Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் தேர்வு: இன்னசென்ட் போட்டி

Posted: 07 Mar 2014 10:08 PM PST

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளது. இம்மாநிலத்தில் 20 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு வருகிற ஏப்ரல் 10–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறது.

கேரளா: மார்க்சிஸ்ட் கூட்டணியில் இருந்து ஆர்.எஸ்.பி. கட்சி விலகல்

Posted: 07 Mar 2014 09:57 PM PST

கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா கட்சிகளின் கூட்டணிகள் இடையே போட்டி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியில் இடம் பெற்ற ஆர்.எஸ்.பி. கட்சி தேர்தலில் போட்டியிட தங்களுக்கு கொல்லம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென்று கூறி இருந்தது.

ஜெயலலிதா– மம்தா உருவாக்கும் புதிய அணி

Posted: 07 Mar 2014 09:54 PM PST

இடது சாரி கட்சிகள் விலகியதால் ஜெயலலிதாவும் மம்தா பானர்ஜியும் இணைந்து புதிய அணி உருவாக்க முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறி விட்டன. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஏற்கனவே தலா ஒரு மேல் சபை எம்.பி பதவியை அ.தி.மு.க. கொடுத்தது. அதேபோல்

இந்திய ஆண்கள் 19 நிமிடங்கள்தான் வீட்டு வேலை செய்கிறார்கள்

Posted: 07 Mar 2014 09:48 PM PST

இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியாவில் பெண்களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது. பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்தமாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில்

கவர்னருக்கு எதிராக விமர்சனம்: சர்ச்சையில் ரீமா கல்லிங்கல்

Posted: 07 Mar 2014 09:23 PM PST

கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரீமாகல்லிங்கல். இவர் தமிழில் யுவன் யுவதி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாள டைரக்டர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த வாரம் இவர் கேரள கவர்னராக

ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம்

Posted: 07 Mar 2014 08:56 PM PST

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

காந்தியின் சபர்மதி ஆசிரம ராட்டையில் நூல் நூற்ற கெஜ்ரிவால்

Posted: 07 Mar 2014 08:35 PM PST

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ம் தேதி முதல் அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மகாத்மா காந்தியால் துவங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் சபர்மதி ஆற்றங்கரையில்

வாரணாசி, அகமதாபாத் தொகுதிகளில் மோடி போட்டி

Posted: 07 Mar 2014 08:22 PM PST

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 17–ந்தேதி ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வேட்பாளர்கள் அனைவரையும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 54 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இதையடுத்து சுமார் 100 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் தயாராகியுள்ளது. டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் மத்திய தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் 2–வது வேட்பாளர் பட்டியல் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் பிறகு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயர் இடம் பெறும் என்று

பெண்ணின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு: வாலிபர் கைது

Posted: 07 Mar 2014 07:48 PM PST

பெண்ணின் பெயரில் போலியாக ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்து ஆபாச செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வந்த வாலிபரை ஆந்திர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் ஐதராபாத் அருகேயுள்ள பழைய போவென்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முஹம்மது காலித். முன்னர் ஒரு ஓட்டலில் பணியாற்றிய இவர் அங்கு வேலை செய்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அவரது காதலை அந்த பெண் நிராகரித்ததால் அவரது 'இமெயில் ஐடி'யை அறிந்திருந்த முஹம்மது காலித், அதை வைத்து அந்த பெண்ணின்

மோடிக்காக ரத யாத்திரை: பீகார் பா.ஜ.க முடிவு

Posted: 07 Mar 2014 04:24 PM PST

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை வெற்றிபெறச்செய்யும் பொருட்டு பீகார் மாநில பா.ஜ.க வினர் மிகப்பெரும் அளவில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் 250 ரதங்கள் மூலமும் 1000 பொதுக்கூட்டங்கள் மூலமும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில பா.ஜக தலைவர் மங்கள் பாண்டே கூறுகையில் "நாங்கள் பிரச்சாரத்திற்கு அனுப்பவுள்ள ஒவ்வொரு ரதத்திலும் டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கிய மோடியின் ஆரம்பகாலம், அவரது புகழ்பெற்ற வாசகங்கள், பிரச்சார பதிவுகள் ஆகியவை ஒரு எல்.இ.டி

இ-பைலிங்: தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறை

Posted: 07 Mar 2014 01:20 PM PST

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் தங்களது பெயர், கல்வித் தகுதி, தங்களது சொத்துகள், கடன்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் கூடுதலாக இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யும் முறையை வருகின்ற மக்களவை தேர்தலில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறையில் வேட்பாளர்கள் தங்களை குறித்த தகவல்கள் அடங்கிய அபிடவிட் விண்ணப்பத்தை

மோடி பிரதமரானால் விசா தர தயார்: அமெரிக்கா

Posted: 07 Mar 2014 12:10 PM PST

குஜராத்தில் 2002ல் இனக்கலவரம் நடந்தது தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தருவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது நாடெங்கும் மோடி அலை பரவி வருவதாலும் அவர் பிரதமராவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாலும் தனது பிடியை தளர்த்தி கொள்வதற்கு அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து இந்தியா வந்துள்ள அமெரிக்க மாகாண துணைச் செயலர் நிஷா டெஸி பிஸ்வால் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும் போது "உண்மையான ஜனநாயக நாடான இந்தியாவிலிருந்து வரும்

ஆர்.எஸ்.எஸ்., ராகுல் மீது வழக்குப்பதிவு

Posted: 07 Mar 2014 11:51 AM PST

நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசுகையில் நம் தேசப்பிதா காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான் என்றும் அதே அமைப்பை சேர்ந்த பா.ஜ.க வினர் காந்தியை பற்றி பேச வருவது தனக்கு மிகவும் வியப்பளிப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்

உ.பி. காடுகளில் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 100 கேமராக்கள்

Posted: 07 Mar 2014 11:16 AM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேற்குப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் ஆட்களைக் கொல்லும் பெண் புலி ஒன்று, ஏழு பேரைப் பலி வாங்கியுள்ளது. இந்த புலியைக் கண்டுபிடிக்க அரசுத் தரப்பில் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதைப் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. வேறு புதிய தாக்குதல்கள் இதுவரை நடைபெறாத நிலையில், கோர்பெட் புலிகள் ரிசர்வ் பகுதிக்குள் அந்தப் புலி சென்றிருக்கக்கூடும் என்று மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதுபோன்று காட்டைவிட்டு வெளிவரும் புலிகளின் நடமாட்டத்தை உடனடியாக அறியவும், பொதுமக்களுடன் இவைகளுக்கு ஏற்படும்

ஜெயலலிதா- மம்தா இடையே தொலைபேசி உரையாடல்

Posted: 07 Mar 2014 10:19 AM PST

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று ஒரு பேட்டியில் "தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்றும் அவர் பிரதமராவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மம்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற மக்களவை தேர்தலை பற்றி

தனி விமானத்தில் பயணம் செய்த கெஜ்ரிவால்

Posted: 07 Mar 2014 09:37 AM PST

டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல்வாதிகள் அனைவரும் வி.ஐ.பி விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் சொகுசு விமானங்களை பயன்படுத்தி வருபவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஜெய்ப்புரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு டெல்லிக்கு கெஜ்ரிவால் தனியார் விமானத்தில் பயணம்

நான் தீவிரவாதி அல்ல, மோடி என்னை சந்தித்திருக்க வேண்டும்: கெஜ்ரிவால்

Posted: 07 Mar 2014 08:58 AM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குஜராத்திலுள்ள காந்தி நகரில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் இன்று சந்திக்க சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தனது முயற்சி தோல்வியடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:- நான் அவரை (மோடியை) சந்திக்க விரும்பினேன், ஆனால் என்னை அவர் வீட்டிற்கு ஐந்து கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தி விட்டார்கள். நான் தீவிரவாதி அல்ல. முன்னாள் முதல்வர் என்கிற முறையில் என்னை தடுத்து நிறுத்தாமல் மரியாதை நிமித்தமாக அவர் என்னை சந்தித்திருக்க வேண்டும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. குஜராத் குறித்து கடந்த ஒரு வருடமாக மோடியும், ஊடகத்தின் ஒரு பிரிவும் கூறிவருவது உண்மை நிலைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இது

கப்பல் விபத்து: அந்தோணி ராஜினாமா செய்ய பா.ஜ.க. கோரிக்கை

Posted: 07 Mar 2014 07:30 AM PST

மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள மாஸ்கான் கப்பல் கட்டுமான தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியானர். மேலும் அங்கு சிக்கியிருந்த 12 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "கடந்த 11 மாதங்களில் நடைபெற்ற 11-வது முறையாக கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு கடற்படையை முழுவதுமாக புறக்கணித்துவிட்டது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பாதுகாப்புத் துறை மந்திரி அந்தோணி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். வெளிப்படையான கொள்முதல் முறையை உறுதி செய்வதற்குப் பதிலாக, ஊழல் வெளியானதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறார் பாதுகாப்புத்துறை மந்திரி.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை: சுப்ரீம் கோர்ட்

Posted: 07 Mar 2014 07:09 AM PST

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்தது. அந்த மனு, நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, என்.வி ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்தியாவில் சூழ்நிலைகள் மாற முடியும். ஒரு விஷயத்தில் ஆதரவு தெரிவிக்கும் ஒரு கட்சி, அந்த விஷயத்தை எதிர்க்கவும் முடியும். ஒரு மாநிலத்தில் உள்ள கட்சி மற்ற மாநிலத்திலுள்ள கட்சியை ஆதரிக்கிறது. டெல்லியில், முதல்வரை தோற்கடித்த கட்சி, மீண்டும் அவரது கட்சியின் (காங்.) ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இன்றைய எதிரி நாளைய நண்பராக மாறலாம். மிகச்சிறந்த நண்பராக கூட ஆகலாம். அரசியலில் எதிரிகள் நிரந்தரமல்ல. ஆம் ஆத்மி அரசு, ஜன் லோக்பா

அடுத்த சில வாரங்களில் புதிய வங்கிகளுக்கு அனுமதி: ரகுராம் ராஜன்

Posted: 07 Mar 2014 06:55 AM PST

கடந்த ஆண்டு தனியார் துறைகள் புதிய வங்கிகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 27 விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கி பெற்றது. அதில், டாடா சன்ஸ் நிறுவனம் உட்பட 2 நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொண்டன. இதையடுத்து, விண்ணப்பங்களை பீமல் ஜாலன் தலைமையிலான குழு பரிசீலனை செய்து பரிந்துரைகளுடன் அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்து பிறகு புதிய வங்கி அமைப்பதற்கு தகுதியான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க ரிசர்வ் வங்கி இறுதி முடிவெடுக்கும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு கூட்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™