Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஹர ஹர கோஷம்: மோடி மீது வாரணாசி கோர்ட்டில் வழக்கு

Posted: 24 Mar 2014 11:13 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ''ஹர ஹர மோடி'' என்று கோஷமிட்டப்படி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த கோஷம் வட மாநிலங்களில் பெரும் தாக்கத்தையும்,

கம்யூ. வேட்பாளர் போஸ்டரில் பா.ஜ.க. வேட்பாளர் படத்தை ஒட்டியதால் பரபரப்பு

Posted: 24 Mar 2014 11:06 PM PDT

கேரள மாநிலம் ஆற்றிங்கல் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டாக்டர் சம்பத் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மகளிர் அணி தேசிய செயலாளர் பிந்துகிருஷ்ணாவும், பாரதீய ஜனதா சார்பில் கிரிஜா குமாரியும் போட்டியிடுகிறார்கள்.

அமலாவுக்கு டிக்கெட் கேட்டேனா?: நாகார்ஜுனா விளக்கம்

Posted: 24 Mar 2014 10:36 PM PDT

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நேற்று அமதாபாத் சென்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 1 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தனது மனைவி அமலாவுக்கு தேர்தல் டிக்கெட் கேட்பதற்காக அவர் மோடியை சந்தித்ததாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதை நாகர்ஜூனா மறுத்தார். மூத்த தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பின் பேரில் மோடியை சந்தித்ததாக அவர் கூறினார். மோடியை சந்தித்தது குறித்து நாகர்ஜூனா கூறியதாவது:–

ராஜஸ்தானில் மேலும் ஒரு பயங்கர தீவிரவாதி கைது

Posted: 24 Mar 2014 10:26 PM PDT

2010-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜம்மா மசூதி துப்பாக்கிச் சூடு, வாரணாசி குண்டு வெடிப்பு, 2011-ல் நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு, 2012-ல் புனே குண்டு வெடிப்பு, கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய

தெலுங்கானாவில் ராகுல்காந்தி போட்டியிட திட்டமா?

Posted: 24 Mar 2014 10:19 PM PDT

''தெலுங்கானா உருவானால் எனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பேன்'' என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் அறிவித்து இருந்தார். ஆனால் தெலுங்கானா மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அனுமதியும் கிடைத்த பிறகு சந்திரசேகரராவ் தனது முடிவை

இயற்கை எரிவாயு விலை உயர்வு ஒத்திவைப்பு: தேர்தல் கமிஷன் வேண்டுகோள் ஏற்பு

Posted: 24 Mar 2014 09:08 PM PDT

வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதன் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட வேண்டும். அதாவது ஒரு யூனிட் இயற்கை எரிவாயு ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக இரு மடங்கு உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

தொழிலாளர்கள் பலி: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

Posted: 24 Mar 2014 08:44 PM PDT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாயப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. கடந்த 18-ந் தேதி அன்று அடைப்பை சரி செய்வதற்காக மெகானிக் ஒருவர், தொட்டியில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றுவற்காக ஒருவர் பின் ஒருவராக 6

கூடங்குளம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 24 Mar 2014 08:28 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு மே மாதம் 15 விதிமுறைகளை வழங்கியது.

நாளை முதல் மோடி தீவிர பிரச்சாரம்: 185 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

Posted: 24 Mar 2014 05:12 PM PDT

பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, முதன் முதலாக ஜம்மு நகரில் தொடங்கி, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கி விட்டதால், 'பாரத் விஜய்' என்ற பெயரில் பா.ஜனதா தீவிர தேர்தல் பிரசார திட்டத்தை தொடங்கி உள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதலிடத்தில் மோடி: ஆர்.கே.சிங்

Posted: 24 Mar 2014 04:12 PM PDT

தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் நரேந்திர மோடி முதலி்டத்தில் இருப்பதாக முன்னாள் உள்துறை செயலாளரும், பா.ஜ.க. தலைவருமான ஆர்.கே. சிங் கூறியுள்ளார். "இது இன்று அல்ல. நான் உள்துறை செயளாலராக இருந்தபோதே மோடிதான் தீவிரவாத தாக்குதல் இலக்கில் முதலிடத்தில் இருந்தார். எனவே அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" என ஆரா மக்களவை தொகுதியின் வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல்

நரேந்திர மோடிக்கு மனித வெடிகுண்டு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 24 Mar 2014 03:33 PM PDT

நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்காத மத்திய அரசு மீது பாரதீய ஜனதா அதிருப்தியில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் கட்சி தலைவர்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர் பாரதீய ஜனதா தலைவர்களுக்கோ, நரேந்திர மோடிக்கோ எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இருப்பதாக எங்களுக்கு தகவல் இல்லை. மோடிக்கு ஏற்கனவே கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மராத்திய மூத்த நடிகர் குல்தீப் பவார் மரணம்

Posted: 24 Mar 2014 02:32 PM PDT

மூத்த மராத்திய நடிகர் குல்தீப் பவார் திங்கள்கிழமை இரவு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சிறுநீரகங்கள் செயலிழந்ததை அடுத்து மும்பையின் அந்தேரியிலுள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் வைத்து அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 45. மறைந்த நடிகர் குல்தீப் பவார் 1980-களில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். புதிய இந்திய சினிமாவின் பரிணாமத்துக்கு வழிவகுத்தவர். பின்னர் தொலைக்காட்சி தொடர்கள், மேடைகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்தார். குப்சப் குப்சப் (1983), சாபிட் அரே சன்சார் சன்சார் மற்றும் வாசிர் (1994)

பெங்களூர் காவல்நிலையங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அறிமுகம்

Posted: 24 Mar 2014 11:25 AM PDT

காவல்துறையினரிடம் நேரந்தவறாமையை கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல் சமூக விரோத சக்திகளை கண்டறிவதற்கும் பெங்களூர் மாநகரங்களில் உள்ள காவல்நிலையங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 காவல் நிலையங்களில் இந்த பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள 100 காவல்நிலையங்களிலும் பொருத்தப்படவுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராட்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை அனைத்து காவல்நிலைய அலுவலக அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையில் தங்களை பதிவு

மோடியை புகழ்ந்த ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் சபீர் அலி நீக்கம்

Posted: 24 Mar 2014 10:55 AM PDT

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சபீர் அலீக்கு சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த அவருக்கு, வருகின்ற மக்களவை தேர்தலில் பீகார் மாநிலம் ஷியோகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றியும் அவரது கொள்கையையும் புகழ்ந்து பேசினார். இதனால் அவர் கட்சியிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு

தேர்தலுக்கு பின் அரசியல் அகதியாகி விடுவார் லல்லு: பா.ஜ.க.

Posted: 24 Mar 2014 09:04 AM PDT

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் பாட்னாவில் இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஒரு முறை எங்கள் கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை பாகிஸ்தானை சேர்ந்த அகதி என்று விமர்சித்திருந்தார்.

கடன் பாக்கி வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது: வங்கிகள் வலியுறுத்தல்

Posted: 24 Mar 2014 08:46 AM PDT

கடன் பெற்றவர்கள் ஒழுங்காக கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியினால் சிரமப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் இவ்வாறு கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் உள்ளனர்.

பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை: பெற்றோர் கைது

Posted: 24 Mar 2014 07:22 AM PDT

ஆந்திரா மாநிலத்தின் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி (26). இவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள். இதனை அப்பெண்ணின் பெற்றோர் எதிர்த்தனர்.

அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு 27-ம் தேதி தொடக்கம்

Posted: 24 Mar 2014 07:22 AM PDT

இந்துக்களின் புனித ஸ்தலமான அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஹெலிகாப்டர் முன்பதிவு குறித்து இன்று அமர்நாத் கோவில் வாரிய முதன்மை செயலர் நவீன் கே சௌத்ரி கூறியதாவது:-

திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 62 லட்சம்

Posted: 24 Mar 2014 05:20 AM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாளான நேற்று, நேற்று முன்தினம் அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று 64 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள உண்டியலில் நேற்று ஒரு நாள்

வாரணாசியில் மோடியுடன் மோத தயார்: திக்விஜய் சிங்

Posted: 24 Mar 2014 05:20 AM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றான வாரணாசியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அல்லது மத்திய மந்திரி ஆனந்த சர்மா ஆகியோர் போட்டியிடக் கூடும் என்று யூகங்கள் நிலவி வருகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™