Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

Posted:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து ...

எனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை செய்கிறார்கள்! -ஸ்ரேயா ஆதங்கம்

Posted:

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா, என்றாலும் அதன்பிறகு ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை படம்தான் அவரை பேச வைத்தது. அப்படத்திலேயே தொப்பலாக மழையில் நனைந்தபடி நடனமாடியவர் இளசுகளின் இதயங்களிலும் ஈரத்துணியாய் ஒட்டிக்கொண்டார்.

அதையடுத்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி ...

வித்யாபாலனைப்போன்று என் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்தது!- ஒப்பிடுகிறார் சுஜா

Posted:

தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்று கடுமையாக போராடி காணாமல் போன நடிகைகளில் சுஜாவும் ஒருவர். 2002-ல் ப்ளஸ் -2 என்ற படத்தில் அறிமுகமான இவருக்கு அதையடுத்து கதாநாயகி வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் கேரக்டர் மற்றும் குத்துப்பாட்டு நடிகையாக தனது ரூட்டை மாற்றிக்கொண்டார்.

ஆனபோதும், அவருக்குள் இருக்கும் ...

பிரியாணி விருந்தை நிறுத்தவில்லை ஆர்யா!

Posted:

யாராவது நடிகைகளை பிடித்து விட்டால் அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார் ஆர்யா. அவர்களை பேமிலி ப்ரண்டாக்கி தனது வீட்டிற்கும் அழைத்து சென்று, தனது அம்மா கையினால் செய்த பிரியாணி விருந்து கொடுத்து உபசரிப்பார். அதனால் ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகைகளுக்கு சென்னைக்கு வந்து ...

முழுநேர டி.வி. தொகுப்பாளினி ஆனார் கஸ்தூரி!

Posted:

1991ம் ஆண்டு ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் கஸ்தூரி. அதற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கஸ்தூரி, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானர். 6 வருடங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கஸ்தூரி மீண்டும் சினிமாவில் அக்கா அண்ணி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில ...

கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாவது உறுதி!

Posted:

சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்...

கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல் ...

பட விளம்பரங்களுக்கு கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடு

Posted:

படங்களின் தோல்வி காரணமாக, நஷ்டமடையும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறதாம். எனவே நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர்ளைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். அதற்காக அடிக்கடி கூட்டம் போட்டு விவாதிக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் எதைத் ...

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடாத பாராளுமன்ற தேர்தல்!

Posted:

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர், தி.மு.க தலைவர் கருணாநிதி திரைப்பட வசனகர்த்தா. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்கும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தரும் திரைப்பட நடிகர்கள். ...

வருண் தவானை காதலிப்பதை உறுதி செய்தார் இலியானா..?!

Posted:

தமிழில் அறிமுகமாகி தெலுங்கு வழியாக இந்திக்கு போன நடிகை இலியானா. ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக மெயின் தேரா ஹீரோ படத்தில், வருண் தவானுடன் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கிய நேரத்தில் இருந்தே இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்கள். ...

உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் ரீமா!

Posted:

மலையாள நடிகை ரீமா கலிங்கல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள இளம் இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த அன்றே மணக்கோலத்துடன் ஒரு புற்றுநோய் மையத்திற்கு சென்று பத்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து தனது திருமணத்தை அர்த்தமுள்ளதாக்கினார். இப்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய இருப்பதாக ...

ஆடி போனா ஆவணி... பாட்டு சினிமா டைட்டில் ஆனது

Posted:

அட்டகத்தி படத்தில் கானா பாலா பாடிய ஹிட் பாட்டு "ஆடி போனா ஆவணி, அவள் ஆளை மயக்கும் தாவணி..." இந்த பாட்டையே ஒரு படத்தின் டைட்டிலாக்கி விட்டார்கள். ஸபா சினி ஆர்ட்ஸ் என்ற புதிய கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்தை ஜே.எம். என்பவர் இயக்குகிறார். ஆதில், ஸ்ருதி படேல் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

"ஆடி போனா ஆவணி என்று தலைப்பு ...

ரஜினி படத்தில் நடிப்பது பெரிய கவுரவம்!- தீபிகா படுகோனே

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரை ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் இப்போது அதே ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தியாவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் தொழில் ...

லட்சுமிமேனனின் சமூக விழிப்புணர்வு பிரசாரம்!

Posted:

சினிமாத்துறையில் உள்ள பல நடிகைகள் சமூக விழிப்புணர்வு பிரசாரங்களில் தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். அசின், ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகள் அனாதை பிள்ளைகளின் படிப்புக்கு உதவி அளித்து வரும் நிலையில், த்ரிஷா, எமி ஜாக்சன் போன்ற நடிகைகள் தெருநாய்களை பராமரிப்பது பற்றிய பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், பல ...

சம்பளத்தை அதிரடியாக குறைத்த பரோட்டா சூரி!

Posted:

சம்பளத்தை படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே போவது ஒரு பாணி. ஆனால், தேவைப்படும்போது ஏறி இறங்குவது தொழில் ரகசியம். அந்த வகையில், தற்போது தனது தொழில் ரகசியத்தை காண்பித்திருக்கிறார் சூரி. தற்போதைய நிலவரப்படி அவரது காமெடி மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் ...

கதையில் தலையிட்டா கெட்ட பேர் வந்திடும்! -சிவகார்த்திகேயன்

Posted:

முன்னணி ஹீரோக்களை பொறுத்தமட்டில் வளர்ந்து வரும் டைரக்டர்கள் அவர்களிடம் கதை சொன்னால், மொத்த கதையையும் கேட்டு விட்டு, பின்னர் தாங்கள் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எப்படி எப்படி வைக்கலாம் என்று ஒரு புதிய ஸ்கிரிப்ட்டையே சொல்லிவிடுவார்கள். அதேசமயம், முன்னணி டைரக்டர்கள் என்றால் மட்டும் தங்களது தலையீடை ...

நக்மாவை கட்டிப்பிடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., அத்துமீறல்!

Posted:

சமீபகாலமாக நடிகைகளிடம் நரைமுடி அரசியல்வாதிகள் அத்துமீறி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது உ.பி மாநிலம் மீரட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மாவிடமும் ஒரு நரைமுடி எம்.எல்.ஏ அத்து மீறி நடந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மீரட் தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நக்மா. ...

தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்

Posted:

இது தேர்தல் சீசன். அதனால் அரசியலை மையமாக கொண்ட படங்கள் ரிலீசாவதில் மும்முரம் காட்டி வருகின்றன. சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் இயக்கி வரும் படம் பிரமுகர். திரிசூல், ஜெசி, மோகனவேல், மஞ்சுவா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்போது தேர்தல் நெருங்குவதால் ரிலீஸ் செய்ய ஏற்பாடு ...

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்!

Posted:

அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன. அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் ...

மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?

Posted:

இஸ்லாமியராக மதம் மாறிய பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சென்னையில் இருப்பதே இல்லை என்றும், பெரும்பாலும் மலேசியாவில்தான் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வாய்ஸ் மிக்ஸிங் எனும் பாடல் ஒலிப்பதிவு நடைபெறும்போது மட்டும் சென்னைக்கு வரும் யுவன்சங்கர்ராஜா, ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் ...

தல அஜீத்துடன் சீக்கிரமே ஜோடி சேருவேன்! -அமலாபால் நம்பிக்கை

Posted:

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு ஹீரோ வேல்யூ கொண்ட படங்களாக நடிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் தலைவா படத்தில், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பின்னர், ஜெயம்ரவியுடன் நிமிர்ந்துநில் படத்தில் நடித்ததையடுத்து,இப்போது தனுசுடன் வேலையில்லா பட்டதாரியில் நடித்து வருகிறார்.

இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™