Tamil Star |
- உலக சாதனை படைப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கனு பாருங்க…..
- இது கையா? காலா? பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் பெண்ணின் அசைவு!
- பீதியைக் கிளப்பிய கடலின் திடீர் நடனம்…..
- ஜெனீவா சர்ச்சையினால் அமைச்சுப் பதவிகளை இழக்கக் கூடிய அபாயம்
- இது எந்த நாட்டு உற்பத்தியா இருக்கும்?… கொஞ்சம் பார்த்து பதில் சொல்லுங்களேன்…..
- ராஜபக்ஷவை பதவி கவிழ்ப்பதற்கு முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக இணைய வலையமைப்புக்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது – விமல் வீரவன்ச
- மனிதாபிமானம் இன்னும் முற்றாக அழியவில்லை…… இம்மாதிரியான மனிதர்களால்!….
- யுத்தத்தில் காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழுக்கு பதிலாக இல்லாமல் போனோர் சான்றிதழ்
- ஈபிள் கோபுரத்தை திருடிய நபர்…. காணொளியால் பரபரப்பு!….
- முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல்
- ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை
- பேஸ்புக் தடை குற்றச்சாட்டுக்கள் சூழ்ச்சித் திட்டமாகும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
- அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானத்தில் குறைபாடுகள்?
- இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு அமெரிக்காவோ ஐநாவோ தேவையில்லை – இராயப்பு யோசப்
- மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமான மர்மம் என்ன? : கடத்தப்பட்டதா ? பயங்கரவாத சதியா?
- ஜெனீவா பிரேரணை தொடர்பில் நாடுகள் விவாதம், இந்தியா மௌனம் தொடர்கிறது…..
- கிழக்கு சீனா கடல்பகுதி தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது – சீன மந்திரி
- நவநீதம்பிள்ளை, என்னை சந்திக்கவில்லை!- டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு
- பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் அணு உலை : 13 வயது மாணவன் புதிய சாதனை
- சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – பிரித்தானியா
| உலக சாதனை படைப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கனு பாருங்க….. Posted: 08 Mar 2014 11:02 PM PST
அதாவது கணினி விசைப்பலகையில் தனது மூக்கினைப் பயன்படுத்தி மிக வேகமாக சொற்களை தட்டச்சு செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஆங்கில அரிச்சுவடியிலுள்ள 26 எழுத்துக்களையும் வெறும் 3.43 செக்கன்களுக்குள் தட்டச்சு செய்து அசத்தியிருக்கின்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இது கையா? காலா? பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் பெண்ணின் அசைவு! Posted: 08 Mar 2014 11:00 PM PST |
| பீதியைக் கிளப்பிய கடலின் திடீர் நடனம்….. Posted: 08 Mar 2014 10:58 PM PST |
| ஜெனீவா சர்ச்சையினால் அமைச்சுப் பதவிகளை இழக்கக் கூடிய அபாயம் Posted: 08 Mar 2014 10:55 PM PST
ஜெனீவா சர்ச்சையினால் சிலர் அமைச்சுப் பதவிகளை இழக்கக் கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிங்களப் பேரினவாத கட்சிகள், மிதவாதிகளை ஒரம் கட்டும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஓர் கட்டமாக சில முக்கிய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடுமாறு ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவா பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆறு அமைச்சர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக ஆலோசனை வழங்கியிருந்தனர். வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரட்ன, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, திஸ்ஸ விதாரண மற்றும் ரெஜினோல்ட் குரே ஆகியோரே இவ்வாறு யோசனை முன்வைத்திருந்தனர். இந்த யோசனை நாட்டுக்கு எதிரானது எனவும், இதனால் அமைச்சர்களை பதவி விலக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்களின் போது அமைச்சரவையின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை காத்திரமான முறையில் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது குறித்து ஆறு அமைச்சர்களும் சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இது எந்த நாட்டு உற்பத்தியா இருக்கும்?… கொஞ்சம் பார்த்து பதில் சொல்லுங்களேன்….. Posted: 08 Mar 2014 10:51 PM PST |
| Posted: 08 Mar 2014 10:49 PM PST
முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதிக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில் முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலையமைப்புக்கள் குறித்த விழிப்புணர்வை அமெரிக்கத் தூதரகம் நாடு முழுவதிலும் ஏற்படுத்தி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய கிழக்கில் சில அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு சமூக இணைய வலையமைப்புக்களே பயன்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிதாபிமானம் இன்னும் முற்றாக அழியவில்லை…… இம்மாதிரியான மனிதர்களால்!…. Posted: 08 Mar 2014 10:46 PM PST |
| யுத்தத்தில் காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழுக்கு பதிலாக இல்லாமல் போனோர் சான்றிதழ் Posted: 08 Mar 2014 10:41 PM PST
யுத்தத்தில் காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாகஇல்லாமல் போனோர் (CERTIFICATE OF ABSENT) என்ற சான்றிதழை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் அத்துகோரள தெரிவித்தார். காணாமற் போனோரின் உறவினர்கள் தமது உறவுகள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். இவர்கள் மரணச் சான்றிதழ் பெறுவதால் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, மரணச் சான்றிதழுக்குப் பதிலாக இல்லாமல் போனோர் என்ற சான்றிதழை வழங்க அரசுக்கு சிபாரிசு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் அத்துக்கோறள தெரிவித்தார். மரணச் சான்றிதழைப் போலவே இல்லாமல் போனோர் சான்றிதழ் மூலம் சொ்ததுப் பரிமாற்றம் நிவாரணம், நஷ்டஈடு மற்றும் அரச ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈபிள் கோபுரத்தை திருடிய நபர்…. காணொளியால் பரபரப்பு!…. Posted: 08 Mar 2014 10:38 PM PST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஸாச் கிங் என்ற 26 வயது மிக்க நபர் பலவிதமான மாயாஜாலங்களை புரிந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார். இவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை திருடுவது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார். 7 விநாடிகளை கொண்ட இந்த வீடியோவை கண்டு பலர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இவர் செய்வது கண்கட்டு வித்தைகள் என்றாலும், இவற்றை கண்டு ரசிக்கவே ஆயிரக்கணக்கானோர் இணையதளத்தில் திரண்டுள்ளனர். சாத்தியமற்ற விடயங்களையும் இயல்பாக மாற்றுவதே தனிச்சிறப்பாய் கொண்ட இவரது வீடியோக்கள் பல்லாயிரகணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல் Posted: 08 Mar 2014 10:34 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை Posted: 08 Mar 2014 10:32 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக் தடை குற்றச்சாட்டுக்கள் சூழ்ச்சித் திட்டமாகும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Posted: 08 Mar 2014 10:27 PM PST
பேஸ்புக் தடை செய்யப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சிலரே இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு போலிப் பிரசாரம் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களை கிளர்ச்சியடைச் செய்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அரசாங்கம், மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை ஒருபோதும் முடக்காது. தொழில்நுட்ப பயன்பாட்டின் போது எவ்வாறான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆயிரம் நெணசல கணனி மையங்கள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானத்தில் குறைபாடுகள்? Posted: 08 Mar 2014 10:25 PM PST
அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் விமான நிறுவனமான 'போயிங்' தனது புதிய படைப்பாக 'ட்ரீம் லைனர்'–787 என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ரக விமானத்தை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.இவ்விமானங்களுக்கு இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. பல நாடுகளும் இப்புதிய ரக விமானத்தை ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இவ்விமானத்தின் பேட்டரியில் பழுது ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சை உருவெடுத்தது. இந்நிலையில் மீண்டும் இவ்விமான நிறுவனம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் 40 ட்ரீம் லைனர் விமானத்தின் இறக்கை பகுதிகளில் ரோமம் அளவில் சிறிய கீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இறக்கைகளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நாட்டை சேர்ந்நத பிரபல நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு போயிங் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொழில்முறை சிக்கல்களால் போயிங் நிறுவனத்தினரால் சுமார் 100 விமானங்களை ஒப்படைவு செய்வதில் காலவிரயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இக்குறைபாடு பற்றி போயிங் நிறுவனம் "விமான பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் விமானத்தில் இதுபோன்ற கீறல்கள் காணப்படவில்லை" என்றும் விளக்கம் அளித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு அமெரிக்காவோ ஐநாவோ தேவையில்லை – இராயப்பு யோசப் Posted: 08 Mar 2014 10:08 PM PST
அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருமென்று நம்பியிருந்த போதும் அது இப்பொழுது ஏமாற்றம் தந்து நிற்கின்றது. இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு அமெரிக்காவோ ஐநாவோ தேவையில்லை என இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். மேலும் ஐநா சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள வரைபு குறித்து கருத்து வெளியிட்ட போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை இழைத்த மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட வேண்டும் என சிபாரிசு செய்தது போலவே, அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானத்திலும் அது வலியுறுத்தப்படுமென உலகம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், திடீரென அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயமாக மாறியுள்ளது. ஆனால் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கையில் சர்வதேச விசாரணை ஒன்று போர்க்குற்றம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் அத்தகையதொரு சிபாரிசு இல்லாமலே போய்விட்டது. ஆகவே இந்த விடயம் பெருத்த ஏமாற்றம் தரும் விடயமாக தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது. காரணம் ஐநா மனித உரிமைகள் பேரவை எவ்வகை ஈடுபாட்டைச் செலுத்தி தனது அதிகார வரம்புக்குள் உண்மையைக் கண்டறிய விளையும் என்பதில் சந்தேகங்கள் நிலவலாம். அதேவேளை இலங்கை அரசை நீங்களே விசாரணை செய்யுங்கள் என சுதந்திரமாக விட்டால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரிப்பதானால் உண்மையும் கண்டறியப்பட மாட்டாது. நீதியும் கிடைக்காது. இதுதான் இவ்வளவு காலமும் இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளாகும். தங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாங்களே விசாரணை நடத்துமாக இருந்தால் இலங்கையில் எந்தவித போர்க்குற்றமும் இழைக்கப்படவில்லை. எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என்றே கூறித் தாம் தப்பித்துக் கொண்டு விடுவார்கள். இப்படியான தீர்ப்பை வழங்குவதற்கு அமெரிக்காவோ அல்லது ஐநா சபையோ எமக்கு வேண்டியதில்லை. எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்வதன் மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும். எனவே தான் வெளிநாட்டு அமைப்புகளினதோ நாடுகளினதோ மேற்பார்வை இருக்க வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமான மர்மம் என்ன? : கடத்தப்பட்டதா ? பயங்கரவாத சதியா? Posted: 08 Mar 2014 10:04 PM PST
இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவா பிரேரணை தொடர்பில் நாடுகள் விவாதம், இந்தியா மௌனம் தொடர்கிறது….. Posted: 08 Mar 2014 09:57 PM PST
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கும் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கலந்துகொண்டிருந்தன. தீர்மான முன்வரைவில் உள்ள வாசகப் பிரயோகங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பேசியுள்ளனர். வரும் திங்கட்கிழமையும் இந்த வாதப்பிரதிவாதங்கள் நடக்கவுள்ளன. கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாதிட்டுள்ளன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வெனிசூவேலா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளன. போர் முடிந்து நான்கரை ஆண்டுகளாகியும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று பிரேரணைக்கு ஆதரவான நாடுகள் கூறுகின்றன. ஆனால், இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் வேறு உலகப் பிரச்சனைகள் உள்ளன என்றும் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாதிட்டுள்ளன. எனினும் உள்நாட்டு விசாரணை பொறிமுறை இலங்கையில் சாத்தியமாகாது என்றும் இலங்கையில் நீதித்துறையை ஜனாதிபதியே கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதி எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பில் என்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அங்கு கலந்துகொண்ட ராஜ்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம் This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிழக்கு சீனா கடல்பகுதி தீவுகள் பிரச்சினையில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை கிடையாது – சீன மந்திரி Posted: 08 Mar 2014 09:45 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவநீதம்பிள்ளை, என்னை சந்திக்கவில்லை!- டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு Posted: 08 Mar 2014 09:39 PM PST
இலங்கை விஜயத்தின் போது தம்மைச் சந்திக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீது இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் தற்போதும் இடம்பெறுகின்ற குற்றங்களுக்கு ஈபிடிபி மீதும் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார். இது, தமது கட்சியின் நலனைப் பாதிக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். குற்றங்களை மேற்கொள்வது தமது கட்சியின் கொள்கையல்ல. வேறு கட்சிகள் குற்றங்களில் ஈடுபட்டால் கூட அதற்கான குற்றச்சாட்டு ஈபிடிபியின் மீதே சுமத்தப்படுகிறது என்று அமைச்சர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது நவநீதம்பிள்ளையின் விடுதலைப்புலிகள் மீதான பக்கசார்பான பக்கத்தையே காட்டுவதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச தமிழர்களின் கருத்துக்களுக்கு நவநீதம்பிள்ளை முன்னுரிமை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் அணு உலை : 13 வயது மாணவன் புதிய சாதனை Posted: 08 Mar 2014 09:32 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – பிரித்தானியா Posted: 08 Mar 2014 09:23 PM PST
இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது இலங்கை மீது சர்வதேச விசாரணையை ஜெனீவா பிரேரணை கோரவில்லை என்று தமிழ் தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்ற நிலையில் பிரித்தானியா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானிய அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் இலங்கையின் செய்;திதாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமது அரசாங்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரும் என்று வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை கோரப்படவுள்ளதாக ஹியுகோ குறிப்பிட்டுள்ளார. இந்தநிலையில் இலங்கை மீதான விசாரணைக்காக பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




























