Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பிரம்மோற்சவ விழா: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கைலாச கிரிவலம்

Posted: 03 Mar 2014 10:27 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடந்து வருகிறது. அதையொட்டி 10–வது நாளான நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஜனதா அம்பாரி வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு உற்சவ மூர்த்திகள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலை 10 மணியளவில் கைலாச மலைகளில், கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. திருக்கல்யாண உற்சவத்திற்கு வருகை தந்த முக்கோடி

சீமாந்திராவின் புதிய தலைநகரமாக திருப்பதியை அறிவிக்க கோரிக்கை

Posted: 03 Mar 2014 10:27 PM PST

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், மேடக் உள்பட 10 மாவட்டங்களை ஒருங்கிணைத்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்பட 13 மாவட்டங்களை

காங். எம்.பி.க்களை இழுக்க 3–வது அணி ரகசிய திட்டம்: உம்மன்சாண்டி

Posted: 03 Mar 2014 10:10 PM PST

கேரள காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசலை தீர்ப்பதற்காக சமீபத்தில் ரமேஷ் சென்னிதலாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதேபோல மாநில காங்கிரஸ் தலைவராக சுதீரன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கேரள காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசலுக்கு

பணிக்குத் தாமதமாக வந்த 10 ஊழியர்களை நீக்கியது ஏர் இந்தியா

Posted: 03 Mar 2014 10:04 PM PST

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் ஊழியர் குழுவில் மொத்தம் 3,600 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விமானப் பணிப்பெண்களாவர். அவர்களில் 2,200 பேர் நெடுந்தொலைவு செல்லும் பெரிய விமானங்களிலும் மற்றவர்கள் உள்நாட்டில் பயணிக்கும் சிறிய விமானங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்களின் நேரத்திறன் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் குறிப்பிடும் அளவில் எப்போதுமே இருப்பதில்லை. குறிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இவர்களின் காலதாமதமான வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

கள்ளக்காதல்: கொலையுண்ட குழந்தை பிணம் தோண்டி எடுப்பு

Posted: 03 Mar 2014 10:02 PM PST

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ராஜகுமாரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஜி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சிந்து (வயது 35). இந்த தம்பதிக்கு அஞ்சுமோள் (3), அலினா (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். சிந்துவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீப் டிரைவர் ஜிஜி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் சஜி துப்பாக்கியால் ஜிஜியை சுட்டுக் கொலை செய்தார். பிறகு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சஜியின் மனைவி சிந்து மற்றும் 2 குழந்தைகளும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயர் புகாருக்கு காங். பதில்

Posted: 03 Mar 2014 09:45 PM PST

கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்கள் சிறையில் வாடிய சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை

தேர்தலில் போட்டி: நவநிர்மான் சேனாவுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்

Posted: 03 Mar 2014 09:40 PM PST

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.– சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த இரு கட்சிகளிடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டது. என்றாலும் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணி நீடிக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்று மகராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) என்ற கட்சியை தொடங்கியுள்ள ராஜ் தாக்கரேக்கும் மராட்டியத்தில் கணிசமான செல்வாக்கு

மராட்டியத்தில், பா.ஜ.க.வுக்கு 29 இடங்களில் வெற்றி வாய்ப்பு

Posted: 03 Mar 2014 09:34 PM PST

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மாநிலம் வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. டெல்லி மற்றும் மராட்டிய மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் 2 முதல் 4 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம்

சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது

Posted: 03 Mar 2014 09:25 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.சுகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. போனில் பேசிய மர்ம மனிதன் வேலந்தாவலம் போக்குவரத்து சோதனை சாவடியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்

டெல்லியில் கெஜ்ரிவால் செல்வாக்கு 8 சதவீதம் குறைந்தது

Posted: 03 Mar 2014 09:17 PM PST

ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் டெல்லியில் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்தார். கடந்த மாதம் அவர் முதல்–மந்திரி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை பெரிய அளவில் வெற்றி பெற செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதை உறுதிபடுத்துவதுபோல் ஆம் ஆத்மி சார்பில் 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். மாநிலம் வாரியாக சென்று அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

கோர்ட்டுக்கு சென்றால் தெலுங்கானா மசோதா தள்ளுபடியாகும்: வெங்கய்யா நாயுடு

Posted: 03 Mar 2014 09:01 PM PST

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆந்திராவில் ''இல்லம் தோறும் தாமரை... உள்ளம் தோறும் மோடி'' என்ற தேர்தல் பிரசாரத்தை பாரதீய ஜனதா கட்சியினர் தொடங்கி உள்ளனர். விசாகப்பட்டினத்தில் இந்த பிரசாரத்தை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– ஆந்திர மாநில பிரிவினை பாராளுமன்றத்தில் 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறும்போது பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் இல்லை. சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள்கூட பாராளுமன்றத்தில்

போபாலில் திறக்கப்படும் கோ-கார்ட் பொழுதுபோக்கு மண்டலம்

Posted: 03 Mar 2014 07:47 PM PST

குஜராத் மாநிலத்தின் தலைநகரான போபால் நகரில் உருவாக்கப்பட்டுள்ள கோ-கார்ட் பொழுதுபோக்கு மண்டலம் வரும் 9-ம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட உள்ளது. போபாலுக்கு அருகில் உள்ள ரதிபாட் என்ற இடத்தில் ஆறு கி.மீ பரப்பளவு கொண்ட இடத்தில் 1.2 கி.மீ தூரத்திற்கு இந்தப் பந்தயப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இங்கு விளக்கு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தின் உரிமையாளர்கள்

காங்கிரசுடன் இணைய மாட்டோம்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவிப்பு

Posted: 03 Mar 2014 07:08 PM PST

தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால், காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்து விடுவதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தற்போது, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு விட்டதால், அக்கட்சி காங்கிரசுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும், இந்த இணைப்பில் ஆர்வமாக உள்ளது. இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் பொதுக் குழு கூட்டம், ஐதராபாத்தில் நடைபெற்றது. பின்னர், அக்கட்சி நிறுவனர் கே.சந்திரசேகர ராவ்

தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக மந்திரி சுரேஷ் தாஸ் அறிவிப்பு

Posted: 03 Mar 2014 02:50 PM PST

பீட் பாராளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக மந்திரி சுரேஷ் தாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ராகுல்காந்தி மராட்டியத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

Posted: 03 Mar 2014 02:19 PM PST

பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பிரசாரம் செய்யும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி மராட்டியத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை (புதன்கிழமை) காலை துலே மாவட்டத்தில் உள்ள சிர்பூரில் என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட பட்டதாரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

ஊழல் குற்றச்சாட்டால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன ஒப்பந்தங்கள் நிறுத்திவைப்பு

Posted: 03 Mar 2014 01:44 PM PST

இந்தியாவின் விமானப்படையைச் சேர்ந்த விமானங்களுக்கு என்ஜின்கள் வாங்குவதற்காக புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் ரூ.10,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துகொண்டது. இவ்வொப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்நதது. சமீபத்தில் இந்த ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வந்த கடிதம் ஒன்றில்,

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்

Posted: 03 Mar 2014 12:58 PM PST

பீகாரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர் கே.பி.ராமைய்யா. ஆந்திராவை சேர்ந்த இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் இன்று பீகார் மாநிலத்தில் ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இவர்

காங்கிரசின் பினாமியாக செயல்படுகிறது ஆம் ஆத்மி: பா.ஜனதா

Posted: 03 Mar 2014 08:16 AM PST

ஜெய்பூரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது :- காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இரண்டுமே ஒன்றுதான். ஆம் ஆத்மி காங்கிரசின் பினாமி. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்கவே காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தது. ஆனால் டெல்லி சட்டமன்ற தோ்தலுக்குப்பின் அவர்கள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டு

லக்னோவில் மெட்ரொ ரெயில் திட்டம்: அகிலேஷ் அடிக்கல் நாட்டினார்

Posted: 03 Mar 2014 07:42 AM PST

உத்தரபிரதேச மாநிலத்தின் கனவுத்திட்டமான லக்னோ மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாகவுள்ள மெட்ரோ ரெயில் தி்ட்டத்தின் முதற்கட்டமாக, லக்னோ விமான நிலையம் முதல் முன்சிபுல்லியா வரை 23 கி.மீ. நீளமும், இரண்டாம் கட்டமாக சார்பாக் முதல் வசந்த் கன்ஞ் வரை 11 கி.மீ. நீளமும் பாதை அமைக்கப்படவுள்ளது.

பாம்பே ஹவுஸ் கட்டிடத்திற்கு கிரீன் கோல்டு அந்தஸ்து

Posted: 03 Mar 2014 07:36 AM PST

91 ஆண்டுகள் பழமையான பாம்பே ஹவுஸ் கட்டிடத்திற்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (ஐஜிபிசி), கிரீன் கோல்டு அந்தஸ்து வழங்கி கவுரவித்துள்ளது. மும்பையின் தென்பகுதியில் ரிசர்வ் வங்கி தலைமையகம் மற்றும் மும்பை பங்குச்சந்தை கட்டிடத்திற்கு அருகில் பாரம்பரியமிக்க மிலே பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 1923-ல் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™