Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நீர் உட்புகா தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ள Samsung Galaxy Note 4

Posted: 21 Mar 2014 12:56 AM PDT

galaxy-note_001

galaxy-note_001பல்வேறு புதுமைகளை உள்ளடக்கி மொபைல் சாதனங்ளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வரும் Samsung நிறுவனம் தற்போது நீர் உட்புகாத Galaxy Note 4 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் Samsung Galaxy Note 4 ஆனது நீர் உட்புகாத தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள Galaxy S5 கைப்பேசியை அடுத்து தயாரிக்கப்படும் சாதனம் ஆகும்.

இதேவேளை Samsung Galaxy S5 ஆனது நீரினுள் 30 நிமிடங்கள் வரை எவ்விதமான பாதிப்பும் இன்றி இருக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே தொழில்நுட்பமே புதிதாக அறிமுகமாகவுள்ள Samsung Galaxy Note 4 இலும் கையாளப்படவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

8 மாதத்தில் 20 கிலோ எடையுடன் காட்சியளிக்கும் குண்டுக் குழந்தை…..

Posted: 21 Mar 2014 12:55 AM PDT

fattest_baby_001.w245

fattest_baby_001.w245கொலம்பியாவில் 8 மாத குழந்தை ஒன்று 20 கிலோ உடல் எடையுடன் காணப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்த யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி, தனது எட்டு மாத குழந்தை சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரித்து கொண்டே போவதால் அதிர்ச்சியுற்றார்.

இதனையடுத்து குழந்தையின் உடல்நிலையை பற்றி ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில், தனது குழந்தை அழும் நேரமெல்லாம் உடனடியாக பாலூட்டினார் என்றும் அவன் இவ்வளவு குண்டாவதற்கு தானே காரணமாகிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தை பார்த்த மருத்துவமனை இயக்குநர் சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ், அக்குழந்தையை தங்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார்.

தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏனெனில் எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலங்களில் அக்குழந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தை குணமடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என தெரிகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இருவகையான திரைகளுடன் அறிமுகமாகின்றது Oppo Find 7 (வீடியோ இணைப்பு)

Posted: 21 Mar 2014 12:53 AM PDT

oppo_find_001

oppo_find_001விரைவில் அறிமுகமாகவுள்ள Oppo Find 7 ஸ்மார்ட் கைப்பேசியானது இருவகையான திரைகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒன்று 1920 x 1080 Pixel Resolution, FHD தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் மற்றையது, 2560 x 1440 Pixel Resolution, QHD தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இவை இரண்டும் 5.5 அங்குல திரைகளாகக் காணப்படுவதுடன் இக்கைப்பேசிகளில் 2.3GHz வேகம் கொண்ட Snapdragon 801 Processor , 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 13 மெகாபிக்கல்களைக் கொண்ட பிரதான கமெராவும் காணப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக நன்மைக்காக சிறுமியை கூண்டிற்குள் வைத்து தீ வைத்த சாமியார்…. இறந்தவரை உயிர்பிப்பதாக கூறிய பயங்கரம்!…

Posted: 21 Mar 2014 12:48 AM PDT

child_samiyar_001.w245

child_samiyar_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு…….

Posted: 21 Mar 2014 12:44 AM PDT

train_youth_001.w245

train_youth_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நடுரோடுனு கூட பாராமல் இப்படியா செய்வாங்க?….

Posted: 21 Mar 2014 12:42 AM PDT

poses_girl_001.w245

poses_girl_001.w245இளம்பெண் ஒருவர் நடுரோடு என்று கூட பாராமல் ஆங்காங்கே மொடல் போஸ் கொடுக்கும் காட்சியே இதுவாகும் - See more at:  

This posting includes an audio/video/photo media file: Download Now

மியாமி டென்னிஸ்: 28 நிமிடத்தில் வென்று பின்லாந்து வீரர் சாதனை

Posted: 21 Mar 2014 12:39 AM PDT

2e600537-f2be-4bbe-87f1-207438f8acac_S_secvpf

2e600537-f2be-4bbe-87f1-207438f8acac_S_secvpfமியாமியில் நடந்து வரும் சோனி ஏடிபி டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் பின்லாந்து வீரர் ஜர்கோ நிமைன்– ஆஸ்திரேலியா வீரர் பெர்னர்ட் டாமிக் மோதினர்.

இதில் ஜர்கோ நிமைன் 28 நிமிடத்தில் வெற்றி பெற்றார். 6–0, 6–1 என்ற நேர்செட் கணக்கில் டாமிக்கை வீழ்த்தினார். ஏடிபி டென்னிஸ் இந்த ஆட்டம் தான் குறைந்த நேரத்தில் முடிந்த ஆட்டம் ஆகும். குறைந்த நேரத்தில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை ஜர்கோ நிமைன் பெற்றார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்யாவில் மனிதர்கள் படும் அவஸ்தை……

Posted: 21 Mar 2014 12:36 AM PDT

russia_wind_001.w245

russia_wind_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஷேவாக்

Posted: 21 Mar 2014 12:33 AM PDT

02-shewag-300

02-shewag-300இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷேவாக்கை கிரிக்கெட் வாரியம் ஓரம் கட்டி விட்டது. அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஆனாலும், ஷேவாக் தன்னால் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட முடியும் என்றும், இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஷேவாக், காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால், இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஏன் இந்த மாதிரி கதைகளை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.

இதை செய்தியை அறிந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெலின் பீட்டர்சன், ஷேவாக் நீங்கள் போட்டியிடுங்கள். நான் உங்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று கிண்டலடித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர்களால் சுமார் ஒரு ட்ரில்லியன் வாசனைகளை தரம் பிரித்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும்

Posted: 21 Mar 2014 12:28 AM PDT

download (1)

download (1)மனிதர்களின் கண்பார்வை 10 லட்சத்துக்கு அதிகமான நிறங்களை தரம் பிரித்து அடையாளம் காண முடியும். காதுகளால் 3 லட்சத்து 40 ஆயிரம் வகை ஒலிகளை வேறுபடுத்தி அறிய முடியும். ஆனால், மூக்கினால் சுமார் 10 ஆயிரம் நறுமணங்களையே நுகர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று மட்டுமே இதுவரையில் நம்பப்பட்டு வந்தது. 1920-ம் ஆண்டு வாக்கில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படியிலான இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், மனிதர்களால் சுமார் ஒரு ட்ரில்லியன் (லட்சம் கோடி) வாசனைகளை தரம் பிரித்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் 26 தன்னார்வலர்களிடம் 128 வாசனாதி பொருட்களின் கலவையுடன் கூடிய 264 நறுமண மாதிரிகளை முகர்ந்து, தரம் பிரித்து அடையாளம் காட்டும்படி நடத்தப்பட்ட சோதனையில் இந்த புதிய முடிவு வெளியாகியுள்ளது. இந்த வாசனைகளை நினைவுபடுத்தி கூற யாரும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், வாசனைக்குரிய பொருளின் மூலப்பெயரை உடனுக்குடன் சரியாக கூறியதாக தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாற்றுச் சிந்தனையாளர்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது- பீட்டர் ஸ்பிலின்டர்

Posted: 21 Mar 2014 12:25 AM PDT

download

downloadமாற்றுச் சிந்தனையாளர்களை இலங்கை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அழுத்தங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர்(Peter Splinter) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளாகளான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த விடுதலைகள் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை நிலைமைகள் குறித்து குரல் கொடுக்கும் தரப்பினர் ஒடுக்கப்படக் கூடாது, அமைதியான முறையில் தங்களது கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதன் மூலம், சர்வாதிகார நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கி வருவது வருத்தமளிப்பதாக பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனியா காந்தி அவரது பாஸ்போர்ட்டின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் – அமெரிக்கா

Posted: 21 Mar 2014 12:08 AM PDT

Sonia_Gandhi_1125682c

Sonia_Gandhi_1125682cமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க்கின் புரூக்ளின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார். எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்லோன் கெட்டரிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக தங்கியிருந்த சோனியா காந்தியிடம் இந்த சம்மனை கோர்ட் ஊழியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வழங்கியதாக கூறப்படுகிறது. சம்மன் அளித்து 4 மாதங்கள் ஆகியும் சோனியா காந்தி தரப்பில் இருந்து கோர்ட்டுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி தனது விளக்கத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வாதிட்ட சோனியாவின் வக்கீல், சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படும் தேதியில் சோனியா காந்தி அமெரிக்காவில் இல்லை என்று கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி விளக்கமளித்தார். இவ்வழக்கு தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில், இந்த விளக்கம் நிறைவு அளிப்பதாக இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி ப்ரெயன் எம்.கோகன், 'சம்மன் வழங்கப்பட்டபோது சோனியா காந்தி அமெரிக்காவில் தங்கியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் அமெரிக்காவுக்குள் வந்தது, அமெரிக்காவை விட்டு வெளியேறியது தொடர்பான குடியுரிமை துறையின் முத்திரைகளை சரிபார்ப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டின் நகலை ஏப்ரல் 7-ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 137ஆவது இடத்தில்…..

Posted: 21 Mar 2014 12:03 AM PDT

satellite-image-of-sri-lanka

satellite-image-of-sri-lankaஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் வியாழக்கிழமை (20) அனுஷ்டிக்கப்பட்டது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் டென்மார்க் இடம்பிடித்துகொண்டுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சியான நாடுகளின் அட்டவணையின் பிரகாரம் தெற்காசியாவைச்சேர்ந்த எந்தவொரு நாடும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துகொள்ளவில்லை இலங்கை 137ஆவது இடத்திமகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் லும் இந்தியா 111ஆம் இடத்திலும் இருக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தல் வன்முறை சம்பவங்கள் மிகவேகமாக அதிகரிப்பு – கஃபே

Posted: 20 Mar 2014 11:57 PM PDT

images (1)

images (1)எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான தேர்தல் வன்முறை சம்பவங்கள் மிகவேகமாக அதிகரித்துள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தெரிவித்துள்ளது.

கபே அமைப்பிற்கு வியாழக்கிழமை வரையிலும் 946 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மேல் மாகாணத்திலிருந்தே 551 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவ்வமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.

பொது சொத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 345 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 483 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு

Posted: 20 Mar 2014 11:52 PM PDT

Barack Obama

Barack Obamaகிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை அடுத்து மேற்கத்திய நாடுகள் அதற்கெதிராக தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக  ரஷ்யா மீது  பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "ரஷ்யாவின் மீது உள்நாட்டு அடிப்படையிலும் வெளிநாட்டு அடிப்படையிலும்  பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய துறைகள் மீது இன்னும் சில தடைகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் இப்பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படும் என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தின் மற்றுமொரு அறிக்கை

Posted: 20 Mar 2014 11:50 PM PDT

13261-450x188

13261-450x1882009ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைத் தமிழர்கள் பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு இங்கிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் 40பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது பெறப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிலையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தி கார்டியன் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னர் பல்வேறு ன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தையான டெஸ்மண்ட் டுட்டுவின் கருத்தும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 110 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்ரைனின் போர்க்கப்பல்களை கிரிமியா கைப்பற்றியது

Posted: 20 Mar 2014 11:46 PM PDT

russia-25323re

russia-25323reவாக்கெடுப்பின் மூலம் தனி நாடாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட கிரிமியாவில் உக்ரைனுக்கு சொந்தமான ஏராளமான ராணுவ நிலைகள் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இவற்றை உக்ரைன் ராணுவ வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். சேவஸ்டோபோல் பகுதியில் கருங்கடலில் உள்ள உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கடற்படை தளத்தை கடந்த 19-ம் தேதி சுற்றி வளைத்த கிரிமியா படையினர், அந்த தளத்தை கைப்பற்றி அதில் ரஷிய நாட்டின் கொடியை ஏற்றி வைத்தனர். அந்த தளத்தின் கடற்படை தளபதி உள்ளிட்ட வீரர்களையும் வெளியேற்றி அவர்களை கைது செய்தனர். இந்த தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் தலைநகர் சிம்பெரோபோலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்சிசரேய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் மற்றொரு கடற்படை தளத்தையும் கிரிமியா படைகள் கைப்பற்றின. இந்நிலையில், ரஷ்ய வீரர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனின் 3 போர் கப்பல்களை கிரிமியா படைகள் நேற்று கைப்பற்றியுள்ளன. கிரிமியாவில் உள்ள தங்களது ராணுவ நிலைகளின் மீது ரஷ்ய படையினர் இது போன்று அதிரடி தாக்குதல் நடத்தி வருவதற்கு உக்ரைன் பாதுகாப்பு மந்திரி லியோனிட் போல்யகோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் கிரிமியா பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் எவ்வித செயல்களிலும் ஈடுபடுவதில் இருந்து அனைத்து தரப்பினரும் விலகி இருக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் அறிவுறுத்தியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™