Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகாரில் காங்கிரசுக்கு 12 தொகுதிகள்: லல்லு பிரசாத்

Posted: 04 Mar 2014 10:58 PM PST

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி

மோடிக்கு ஆதரவாக நடிகை மேக்னாபடேல் மீண்டும் கவர்ச்சி போஸ்

Posted: 04 Mar 2014 10:51 PM PST

மேக்னா படேல் இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பூக்கள் மேல் நிர்வாணமாக படுத்தும் நரேந்திரமோடி படத்தால் உடலை மறைத்தும் போஸ் கொடுத்தார். இந்த படங்கள் இணைய தளங்களில் பரவின

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்

Posted: 04 Mar 2014 10:18 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் மாவுவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). ஆட்டோ டிரைவர். அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தினமும் அவரது ஆட்டோ நிறுத்தம் வழியாக கல்லூரிக்கு நடந்து செல்வது வழக்கம்.

போலீஸ் நிலையம் முன்பு எம்.எல்.ஏ.தற்கொலை முயற்சி

Posted: 04 Mar 2014 09:51 PM PST

ஆந்திர மாநிலம் அனந்த்புரம் மாவட்டம் ராயதுர்க்கம் தொகுதி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரா ரெட்டி. இவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நகர சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரசை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேரை ராய துர்க்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து

ஜெகன்மோகன் கட்சிக்கு 17 இடங்களில் வெற்றி வாய்ப்பு

Posted: 04 Mar 2014 09:40 PM PST

பாராளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வெளியிட்டது. ஆந்திராவில் மொத்தம் 42 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் ஜெகன்மோகனின்

மக்களவை தேர்தல் ஏப்.7-ந்தேதி முதல் 9 கட்டமாக நடக்கிறது- சம்பத் அறிவிப்பு

Posted: 04 Mar 2014 09:40 PM PST

16–வது பாராளுமன்ற தேர்தலுக்கான அட்ட வணை இன்று வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ. ஜைதி ஆகியோர் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டனர். தேர்தல் நடக்கும் நாட்களை தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் 10.40 மணிக்கு நிருபர்களிடம் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:–

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியாகிறது

Posted: 04 Mar 2014 09:36 PM PST

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. கடந்த வாரம் 54 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. மேலிடம் வெளியிட்டது. தற்போது மீதமுள்ள வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவிக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் 8–ந் தேதி (சனிக்கிழமை) பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டம் டெல்லியில் நடைபெற

தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி உதயம்: மத்திய அரசு

Posted: 04 Mar 2014 08:44 PM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்காக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

திருவனந்தபுரம்: கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள்–போலீசார் மோதல்

Posted: 04 Mar 2014 08:39 PM PST

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்து (வயது30). இவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வருகிறார். நேற்று இவர் தனது சகோதரர் கிருஷ்ணாந்துடன் (34) திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அவர்கள் இருவரும் எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் பயணம் செய்ய ரெயிலில் ஏறி அமர்ந்தனர். கிருஷ்ணாந்து மாற்று திறனாளி என்பதால் அவரை ரெயிலில் அமர வைத்து விட்டு ராஜேந்து கீழே இறங்கி சென்று பிளாட்பாரத்தில் இருந்த ஒரு

ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டி

Posted: 04 Mar 2014 08:37 PM PST

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற 8–ந் தேதி (சனிக்கிழமை) கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறுகிறது

எதிஹாடுடனான இணைப்பிற்காக 4 கொல்கத்தா விமானங்கள் ரத்து

Posted: 04 Mar 2014 07:57 PM PST

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அரபு நாட்டு எதிஹாட் ஏர்லைன்சுடன் இணைய உள்ளது. விமானப் போக்குவரத்து சந்தையில் பெரியதும், வளர்ச்சியடைந்து வருவதுமான எதிஹாடுடன் ஜெட் ஏர்வேஸ் மேற்கொண்ட 339 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின்படி இந்நிறுவனத்தின் 24 சதவிகித பங்குகளை

சத்தீஷ்கர்: நக்சலைட்டு முகாம்களில் பணம், ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 04 Mar 2014 07:34 PM PST

சத்தீஷ்கர் மாநிலத்தில் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்தோ-திபெத் எல்லை போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர்போலீசார் ஆகியோர் கூட்டாக நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அவுந்தி போலீஸ் நிலைய எல்லையில் உள்ள நிடெலி வனப்பகுதியிலும், சிதகான் போலீஸ் நிலைய எல்லையில் அமகோடா வனப்பகுதியிலும் இருந்த நக்சலைட்டுகள் முகாம்களில் இருந்து பணம்

உ.பி. மந்திரிகளுக்கு முலாயம் கண்டிப்பு

Posted: 04 Mar 2014 07:12 PM PST

பாராளுமன்ற தேர்தலையொட்டி சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேச மாநில அரசின் செயல்பாடுகள் கட்சியை பலவீனப்படுத்துவதாக மந்திரிகளை கண்டித்தார். முதல்-மந்திரி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முலாயம், ''உங்கள் அரசில் முகத்துதி பாடுபவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சாலைகள், மின்சாரம், குடிநீர் திட்டங்கள் தொடர்பான கோப்புகளின் மீது அரசு உட்கார்ந்து கொண்டு இருக்கக்கூடாது. நான் மந்திரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவில்லை என்றாலும், அவர்கள் என்ன

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் செல்லும்

Posted: 04 Mar 2014 06:49 PM PST

பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்த டி.சுப்பாராவ், கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியில் உள்ளார். ஆனால் இந்த 2014-ம் ஆண்டு ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சகம் வெளியிட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் பழைய கவர்னர் டி.சுப்பாராவின் கையெழுத்து உள்ளது. இவற்றின் செல்லுபடி தன்மை குறித்து பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி ஒரு விளக்கம்

அமெரிக்க எழுத்தாளரின் புத்தகத்தைத் திரும்பப் பெற்ற மற்றொரு நிறுவனம்

Posted: 04 Mar 2014 04:09 PM PST

அமெரிக்க எழுத்தாளரான வெண்டி தோனிகரின் 'தி ஹிந்துஸ்;ஆன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி' என்ற புத்தகம் சமீபத்தில் அதனை வெளியிட்ட பெங்குவின் நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டது. தற்போது மற்றொரு புத்தக வெளியீட்டு நிறுவனமான அலெப் தாங்கள் வெளியிட்ட 'ஆன் ஹிந்துயிசம்' என்ற அதே எழுத்தாளரின் புத்தகத்தைத்

21 மாதங்களில் ரூ.14 கோடியை பெட்ரோலுக்காக செலவழித்த முதல் மந்திரி

Posted: 04 Mar 2014 03:53 PM PST

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி பர்காஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகனும் துணை முதல் மந்திரியுமான சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் பொறுப்பேற்ற 21 மாத காலத்தில் தங்களது கார்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களுக்கு

மகளிர் தினத்தில் 1,500 டீக்கடைகளில் மோடி கலந்துரையாடுகிறார்

Posted: 04 Mar 2014 02:38 PM PST

வருகிற மக்களவை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி நமோ டீக்கடைகள் என்ற பெயரில் நாடுதோறும் கடைகள் அமைத்து பிரச்சாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு மக்களிடையே பெருமளவு வரவேற்பு உள்ளது. இக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி கடந்த மாதம் டீக்கடைகளில் டீ குடிக்க வருபவர்களுடன் கலந்துரையாடினார்.

13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா

Posted: 04 Mar 2014 01:52 PM PST

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர். இந்த அநியாய பலிக்கு காரணமான மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சானு ஷர்மிளா

பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி திரும்பினார்

Posted: 04 Mar 2014 01:29 PM PST

வங்கக்கடல் நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங், தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேற்று இரவு டெல்லி திரும்பினார்.

கேரள கவர்னராக ஷீலா தீட்சித் நியமனம்

Posted: 04 Mar 2014 12:18 PM PST

ஆம் ஆத்மி கட்சியிடம் டெல்லியின் ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லியின் முதல் மந்திரியாக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்த ஷீலா தீட்சித்(75) கடந்த சட்டசபை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™