Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


குழந்தைகளுடன் இளம்பெண் ரெயிலில் பாய்ந்து தற்கொலை

Posted: 12 Mar 2014 10:29 PM PDT

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அம்புலா மாவட்டத்தில் தகளி என்ற இடத்தை சேர்ந்தவர் பென்ராஜ் (வயது 38). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அம்புலி (32) என்ற மனைவியும், கவுரி நந்தனா (8), ஹரி நந்தனா (5) என்ற மகள்களும் இருந்தனர்

கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

Posted: 12 Mar 2014 09:51 PM PDT

கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு ஐரோப்பாவின் உயரிய அமைப்பான அசோசியேஷன் ஆப் எம்பிஏ(MBA)வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அம்பா அமைப்பின் வல்லுனர்களால் மதிப்பிடப்பட்டதன் மூலம் இந்த சர்வதேச அங்கீகாரம்

சரிதா நாயர் மீது மேலும் ஒரு மோசடி புகார்

Posted: 12 Mar 2014 09:34 PM PDT

அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்த சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி தொடர்பாக தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் சரிதாநாயர் நிதி நிறுவனம் நடத்தி பணம் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார்

கேரளாவில் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய காங். எம்.எல்.ஏ.வுக்கு அடி–உதை

Posted: 12 Mar 2014 09:28 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கூறினார்

வெறுப்புணர்வை தூண்டும்படி பேசும் தலைவர்கள் மீது வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 12 Mar 2014 09:14 PM PDT

சுப்ரீம் கோர்ட்டில், 'பிரவாசி பாலய் சங்காதன்' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், 'அரசியல் தலைவர்கள் மற்றும் மத, சமூக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இப்பேச்சுகளை ஒழுங்குபடுத்த விதிமுறை வகுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இம்மனு, நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தாங்கள் விதிமுறைகளை வகுக்க முடியாது என்று

ராஜீவ்காந்தியுடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் சோனியா-ராகுலுடன் சந்திப்பு

Posted: 12 Mar 2014 08:54 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991 அன்று வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் காவல்துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர். படுகொலை செய்யப்பட்ட 15 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் எம்.எஸ்.திரவியம், கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோர் தலைமையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர்

நாட்டில் எங்கேயும் மோடி அலை வீசவில்லை: கெஜ்ரிவால்

Posted: 12 Mar 2014 02:37 PM PDT

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விக்ரொலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :- கடந்த ஆண்டு முதலே நாட்டில் மோடி அலை வீசுவதாக கூறப்படுகிறது. நான் உத்தரபிரதேசத்திற்கு சென்றேன். ஹரியானாவுக்கும் சென்றேன். இப்போது மும்பைக்கு வந்திருக்கிறேன். எங்கேயும் மோடி அலை வீசுவதாக தெரியவில்லை. மக்களின் அதிருப்தி அலையே எங்கும் வீசுகிறது. காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க.வை கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். நாட்டில் நேர்மையான அரசியலை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். சில ஊடகங்கள் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதே ஊடகங்கள் தான் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் 4-5 சீட்கள் ம

ஆர்.எஸ்.எஸ் பற்றி காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்கிறது: அத்வானி

Posted: 12 Mar 2014 01:44 PM PDT

மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றி காங்கிரஸ் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது :- காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள சர்தார் வல்லபாய் படேல் பற்றிய புத்தகத்தில், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நாட்டின் முதல் உள்துறை மந்திரியான படேலுக்கு "உரிய அங்கீகாரம்" அளிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1948ம் ஆண்டு உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த நீண்ட மற்றும் விரிவான அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்-க்கு

அரசு இல்லத்தை காலி செய்ய கெஜ்ரிவாலுக்கு கால அவகாசம்

Posted: 12 Mar 2014 12:47 PM PDT

ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் திலக் லேனில் உள்ள அரசு இல்லத்தில் தற்போது வசித்து வருகிறார். அவர் பதவியிலிருந்த போது அங்குள்ள சி.2/23வது பிளாட் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுவாக முதல்வர் பதவியை விட்டு விலகிய பின்பு 15 நாட்கள் கருணை அவகாசம் முடியும் வரை அரசு இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். அதன் பிறகும் மந்திரிகள் அரசு இல்லத்தில் தங்க விரும்பினால் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி வாடகையை செலுத்தி (அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை) தங்கலாம். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். முறைப்படி அவர் மா

15 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி

Posted: 12 Mar 2014 12:29 PM PDT

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது, மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், மாதையன், ஞானபிரகாசம் ஆகிய 4 பேர் உள்பட, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம் காட்டி, அவர்களின் தூக்கு தண்டனையை கடந்த ஜனவரி 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பின் அடிப்படையில், ராஜீவ் கொலைக்கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையும் கடந்த மாதம் 18-ந்தேதி ரத்து செய்யப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுக்கு தடை

Posted: 12 Mar 2014 11:01 AM PDT

நாட்டின் 16வது நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நடத்தை விதிகள் அங்கு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதையடுத்து, இன்று ஜம்மு காஷ்மீர் அரசு தேர்தலுக்கான முடிவுகள் வரும் வரை உரிமம் பெற்ற ஆயுதங்களை எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளது.

சுங்கவரி கட்டத் தவறிய கெஜ்ரிவால்: குஜராத் அரசு குற்றச்சாட்டு

Posted: 12 Mar 2014 10:36 AM PDT

ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்கள் குஜராத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணி குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது, குஜராத்தில் பயணம் செய்த கெஜ்ரிவால், மூன்று இடங்களில் சுங்கவரியை செலுத்தவில்லை என்று குஜராத் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து குஜராத்தின் நிதித்துறை அமைச்சர் நிதின் பட்டேல் கூறுகையில், "கெஜ்ரிவாலும் அவருடன் வந்தவர்களும் சுங்கவரி கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். வராகி, சூரஜ்பாரி மற்றும் சமக்கியாலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வரி செலுத்த கெஜ்ரிவால் தவறிவிட்டார். அவருடன் முன்னாள் குஜராத் எம்.எல்.ஏ. கனுபாய் இருந்துள்ளார். சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களை நிறுத்தியும், அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்" என்றார்.

பாக். கட்டுப்பாட்டு மையம் தவறான தகவல்: ஏர் இந்தியா விபத்து கடைசி நிமிடத்தில் தவிர்ப்பு

Posted: 12 Mar 2014 08:56 AM PDT

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கராச்சியை நெருங்கியது. அப்போது கராச்சியின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் கொடுத்த தவறான தகவலால், துபாயிலிருந்து

பட்டப்பகலில் இளம்பெண் மானபங்கம்: 3 பேர் கைது

Posted: 12 Mar 2014 08:28 AM PDT

மும்பையில் பட்டப்பகலில் 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கள் கிழமையன்று 18 வயது இளம்பெண் தனது தோழியுடன் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்து ஹிந்துஸ்தான் நாகா பகுதியிலிருந்து

குஜராத்தின் வளர்ச்சியில் மோடியின் பங்கு இல்லை: வீரபத்ர சிங்

Posted: 12 Mar 2014 07:02 AM PDT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இமாச்சல பிரதேசத்தின் முதல் அமைச்சருமான வீரபத்ர சிங் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் ஏற்கனவே வளர்ச்சியடைந்த மாநிலம். எனவே அம்மாநில

ஆர்.எஸ்.எஸ். மீதான விமர்சனம்: ராகுலுக்கு எதிராக உ.பி. கோர்ட்டில் வழக்கு

Posted: 12 Mar 2014 06:24 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 6-ம் தேதி பிரச்சாரம் செய்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டிருப்பதாக பேசினார். அவரது இந்த கருத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேஜஸ்வினி பா.ஜ.க.வில் இணைந்தார்

Posted: 12 Mar 2014 06:12 AM PDT

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை தோற்கடித்து குறுகிய காலத்தில் புகழ்பெற்றவர் தேஜஸ்வினி ரமேஷ். காங்கிரசைச் சேர்ந்த இவர் கன்னட தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 12 Mar 2014 05:28 AM PDT

ஆம் ஆத்மி கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 56 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ் கோபடே இடம்பெற்றுள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலம் பாரமதி தொகுதியில், தேசியவாத காங்கிரஸ்

மலேசிய விமானம் மாயம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை

Posted: 12 Mar 2014 05:28 AM PDT

மலேசியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற பயணிகள் விமானம் சனிக்கிழமை அதிகாலை மாயமானது. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடியபோதும் 5 நாட்களாக அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தில் இருந்த 5 இந்திய பயணிகள் உள்ளிட்ட 239 பேரின் உறவினர்களும் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

ராகிங் கொடுமையால் காயமடைந்த கல்லூரி மாணவன் சாவு

Posted: 12 Mar 2014 05:28 AM PDT

ராகிங் கொடுமையால் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தான். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகாப் இப்ராகிம் என்ற மாணவன் பெங்களூரில் உள்ள ஆச்சாரியா தொழில்நுட்ப பாலிடெக்னிக்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™