Tamil Star |
- உன்னத பலன்களை தரும் செவ்வாழை!
- ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
- அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்
- சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் Oppo Find 7 கைப்பேசி
- மாயமான விமானம்- பிரபல வீரரின் உருவத்தில் தீவிரவாதியா?
- தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்
- பாம்பாக வளைந்து நடனத்தில் அசத்தும் சிறுமி
- யானையின் குஷியான நடனம்…. ரசிப்பதற்கு என்றே தனி கூட்டம்
- சாமியார்களுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?
- கொடூர விபத்தினால் தூக்கி வீசப்படும் பயணிகள் – தைரியமானவர்களுக்கு மட்டும்….
- பாருங்க உங்களுக்கே ரொம்ப புதுசா தெரியும்…..
- பெண்ணை வெறித்தனமாக தாக்கும் பொலிஸ்……
- புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் விமானி
- நவிபிள்ளைக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தினோம்: முஸ்லிம் காங்கிரஸ்
- இந்தியா, அமெரிக்கா சேர்ந்து நிறைய சாதிக்க முடியும்: ஒபாமா
- இலங்கையில் கொலைகளை செய்து பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்தும்அமெரிக்கா – விமல் வீரவன்ஸ
- கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண் ; அமெரிக்காவில் 20 ஆண்டு சிறை
- உக்ரேய்னில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,மேற்குலக நாடுகளின் தேவையற்ற தலையீடுகளே! – அரசாங்கம்
- 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை
- சர்வதேசம் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாமே தவிர பிள்ளையைப் பெறமுடியாது – டக்ளஸ் தேவானந்தா
| Posted: 12 Mar 2014 03:05 AM PDT பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி Posted: 12 Mar 2014 03:04 AM PDT ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் ZTE விரைவில் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. ZTE Grand S EXT எனும் இக்கைப்பேசியானது தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் முதன் முறையாக உலோகம், பிளாஸ்டிக்கினால் ஆன வெளியமைப்பைக் கொண்ட NMT (Nano Molding Technology) அறிமுகப்படுத்தப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட் Posted: 12 Mar 2014 03:03 AM PDT Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் Oppo Find 7 கைப்பேசி Posted: 12 Mar 2014 02:59 AM PDT Oppo நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Oppo Find 7 எனும் கைப்பேசியானது சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 19ம் திகதி இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இருவகையான அன்ரோயிட் சாதனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்று 1920 x 1080 Pixel Reslution உடைய FHD தொடுதிரையினைக் கொண்டதாகவும், மற்றையது 2560 x 1440 Pixel Reslution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாயமான விமானம்- பிரபல வீரரின் உருவத்தில் தீவிரவாதியா? Posted: 12 Mar 2014 02:57 AM PDT காணாமல் போன மலேசிய விமானத்தில் போலி பாஸ்போர்டில் பயணம் செய்ததாக கருதப்படும் நபரின் உருவம் கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.,370 என்ற விமானம், கோலாலம்பூரிலிருந்து கடந்த 7ம் திகதி நள்ளிரவு சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டது. 227 பயணிகள், 12 ஊழியர்கள் அடங்கிய இந்த விமானம் சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது வரை எங்கு சென்றது, என்ன ஆனது என தெரியவில்லை. தவிர இதில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் Posted: 12 Mar 2014 02:56 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டுவென்டி–20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது, நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மார்கன் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இங்கிலாந்து அணிக்கு லம்ப்(4), மொயின் அலி(5) ஏமாற்றினர், […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாம்பாக வளைந்து நடனத்தில் அசத்தும் சிறுமி Posted: 12 Mar 2014 02:52 AM PDT |
| யானையின் குஷியான நடனம்…. ரசிப்பதற்கு என்றே தனி கூட்டம் Posted: 12 Mar 2014 02:50 AM PDT |
| சாமியார்களுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? Posted: 12 Mar 2014 02:46 AM PDT |
| கொடூர விபத்தினால் தூக்கி வீசப்படும் பயணிகள் – தைரியமானவர்களுக்கு மட்டும்…. Posted: 12 Mar 2014 02:45 AM PDT |
| பாருங்க உங்களுக்கே ரொம்ப புதுசா தெரியும்….. Posted: 12 Mar 2014 02:43 AM PDT |
| பெண்ணை வெறித்தனமாக தாக்கும் பொலிஸ்…… Posted: 12 Mar 2014 02:41 AM PDT |
| புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் விமானி Posted: 12 Mar 2014 02:39 AM PDT காணாமல் போன மலேசிய விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் என இளம்பெண் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என பல கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்றவர் அப்துல் ஹமீது. இந்நிலையில் இவர் பற்றி புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவிபிள்ளைக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தினோம்: முஸ்லிம் காங்கிரஸ் Posted: 12 Mar 2014 02:35 AM PDT இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இயங்கி வரும் சில கடும்போக்குடைய அமைப்புக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் அடக்குமுறைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என அறிக்கையில் […] |
| இந்தியா, அமெரிக்கா சேர்ந்து நிறைய சாதிக்க முடியும்: ஒபாமா Posted: 12 Mar 2014 02:29 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் கொலைகளை செய்து பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்தும்அமெரிக்கா – விமல் வீரவன்ஸ Posted: 12 Mar 2014 02:19 AM PDT
இலங்கையில் கொலைகளை செய்து அதற்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த, அமெரிக்கா முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்குள் மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து அதில் தமது ஆட்களை புகுத்தி கண்டுப்பிடிக்க முடியாதபடி கொலைகளை செய்து அந்த கொலைகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த அமெரிக்க முயற்சித்து வருகிறது. பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிகாரிகளை பயன்படுத்தி அமெரிக்கா, இலங்கைக்குள் இந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள உள்ளது. மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் புலனாய்வு துறைகளுக்கு பயன்படுத்தும் கெமரா கட்டமைப்பையும், புதிய உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வெனிசூலாவை ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ள அமெரிக்க பயன்படுத்திய வேலைத்திட்டத்தை இலங்கையிலும் அந்நாடு அரங்கேற்றி வருகிறது. அதேவேளை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் வடக்கு மாகாணத்திற்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குமாறு ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு யோசனை முன்வைத்துள்ளார். பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்களிடம் தாம் துன்பப்படுவதாக ஆயர் கூறியுள்ளார். ஆயர் வெறுமனே இந்த யோசனையை முன்வைக்கவில்லை. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை. போர் குற்றங்கள் நடந்தன என்று ஜெனிவா மனித உரிமை பேரவை கூறுகிறது. வடக்கில் இராணுவம் இருக்கின்றது இதனால் தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாதவற்றை இருப்பதாக காட்டி வருகிறது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண் ; அமெரிக்காவில் 20 ஆண்டு சிறை Posted: 12 Mar 2014 02:13 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| உக்ரேய்னில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,மேற்குலக நாடுகளின் தேவையற்ற தலையீடுகளே! – அரசாங்கம் Posted: 12 Mar 2014 02:06 AM PDT
பொறுப்புணர்ச்சியற்ற மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளே உக்ரேய்னில் கலவரங்கள் ஏற்படக் காரணம் என தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டதனைப் போன்று உக்ரேய்னிலும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளை களைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் உக்ரேய்ன் மக்களிடம் கோரியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை Posted: 12 Mar 2014 02:03 AM PDT
அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கபடவில்லை. நம் நாட்டை போன்ற சட்டங்கள்தான் பின்பற்றப்படுகின்றன. அங்கு முதல் மனைவி இருக்கும்போது 2–வது திருமணம் செய்வது சட்டத்துக்கு எதிரானது. அவ்வாறு திருமணம் செய்யும் பட்சத்தில் முதல் மனைவியிடம் கணவர் அனுமதி பெறவேண்டும். அதற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்ட கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுகுறித்து அக்கவுன்சில் தலைவர் மவுலானா முகமது கான் கூறியதாவது:– இஸ்லாமிய சட்டப்படி ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம். 2–வது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை. எனவே, பாகிஸ்தான் அரசு இதுதொடர்பாக சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். இதுகுறித்து இஸ்லாமிய சட்ட மாநாட்டில் குடும்ப சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டு வர பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறோம். மேலும் திருமணம், விவாகரத்து சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேசம் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாமே தவிர பிள்ளையைப் பெறமுடியாது – டக்ளஸ் தேவானந்தா Posted: 12 Mar 2014 01:58 AM PDT
யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, 'இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் படகு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தீர்கள். இப்போராட்டம் முன்னெடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இப்பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் கலந்துகொள்வேன். அத்துடன், இப்பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுமாகவிருந்தால் நான் அங்கு செல்ல முடியாது. அவ்வாறு நான் சென்றாலும் திரும்பி வரமுடியாது. அது ஒருவழிப்பாதை என்பது உங்களுக்கு புரியும்' என்றார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீதுள்ள (ஈ.பி.டி.பி. கட்சி மீது) காழ்ப்புணர்ச்சிகளை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றன. ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் பேசப்படுகின்றன. ஐ.நா. அமர்வுக்;கு முன்னர் இலங்கையை சர்வதேசம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைகளை சர்வதேச நாடுகள் கொண்டுவரப் போகின்றன என்று கூட்டமைப்பு மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை முன்வைத்தது. அதாவது இம்முறை கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு சர்வயோக நிவாரணி என்றெல்லாம் கூட்டமைப்பு சொல்லி வந்தது. 'அழுதாலும் அவளே பிள்ளையைப் பெறவேண்டும்'. ஒரு பிள்ளையைப் பெறுவதற்கு சர்வதேசம் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாமே தவிர பிள்ளையைப் பெறமுடியாது என்ற யதார்த்தத்தை கூட்டமைப்பு புரிந்து கொள்ளவில்லை. ஜெனீவா தீர்மானத்திற்கு பின்னர் மக்கள் தங்களை தவறாக புரிந்துகொள்ளப் போகின்றார்கள் என்பதற்கான முதலைக் கண்ணீர் வடித்து சர்வதேசம் எங்களை ஏமாற்றி விட்டாதாக தற்போது தெரிவித்து வருகின்றார்கள். ஆனால், மக்களுக்கு சரியான கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை எமக்குள்ளது. எங்கள் கட்சி (ஈ.பி.டி.பி) மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் தங்களுக்கு இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார்கள். இது உண்மைக்குப் புறம்பானது பக்கச்சார்பான விடயம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எமது கட்சி தொடர்பில் வெளியான கருத்து தொடர்பில் நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சித்தோம். அத்தோடு எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களைத் தவிர நாங்கள் ஏனையவற்றை வரவேற்றதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அந்த அறிக்கையைக் கொண்டு சர்வதேச நாடுகள் எங்கள் மீது தவறான சிந்தனையைக் கொண்டுள்ளன. இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதோடு, இலங்கைக்கு வந்தபோது எமது நிலைப்பாடு தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம்;. மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் அக்கறையில்லாத சிலர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தீர்வு வழங்க வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். ஆகவே கூட்டமைப்பும் தெரிவுக்குழுவில் இணைந்து தமது கருத்தை முன்வைக்க வேண்டும்' என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














