Tamil Star |
- இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு
- இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. – அனந்தி சசிதரன்
- அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு
- இராணுவத்துக்கு மேலும் 44 தமிழ் யுவதிகள்
- ஆசிய கோப்பை யாருக்கு?: பாகிஸ்தான்– இலங்கை நாளை மோதல்
- 20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து வீரர் ஜோரூட் விலகல்
- சந்தோஷ் கோப்பை கால்பந்து: அரையிறுதியில் தமிழகம் தோல்வி
- ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் கசையடி கொடுத்து தூக்கிலிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
- ஐ.நாவின் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் – பிரித்தானியா
- இலங்கை நிலைமைகளை அரசியலாக்கும் முயற்சி: ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி
- ஆப்கன் அதிபரின் குழந்தை இந்திய மருத்துவமனையில் பிறந்தது
- நாட்டினது சிறப்புரிமைகள் அனைவருக்கும் சரிசமமான வகையில் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி
- ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
- 85 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு செல்வாக்கு
- பிரபாகரன் பராமரித்து வந்த, யானை பின்னவெல யானைகள் சரணாலயத்தில்
- 100 முறை நாய்களிடம் கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஆபத்தில்
- தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள்
| இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு Posted: 07 Mar 2014 07:42 AM PST
அவ்வாறே இவ்வசதியை ஒன்லைனில் தரும் சில இணையத்தளங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவான கோப்பு வகைகளையே மாற்றம் செய்ய முடிவதுடன், பெரும்பாலானவற்றில் பணம் செலுத்தியே இச்சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் CloudConvert எனும் இணையத்தளமானது இச்சேவையினை முற்றிலும் இலவசமாக வழங்குவதுடன், நூறிற்கு அதிகமாக கோப்பு வகைகளை மாற்றும் வசதியை கொண்டுள்ளது. அவற்றில் பல்வேறு Audio, Video, Document, Ebook, Archive, Image, Spreadsheet மற்றும் Presentation கோப்புகளும் அடங்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. – அனந்தி சசிதரன் Posted: 07 Mar 2014 07:39 AM PST
யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்;தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையினில் தமிழரசுக்கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் ஜெனீவா சென்றிருந்தேன். அங்கு சென்று இறங்கியதுமே தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப்புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். 18 நாட்டு ராஜதந்திரிகள் சகிதம் கடந்த பெப்;ரவரி 13ல் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருந்த சுமந்திரன் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி மற்றொரு கேள்விக்கு அங்கு பதிலளித்தார். ஏதாவதொரு பிரேரணையினை கொண்டுவந்தால் போதுமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததெனவும் அவர் தெரிவித்தார். ஜெனீவாவினில் ஓர் போர்க்குற்ற விசாரணை வருமென நம்பிருந்த எமது மக்கள் விரக்திக்குள்ளாகி இருக்கிறார்கள். காணாமல் போனோர் தொடர்பில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது. எமது மக்கள் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்குமெனவும் அனந்தி தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு Posted: 07 Mar 2014 07:37 AM PST
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும். இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவத்துக்கு மேலும் 44 தமிழ் யுவதிகள் Posted: 07 Mar 2014 07:35 AM PST
இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆசிய கோப்பை யாருக்கு?: பாகிஸ்தான்– இலங்கை நாளை மோதல் Posted: 07 Mar 2014 07:31 AM PST
12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இலங்கை அணிகள் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இலங்கை அணி அனைத்து லீக் (4 போட்டி) ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 வெற்றி ஒரு தோல்வி பெற்றது. இந்தியா அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றன. சொந்த மண்ணில் விளையாடிய வங்காளதேசம் ஒரு வெற்றி கூட பெறாமல் அனைத்து ஆட்டத்திலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நாளை டாக்காவில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான்– இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் பானிஸ்தான் தோற்றது.
உமல் குல், சயீத் அஜ்மல், ஜூனைத்கான் போன்ற பவுலர்கள் உள்ளனர். இலங்கை அணியும் சம பலத்துடன் உள்ளது. அந்த அணி தோல்வியே சந்திக்காமல் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. சங்ககரா, கேப்டன் மேத்யூஸ், திரிமன்னே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சில் 'யார்க்கர்' மன்னன் மலிங்கா மிரட்டுவார். அஜந்தா மெண்டீஸ், சென நாயக்கே ஆகியோர் சுழற்பந்தில் அசத்துவார்கள். ஆசிய கோப்பையை இலங்கை 4 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கைப்பற்றி உள்ளன. 2012–ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நாளை நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து வீரர் ஜோரூட் விலகல் Posted: 07 Mar 2014 07:30 AM PST
காயத்துக்கு சிகிச்சை பெற ஜோரூட் இங்கிலாந்து திரும்புகிறார். ஜோரூட் விலகல் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 22–ந்தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது This posting includes an audio/video/photo media file: Download Now |
| சந்தோஷ் கோப்பை கால்பந்து: அரையிறுதியில் தமிழகம் தோல்வி Posted: 07 Mar 2014 07:27 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் கசையடி கொடுத்து தூக்கிலிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய Posted: 07 Mar 2014 07:25 AM PST
விடுதலைப் புலிகளை போஷித்து வளர்த்த தமிழக அரசியல்வாதிகளையே முதலில் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளரும் மேல் மாகாண வேட்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை – பண்ணிப்பிட்டிய வீதியில் அமைந்துள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு தமிழீழ நாட்டை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரான அவர் இந்தியாவின் பிரதமரான வரபோவதாக பேசி வருகிறார். இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், இலங்கையை ஆக்கிரமித்தாவது ஈழத்தை உருவாக்க போவதாக பிதற்றி வருகிறார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஈழத்தை உருவாக்கி கொடுக்கும் முன்னர் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு உண்ணவும், குடிக்க கொடுத்து, அங்கு மின்சாரத்தை வழங்கி, வீடுகளை நிர்மாணித்து கொடுத்து, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு நாங்கள் ஜெயலலிதாவுக்கு கூறவிரும்புகிறோம். தேவையானால் தமிழ் நாட்டை தனிநாடாக உருவாக்கி, இங்குள்ள தமிழர்களை அங்கு அழைத்துச் செல்லுங்கள். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழ் நாடே தமிழ் ஈழ வாதத்தின் கேந்திர நிலையம் என்பது எங்களுக்கு தெரியும். 70 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்தே தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டனர். இதனால் மூன்று தசாப்தகாலமாக பாதிப்புகளை அனுபவித்தோம். அத்துடன் பாரிய உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டன. நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கி சென்றது. பயங்கரவாத்தில் இருந்து நாட்டை மீட்க 26 ஆயிரம் படையினர் உயிர்களை தியாகம் செய்ததுடன் 24 ஆயிரம் பேர் அங்கவீனமடைந்தனர். எமது நாட்டில் செய்த அழிவுகளுக்கு தமிழ் நாடு பொறுப்புக் கூறவேண்டும். சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் தமிழ் புலிப் பயங்கரவாத்திற்கு அணுசரனை வழங்கி, பாதுகாப்பு வழங்கிய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளையே கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை மின்சார நற்காலியில் வைக்கக் கூடாது. 10 கசையடிகளை கொடுத்து தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும். இலங்கை மன்னர் காலத்திற்கு தண்டனையே இவர்களுக்கு பொருத்தமானது. இலங்கையின் இறுதி மன்னரான தென்னிந்திய நாயக்கர் வமசத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னன், ஹெலபொல அதிகாரத்தின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கிய தண்டனையே ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும். எம்.ஜி. ராமசந்திரனுடன் தமிழ் படங்களில் நடனம் ஆடிவிட்டு இன்று அரசியலுக்கு வந்து எமது நாட்டை அச்சுறுத்துவதை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு கூறிவைக்க விரும்புகிறோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நாவின் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் – பிரித்தானியா Posted: 07 Mar 2014 07:15 AM PST
மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் அதனை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஐ.நாவின் உடன்படிக்கையில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை சமூகத்தில் பெண்கள் முன்னணி பங்கை வகிக்கின்றனர். பெண்கள் நடவடிகைகளிலும் பல துறைகளிலும் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பதவிகளில் உள்ளனர். பெண்கள் தமது வீடுகளில் குடும்பத் தலைவர்களின் பாகுபாடு மற்றும் வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளை இலங்கையின் நீண்டகால மோதல்கள் காரணமாக 89 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் அது தொடர்பான சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஐ.நா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா ஊக்குவிக்கும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை நிலைமைகளை அரசியலாக்கும் முயற்சி: ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி Posted: 07 Mar 2014 07:10 AM PST
இலங்கையின் நிலைமைகளை மனித உரிமை பேரவையில் அரசியலாக்க முயற்சிப்பதாக அரசாங்கம், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான உள் மதிப்பீட்டு அறிக்கையில் தவறான குறிப்புகளுக்கு வலுவான இடமளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் செயல்முறை அடிப்படையில் அமையாத நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாத தகவல்களின் அடிப்படையிலோன விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேரவையில் இலங்கையின் நிலைமைகளை அரசியலாக்கும் இன்னுமொரு முயற்சியாக கையாளப்பட்டுள்ளது என இலங்கை பிரதிநிதி கூறியுள்ளார். எவ்வாறாயினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். நாம் முன்னிலைப்படுத்தியுள்ள ஆணையாளரின் ஆறு கருப்பொருள் நாடுகள் அதிகமான முன்னுரிமைகளை வழங்க வேண்டும். பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளின் அபிவிருத்தி தொடர்பில் முறையாக கவனத்தை பெற வேண்டும் என நாம் நம்புகிறோம் என இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்கன் அதிபரின் குழந்தை இந்திய மருத்துவமனையில் பிறந்தது Posted: 07 Mar 2014 06:59 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாட்டினது சிறப்புரிமைகள் அனைவருக்கும் சரிசமமான வகையில் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி Posted: 07 Mar 2014 06:50 AM PST
நாட்டின் சிறப்புரிமைகள் அனைவருக்கும் சரிசமமான வகையில் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைவரையும் சரிசமமாக நடத்துவது இன்றைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் சகலருக்கு சமமான கிடைக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மலையகத்தில் நிரந்த தபால் சேவைக்கு 386 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்காக கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், மலையக தோட்டபுற மக்களுக்காக அரசாங்கம் முக்கியமான வேலைத்திட்டங்களை செய்து முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் Posted: 07 Mar 2014 06:39 AM PST
இந்த கோரிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான ஓர் விழிப்பு கோரிக்கை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் விசாரணை நடாத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெளிவான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் உரிய விசாரணைகளை அரசாங்கம் நடாத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| 85 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு செல்வாக்கு Posted: 07 Mar 2014 06:34 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரபாகரன் பராமரித்து வந்த, யானை பின்னவெல யானைகள் சரணாலயத்தில் Posted: 07 Mar 2014 06:30 AM PST
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் ஒரு புலி, ஒரு கரடி, ஒரு யானை என்பனவற்றை வளர்த்து வந்தார். அவர் மரணத்தை தழுவும் வரை அவர் புலியை தன்னுடன் வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது. அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த, யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் ஒரு புலி, ஒரு கரடி, ஒரு யானை என்பனவற்றை வளர்த்து வந்தார். அவர் மரணத்தை தழுவும் வரை அவர் புலியை தன்னுடன் வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது. அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது This posting includes an audio/video/photo media file: Download Now |
| 100 முறை நாய்களிடம் கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஆபத்தில் Posted: 07 Mar 2014 06:27 AM PST
உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோரி மொழிப் பள்ளியில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டாள். ஒரு மாதம் கழிந்தபின் நீண்ட நாட்கள் தாங்களும் இங்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்பொருட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் ஜப்பானுக்குத் திரும்பி வர முடிவு செய்தனர். ஊருக்குத் திரும்புவதற்குமுன் கடந்த திங்கட்கிழமையன்று சகுராகோவின் குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்துக்கொண்டிருக்கும் தங்கள் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கேதான் அந்த விபரீதம் நடந்துள்ளது. அவர்கள் வீட்டில் வளர்த்துவந்த நான்கு காவல் நாய்களிடம் அந்த சிறுமி மாட்டிக்கொள்ள நேர்ந்தது. நடைபெறும் சம்பவத்தை உணர்ந்து அந்த சிறுமியை அவர்கள் காப்பாற்றுவதற்குள் அவளை 100 முறை அந்த நாய்கள் கடித்துள்ளன. இத்தனை கடிகளைப் பெற்றபோதும் அந்த சிறுமிக்கு உணர்வு இருந்துள்ளது. கவலைக்கிடமான நிலைமையில் அந்த சிறுமி ஆக்லாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளைத் தாக்கிய நாய்களை அந்தக் குடும்பத்தினர் கருணைக்கொலை செய்துவிட்டனர். ஆபத்தான நிலைமையைத் தாண்டாதபோதும் சிறுமியின் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி வளர்ந்த நிலையை அடையும்வரை அவளுக்குத் தொடர் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் சாக் மொவாவேனி தெரிவித்துள்ளார். நாய்களின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றது. சிறுமியின் நிலை குறித்து கவலை கொண்ட பார்வையாளர்கள் அவளது சிகிச்சைக்காக அந்நாட்டு பணமதிப்பில் 1,00,000 டாலர் நன்கொடை அளித்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவித்துள்ள சகுராகோவின் குடும்பத்தினரோ, அவள் மீண்டுவர இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் Posted: 07 Mar 2014 06:21 AM PST
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியலின்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















