Tamil News | Online Tamil News |
- மம்தாவுடன் ஜெயலலிதா திடீர் பேச்சு: பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து விவாதம்
- பா.ஜ., - காங்கிரஸ் கைகோர்க்க வேண்டும்: பரபரப்பு அறிவுரை வழங்கியது சுப்ரீம் கோர்ட்
- மகளுக்கு 'சீட்' வழங்கியதால் லாலுவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
- மோடியை சந்திக்க சென்று மூக்குடைபட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
- நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி
- 'கோடி'களுடன் வலம் வரும் உடன்பிறப்புக்கள்: அறிவாலயத்தில் பணப்பெட்டிகளுடன் குவிந்தனர்
- காலையில் பா.ம.க., - மாலையில் தே.மு.தி.க.,: பா.ஜ., அணியில் விறுவிறுப்பு; யாருக்கு எத்தனை தொகுதிகள்?
- தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்: குட்டையை குழப்புகிறது தி.மு.க.,
- "தனித்து போட்டியிட பரிசீலிக்கிறோம்':- திருமாவளவன் ஸ்பெஷல் பேட்டி
- 'சீட்' கேட்காத கட்சிகளுக்கு முதல்வரின் நன்றி!
| மம்தாவுடன் ஜெயலலிதா திடீர் பேச்சு: பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து விவாதம் Posted: சென்னை: பா.ஜ., - காங்கிரஸ் கூட்டணிகள் மற்றும் மூன்றாவது அணியில் இடம் பெறாத, மாநில கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. அதற்கு அச்சாரமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, டெலிபோனில் பேசி உள்ளார். அப்போது, இருவரும், பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து, விவாதித்ததாக கூறப்படுகிறது.'பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு, தேவையான இடங்கள் கிடைக்காது. மாநில கட்சிகளே, அதிக, 'சீட்'களைப் பெறும்' என, சில கருத்து கணிப்புகள் வெளியாகி ... |
| பா.ஜ., - காங்கிரஸ் கைகோர்க்க வேண்டும்: பரபரப்பு அறிவுரை வழங்கியது சுப்ரீம் கோர்ட் Posted: புதுடில்லி : 'அரசியலில், நிரந்தர எதிரிகள் கிடையாது. இன்று, எதிரிகளாக இருக்கும் கட்சிகள், நாளை, நண்பர்களாகும் வாய்ப்புள்ளது. எனவே, பா.ஜ.,வும், காங்கிரசும் இணைந்து, டில்லியில் ஏன் ஆட்சி அமைக்க கூடாது?' என, சுப்ரீம் கோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது. கோர்ட் அறிவுரையை ஏற்று, இரு கட்சிகளும் இணைந்த அதிசய கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.டில்லியில், கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன், கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைத்தது. டிசம்பர், 28ல், முதல்வராக, ... |
| மகளுக்கு 'சீட்' வழங்கியதால் லாலுவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு Posted: பாட்னா: லோக்சபா தேர்தலில், போட்டியிட தன் மகளுக்கு, 'சீட்' வழங்கியதையடுத்து, மூத்த தலைவர்களின் அதிருப்தியை, லாலு சம்பாதித்துள்ளார்.பீகாரில், லாலு தலைமையிலான, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு, 12 தொகுதிகள், தேசியவாத காங்கிரசுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கியது போக, 27 தொகுதிகளில், ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது.கடும் அதிருப்தி: இதில், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை, லாலு, நேற்று முன் தினம் அறிவித்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால், லாலு போட்டியிடவில்லை. தன் மனைவி ... |
| மோடியை சந்திக்க சென்று மூக்குடைபட்ட அரவிந்த் கெஜ்ரிவால் Posted: புதுடில்லி: முன் அனுமதி பெறாமல், தன்னை சந்திக்க வந்த, 'ஆம் ஆத்மி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, நேற்று, தக்க பாடம் புகட்டினார். மோடியை சந்திக்க முடியாமல், ராஜஸ்தான் மாநிலத்துக்கு, மூட்டையை கட்டினார் கெஜ்ரிவால்.ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், மூன்று நாட்களாக, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.ஆய்வு:'மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், உண்மையிலேயே, வளர்ச்சி அடைந்துள்ளதா?' என, ஆய்வு செய்யப் ... |
| நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி Posted: அரசு கருவூலத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயில், 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், ... |
| 'கோடி'களுடன் வலம் வரும் உடன்பிறப்புக்கள்: அறிவாலயத்தில் பணப்பெட்டிகளுடன் குவிந்தனர் Posted: 'உங்களுக்கு, 'சீட்' கிடைத்தாலும் கிடைக்கும், எதற்கும், மூன்று கோடி ரூபாய் பணத்தை தயாராக வைத்திருங்கள்; டெபாசிட் பணத்தை கட்சி கேட்கும் போது, ஒப்படைக்க வேண்டும். சீட் கிடைக்கவில்லை எனில், பணம் திருப்பி தரப்படும்' என, தொகுதி வாரியாக, எம்.பி., வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தி.மு.க., தலைமையகமான, அறிவாலயத்தில்இருந்து உத்தரவு பறந்து உள்ளது.அதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கட்சி கேட்ட பணத்துடன், கட்சி பிரமுகர்கள் பலர், அறிவாலயத்தை வலம் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் கமிஷனுக்கு, ... |
| காலையில் பா.ம.க., - மாலையில் தே.மு.தி.க.,: பா.ஜ., அணியில் விறுவிறுப்பு; யாருக்கு எத்தனை தொகுதிகள்? Posted: பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி யில், தொகுதி பங்கீடு குறித்து நேற்று பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில், பா.ம.க., குழுவினர், பா.ஜ., அலுவலகம் வந்து, சம்பிரதாயப்படி, பேச்சுவார்த்தையை துவங்கினர். மாலையில், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., அலுவலகம் சென்று, கூட்டணியை உறுதி செய்தனர்.காத்திருந்தன:நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., தலைமையிலான கூட்டணி முடிவாகி உள்ளது. தே.மு.தி.க., ஏற்படுத்திய தாமதத்தால், பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு செய்ய முடியாமல், பா.ஜ., தவித்து வந்தது. அழைப்புக்காக, பா.ம.க., - ம.தி.மு.க.,வும் ... |
| தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்: குட்டையை குழப்புகிறது தி.மு.க., Posted: ஆளுக்கு ஒரு தொகுதி தான் என, அ.தி.மு.க., கூறியதால், அதிருப்தி அடைந்துள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளன. ஆனாலும், அடுத்தது என்ன, தனித்துப் போட்டியா என்பதை வெளியிடாமல், மவுனம் காக்கின்றன.அதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நீடிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், அ.தி.மு.க., தலைமையுடன் பேசி வருவதால், அதுவரை அமைதியாக இருக்கும்படி, ஆலோசனை கூறியுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,அ.தி.மு.க., கூட்டணி யில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ... |
| "தனித்து போட்டியிட பரிசீலிக்கிறோம்':- திருமாவளவன் ஸ்பெஷல் பேட்டி Posted: தி.மு.க.,வின் நீண்ட கால தோழமை கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இன்றைய அரசியல் களத்தில் நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறது. ஐந்து கேட்ட இடத்தில், ஒரு தொகுதி மட்டும் கொடுத்து, உடன்பாடு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரெங்கும் வி.சி., தொண்டர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற, கவலை படர்ந்த முகத்தோடு காணப்பட்ட, அக்கட்சி தலைவர் திருமாவளவன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:ஒரு தொகுதி தான் என்றாகி விட்டது. போட்டியிடப் போவது யார்? சிதம்பரம் தொகுதி என்பதால், நானே மீண்டும் ... |
| 'சீட்' கேட்காத கட்சிகளுக்கு முதல்வரின் நன்றி! Posted: சென்னை: லோக்சபா தேர்தலில், போட்டியிட, 'சீட்' கேட்காமல், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா, நன்றி தெரிவித்து, கடிதம் எழுதி உள்ளார்.அ.தி.மு.க., கூட்டணியில், சரத்குமார் தலைமையிலான, சமத்துவ மக்கள் கட்சி; செ.கு.,தமிழரசன் தலைமையிலான, இந்திய குடியரசு கட்சி; தணியரசு தலைமையிலான, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை; ஜெய்னுலாபுதீன் தலைமையிலான, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்; அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி ஆகியவை உள்ளன. இவர்களில், சரத்குமார், லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டார். ஆனால், வழங்கப்படவில்லை. எனிவும், அவர் ஆதரவை தொடர, முடிவு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |