Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவும் காங். மூத்த தலைவர்கள்

Posted: 08 Mar 2014 11:35 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதால் காங்கிரஸ் மீது சீமாந்திரா மக்கள் கோபத்தில் உள்ளனர். மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். விரைவில் அவர் புதிய கட்சி தொடங்குகிறார். கிரண்குமார் ரெட்டியுடன் சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் காங்கிரசில் இருந்து விலகினார்கள். நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான கல்லா அருணாகுமாரி, அவரது மகன் தொழில் அதிபர் கல்லா ஜெயதேவ், விஜயவாடா எம்.எல்.ஏ., எஸ்.ஏ.ரகுமான், தேவப்பள்ளி முன்னாள் எம்.பி., தேவி செட்டி மல்லிகார்ஜூனா ராவ்

மோடி பற்றி பேச்சு: கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் புகார்

Posted: 08 Mar 2014 11:29 PM PST

ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி 3 முறை பெற்ற வெற்றி குறித்து விமர்சித்தார். எதிர்கட்சியினரை விலை கொடுத்து வாங்கியும், அவர்களை கொலை செய்தும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.

கடவுள் தான் எனக்கு பாதுகாப்பு: கெஜ்ரிவால் நம்பிக்கை

Posted: 08 Mar 2014 11:10 PM PST

டெல்லி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று ஆரம்பம் முதல் மறுத்து வருகிறார். இதற்கிடையில், 22 காவலர்கள் அடங்கிய இசட் பிரிவு பாதுகாப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக சில ஊடகங்களில்

எம்.பி. சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம்

Posted: 08 Mar 2014 10:40 PM PST

மோடியின் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

பள்ளி மாணவிகள் 7 பேரை கற்பழித்த கல்லூரி பேராசிரியர் கைது

Posted: 08 Mar 2014 10:18 PM PST

திருவனந்தபுரம் அருகே மங்களாபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் அனிருத்தன் (வயது 55) என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கல்லூரியின் அருகில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில்

சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டிக்கு தொடர்பில்லை: சரிதாநாயர்

Posted: 08 Mar 2014 09:49 PM PST

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடியில் தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீண்டநாள் சிறை வாசத்துக்கு பிறகு கடந்த வாரம் சரிதாநாயர் ஜாமீனில் விடுதலையானார். அதன்பின் நிருபர்களை சந்தித்த சரிதா நாயர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது 'செக்ஸ்' புகார் கூறினார். அவர் தன்னை ஓட்டலுக்கு உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்ததாகவும், அதற்கு தான் மறுத்ததால் தனது தொழிலுக்கு அப்துல்லா குட்டி இடையூறு செய்ததாகவும் சரிதாநாயர் குற்றம்சாட்டி இருந்தார். இது கேரள அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீதான குற்றச்சாட்டை அப்துல்லா குட்டி மறுத்தார்.

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Posted: 08 Mar 2014 09:41 PM PST

திருப்பதியில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது உண்டு. நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். தர்ம தரிசன வகையில் 31 கம்பார்மெண்டுகளும் நிரப்பி வழிந்தது. தரிசனத்துக்கு 17 மணி நேரம் ஆனது. நடைபயணமாக வந்த பக்தர்கள் 12–ம் கம்பார்ட்மெண்டுகளில் காத்து இருந்தனர். இவர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரம் ஆனது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 70 ஆயிரம் பக்தர்கள் ஏழு

உத்தரபிரதேசத்தில் கெஜ்ரிவால் இன்று மீண்டும் பிரசாரம்

Posted: 08 Mar 2014 09:37 PM PST

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் கடந்த வாரம் 500 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக 3 நாட்கள் பிரசாரம் செய்தார். அதன் பிறகு பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் குஜராத் மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது குஜராத் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்றும் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். முதல்–மந்திரி நரேந்திர மோடியை சந்திக்கவும் முயற்சி செய்தார். இதற்காக காரில் சென்ற கெஜ்ரிவாலை முன் அனுமதி பெறவில்லை என்று கூறி

உரிய ஆவணங்கள் இருந்தால் பணத்தை பறிமுதல் செய்ய கூடாது: சம்பத்

Posted: 08 Mar 2014 09:08 PM PST

தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலில் இருந்து வெளியே வந்ததும், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கத்தி முனையில் 9 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் கைது

Posted: 08 Mar 2014 07:55 PM PST

நான்காம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமியை கத்தி முனையில் கற்பழித்தவனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். புது டெல்லியின் அசோக் நகர் பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் நேற்று மதியம் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் உமேஷ்(30) என்பவன் சாக்லேட் தருவதாக ஆசை காட்டி தனது அறைக்கு அழைத்து சென்றான். அறையின் கதவை சாத்தி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அவளை கற்பழித்த அந்த காமுகன், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளான். அவனிடம் இருந்து விடுபட்டு வந்த சிறுமி நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.

அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலில் விபத்து: ஒருவர் பலி

Posted: 08 Mar 2014 07:29 PM PST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிக்கப்பட்டு வரும் அந்த நீர் மூழ்கி கப்பலின் திரவ அழுத்தத்தை நேற்று கடற்படை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒரு கலனின் மூடி வெடித்து தெறித்தது. தெறித்த அந்த மூடி கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்தப் பணியாளர்களின் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒப்பந்தப் பணியாளர் அமர்(24) சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மேலும் 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய கடற்படையில் சமீபகாலத்தில் ஏற்பட்ட 12-வது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி மும்பை துறைமுகம் அருகே சிந்துரக்‌ஷக் என்ற போர் கப்பல் மூழ்கியதில் 18 பேர் பலியாகினர்.

ஒடிசா மாநில காங்கிரசார் இருவர் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தனர்

Posted: 08 Mar 2014 03:43 PM PST

ஒடிசா மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் பூபிந்தர் சிங். அம்மாநில செயலராக இருப்பவர் அனுப் சாய். இவர்கள் இருவரும் நேற்று தங்களது பதவியினை ராஜினாமா செய்துவிட்டு ஒடிசா மாநில முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளனர். கட்சி விலகல் குறித்து இவ்விருவரும் காங்கிரசின் தலைமை அலுவலகத்திற்கு தங்களது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர். இக்கடிதத்தில் "ஒடிசா மாநிலத்தில் சாதி அடிப்படையிலான அரசியல்

சந்திரசேகர் ராவுடன் கூட்டணி?: காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

Posted: 08 Mar 2014 01:32 PM PST

சந்திரசேகர் ராவ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தெலுங்கானா பிராந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவானதை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தின் இரு பிராந்தியங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தை பிரித்ததால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக சீமாந்திரா பிராந்தியத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா பிராந்தியத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி செல்வாக்கான கட்சியாக உள்ளது. முதலில் காங்கிரசுடன் இணைவதாக அறிவித்த அந்த கட்சி

காந்தி மைதான தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி கைது

Posted: 08 Mar 2014 09:55 AM PST

கடந்த அக்டோபரில் பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இத்தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக அவகில்லா கிராமத்தை சேர்ந்த மக்சூத் ஆலம் என்பவரின் மகன் அஸ்லாம் பர்வேஷ் என்பவரை இன்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ராம்பூர் காவல்நிலைய அதிகாரி ராஜிவ் ரஞ்சன் கூறுகையில் "இதுவரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர்

பா.ஜ.க.வில் மோடி மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி: குர்ஷித் சொல்கிறார்

Posted: 08 Mar 2014 09:04 AM PST

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், மூன்று நாள் பயணமாக தனது பருக்காபாத் தொகுதிக்கு இன்று வந்தார். அப்போது பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றி அவர் கூறியதாவது:- கட்சியின் மூத்த தலைவர்களைக் கூட திருப்தியாக வைக்காத குஜராத் முதல்வர் எப்படி நாட்டு மக்களை திருப்தியடைய வைக்கப் போகிறார்? சமூக வலைத்தளமான டுவிட்டரில் அவரது கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோரே மோடிக்கு எதிராக

காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: புதுமுகங்களுக்கு வாய்ப்பு

Posted: 08 Mar 2014 08:55 AM PST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 194 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய மந்திரிகள் பலரும் இடம்பெற்றுள்ளனர். ஏராளமான புதுமுகங்களும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 35 சதவீத வேட்பாளர்கள் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் சம உரிமைகளை பெற இன்னும் 100 வருடங்கள் ஆகும்: குரேஷி

Posted: 08 Mar 2014 07:49 AM PST

உத்தரகாண்ட் மாநில மகளிர் சங்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் அஜிஸ் குரேஷி பேசியதாவது:- இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமைகளை பெற இன்னும் 100 ஆண்டுகள் ஆகலாம். இந்தியாவில் 95 சதவீத பெண்கள் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். உத்தரகாண்ட் மலைகளில் வாழ்ந்து வரும் பெண்கள் துன்பங்களுக்கு இடையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். அவர்களது வாழ்க்கையை சுலபமாக்க தேவையான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண்கள் தங்க

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசே அமையும்: சி.ஐ.ஐ

Posted: 08 Mar 2014 07:43 AM PST

வரும் மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் கூட்டணி அரசே அமையும் என அகில இந்திய தொழிற்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ஆட்சிக்கு வரவுள்ள அரசியல் கட்சி ஐந்து ஆண்டு காலம் நிலையாக இருந்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய உதவியாக இருக்கும். அரசின் நிலைத்தன்மை முக்கியமானது. எந்த அரசு ஆட்சிக்கு வருகிறது என்பது முக்கியமல்ல. பெரும்பாலான மக்கள் கூட்டணி அரசே ஆட்சியமைக்கும் என்று நம்புகிறார்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்தவை பெரும்பாலும் கூட்டணி அரசுகளே.

ஹாஜிபூர் தொகுதியில் பஸ்வான் போட்டி: மகன்-சகோதரருக்கும் வாய்ப்பு

Posted: 08 Mar 2014 07:33 AM PST

பீகார் மாநிலத்தில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது. பா.ஜ.க. 7 தொகுதிகளை பஸ்வானின் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் லோக் ஜனசக்தி கட்சி தலைமைக்குழு 6 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் பஸ்வானின் மகன் சிரக், அவருடைய சகோதரர் ராம்சந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிரக், ஜமுய் தொகுதியிலும், ராம்சந்தர் சமஸ்திபுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கட்சித் தலைவர் பஸ்வான் ஹாஜிபுர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அவர் அதிக முறை வெற்றி பெற்றுள்ளார். பஸ்வானின் நெருங்கிய உதவியாளர் ராமா கிஷோர் சிங் வைசாலி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. சத்யானந்த் சர்மாவுக்கு நாலந்தா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சுராஜ் பகானின் மனை

மகாத்மா காந்தி புத்தகம் உருது-காஷ்மீரி மொழிகளில் வெளியீடு

Posted: 08 Mar 2014 05:49 AM PST

மகாத்மா காந்தியின் சிறந்த தலைமை என்ற புத்தகம் உருது மற்றும் காஷ்மீரி மொழிகளில் வெளியிடப்படுகிறது. பாஸ்கல் ஆலன் நாசரேத் என்பவர் எழுதிய இந்த புத்தகம் கடந்த 2006ல் வெளியிடப்பட்டது. இதுவரை சீனம், ஸ்பானிஷ், அரபி, போர்த்துகீசியம் உள்ளிட்ட 15 மொழிகளில் இந்த புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இதனை வெளியிட்டு பேசிய மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி கூறியதாவது :- உருது மற்றும் காஷ்மீரி மொழிகளில் காந்தி புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் காஷ்மீர், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த மக்கள் காந்தியை பற்றி அறிந்து கொள்வார்கள். இது ஒரு நல்ல விஷயம். இந்தியாவின் பிரிவினைக்கு முஸ்லிம் லீக்கையும், காயிதே ஆசமையும் விமர்சித்தது போதும். நமக்குள் இருக்கும் வேற்றுமையை களைவோ


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™