Tamil Star |
- இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 83 இனக்கலவரமே பிரதான காரணம்!
- நவனீதம்பிள்ளை பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்
- இலங்கைக்கு எதிராக புத்தகம் ஒன்றை கலம் மக்ரே வெளியிட்டுள்ளார்: சிங்கள ஊடகம்
- மற்றவர்களுக்கு உதவுவதற்காக பிச்சையெடுக்கும் 99 வயது தாத்தா….. எத்தனை பேருக்கு இப்படியொரு மனம் வரும்?…..
- புலிகள் பொதுமக்களை கொலை செய்யவில்லை
- மணிக்கணக்கில் தொடர்ந்த போராட்டம்…. இறுதியில் வெற்றிவாகை சூடிய ராட்சத பாம்பு!….
- ஐநா தீர்மான வரைபில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை
- ஜீரணிக்க முடியாத விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பும் சிறுவன்…..
- ஆசிய கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி
- கிரிக்கெட்டை வசப்படுத்தியவர்கள்! மனம் திறக்கிறார் காலிஸ்
- படுமோசமான தோல்விக்கு என்ன காரணம்? விளக்குகிறார் கவாஸ்கர்
- மயக்கத்தில் இருக்கும் தாயை பிரிய மறுக்கும் பிறந்த பச்சிளங்குழந்தை… வியக்க வைக்கும் காட்சி!…
- முதுமையில் இளமை!
- ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3
- பேய் வெளியே போனது தெரியாமல் இப்படி பேயைத் தேடுறாரே மனுஷன்….. கவனமா பாருங்க!….
- இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா
- மின்விசிறியின் நம்பமுடியாத மாற்றம்….. உலகமகா கில்லாடியா இருப்பாரு போலயே!…..
- அதிகமா கோபப்படாதீங்க! மாரடைப்பு வந்துடும்
- தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் Nissan (வீடியோ இணைப்பு)
- எவரெஸ்ட் மலையை சுத்தம் செய்ய நேபாள அரசின் அதிரடி திட்டம்
| இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 83 இனக்கலவரமே பிரதான காரணம்! Posted: 04 Mar 2014 07:00 AM PST ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு ஐ. தே. க ஆட்சியில் இடம்பெற்ற 1983 இனக் கலவரமே பிரதான காரணமாகும். ஐதேக செய்த தவறுக்கு எமக்கு இன்று முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாக ஐ. ம. சு. மு தலைவர்கள் தெரிவித்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விட்ட தவறை திருத்திக்கொள்ள ஜெனீவா மாநாட்டின் மூலம் ஐ.தே.க வுக்கு நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். சர்வதேச மட்டத்தில் ஏற்படும் அழுத்தங்களை அநேக நாடுகள் எதிர்க்கட்சிகளின் […] |
| நவனீதம்பிள்ளை பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் Posted: 04 Mar 2014 06:58 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் உள்ளடக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். நவனீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எனினும் அந்த பதிலறிக்கையின் உள்ளடக்கங்களை நவனீதம்பிள்ளை கருத்திற் கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 18 பக்கங்களைக்கொண்ட பதில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் […] |
| இலங்கைக்கு எதிராக புத்தகம் ஒன்றை கலம் மக்ரே வெளியிட்டுள்ளார்: சிங்கள ஊடகம் Posted: 04 Mar 2014 06:57 AM PST இலங்கைக்கு எதிராக சனல்-4 ஊடகத்தின் இயக்குனர் கலம் மக்ரே, புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. "அன்கரப்டட் ட்ருத்" என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்கதம் 20,000 சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தில் இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் இந்த புத்தகததில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் 3000 […] |
| Posted: 04 Mar 2014 06:55 AM PST |
| புலிகள் பொதுமக்களை கொலை செய்யவில்லை Posted: 04 Mar 2014 06:54 AM PST தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலைசெய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஆகவே முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுடையதாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளது. தருணம் பார்த்து அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எலும்புக்கூடுகள் தான் அவையெனவும் அதற்கான […] |
| மணிக்கணக்கில் தொடர்ந்த போராட்டம்…. இறுதியில் வெற்றிவாகை சூடிய ராட்சத பாம்பு!…. Posted: 04 Mar 2014 06:52 AM PST |
| ஐநா தீர்மான வரைபில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை Posted: 04 Mar 2014 06:51 AM PST ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நில நாடுகள் கொண்டுவரவிருக்கும் முன்வரைவின் நகல்கள் கசிந்திருக்கின்றன. இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் இந்த முன்வரைவு, இது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கைப் போரில் ஏற்பட்ட மனித உரிமை […] |
| ஜீரணிக்க முடியாத விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பும் சிறுவன்….. Posted: 04 Mar 2014 06:49 AM PST |
| ஆசிய கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி Posted: 04 Mar 2014 06:48 AM PST ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் 129 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குமார் சங்கக்கார 76 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிரிக்கெட்டை வசப்படுத்தியவர்கள்! மனம் திறக்கிறார் காலிஸ் Posted: 04 Mar 2014 06:46 AM PST உலகின் சிறந்த வீரர் லாரா தான் என்றும், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் வியக்கத்தக்கது எனவும் தென் ஆப்ரிக்காவின் ஜேக் காலிஸ் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர், கேப்டவுனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அந்த விளையாட்டின் முன்னேற்றத்திற்காக டெண்டுல்கர் அதிகமான பங்களிப்பை செய்துள்ளார். அவர் உள்ளுணர்வுடன் சரியான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| படுமோசமான தோல்விக்கு என்ன காரணம்? விளக்குகிறார் கவாஸ்கர் Posted: 04 Mar 2014 06:44 AM PST
எவ்வித இலக்கும் இல்லாமல் செயல்படுவதால் தான் இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக செயல்படுகின்றனர் என முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது, இதன் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறுகையில், இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வித இலக்கும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்தடுத்து படுமோசமான தோல்விகள் கிடைக்கின்றன. இவர்களின் பயிற்சி முறைகள் ஒன்றுமே சரியில்லை. விருப்பம் போல பயிற்சி செய்கின்றனர், விராத் கோஹ்லி, ஷிகர் தவான் தவிர மற்றவர்கள் பயிற்சியை புறக்கணித்ததை மன்னிக்கவே முடியாது. சமீபகாலமாக பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை 'சேஸ்' செய்ய முடியாமல் தோற்கிறது. இதற்கு ஏற்றார் போல இந்திய வீரர்கள் ஓட்டங்கள் எடுப்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், மிதமிஞ்சிய நம்பிக்கையில் தேவையில்லாத 'ஷாட்களை' அடித்து, விக்கெட்டுகளை பறிகொடுத்து திரும்பினர். ஷேர்– இ– பங்களா மைதானத்தின் பவுண்டரி அளவு குறைவாக இருந்ததால், சிக்சர்கள் மிக எளிதாக அடிக்கப்பட்டன. ஆசிய கிண்ணம் போன்ற பெரிய தொடரில், முதன் முறையாக அணித்தலைவராக களமிறங்கிய கோஹ்லி சிறப்பான முறையில் தான் செயல்பட்டார். ஏனெனில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி ஓவரில் தான் தோல்வி கிடைத்தது என்று தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மயக்கத்தில் இருக்கும் தாயை பிரிய மறுக்கும் பிறந்த பச்சிளங்குழந்தை… வியக்க வைக்கும் காட்சி!… Posted: 04 Mar 2014 06:43 AM PST |
| Posted: 04 Mar 2014 06:40 AM PST மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அந்த வழிகள் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் கிடைக்கின்றன. கொய்யாப்பழம் கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் இதில் காணப்படுகின்றன, கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன, முகத்திற்கு பொலிவையும், அழகையும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3 Posted: 04 Mar 2014 06:38 AM PST LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் இக்கைப்பேசி எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான பெரிய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor இனையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் 16 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியம் வாய்ந்த கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இக்கைப்பேசியின் விலை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேய் வெளியே போனது தெரியாமல் இப்படி பேயைத் தேடுறாரே மனுஷன்….. கவனமா பாருங்க!…. Posted: 04 Mar 2014 06:36 AM PST |
| இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா Posted: 04 Mar 2014 06:34 AM PST உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும். இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதுடன் அதன் கைப்பேசி இன்னும் 6 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்விசிறியின் நம்பமுடியாத மாற்றம்….. உலகமகா கில்லாடியா இருப்பாரு போலயே!….. Posted: 04 Mar 2014 06:33 AM PST
நபர் ஒருவர் தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி மரம் வெட்டும் கருவியை உருவாக்கியுள்ளார். இவர் தேவையற்ற மின்விசிறியின் ஒரு பகுதியைக் கொண்டு உருவாக்கும் கருவியைக் காணொளியில் காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகமா கோபப்படாதீங்க! மாரடைப்பு வந்துடும் Posted: 04 Mar 2014 06:32 AM PST அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில், ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும். மேலும் ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் கண்டறிந்துள்ளது. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தனது கார்களில் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தும் Nissan (வீடியோ இணைப்பு) Posted: 04 Mar 2014 06:30 AM PST பிரபல்யமான கார் உற்பத்தி நிறுவனமான Nissan தான் புதிதாக உற்பத்தி செய்யும் கார்களில் கமெரா மற்றும் LCD திரை தொழில்நுட்பத்தினை உட்புகுத்துகின்றது. உலகிலேயே முதன் முறையாக இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனம் சாரதியின் முன்னே இரு புறங்களிலும் காணப்படும் கண்ணாடிகளுக்கு பிரதியீடாகவும், பின்புறமாக வரும் வாகனங்களை அவதானிக்கப் பயன்படும் கண்ணாடிக்கு பதிலாகவும் கமெராக்களை பொருத்தியுள்ளது. இவற்றிலிருந்து வரும் காட்சிகளை சாரதியின் முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் LCD திரையினூடாக அவதானித்து இலகுவாக காரினை செலுத்தக்கூடியவாறு இருக்கும் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எவரெஸ்ட் மலையை சுத்தம் செய்ய நேபாள அரசின் அதிரடி திட்டம் Posted: 04 Mar 2014 06:29 AM PST இம்முறை வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்துக்கு செல்லும் மலையேறிகளுக்கு நேபாள அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மலையிலிருந்து கீழே வரும் ஒவ்வொருவரும் தலா எட்டு கிலோகிராம் எடையுள்ள குப்பைகளை கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'mount everest base camp' என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







