர்தல்: கேரளாவில் களம் இறங்கும் சினிமா நட்சத்திரங்கள் Posted: 06 Mar 2014 10:34 PM PST கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 10–ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கி உள்ளன. அரசியல் அனுபவமும், சமூக சேவையில் ஈடுபாடு உள்ளவர்களையும் மட்டுமே தேர்தலில் களம் இறக்கி வந்த கேரள மாநிலத்தில் இப்போது |
| 6 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவேண்டாம்: நடிகை ரீமா கல்லிங்கல் கருத்து Posted: 06 Mar 2014 10:22 PM PST கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கேரளாவின் புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார். இவர் வருகிற 10–ந்தேதி கேரளா வருகிறார். 12 அல்லது 13–ந்தேதி கேரள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். |
| வீட்டை காலி செய்யுமாறு கெஜ்ரிவாலுக்கு டெல்லி அரசு நோட்டீஸ் Posted: 06 Mar 2014 10:12 PM PST டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததையடுத்து முதல்– மந்திரியான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பங்களாவுக்கு குடிவந்தார். ஆம் ஆத்மி ஆட்சியால் டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியவில்லை. எனவே பிப்ரவரி 14–ந்தேதி கெஜ்ரிவால் தனது முதல்– மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் அவர் அரசு பங்களாவிலேயே இருந்து வருகிறார். |
| திருப்பதி கோவிலில் உள்ள பழங்கால நாணயங்கள் புத்தகமாக தயாரிப்பு Posted: 06 Mar 2014 09:59 PM PST திருப்பதி கோவிலுக்குள் பிரிட்டிஷ் கால மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கால நாணயங்கள் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் அங்கு ரோமன் காலத்து நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், பிரிட்டிஷ், முஸ்லிம், ஆட்சியாளர்கள் நாணயங்கள், தங்கம், வெள்ளி, தாமிரம் உள்பட பல உலோக நாணயங்கள் உள்ளன. |
| பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை கண்காணிக்க குழு Posted: 06 Mar 2014 08:34 PM PST சண்டிகாரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தேர்தல் கமிஷன் டைரக்டர் ஜெனரல் அக்ஷய் ரவுத் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை தடுக்கும்படி, கடந்த காலத்தில் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் கமிஷனை வற்புறுத்தி உள்ளன. பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை 'தேர்தல் குற்றம்' ஆக்குமாறு நாங்கள் யோசனை தெரிவித்துள்ளோம். இப்படி செய்தி வெளியிடுவதை |
| சொத்து தகவலை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய புதிய முறை Posted: 06 Mar 2014 08:15 PM PST பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தங்களது சொத்துகள், கடன்கள், கல்வித்தகுதி, கிரிமினல் குற்ற வரலாறு உள்ளிட்ட சுயதகவல்கள் அடங்கிய அபிடவிட்டை வேட்பு மனுவுடன் சேர்த்து தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறை, தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் அபிடவிட் தாக்கல் செய்வதுடன், கூடுதலாக மின்னணு முறையில் (கணினி வழியாக) இந்த அபிடவிட்டை தாக்கல் செய்கிற நடைமுறையை |
| நீதித்துறையின் மூலமே ஊழலை ஒழிக்க முடியும்: சிதம்பரம் Posted: 06 Mar 2014 03:42 PM PST டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்"நம் நாட்டில் ஊழல்தான் தற்போது மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது.நம் நாட்டில் மட்டுமல்லாது பலநாடுகளிலும் ஊழல் பெரும் பிரச்சனையாக உள்ளது.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதே இந்த ஊழல் சம்பவங்கள்தான். ஊழல் குற்றங்களில் |
| ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேருக்கு ஜாமீன் Posted: 06 Mar 2014 03:35 PM PST டெல்லியில் தலைமை அலுவலகம் முன்பு பா.ஜக.வினருக்கும் ஆம்ஆத்மியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இத்தாக்குதலில் பா.ஜ.க.வினர் 10 பேரும் ஆம் ஆத்மியை சேர்ந்த 13 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பா.ஜ.க ஆம் ஆத்மியினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆம்ஆத்மியினர் மீது கலவரத்தை தூண்டுதல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆம் ஆத்மி கட்சியினர் |
| ஜெ.பிரதமரானால் ஆதரவு தருவேன்: மம்தா பானர்ஜி Posted: 06 Mar 2014 12:11 PM PST மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு பேட்டியில் கூறுகையில் "நான் ஒரு பெண்ணியவாதியாக இருப்பதை விட மனிதநேயமிக்கவளாக இருப்பதையே விரும்புகிறேன். நான், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ஆகியோர் அரசியல் பலம் வாய்ந்த பெண்மணிகள் என்பதால், ஒன்றாக பணியாற்ற மாட்டோம் என்று அனைவரும் முடிவு செய்வது தவறு. நாட்டிலுள்ள பெண் தலைவர்கள் |
| குஜராத்தில் மனிஷ் சிசோடியா கார் மீது தாக்குதல் Posted: 06 Mar 2014 11:31 AM PST குஜராத்தில் இன்று ஆம்ஆத்மி கட்சித்தலைவர் மனிஷ் சிசோடியாவின் கார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை பா.ஜ.க.வினர் தான் நடத்தினர் என்று ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இது குறித்து "ஹிம்மத் நகர் நெடுஞ்சாலையில் மனிஷாவின் கார் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்" என்று ஆம் ஆத்மி கட்சித்தலைவர் ஹர்ஷில் நாயக் தெரிவித்தார். |
| காந்தியைக் கொன்றதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் :ராகுல் கடும் தாக்கு Posted: 06 Mar 2014 10:13 AM PST காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இன்று தானேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் "இன்று நாட்டிலுள்ள அனைத்து முன்னேற்றங்களுக்கும் காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் தான் காரணம். எனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தான் கணிப்பொறிகள் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன.கடந்த |
| கொலை வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை Posted: 06 Mar 2014 08:59 AM PST பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கொலை வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. கோஷி காவல் சரகத்திற்குட்பட்ட தேவ்ரா ஆகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகதீஷ் சர்மா, 1997ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி அவரது நிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். |
| ம.பி. முதல்வர் சவுகான் உண்ணாவிரதம்: மத்திய அரசு மீது தாக்கு Posted: 06 Mar 2014 07:59 AM PST மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாநிலந்தழுவிய பந்த் நடத்த மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று பந்த் நடந்தது. அதன் ஒரு பகுதியாக முதல்வர் சிவராஜ் சிங் சக மந்திரிகளுடன் 4 மணி நேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், "மாநிலத்தின் நிலையை சமாளிக்க ரூ.5000 கோடி சிறப்பு நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். நாங்கள் ஏற்கனவே விவசாயிகளுக்கு ரூ.2000 கோடி இழப்பீடு வழங்கியுள்ளோம். நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்போம். பல்வேறு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகளின் இழப்பீட்டு வழங்குவதற்காக இன்று ரூ.7.42 கோடி நன்கொடை |
| பா.ஜ.க. வலையில் விழுந்து விடாதீர்கள்: நிதிஷ்குமார் Posted: 06 Mar 2014 07:12 AM PST பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதியில் இன்று சங்கல்ப் யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசியதாவது:- பீகாருக்கு பா.ஜனதா கட்சி வளர்ச்சிக்கான முன்மாதிரியல்ல. தோ்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எந்த பங்கும் இல்லை என்றும், பீகாரின் பிரச்சனைகளை தீர்க்க வானத்திலிருந்து தூதர்கள் வந்தால்தான் முடியும் என்றும் கூறி வரும் பா.ஜ.க.வின் வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்கள். வரும் மக்களவை தேர்தலில் வாக்குகளை வாங்குவதற்காக பா.ஜ.க விரித்துள்ள வலையில் விழுந்துவிடாதீர்கள். பீகாரைச் சேர்ந்தவரால் மட்டுமே இங்கு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். |
| உங்கள் வீட்டில் யாராவது இறந்தார்களா?: நிருபரிடம் முலாயம் பாய்ச்சல் Posted: 06 Mar 2014 07:00 AM PST உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவர் ஒருவரை போலீசார் தாக்கியதால் அங்கு அசாதாரண சூழல் உருவானது. இச்சம்பவத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர். மேலும் பல்வேறு நகரங்களில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக பல நோயாளிகள் சிகிச்சை அளிக்க ஆளில்லாததால் மரணமடைந்ததாக கூறப்பட்டது. சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான இர்பான் சோலங்கிக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த மருத்துவர் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட் |
| ஒடிசா தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டு சதி: போலீசார் தகவல் Posted: 06 Mar 2014 06:53 AM PST ஒடிசாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் முங்குடவல்சா காட்டுப்பகுதியில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிருவரும் நடைபெற உள்ள தேர்தல்களை மனதில் வைத்து அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் சதித்திட்டங்களை தீட்டியதுடன் அதற்கான வரைபடங்களையும் தயார் செய்துள்ளனர். மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் மிகுந்த அந்த அடர்ந்த காட்டுப்பகுதி ஆந்திர எல்லையான நாராயணபட்னாவில் இருந்து துவங்குவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |