Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


யுக்ரைனில் ரஷ்ய தலையீட்டை ஆதரிக்கும் இலங்கையின் இரட்டை நிலைப்பாடு

Posted: 22 Mar 2014 04:15 AM PDT

flag_russia

flag_russiaயுக்ரைன் நெருக்கடி தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சு அண்மையில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

உலக நாடுகள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்களுடன் செயற்படும் போது ஜனநாயகத்தை மதித்து செயற்பட வேண்டும் என்பதே இலங்கையின் கொள்கை.

இதனால் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவ்ச் அரசியல் அமைப்புக்கு விரோதமாக அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை இலங்கை ஏற்கவில்லை.

யுக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டு வர ரஷ்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என அந்த அறிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

யுக்ரைனில் என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்நாட்டு ஜனாதிபதியின் தன்னிச்சையான ஆட்சியை கவிழ்க்க வீதியில் இறங்கி, அந்நாட்டு மக்கள் போராடியதால் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

அவர் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், அவர் மக்களின் பணத்தை பயன்படுத்தி வாழ்ந்து வந்த ஆடம்பர வாழ்க்கை குறித்தும், அரசியல் அமைப்புக்கு முரணான அவரது தன்னிச்சையான ஆட்சி பற்றியும் பல தகவல்கள் வெளியாகின.

யனுகோவ்ச் மக்களின் ஆணையில் ஆட்சிப் பீடம் ஏறி, அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இவரும் உலகில் ஏனைய தன்னிச்சையான ஆட்சியாளர்கள் வர்க்கத்தின் ஒருவரே அன்றி மாறுப்பட்டவர் அல்ல. இப்படியான ஒருவரை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது ஜனநாயக ரீதியில் சிறந்த விடயமாகும்.

யனுகோவிச் ஒரு ரஷ்ய ஆதரவாளர். விக்டர் யனுகோவ்ச் என்ற தனது ஆதரவாளன் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதும் ரஷ்யா, யுக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயாவுக்கு தனது ஆயுதப்படைகளை அனுப்பியது.

கிரிமீயாவில் உள்ள சனத் தொகையில் 58 வீதமானவர்கள் ரஷ்யர்கள் என்றும் அவர்களின் பாதுகாப்பு என்பது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்றும் கூறி தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா நியாயப்படுத்தியது.

கிரிமீயாவுக்கு படைகளை அனுப்பியது மட்டுமல்லாது, அந்த பிராந்திய நாடாளுமன்றத்தின் ஊடாக யோசனை ஒன்றை கொண்டு வந்து அதனை தன்னுடன் இணைந்து கொள்ள ரஷ்யா நடவடிக்கை எடுத்தது.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனையை கிரிமீயா மக்கள் ஊடாக அங்கீகாரத்தை பெற சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது.

இலங்கை அரசாங்கம், ரஷ்யாவின் நடவடிக்கைகளை அங்கீகரித்தன் மூலம் ரஷயா படைகள் கிரிமீயாவுக்குள் சென்றுள்ளதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் இலங்கை ரஷ்யாவின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்பு என்று கூறி இலங்கை சர்வதேசத்திடம் இதுவரை புரிந்து வந்த தர்க்கம் உடைப்பட்டு போயுள்ளது.

முக்கியமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தலையீடு இருக்கக் கூடாது என இலங்கை கூறி வருகிறது.

இப்படியான தலையீடு இலங்கையின் இறையாண்மையில் தேவையின்றி தலையீடு செய்வதாகும் எனவும் இலங்கையின் பிரச்சினையை இலங்கைக்குள் தீர்த்து கொள்ள இடமளிக்க வேண்டும் எனவும் இலங்கை கூறிவருகிறது.

இலங்கையின் இந்த தர்க்கத்தை யுக்ரைன் தொடர்பான பிரச்சினையில் முன்வைத்தால், யுக்ரைன் மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடி அவரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை.

கிரிமீய என்பது யுக்ரைனின் பகுதியான குடா நாடு. கிரிமீயாவில் உள்ள பெருபான்மை ரஷ்யர்களின் நலனை கவனத்தில் கொண்டு ரஷ்யா அங்கு நுழைவது என்பது யுக்ரைனின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுவதாகும்.

இலங்கை ஒரு புறம் தனது இறையாண்மை பற்றி பேசிக்கொண்டு, அந்த நிகழ்ச்சி நிரலுக்கு முற்றும் முழுதும் புறம்பாக செயற்படும் ரஷ்யாவுடன் ஓரணியில் இருந்து கொண்டு இலங்கை வெளிக்காட்டும் வெளிநாட்டுக் கொள்கை என்பது என்ன?

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பானின் குஜி துறைமுகத்தினை புரட்டி எடுத்த மினி சுனாமி..

Posted: 22 Mar 2014 04:09 AM PDT

kuji_tsunami_001.w245

kuji_tsunami_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே ஒரு பட்டனை அழுத்தியதால் போர்க்களமாக மாறிய இடம்…

Posted: 22 Mar 2014 04:06 AM PDT

drama_001.w245

drama_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த குடிமகனின் குத்தாட்டத்தில் கிளைமேக்ஸ்ல ஒரு சுவாரஷ்யம் இருக்குது…..

Posted: 22 Mar 2014 04:04 AM PDT

drink_man_001.w245

drink_man_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

தற்பாதுகாப்பு கலையில் இருக்கும் நுட்பத்தைப் பார்த்தீர்களா?.

Posted: 22 Mar 2014 03:56 AM PDT

self_safe_001.w245

self_safe_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் இப்படி தனியே சிக்கிறாதீங்க….. அப்புறம் அம்பேல் தான்!…

Posted: 22 Mar 2014 03:51 AM PDT

two_wheeler_001.w245

two_wheeler_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

உணவிற்காக படி ஏறும் மீன்களின் கண்கொள்ளாக் காட்சி!….

Posted: 22 Mar 2014 03:48 AM PDT

fish_step_001.w245

fish_step_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விரும்பம்: ஹசன் அலி

Posted: 22 Mar 2014 03:43 AM PDT

நீண்டகாலமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துள்ள போதும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை இன்னும் தீர்க்கவில்லை. இந்த நிலையில் […]

“பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்” மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப்

Posted: 22 Mar 2014 03:38 AM PDT

பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை. இருட்டுக்குள் செய்யும் […]

பாகிஸ்தானை வென்றது இந்தியா

Posted: 22 Mar 2014 03:34 AM PDT

டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 131 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவாண் மற்றும் ரோஹித் சர்மா ஆடினர். சில பவுண்டரிகள் அடித்தாலும் ஷிகர் தவாண் தடுமாற்றத்துடனே காணப்பட்டார். உமர் குல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்த தவாண் அடுத்த பந்திலேயே அஜ்மலிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களுக்கு வெளியேறினார். முதல் சில […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது: சி.வி விக்னேஸ்வரன்

Posted: 22 Mar 2014 03:28 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாரா சிங்குக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது. ஐபிஎல் 6வது சீசனில் சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, இது தொடர்பான வழக்கை மும்பை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். சூதாட்டம் தொடர்பாக மெய்யப்பன், தாரா சிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அந்த உரையாடல் பதிவுகளையும், அவர்களுடைய குரல் மாதிரிகளையும் தடயவியல் துறையினர் ஆராய்ந்து அறிக்கை அளித்தனர். அறிக்கையில், மெய்யப்பன்- தாராசிங் குரல் மாதிரிகளுடன், தொலைபேசி […]

மிஸ்ராவை பாராட்டிய டோனி

Posted: 22 Mar 2014 03:26 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மிஸ்ராவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என அணித்தலைவர் டோனி பாராட்டியுள்ளார். வங்கதேசத்தில் டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டிகள் நடந்து வருகிறது, நேற்றுடன் தகுதி சுற்று முடிந்து சூப்பர்-10 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 9 பந்து எஞ்சி இருந்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவொன்றை விலைக்கு வாங்கிய ஜனாதிபதி மஹிந்த!

Posted: 22 Mar 2014 03:24 AM PDT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் இருப்பதாகவும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றை ஜனாதிபதி கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய […]

லட்சம் கோடி வாசனைகளை தரம் பிரிக்கும் மனிதன்: ஆய்வில் தகவல்

Posted: 22 Mar 2014 03:23 AM PDT

மனிதர்களின் கண்பார்வை 10 லட்சத்துக்கு அதிகமான நிறங்களை தரம் பிரித்து அடையாளம் காண முடியும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழமானது, 26 தன்னார்வலர்களிடம் 128 வாசனாதி பொருட்களின் கலவையுடன் கூடிய 264 நறுமண மாதிரிகளை முகர்ந்து, தரம் பிரித்து அடையாளம் காட்டும்படி சோதனை நடத்தியுள்ளது. நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், காதுகளால் 3 லட்சத்து 40 ஆயிரம் வகை ஒலிகளை வேறுபடுத்தி அறிய முடியும் என்று தெரியவந்துள்ளது. இந்த வாசனைகளை நினைவுபடுத்தி கூற யாரும் அதிக […]

This posting includes an audio/video/photo media file: Download Now

துருக்கியில் டுவிட்டர் இணையத்தள பாவனைக்கு தடை

Posted: 22 Mar 2014 03:18 AM PDT

பிரபலமான சமூக இணையத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் தளமானது துருக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை துருக்கியின் பிரதமர் Recep Erdogan உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஒன்லைன் இணையத்தளங்களூடாக ஊழல், மற்றும் ரகசிய தகவல்கள் பரவுதல் போன்றவற்றினை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை துருக்கியில் மட்டும் டுவிட்டர் இணையத்தளம் 10 மில்லியன் வரையான பயனர்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் உறுப்பு நாடுகளே அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டும்: பான் கீ மூன்

Posted: 22 Mar 2014 03:15 AM PDT

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கையை உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்றைய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பான் கீ மூனின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் இலங்கை மீது சுமத்தப்பட்;டுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக்கூறல் என்ற நிலைப்பாட்டில் பான் கீ மூன் தொடர்ந்தும் இருப்பதாக ஹக் […]

iPhone 4 இற்கான iOS 7.1 Jailbroke செய்யப்பட்டது

Posted: 22 Mar 2014 03:14 AM PDT

அப்பிளின் இயங்குதளங்களில் உள்ள சில அப்பிளிக்கேஷன்களை நீக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல் Jailbroke எனப்படும். இதற்கு முதல் iPhone 4 இனை அடிப்படையாகக் கொண்டு iOS 7 இயங்குதளம் Jailbroke செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது iPhone 4 இற்கான iOS 7.1 இயங்குதளமும் Jailbroke செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது A4 Processor இனைக் கொண்ட சாதனங்களிலேயே இயங்குவதுடன் நான்காம் தலைமுறை iPod Touch மற்றும் iPad என்பவற்றிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.

தமிழ் மக்களை மீண்டும் அச்சுறுத்தும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் – செல்வரட்னம் சிறிதரன்

Posted: 22 Mar 2014 03:13 AM PDT

இலங்கையில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதியும் சமாதானமும், நல்லிணக்கத்துடன் கூடிய ஐக்கியமும் நிலவும் என்று ஜனநாயகவாதிகள் பேராவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இனப்பிரச்சினைக்கு தாராள சிந்தையுடன் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்துத் தங்களுடைய அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் உண்மையான போர்க்கால கஸ்டங்களையும், அரசாங்கத்தின் நெருக்குதல்களையும் விலக்குவார் என்று நம்பினார்கள். இலங்கையின் உண்மையான ஓர் […]

பால்டிக்யாவுக்கு போர் விமானங்களை அனுப்பும் பிரான்ஸ்

Posted: 22 Mar 2014 01:18 AM PDT

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொள்ளுவது தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கான விமானக் கண்காணிப்பிற்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக பிரான்ஸ் நேற்று தெரிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளான எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு தற்போது விஜயம் செய்துவரும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யுவெஸ் லீ டிரியன் விமான ரோந்துக்கு உதவுவதான இந்தத் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டனில் பெருமளவில் போர்க்குற்றவாளிகள்

Posted: 22 Mar 2014 01:16 AM PDT

பிரிட்டனில் இருக்கக்கூடிய போர்க்குற்றவாளிகளின் அதிகாரபூர்வமான எண்ணிக்கை, குறைவானதாக இருக்கலாம் என பிரிட்டனின் குடிவரவு விடயங்களைக் கையாளும் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் கூறியிருக்கிறார். பிரிட்டனில் இருக்கக் கூடிய போர்க்குற்றவாளிகளின் உண்மையான எண்ணிக்கையை அறிவதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமோ, அந்த முக்கியத்துவம் அந்த விவகாரத்துக்கு கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குனரான பிரையன் மோர் அவர்கள், பிபிசியின் ரேடியோ 4 வானொலிக்கு பேசுகையில், தமது போர்க்குற்ற நடவடிக்கைகள் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™