Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இரு சக்கர வாகனங்களில் கம்யூனிஸ்ட் பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:17 PM PDT

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் சனிக்கிழமை மாலை பிரசாரம் செய்தனர். பழைய பேருந்து நிலையத்தில் இந்தப் பிரசாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

இலக்கிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 30 Mar 2014 01:16 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் எஸ். சிவசுந்தரம் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி, இலக்கியப் போட்டியில்

தருமபுரம் ஆதீன கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 30 Mar 2014 01:16 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மின்வெட்டுக்கு திமுக, அதிமுகவே காரணம்

Posted: 30 Mar 2014 01:16 PM PDT

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு திமுக, அதிமுகவே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

காரைக்காலில் போக்குவரத்து சோதனை சாவடி முற்றுகை

Posted: 30 Mar 2014 01:16 PM PDT

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையிலையில் உள்ள திருமலைராஜனாறு பாலம் பழுதாகியிருப்பதால், அதிகளவு சுமை ஏற்றி வரும் லாரிகள் அதன் வழியாக செல்லக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமென காரைக்கால் போக்குவரத்துத் துறை

அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 98 ஆயிரம் மோசடி: ஊழியர் கைது

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 98,000 மோசடி செய்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மீனவர் நலனுக்காக தனி அமைச்சரகம் உருவாக்க பாடுபடுவேன்

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

மீனவர்கள் நலன் காக்கும் வகையில், தனி அமைச்சரகம் அமைக்க பாடுபடுவேன் என்றார் நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ. பழனிச்சாமி.

கருணாநிதியிடமிருந்து அழகிரியைப் பிரிக்கமுடியாது: நடிகர் எஸ்.வி.சேகர்

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

மு.க.அழகிரியை கட்சிப் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால், கருணாநிதியின் மகன் என்ற நிலையிலிருந்து யாரும் நீக்கமுடியாது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

காவிரி, அமராவதி ஆற்றின் குறுக்கே மூன்று உயர் நிலைப்பாலம்

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

கரூர் ஒன்றியத்தில் காவிரி, அமராவதி ஆற்றின் குறுக்கே மூன்று உயர் நிலைப்பாலம் அமைக்கப்படும் என்றார் போக்குவரத்து அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

அறிவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள்

Posted: 30 Mar 2014 01:15 PM PDT

அறிவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்றார் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. ஜேம்ஸ்பிச்சை.

தோகைமலை அருகே குடிநீர் கோரி மறியல்

Posted: 30 Mar 2014 01:14 PM PDT

தோகைமலை அருகே வத்தபிள்ளையூரில் குடிநீர் கோரி இப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நில மோசடி: கணவர் வீட்டினர் மீது பெண் புகார்

Posted: 30 Mar 2014 01:14 PM PDT

நில மோசடி செய்த, தனது கணவர் வீட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண் புகார் செய்துள்ளார்.

தில்லிவரை சென்று போராடுவோம்:பாஜக கூட்டணி வேட்பாளர் பேச்சு

Posted: 30 Mar 2014 01:14 PM PDT

கரூர் மாவட்ட மக்களின் பிரச்னைக்காக தில்லி வரை சென்று போராடுவோம் என்றார் பாஜக கூட்டணி வேட்பாளர் என்.எஸ். கிருஷ்ணன்.

அடிப்படை பிரச்னை தீர்ப்பேன்: திமுக வேட்பாளர்

Posted: 30 Mar 2014 01:13 PM PDT

கரூர் பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கப்பாடுபடுவேன் என்றார் திமுக வேட்பாளர் ம. சின்னசாமி. கரூர் தொகுதியில் ஜனநாய முற்போக்கு கூட்டணி சார்பில் தாந்தோணி ஒன்றியத்துக்

அனுமதியின்றி பிரசாரம் தொடங்கிய தேமுதிகவினர்

Posted: 30 Mar 2014 01:13 PM PDT

அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் தொடங்கிய தேமுதிகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சாவு

Posted: 30 Mar 2014 01:13 PM PDT

கரூர் அருகே ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சனிக்கிழமை இரவு இறந்தார்.

தண்ணீர் பிரச்னையால் தவிக்கும் வேட்பாளர்கள்!

Posted: 30 Mar 2014 01:13 PM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையால் வேட்பாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போலிச் சான்றிதழ் மூலம்பாஸ்போர்ட் பெற முயன்றவர் மீது வழக்கு

Posted: 30 Mar 2014 01:12 PM PDT

அரியலூர் ராஜீவ்நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் பாலநிஜந்தஜனக் (21),  இவர் வெளிநாடு செல்வதற்காக திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.

ஆம் ஆத்மி இளந்தளிர் எழுச்சி இயக்க ஆலோசனை கூட்டம்

Posted: 30 Mar 2014 01:12 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஆம் ஆத்மி கட்சி இளந்தளிர் எழுச்சி இயக்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பூ. ராமலிங்கம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் முருகன் முன்னிலை வகித்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: ஜி.கே.வாசன்

Posted: 30 Mar 2014 01:12 PM PDT

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ஜயங்கொண்டத்தில் அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:12 PM PDT

சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசியை ஆதரித்து அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்திபூங்கா முன் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆராய்ச்சித் திறன் மட்டுமே அறிவை அங்கீகரிக்கும் அளவுகோல்

Posted: 30 Mar 2014 01:11 PM PDT

ஆராய்ச்சித் திறன் மட்டுமே மாணவர்களின் அறிவை அங்கீகரிக்கும் அளவுகோல் என்றார் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி மின்னணுவியல் துறைத் தலைவர் பி. நாகராஜன்.

இளம்பெண் தற்கொலை: சார் ஆட்சியர் விசாரணை

Posted: 30 Mar 2014 01:11 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி

Posted: 30 Mar 2014 01:11 PM PDT

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

கருணாநிதியின் சாதனைகளை விளக்குங்கள்

Posted: 30 Mar 2014 01:11 PM PDT

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற கருணாநிதியின் சாதனைகளையும், ஜெயலலிதாவால் அடைந்த வேதனைகளையும் விளக்கிக் கூறுங்கள் என்றார் மாநில இலக்கிய அணிச்செயலர் கவிதைப்பித்தன்.

தேசிய ஜனநாயக கூட்டணியினர் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Mar 2014 01:10 PM PDT

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், ஐ.ஜே.கே. வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்

Posted: 30 Mar 2014 01:10 PM PDT

40 தொகுதிகளிலும் முற்போக்கு ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாள

குன்றாண்டார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:10 PM PDT

  திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. குமார், கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தைச் சார்ந்த 50  -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். 

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வராத வகையில் பணியாற்ற அறிவுறுத்தல்

Posted: 30 Mar 2014 01:09 PM PDT

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் மாவட்டத் தேர்தல் அலுவலர் செ. மனோகரன்.

புதுகையில் அரசு மருத்துவக் கல்லூரி

Posted: 30 Mar 2014 01:09 PM PDT

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்.

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 30 Mar 2014 01:09 PM PDT

கந்தர்வகோட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

Posted: 30 Mar 2014 01:09 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பொன்னமராவதியில் தியாகராஜர் ஆராதனை விழா

Posted: 30 Mar 2014 01:08 PM PDT

பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகளின் 21-ம் ஆண்டு ஆராதனை விழா, தமிழிசை விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

மேலைச்சிவபுரி கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா

Posted: 30 Mar 2014 01:08 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சார்பில் நிறுவியோர் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

உசிலங்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

Posted: 30 Mar 2014 01:08 PM PDT

புதுக்கோட்டை உசிலங்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"மாணவர்கள் வேற்று மொழிகளையும் கட்டாயம் கற்க வேண்டும்'

Posted: 30 Mar 2014 01:08 PM PDT

மாணவர்கள் வேற்று மொழிகளில் ஏதாவது இரண்டை கட்டாயம் கற்க வேண்டும் என்றார் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர் டி. ராஜாராம்.

இன்று முதல் ஏப்ரல் 21 வரை நல்லகண்ணு பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:07 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்தல் பிரசாரத்தை விருதுநகரில் திங்கள்கிழமை (மார்ச் 31) தொடங்குகிறார்.

கிடைத்தது 11 ரயில்கள்...ரத்தானது 9 ரயில்கள்

Posted: 30 Mar 2014 01:07 PM PDT

தஞ்சை திமுக வேட்பாளரின் முயற்சியால் 11 ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதாகக் கூறும் நிலையில், நிரந்தரமாக ரத்துசெய்யப்பட்ட 9 ரயில் சேவைகளை மீட்க அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என

அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு

Posted: 30 Mar 2014 01:07 PM PDT

தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

6 பேரவை தொகுதியிலும் தொழிற்சாலைகள்

Posted: 30 Mar 2014 01:07 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொழிற்சாலை அமைக்க பாடுபாடுவேன் என்றார் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி.

தஞ்சையில் திமுகவுக்கு எதிராக களமிறங்கியது விவசாயிகள் சங்கம்

Posted: 30 Mar 2014 01:06 PM PDT

 தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவுக்கு எதிராக தமிழக விவசாயிகள் சங்கம் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

சேதுபாவாசத்திரத்தில் டி.ஆர். பாலு பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:06 PM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

குடந்தையில் ஆஸ்திரேலிய ஆந்தை

Posted: 30 Mar 2014 01:06 PM PDT

கும்பகோணத்தில் ஆஸ்திரேலிய ஆந்தை  பிடிபட்டது. மகாமக குளம் அருகில் பறந்துவந்த ஒரு ஆந்தை அங்குள்ள கோவில் அருகே அமர்ந்தது. தொடர்ந்து

40 தொகுதிகளிலும் வென்றிட களப் பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 30 Mar 2014 01:05 PM PDT

தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க வேண்டும்'

Posted: 30 Mar 2014 01:05 PM PDT

வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து சீரிய கண்காணிப்பில் கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என்றார் நாகை மாவட்ட தேர்தல் செலவினப் பார்வையாளர் அஜய்குமார்.

நீடாமங்கலத்தில் விழிப்புணர்வு முகாம்

Posted: 30 Mar 2014 01:05 PM PDT

திருவாரூர் மாவட்ட நேரு இளையோர் மையம், இந்திரா காந்தி மகளிர் மன்றம், நீடாமங்கலம் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு முகாமை அண்மையில் நடத்தின.

"திமுக, அதிமுகவுக்கு புதுவை மக்களிடம் வாக்கு கேட்க உரிமையில்லை

Posted: 30 Mar 2014 01:05 PM PDT

புதுவைக்கு ஆற்று மணல் கொண்டு செல்ல தடை விதித்துள்ள திமுக, அதிமுகவுக்கு புதுச்சேரி மக்களிடம் வாக்கு கேட்க உரிமை இல்லையென புதுவை பாஜக கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 30 Mar 2014 01:04 PM PDT

காரைக்கால் அருகே சனிக்கிழமை இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

"முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை'

Posted: 30 Mar 2014 01:04 PM PDT

மாணவர்களால் முடியாதது எதுவுமில்லை. முயற்சி செய்யுங்கள். முயற்சியை கைவிடாதீர்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என உலக சாதனைகளைப் படைத்தவரும், வெம்பாக்கம் ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியருமான டி.ஜெ.கோகுல்ராஜ் கூறினார்.

திமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் நிறைவேற்றம்

Posted: 30 Mar 2014 01:04 PM PDT

திமுக ஆட்சி பொற்காலம் போன்றது. அப்போது மக்களுக்கான நலத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன என முன்னாள் அமைச்சரும், திமுக தணிக்கைக் குழு உறுப்பினருமான கு.

கணிதப் பயன்பாடு கருத்தரங்கம்

Posted: 30 Mar 2014 01:03 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சார்பில், "நவீன உலகில் கணிதத்தின் பயன்பாடு' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

திருக்குறள் எழுதும் விழா

Posted: 30 Mar 2014 01:03 PM PDT

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கவிஞர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமயநெறி ஆசிரியர் சீனிவாச வரதன்

ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted: 30 Mar 2014 01:03 PM PDT

1,2ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான 10 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் போளூர் வட்டார வள மையத்தில் அண்மையில் நிறைவடைந்தது.

வேன்கள் மோதல்:12 பேர் காயம்

Posted: 30 Mar 2014 01:02 PM PDT

வந்தவாசி அருகே வேன்கள் மோதிக் கொண்டதில், 12 பேர் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(47). இவர் தனது தங்கைக்கு மாப்பிள்

146 பேருக்கு பணி நியமன உத்தரவு

Posted: 30 Mar 2014 01:02 PM PDT

தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் தேர்வு பெற்ற 146 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 30 Mar 2014 01:02 PM PDT

பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வந்தவாசி வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

தொப்பி, டி-ஷர்ட்களில் சின்னங்கள்

Posted: 30 Mar 2014 01:02 PM PDT

ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் விதத்தில் தொப்பி, ஸ்டிக்கர் பொட்டு, பிரேஸ்லெட், பேட்ஜ், முகமூடி சேலை, டி-சர்ட் ஆகியவற்றில் தங்கள் கட்சியின் சின்னம் மற்றும் வாசகங்களை பதிவு செய்து காங்கிரஸூம், பாஜகவும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.

அதிமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 30 Mar 2014 01:02 PM PDT

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில், செங்கம் புதிய பஸ் நிலையம், போளூர் சாலை, கண்ணக்குருக்கை ஆகிய 3

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புத் தேதியில் மாற்றம்

Posted: 30 Mar 2014 01:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் நேரில் புகார் தெரிவிக்கலாம்

Posted: 30 Mar 2014 01:01 PM PDT

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் செலவினங்களைப் பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள 4 அதிகாரிகளை, பொதுமக்கள் நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாமக வேட்பாளர் வாக்குறுதி

Posted: 30 Mar 2014 01:01 PM PDT

 என்னை வெற்றி பெறச் செய்தால் அனைத்துப் பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட கருவியைப் பொருத்தி சுத்தமான குடிநீரை வழங்குவேன் என ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி

ஜம்மு-காஷ்மீர்: முன்னாள் எம்.பி. உள்பட 48 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

Posted: 30 Mar 2014 01:01 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் எம்.பி. உள்பட தகுதியற்ற 48 வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

எம்.பி.ஏ. மாணவர்களுக்கான நேர்காணல்

Posted: 30 Mar 2014 01:01 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.

நாய்கள் கடித்த 2 மான்கள் சாவு

Posted: 30 Mar 2014 01:00 PM PDT

திருவண்ணாமலை அருகே நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த 2 மான்கள் இறந்தன. கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மற்றொரு மான் காட்டில் விடப்பட்டது.

அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

Posted: 30 Mar 2014 01:00 PM PDT

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் சனிக்கிழமை இரவு திருடு போயின. இங்குள்ள சங்கவி நகரைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (38). இவர் தனது தாய் சகுந்தலாவுடன் வசித்து

பத்திரிகையாளர்களுக்கு பணம்: "அறியாமல் நிகழ்ந்த தவறு' - காங்கிரஸ்

Posted: 30 Mar 2014 01:00 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது அறியாமல் செய்த தவறு என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சேகரியுங்கள்

Posted: 30 Mar 2014 12:59 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளரும், ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பிரசார வேன் சேதம்: பாமக பிரமுகர் கைது

Posted: 30 Mar 2014 12:59 PM PDT

செய்யாறு அருகே அதிமுக பிரசார வேனை அடித்து சேதப்படுததியதாக, பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

"திமுக கூட்டணி வலுவாக உள்ளது'

Posted: 30 Mar 2014 12:59 PM PDT

திமுக வலுவான கூட்டணியாக உள்ளது என்று திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு கூறினார்.

பி.சி.சர்க்காருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 30 Mar 2014 12:58 PM PDT

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இழிவாகப் பேசியதாக, பாஜக வேட்பாளரும், மேஜிக் நிபுணருமான பி.சி.சர்க்காருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தஞ்சாவூர்

Posted: 30 Mar 2014 12:58 PM PDT

புதுக்கோட்டை

Posted: 30 Mar 2014 12:58 PM PDT

"ஊழலை ஒழிக்க உறுதியேற்க வேண்டும்'

Posted: 30 Mar 2014 12:57 PM PDT

"இரட்டை வாக்கு அளியுங்கள்' என மத்திய அமைச்சர் சரத் பவார் கூறிய கருத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் ஊழலுக்கு இடம் தராமல் மக்கள் நலனில் அக்கறையுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

"நோட்டா'வை பயன்படுத்துவோம்: உ.பி. அரசு ஊழியர்கள் எச்சரிக்கை

Posted: 30 Mar 2014 12:56 PM PDT

ஓய்வூதியம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மக்களவைத் தேர்தலில் "நோட்டா' வசதியினைப் பயன்படுத்துவோம் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

வேட்பாளர்களைக் கலங்கடிக்கும் பெயர்க்குழப்பம்!

Posted: 30 Mar 2014 12:55 PM PDT

பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்பார்கள். ஆனால் கேரளத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 30 வேட்பாளர்கள் அப்படி அலட்சியமாகக் கேட்க மாட்டார்கள்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உ.பி. முதல்வர் மீது செருப்பு வீச்சு

Posted: 30 Mar 2014 12:52 PM PDT

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசியதாக 25 வயது இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை: ஏ.கே.அந்தோனி

Posted: 30 Mar 2014 12:43 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும், மதச்சார்பற்ற அரசை அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயற்சிக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.

சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் மீது நடவடிக்கை

Posted: 30 Mar 2014 12:42 PM PDT

""பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்'' என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் மீது நிலுவையில் 5 வழக்குகள்

Posted: 30 Mar 2014 12:41 PM PDT

மோடிக்கு மிரட்டல் விடுத்த சஹாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் (43) மீது பல்வேறு நீதிமன்றங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 லட்சம் ராணுவ வீரர்கள்

Posted: 30 Mar 2014 12:40 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

குவாலியர் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி சேதம்: அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதிக்க முடிவு

Posted: 30 Mar 2014 12:39 PM PDT

குவாலியர் அருகே விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையைச் சேர்ந்த சி-130 ஜே விமானத்தின் கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளதால், அதை அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முசாஃபர்நகர் தொகுதியில் 7 பேர் "டம்மி' வேட்பாளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 30 Mar 2014 12:38 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் தொகுதியில் மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்ட 7 சுயேச்சை வேட்பாளர்களை "மாற்று' வேட்பாளர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிடில் நக்வி மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted: 30 Mar 2014 12:37 PM PDT

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பட்கலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் முக்தார் அப்பாஸ் நக்வி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஷபீர் அலி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு அதீத முக்கியத்துவம்

Posted: 30 Mar 2014 12:36 PM PDT

பாஜகவில் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பேச்சில் மட்டும் வீரம் காட்டுகிறது பாஜக

Posted: 30 Mar 2014 12:34 PM PDT

""பெரிதாகப் பேசுவது ஒன்றையே பாஜக தலைவர்கள் செய்து வருகிறார்கள்'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுவிப்போம்

Posted: 30 Mar 2014 12:33 PM PDT

"காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுவிப்போம்' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூட்டநெரிசலால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதி

Posted: 30 Mar 2014 12:32 PM PDT

மதுராந்தகத்தில் நடைபெறும் வாரச்சந்தையால் கூட்டநெரிசலில் சிக்கி அரசு பொதுமருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழக முதல்வருக்கும் மக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை

Posted: 30 Mar 2014 12:32 PM PDT

தமிழகத்தில் முதல்வருக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பல், வாய் நோய்கள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்சமூக சேவகர்களுக்கான பாராட்டு விழா

Posted: 30 Mar 2014 12:31 PM PDT

செங்குன்றத்தை அடுத்த ஐ.சி.எப். கம்பர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமூக சேவர்களுக்கான பாராட்டு விழாவில் நீதியரசர்கள் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க தையல் கலைஞர்கள் சங்கம் முடிவு

Posted: 30 Mar 2014 12:31 PM PDT

தக்கலையில் நடைபெற்ற தையல் கலைஞர்கள் சங்கக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி.பெல்லார்மினை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது.

விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு

Posted: 30 Mar 2014 12:30 PM PDT

கொல்லங்கோடு அருகே விஷம் குடித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். சாத்தன்கோடு, காரிவிளையைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி சுதா (35). சுதாவின் தம்பி விஜில்குமார்

பத்மநாபபுரம் பகுதிகளில் அதிமுகவினர் பிரசாரம்

Posted: 30 Mar 2014 12:30 PM PDT

பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட அழகியமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு யாகம்

Posted: 30 Mar 2014 12:30 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிமுக  வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு யாகம் நடைபெற்றது.

களக்காடு அருகே மாதா ஆலயத்தில் திருட்டு

Posted: 30 Mar 2014 12:29 PM PDT

களக்காடு அருகே மாதா ஆலயத்தில் 4 கிராம் தங்கம், உண்டியல் பணம் திருடுபோனது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்

சுரண்டையில் தர்மப் பெருந்திருவிழா

Posted: 30 Mar 2014 12:29 PM PDT

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதர் பதியில் பங்குனி மாத தர்மப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியதாழையில் புஷ்பராயன் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Mar 2014 12:29 PM PDT

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் சவேரியார் ஆலயத்தில் பிரார்த்தனை

Posted: 30 Mar 2014 12:29 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்துநடிகை சி.ஆர். சரஸ்வதி பிரசாரம்

Posted: 30 Mar 2014 12:28 PM PDT

: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கத்தை ஆதரித்து, களியக்காவிளையில் நடிகை சி.ஆர். சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்

பாஜக மதவாத கட்சி அல்ல

Posted: 30 Mar 2014 12:28 PM PDT

பாஜக மதவாத கட்சி அல்ல என அக்கட்சியின் மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்காத மக்கள் பிரதிநிதிகள்!

Posted: 30 Mar 2014 12:28 PM PDT

குமரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்வராததால் இத்தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™