மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராஜஸ்தானில் 4 இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது
- கிரண்குமார் ரெட்டியின் புதிய கட்சி காலியாகிறது
- ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் நடிகர் பரேஷ் ராவல் போட்டி
- பா.ஜனதா – தெலுங்குதேசம் கூட்டணி இன்று முடிவாகிறது
- பாராளுமன்ற தேர்தல்: கேரளாவில் 296 வேட்பாளர்கள் மனுதாக்கல்
- காங்கிரசிடம் விலை போய் விட்டாய் சிரஞ்சீவி: கூட்டத்தில் தொண்டர் ஆவேச கூச்சல்
- மோடிக்கு சாதகமாக எந்த அலையும் வீசவில்லை: ஹசாரே
- பா.ஜனதா போலிகள் வசம்: ஜஸ்வந்த்சிங் கருத்து
- ஜஸ்வந்த் சிங் விவகாரம் காயத்தை ஏற்படுத்தி விட்டது: சுஷ்மா
- தெலுங்கு மக்கள் ஒருநாள் ஒன்றிணைவார்கள்: கிரண்குமார் ரெட்டி
- பாதுகாப்பு விதிமுறை மீறல்: ரிலையன்ஸ் வர்த்தக விமானத்தை இயக்க தடை
- 93 தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது
- கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிகாரமற்றது: சிபல்
- ஒடிசாவில் பக்கத்து வீட்டுக்காரரை கொன்றவருக்கு மரண தண்டனை
- தானே அருகே டேங்கர் லாரி வெடித்ததில் 7 பேர் பலி
- மத்திய பிரதேசத்தில் பழங்குடி பெண்களுடன் ராகுல் கலந்துரையாடல்
- ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. என்.கே.சிங் பா.ஜனதாவில் இணைந்தார்
- அரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம்: காங்கிரஸ், பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு
- அடுத்த நிதியாண்டில் 60 கிளைகளை திறக்க மகிளா வங்கி திட்டம்
- மும்பை ரெயிலில் பெண் வியாபாரி குத்திக்கொலை
| ராஜஸ்தானில் 4 இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது Posted: 22 Mar 2014 10:43 PM PDT ராஜஸ்தானில் இந்திய முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த 4 பயங்கர தீவிரவாதிகளை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர |
| கிரண்குமார் ரெட்டியின் புதிய கட்சி காலியாகிறது Posted: 22 Mar 2014 10:35 PM PDT தெலுங்கானா விவகாரத்தால் காங்கிரசில் இருந்து விலகிய ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ''ஜெய் சமக்காந்திரா'' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவரது கட்சியில் காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள் பலர் சேர்ந்தனர். ஆனால், தற்போது ஒவ்வொருவராக அக்கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். ஏற்கனவே காங்கிரசில் எம்.பி.யாக இருந்த சாம் பசிவராவ் தெலுங்கு தேசம் |
| ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் நடிகர் பரேஷ் ராவல் போட்டி Posted: 22 Mar 2014 10:29 PM PDT ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் அத்வானி ஆதரவாளரான ஹரின் பதக்குக்கு டிக்கெட் மறுக்கப்பட்டு நடிகர் பரேஷ் ராவல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அதை கட்சியின் தேர்தல் கமிட்டி ஏற்கவில்லை. மீண்டும் காந்திநகர் தொகுதி வேட்பாளராகவே அத்வானி அறிவிக்கப்பட்டார். நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கும், அத்வானிக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. |
| பா.ஜனதா – தெலுங்குதேசம் கூட்டணி இன்று முடிவாகிறது Posted: 22 Mar 2014 10:26 PM PDT தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட 5 கட்சிகளுடன் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதேபோல் ஆந்திராவிலும் வலுவான கூட்டணியை அமைக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. பாரதீய ஜனதா கூட்டணியில் சேர சந்திரபாபுநாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர். |
| பாராளுமன்ற தேர்தல்: கேரளாவில் 296 வேட்பாளர்கள் மனுதாக்கல் Posted: 22 Mar 2014 10:22 PM PDT கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக் கான தேர்தல் வருகிற ஏப்ரல் 10–ந்தேதி நடக்கிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15–ந்தேதி தொடங்கியது. கேரளாவில் இந்த முறை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய |
| காங்கிரசிடம் விலை போய் விட்டாய் சிரஞ்சீவி: கூட்டத்தில் தொண்டர் ஆவேச கூச்சல் Posted: 22 Mar 2014 10:20 PM PDT மத்திய மந்திரி நடிகர் சிரஞ்சீவி ஆந்திர மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் சரிந்து கிடக்கும் காங்கிரசின் செல்வாக்கை தூக்கி நிறுத்த அவர் பஸ் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். ஆனால் அவரது பேச்சை கேட்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. பொதுக் கூட்டங்களில் கூட இருக்கைகள் காலியாக கிடக்கிறது. |
| மோடிக்கு சாதகமாக எந்த அலையும் வீசவில்லை: ஹசாரே Posted: 22 Mar 2014 08:38 PM PDT பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அன்னா ஹசாரே ' மோடிக்கு சாதகமாக எந்த அலையும் வீசவில்லை. உண்மையான காட்சி தேர்தல் முடிவுக்கு பின்னரே தெளிவாகும்' என்று தெரிவித்தார். எத்தகைய நிலையான முன்னேற்றத்தையும் மோடி ஏற்படுத்திவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க நாங்கள் தான் தகுதியானவர்கள் என்று இதுவரை எந்த அரசியல் கட்சியும் நிரூபித்ததில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். |
| பா.ஜனதா போலிகள் வசம்: ஜஸ்வந்த்சிங் கருத்து Posted: 22 Mar 2014 04:05 PM PDT பா.ஜனதா கட்சி போலிகள் வசம் போய்விட்டது என்று ஜஸ்வந்த்சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பார்மரில் போட்டியிட விரும்பிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அந்த கட்சி வாய்ப்பு மறுத்து விட்டது. மாறாக, சமீபத்தில் காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்கு தாவிய கர்னல் சோனாராம் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளர் என கருதப்படுகிற ஜஸ்வந்த்சிங்குக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகி, பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஜோத்பூரில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி |
| ஜஸ்வந்த் சிங் விவகாரம் காயத்தை ஏற்படுத்தி விட்டது: சுஷ்மா Posted: 22 Mar 2014 12:27 PM PDT மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கட்சியின் மூத்த தலைவர்களும் இது குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறுகையில் முத்த தலைவரான ஜஸ்வந்திற்கு சீட் கொடுக்காதது எனக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இது கட்சி மேலிடம் எடுத்த முடிவாகும். |
| தெலுங்கு மக்கள் ஒருநாள் ஒன்றிணைவார்கள்: கிரண்குமார் ரெட்டி Posted: 22 Mar 2014 11:01 AM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கிரண்குமார் ரெட்டி, ஜெய் சமைக்யாந்திரா என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இந்நிலையில், விஜயவாடாவில் நடந்த பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் பேசிய கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு மக்கள் மீண்டும் ஒருநாள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் உரிமைக்காக போராடவும் கட்சி தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். |
| பாதுகாப்பு விதிமுறை மீறல்: ரிலையன்ஸ் வர்த்தக விமானத்தை இயக்க தடை Posted: 22 Mar 2014 10:06 AM PDT இந்திய விமானங்களின் பாதுகாப்பு விதிமுறைகளைத் தீவிரமாகப் பரிசீலித்துவரும் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் (டிஜிசிஏ), காலாவதியான பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருந்ததாலும், விமானியின் கையில் அவரது ஓட்டுனர் உரிமம் இல்லாததாலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக விமானம் ஒன்றை இன்று தரையிறக்கியது. அந்த விமானத்தின் விமானியும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 14 இருக்கைகளைக் கொண்ட பால்கன் 900 ஈஎக்ஸ் என்ற அந்த |
| 93 தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது Posted: 22 Mar 2014 09:04 AM PDT மக்களவைத் தேர்தலுக்கு 9 கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், மராட்டியம் (10), கேரளா (10), ஒடிசா (10), உத்தர பிரதேசம் (10). டெல்லி, (7) உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 93 தொகுதிக்கான 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10-ந் தேதி நடக்க இருக்கிறது. |
| கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிகாரமற்றது: சிபல் Posted: 22 Mar 2014 08:53 AM PDT குஜராத் கலவர வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இன்று கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊழல் வழக்குகளை கண்காணிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று, குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில், சுதந்திரமான ஒரு அமைப்பின் |
| ஒடிசாவில் பக்கத்து வீட்டுக்காரரை கொன்றவருக்கு மரண தண்டனை Posted: 22 Mar 2014 08:33 AM PDT ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு வருடத்திற்கு முன் நடந்த கொலையில் ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டம் நராரிபூரில் வசித்து வருபவர் நிரஞ்சன் சிங். இவரது மனைவி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சுதம் மாலிக் என்பவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். |
| தானே அருகே டேங்கர் லாரி வெடித்ததில் 7 பேர் பலி Posted: 22 Mar 2014 07:13 AM PDT மகாராஷ்டிர மாநிலம் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் தானே அருகில் இன்று பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது. அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு அந்த டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. சாவோரி சோதனைச் சாவடி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து |
| மத்திய பிரதேசத்தில் பழங்குடி பெண்களுடன் ராகுல் கலந்துரையாடல் Posted: 22 Mar 2014 05:41 AM PDT மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பழங்குடி பெண்களுடன் கலந்துரையாடினார். |
| ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. என்.கே.சிங் பா.ஜனதாவில் இணைந்தார் Posted: 22 Mar 2014 05:24 AM PDT பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான என்.கே.சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார். ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததால் நிதிஷ்குமார் மீது |
| அரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம்: காங்கிரஸ், பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு Posted: 22 Mar 2014 03:58 AM PDT அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை பன்மடங்கு அதிகரிக்கும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "மத்திய அரசு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து கேஸ் விலையை உயர்த்த அனுமதிக்க கூடாது. இதுதொடர்பான எனது புகாரை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. |
| அடுத்த நிதியாண்டில் 60 கிளைகளை திறக்க மகிளா வங்கி திட்டம் Posted: 22 Mar 2014 03:34 AM PDT நாட்டின் முதல் மகளிர் வங்கியான பாரதிய மகிளா வங்கி, இன்று ஐதராபாத்தில் தனது 19-வது கிளையை திறந்தது. அடுத்த நிதியாண்டில் 55 முதல் 60 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் உஷா அனந்தசுப்பிரமணியன் கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் 23-24 கிளைகள் திறக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மேலும் 55 முதல் 60 கிளைகள் திறக்கப்படும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, திட்டமிடப்பட்டள்ள 80 கிளைகளில் 20 கிளைகள் கிராமப்புறங்களில் திறக்கப்படும்" என்றார். |
| மும்பை ரெயிலில் பெண் வியாபாரி குத்திக்கொலை Posted: 22 Mar 2014 02:49 AM PDT மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் புறப்பட்ட ரெயிலில் பங்கா அந்தர் என்ற பெண் வியாபாரி காய்கறிகளை ஏற்றினார். அந்த ரெயில் புறப்பட்டபோது, காய்கறி ஏற்றப்பட்டிருந்த பெட்டிக்குள் ஏறிய மர்ம நபர்கள், பெண் வியாபாரியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர். அவரது கதறல் சத்தம் ரெயில் டிரைவருக்கு கேட்டுள்ளது. பின்னர் அந்த ரெயில் வசாய் ரெயில் நிலையத்தில் நின்றபோது, கொலையாளிகள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய பங்கா அந்தர், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |