Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திரா, சத்தீஸ்கரில் தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் திட்டம்

Posted: 21 Mar 2014 10:39 PM PDT

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கைவரிசை காட்ட தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகவும்

அருண்ஜெட்லிக்கு துணை பிரதமர் பதவி: பிரகாஷ்சிங் பாதல் கருத்தால் சர்ச்சை

Posted: 21 Mar 2014 10:31 PM PDT

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அமிர்தசரஸ் தொகுதிக்கு உட்பட்ட அட்டாரி என்ற இடத்தில் பிரசார கூட்டம் நடந்தது. இங்கு வேட்பாளர் அருண் ஜெட்லியை அறிமுகப்படுத்தி முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீங்கள் (வாக்காளர்கள்) எல்லோரும் அருண்ஜெட்லிக்கு ஓட்டுப்

ஆரத்தி தட்டில் ரூ.1000 போட்ட மத்திய மந்திரி: பா.ஜ.க. புகார்

Posted: 21 Mar 2014 10:19 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி கர்நாடக மாநிலம் சிக்பனாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக வீரப்ப மொய்லி நந்தி கிராமத்தில் உள்ள நதீஸ்வரா கோவிலில் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் பூசாரி மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி ஆரத்தி காட்டினார். ஆரத்தி தட்டில் வீரப்ப மொய்லி 1000 ரூபாய் போட்டார். இந்த நிகழ்ச்சி கர்நாடகாவில் உள்ள செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பவன்கல்யாண் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி

Posted: 21 Mar 2014 10:10 PM PDT

மத்திய மந்திரி சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் ''ஜனசேனா'' என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன் என்று சபதமிட்டு உள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் பாராளுமன்றம், சட்ட சபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக களம் இறங்குவதால் அவரை தங்கள் கூட்டணியில்

திருப்பதி மலையில் மீண்டும் தீ: மர்ம கும்பல் சதி செயலா?

Posted: 21 Mar 2014 10:07 PM PDT

திருப்பதி கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தீ எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்கும் பணியில் திருமலை, திருப்பதி தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 12.50 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள்

வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் நடிகை நக்மா ஏமாற்றம்

Posted: 21 Mar 2014 09:58 PM PDT

1990-ம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான் கானின் ஜோடியாக 'பாகி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் தடம் பதித்தவர், நடிகை நக்மா. பிரபுதேவாவுடன் 'காதலன்', ரஜினிகாந்துடன் 'பாட்சா' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும்

அச்சுதானந்தன் மீது சரிதா நாயர் புகார்

Posted: 21 Mar 2014 09:35 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். சமீபத்தில் ஜாமீனில் விடுதலையான இவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தன்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி லாட்ஜூக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்

முத்தமிட்ட பெண் தீக்குளித்து சாவு: ராகுல் மீது போலீசில் புகார்

Posted: 21 Mar 2014 08:48 PM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாமில் ஜோரத் என்ற இடத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொண்டி சுட்டியா என்ற இளம்பெண், அவரது கன்னத்தில் முத்தமிட்டார். அந்தக் காட்சி, டி.வி. சேனல்களில் காட்டப்பட்டது. இதையடுத்து வீடு திரும்பிய அவருக்கும், அவரது கணவர் சோமேஷ்வர்

மக்களவை தேர்தலின் பணக்கார வேட்பாளர் நந்தன் நீல்கேணி

Posted: 21 Mar 2014 12:55 PM PDT

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள நந்தன் நீல்கேணி. மத்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் தலைவராக இருந்தவர். பெங்களூரில் போட்டியிடும் இவர் தற்போது தனது வேட்புமனு தாக்கலில் தனது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7700 கோடி என குறிப்பிட்டுள்ளார். இதன் முலம் இந்த மக்களவை தேர்தலின் பணக்கார வேட்பாளர் இவர் தான் என்பது தெளிவாகிவிட்டது. புகழ்பெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை தொழில்நுட்பக் கல்லூரியில்

ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்த திவாரி பிரசாரம்

Posted: 21 Mar 2014 10:38 AM PDT

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர் சிவானந்த திவாரி, வாரணாசி தொகுதி உட்பட மூன்று தொகுதிகளின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று உறுதியளித்தார். இதுகுறித்து சிவானந்த திவாரி கூறுகையில், "அரசியலில் இன்று கடுமையான கொந்தளிப்பு நிலவுகிறது. இதைப் பார்த்து என்னால் பேசாமல் இருக்க முடியாது. அரியானவில் குர்கான் தொகுதி, வட கிழக்கு டெல்லி மற்றும் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

ஹோலி கொண்டாட்டத்தில் பாதுகாப்பு மீறல்கள் இல்லை: ஸ்பைஸ்ஜெட் விளக்கம்

Posted: 21 Mar 2014 10:21 AM PDT

சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் எட்டு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமான ஊழியர்களும், விமானி ஒருவரும் நடனமாடி பயணிகளை மகிழ்வித்தனர் என்றும், இந்த நிகழ்ச்சியை மற்றொரு விமானி புகைப்படம் எடுத்தார் என்றும் கூறப்படுகின்றது. பயணிகள் இந்தப் பதிவுகளை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டதனால் செய்தி வெளியில் பரவியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மீறல் என்று ஆட்சேபித்த சிவில் விமான போக்குவரத்து

வேட்பாளருக்கு தனது காரை கொடுத்த கெஜ்ரிவால்

Posted: 21 Mar 2014 09:15 AM PDT

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடாக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நவீன் ஜெய்ஹிந்திற்கு தனது நீல நிற வேகன்-ஆர் காரை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய்ஹிந்த் செய்தியாளர்களிடம்

ஐ.நா. தலையிட்டாலும் இத்தாலிய கடற்படையினரை விடுவிக்க கூடாது: உம்மன் சாண்டி

Posted: 21 Mar 2014 07:39 AM PDT

கடந்த 2012ம் ஆண்டு கேரள கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களை, அந்த வழியாக வந்த இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்சியின் கடற்படை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள்

அச்சுறுத்தல் உள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு பாதுகாப்பு: ஷிண்டே உறுதி

Posted: 21 Mar 2014 07:31 AM PDT

ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பா.ஜ.க தலைவர்கள் இன்று, மத்திய உள்துறை மந்திரி ஷிண்டேவை சந்தித்தனர். அப்போது, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒடிசா சட்டசபைத் தேர்தல்: 5 பா.ஜ.க. வேட்பாளர்கள் மாற்றம்

Posted: 21 Mar 2014 06:43 AM PDT

ஒடிசாவில் ஐந்து சட்டசபை தொகுதிகளின் மாற்றியமைக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. கட்சியின் மத்தியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: ஜஸ்வந்த் சிங் அதிருப்தி

Posted: 21 Mar 2014 06:12 AM PDT

மக்களவைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், விரும்பிய தொகுதிகள் கிடைக்காத அதிருப்தி பல தலைவர்களுக்கு இருக்கும். அந்த வகையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தான் விரும்பிய போபால் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் இருந்தார

சீமாந்திரா அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிரஞ்சீவி புதிய திட்டம் துவக்கம்

Posted: 21 Mar 2014 05:52 AM PDT

சீமாந்திராவில் காங்கிரசின் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் அப்பகுதியின் இதர கட்சியின் தலைவர்கள் வெகுஜன தொடர்பு நிகழ்ச்சியை ஸ்ரீகாகுளத்திலிருந்து ஆரம்பித்துள்ளனர். ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாகும்

மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும்: ராம்தேவ்

Posted: 21 Mar 2014 05:49 AM PDT

சமூக ஆர்வலரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் வரும் 23ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியை நடத்துகிறார். இதுகுறித்து ராம்தேவ் கூறியதாவது:- நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்க முடியும். மோடிக்கு எதிராக பல தீய சக்திகள் உருவாகி

சத்ருகனை எதிர்கொள்வது அரசனுக்கும் ஏழைக்குமான போட்டி: குணால் சிங்

Posted: 21 Mar 2014 04:43 AM PDT

பீகார் மாநிலத்தின் பெருமை வாய்ந்த தொகுதியான பாட்னா சாகிப் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் தரப்பிலிருந்து

தேர்தலில் சீட் வாங்கி தர லஞ்சம்: ஆம் ஆத்மியின் 2 உறுப்பினர்கள் நீக்கம்

Posted: 21 Mar 2014 04:09 AM PDT

ஊழல் எதிர்ப்பு கோஷத்தை முன்வைத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறக்குகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™