ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -105)
- மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!
- குக்கூ: திரை விமர்சனம்
- மருத்துவப் பழமொழிகள்
- தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
- என் எண்ணங்கள் - சிவா
- நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
- ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
- E-Tweets
- அம்மம்மா பிரச்சாரம்
- சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம்
- 40,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
- தமீம்-டேலி பயிற்சி பாடம்
- 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ்
- 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!
- லிங்கம் என்றால் என்ன ?
- கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!
- கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி
- மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா
- இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?
- கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி
- எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை
- மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார்
- இந்த வார திரைச் செய்திகள்
- பாராட்ட பட வேண்டிய விஷயம்
- எக்ஸ்பி - லினக்ஸ்
- அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு
- அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
- மார்ச் 24: உலக காசநோய் தினம்
- பகத் சிங்கின் இறுதி நாள்
- திருவாலங்காட்டு அம்மை எனும் காரைக்கால் அம்மையார்!
- தமிழ் டி-சர்ட் அணிவோம்!
- சோட்டா பீம் தரவிறக்கம் தேவை
- நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்!
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -105) Posted: 24 Mar 2014 01:10 PM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு! Posted: 24 Mar 2014 01:09 PM PDT கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக ... |
| Posted: 24 Mar 2014 01:06 PM PDT நகைச்சுவை, மசாலா படங்களுக்கு இடையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ஒரு யதார்த்த சினிமா முயற்சி ராஜு முருகனின் குக்கூ. எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாகியிருக்கிறது. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம். சென்னைப் புறநகர் ரயில் நிலையங் களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் (தினேஷ்). கூடவே பாட்டுக் கச்சேரி களிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா). இருவரும் கண் பார்வை ... |
| Posted: 24 Mar 2014 01:00 PM PDT நம் முன்னோர் கூறிய முதுமொழிகளை "பழமொழிகள்' என்றும் கூறுவர். அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன. அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப் பயன்படுகிறது என்பதைக் கீழ்வரும் பழமொழிகள் கூறுகின்றன: * "கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை' * "வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல்வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்' * "கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி' மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி' ... |
| தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Posted: 24 Mar 2014 12:55 PM PDT தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ... |
| Posted: 24 Mar 2014 12:45 PM PDT என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்! Facebook status மாதித்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்! |
| நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்! Posted: 24 Mar 2014 12:21 PM PDT ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ... |
| ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Posted: 24 Mar 2014 12:14 PM PDT பெங்களூரூ: தமிழக முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சசி, இளவரசி,மற்றும் பினாமிகள் பெயரில் தமிழகம், ஆந்திரா (ஐதராபாத்) உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளார் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். இதன் மொத்த மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. முதல்வராக இருந்த காலத்தில் ஜெ., சொத்துக்குவித்ததாக தி.மு.க., ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வாரகாலமாக ... |
| Posted: 24 Mar 2014 11:47 AM PDT முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| Posted: 24 Mar 2014 11:21 AM PDT மற்ற கட்சியாக இருந்தால் தலைவரின் பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் வரும். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆராக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும் ஆளைப் பார்ப்பதே ரத்தத்தின் ரத்தங்களுக்கு முழு திருப்தியைக் கொடுத்துவிடும். இந்தத் தேர்தலில் அதுவும் மாற்றம். ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்ப்பதே பெரும்பேறு ஆகிப்போனது. தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில்தான் சுற்றுப்பயணம் என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டதால், இப்போதெல்லாம் மாலை, இரவு நேரக் கூட்டங்கள் கிடையாது. மதிய வேளையில் கொளுத்தும் ... |
| Posted: 24 Mar 2014 11:16 AM PDT சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம். ஆம், இண்டியன் சீஃப் பைக்கின் விலை 26.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் டெல்லி). இவ்வளவு விலைக்கு இந்த பைக்கில் அப்படி என்ன இருக்கிறது? 'சீஃப்,' சீப்பான பைக் அல்ல! இதன் பிரம்மாண்டமான தோற்றம்தான் பார்த்தவுடன் முதலில் மனதில் பதியும் விஷயம். 2.6 மீட்டர் நீளம்கொண்ட இந்த பைக்கை, சாலையில் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அளவுக்கதிகமான க்ரோம் பூச்சு கண்களைப் ... |
| 40,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Posted: 24 Mar 2014 10:12 AM PDT பழனி அருகே 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் மூன்றுத் தொகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழனி அருகே பாப்பம்பட்டியை அடுத்த மாயவன்கரடு மலைப்பகுதியில் பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்ட போது கற்கால மனிதர்கள் வரைந்த பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது: பாப்பம்பட்டி பகுதியில் ... |
| Posted: 24 Mar 2014 10:11 AM PDT அன்பு உறவுகளுக்கு வணக்கம் . டேலியில் எழும் சந்தேகங்களை தமிழில் தீர்க்கவும் ,அறியாதவருக்கு தமிழில் அறியபடுத்தவும் நமது தளத்தின் ஒரு முயற்சி தான் இது. டேலி கற்று அறிந்தவர்கள் முன்வந்து கற்பிக்கவும். கற்று அறிந்தவர்கள் நடத்துவதில் வேறு எளிய முறைகள் இருப்பின் அதனை அறியபடுத்தவும் டேலியில் எழுத்து வழி பாடமாக எடுக்கலாம் .அதை விட வீடியோவாக எடுத்தால் காண்பவருக்கு புரிவது எளிதாகும்.சந்தேகங்களை விளக்கவும் எளிமையாக இருக்கும் . எனது கணிப்பொறி திரையை காண்பித்து பாடம் எடுக்க ஏதேனும் வழி இருந்தால் ... |
| 'அரசு சாராயம் விற்பது கேவலமான செயல்': அன்புமணி ராமதாஸ் Posted: 24 Mar 2014 10:03 AM PDT 'திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என, சில மாதங்களுக்கு முன், அறிவித்து, தனித்தே பத்து தொகுதிகளில் களம் காண தயாரானது, பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், தற்போது, தேசிய கட்சியான பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., இணைந்திருக்கிறது. இதற்கு முழு முதல் காரணமாக இருந்து செயல்பட்டவர், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இது குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: நீங்கள், வன்னியர் சமூகத்தை ... |
| 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! Posted: 24 Mar 2014 09:55 AM PDT ஈடில்லா 23000 பதிவுகளைக் கடந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா! |
| Posted: 24 Mar 2014 06:19 AM PDT அருவ உருவ வழிபாட்டு முறை தான் லிங்க வழிபாட்டின் கோட்பாடு.அருவம் என்றால் "உருவம் இல்லாத "என்று பொருள். ,--லிங்கம் குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம். உருவம் ஏதோ ஒரு வடிவம் உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கின்றது.எனவே உருவம் உள்ளதும் ,உருவம் அற்றதும் கலந்ததுவே சிவலிங்கம் அல்லது லிங்கம்.தெரியாதவர்கள் பழம்தமிழ் அகராதிகளை கொஞ்சம் புரட்டியும் பார்க்கலாம். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு ... |
| கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Posted: 24 Mar 2014 06:11 AM PDT கொத்தமல்லி சாதம் தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, கறிவேப்பிலை - ஒரு பிடி, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கு ஏற்ப, மிளகு - 10, வரமிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கலப்பு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் (விவரம் அட்டவணையில்), வடித்த சாதம் - 3 கப். செய்முறை: கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, வரமிளகாய், புளி, உப்பு இவற்றை சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளிக்கவும். இதில் அரைத்த விழுதைச் சேர்த்து நீர் சுண்டக் கிளறவும். ... |
| கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Posted: 24 Mar 2014 05:59 AM PDT இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா? தர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் ஹோம் சயின்ஸ் துறை, பேராசிரியர் சாந்தி மற்றும் டயட்டீஷியன் சுபஸ்ரீ செல்வகுமாரிடம் கேட்டோம். 'வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல... புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், ... |
| மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா Posted: 24 Mar 2014 05:48 AM PDT 'கால் செருப்புக்கு தோல் வேண்டின்... செல்வக் குழந்தையைக் கொல்வாரோ! கண்ணிரண்டும் விற்று, சித்திரம் பெற்றால்... கைகொட்டி சிரியாரோ?' -வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு, வேட்டு வைக்கக்கூடிய வீழ்ச்சித் திட்டங்களாக இந்த அரசுகள் கையில் எடுப்பதை நினைக்கும்போது, மகாகவி பாரதியின் இந்தப் பாடல் வரிகள்தான் என் நெஞ்சுக்குள்ளே முட்டி மோதுகின்றன. இந்திய அரசின், 'எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கோரத் தாண்டவத்தால், திரூவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராம மக்கள் சந்திக்கும் ... |
| இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Posted: 24 Mar 2014 05:45 AM PDT தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் சுப.உதயகுமாரன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அறியப்பட்ட இவர், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 18-ம் தேதியே தன் தந்தை பரமார்த்த லிங்கத்தையும் மனைவி மீராவையும் நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, தனது தேர்தல் அறிக்கையை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் வெளியிடச் செய்தார். குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ... |
| கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி Posted: 24 Mar 2014 05:42 AM PDT மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன! மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு கடந்த மார்ச் 8-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் கிளம்பிச்சென்றது போயிங் விமானம். சீனக் கடலுக்கு மேலே வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது, ... |
| எல்லாம் தெரியும்! - சிறுவர் கதை Posted: 24 Mar 2014 05:35 AM PDT மாலை நேரம். கடல் அலையினை ரசித்தபடி கடற்கரையில் அமர்ந்தான் தங்கமணி. அந்த நேரத்தில் அங்கே தர்மலிங்கம் வந்தான். ""நண்பனே, உன்னைப் பார்த்து வெகு நாட்களாகிறதே... எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டான் தர்மலிங்கம். ""நான் நன்றாகதான் இருக்கிறேன். இதோ இந்த கடல் அலையை நான் ரசித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் என்னிடம் நீ இடையூறு செய்ய வந்திருப்பது போன்று தெரிகிறது,'' என்றான் தங்கமணி. ""அடடே! இத்தனை நாட்களுக்குப் பின்னரும் உன்னுடைய குணம் மாறவில்லையே. நீ கடல் அலையை ரசிக்கிறாயே... கடல் அலையைப் பற்றி ... |
| மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் Posted: 24 Mar 2014 05:25 AM PDT ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை செய்து வருகின்றனர். மில்லில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மில்லுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கோபி பச்சை மலை அடிவாரத்துக்கு சென்றனர். அங்கு பாலுசாமி மதுஅருந்தியதாக ... |
| Posted: 24 Mar 2014 05:19 AM PDT - இந்தியில் 'ஹிம்மத்வாலா' மறுபதிப்பில் நடித்தார் தமன்னா. இந்த படம் தோல்வி அடைந்த்து. - கூடிய விரைவில் இந்தியிலும் ஒரு வெற்றிப் படம் கொடுப்பேன். அப்போது என்னைக் குறை கூறியவர்கள் எல்லாம் வாய்மூடிக் கிடப்பார்கள்," என்று கோபப்படுகிறாராம் தமன்னா. - அண்மையில் ஒரு படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டனராம். ஆனால் தன்னால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம் - ------------------------------------ |
| Posted: 24 Mar 2014 05:15 AM PDT ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. 'முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு' (100 பேர் வரை), 'பால் வாங்கப் பணமில்லையென்றால் ... |
| Posted: 24 Mar 2014 04:56 AM PDT வணக்கம் ஏப்ரல் 8 தேதிவுடன் விண்டோஸ் எக்ஸ்பி நிறுத்தப்படுவதால் விண்டோஸ் எக்ஸ்பி போல் தோற்றம் தரும் லினக்ஸ் இயங்கு தளம் (ISO-FILE) யாரும் வைத்து இருந்தால் தரவிறக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். |
| அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Posted: 24 Mar 2014 04:18 AM PDT தஞ்சாவூர்: "தஞ்சையில், பழைய மாரியம்மன் கோவில் ரோடு பகுதியில், 15 வருடமாக மண் ரோடு தான் உள்ளது. தார் ரோடு போடவில்லை. அடிப்படை வசதி ஏதுமில்லை; ஓட்டு கேட்க தேர்தலுக்கு மட்டும் தான் மக்களை தேடி வருவீர்களா? அடிப்படை வசதி ஏதும் செய்து தராத அ.தி.மு.க.,வுக்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம்; இனிமேல் இப்பக்கமே வராதீர்கள் ' எனக்கூறி, தஞ்சையில், மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு, விரட்டியடித்தனர். இதனால், பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் லோக்சபாவுக்கும், மயிலாடுதுறை லோக்சபாவுக்கு ... |
| அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Posted: 24 Mar 2014 04:05 AM PDT புதுடெல்லி: அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ஆதார் அட்டையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட 'உதய்' ( Unique Identification Authority of India -UIDAI) நிறுவனம், ஆதார் அட்டை வைத்துள்ள நபர் குறித்த எந்த ஒரு தகவலையும், அந்த ... |
| Posted: 24 Mar 2014 04:01 AM PDT 4,000ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணக்கூடிய கிருமி மைக்ரோபாக்டீரியம் டியூபர்கலோசிஸ். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் முதுகெலும்புத் தொடரை ஆராய்ந்தபோது அதில் டி.பி. கிருமி இருந்திருக்கிறது. பொதுவாக ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமி நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ... |
| Posted: 24 Mar 2014 03:51 AM PDT புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்! லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள். பிறகுதான், சிறைச்சாலையின் ... |
| திருவாலங்காட்டு அம்மை எனும் காரைக்கால் அம்மையார்! Posted: 24 Mar 2014 03:43 AM PDT உலகாளும் சிவபெருமானால், 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். நாயன்மார்களில் காலத்தால் மூத்தவரும் இவரே. "எந்தையே, செறிந்த இரவில் நீ எரி பாய்ந்து ஆடும் இடத்தை எமக்கொரு நாள் காட்ட மாட்டயா? இந்தப் பேராசையை என்னால் தவிர்க்க முடியவில்லையே" என்று சிவனின் தாண்டவத்தைக் காணும் பேரவாவைச் சொன்னவர். இளமைப்பருவம் சோழநாட்டுத் திருப்பதியான காரைக்கால் என்கிற கடற்கரைப் பட்டினத்தில் பெருவணிகன் தனதத்தனின் மகளாகப் பிறந்தார். பொங்கிய பேரழகு மிக்க குழந்தையாக இருந்ததால் அம்மையாருக்குப் 'புனிதவதி' ... |
| Posted: 24 Mar 2014 02:57 AM PDT ஆங்கில வாசகங்களோடு கூடிய 'டி-சர்ட்' அணியும் நண்பர்(நண்பி)களை அந்த வாக்கியத்தின் பொருள் என்ன என்று தமிழில் சொல்லச்சொல்லுங்கள். ஒருத்தருக்கும் சொல்லத்தெரியாது. அப்படியே சொல்லத்தெரிந்து விட்டால் சத்தியமாக அவர்கள் மறுபடியும் அதை அணியமாட்டார்கள். அவ்வளவு ஆபாசமாகவும், அர்த்தமற்றும் அந்த வாக்கியங்கள் இருக்கும். அதைத்தவிர்க்க இப்போது வந்துவிட்டது தமிழ் 'டிசர்ட்டுகள்'. ஆன்லைனில் வாங்கலாம். நீங்கள் விரும்பிய தமிழ் வாக்கியங்களையும் அதில் அச்சிடலாம். தொடர்புக்கு: http://www.ilavam.com |
| Posted: 23 Mar 2014 08:36 PM PDT சோட்டா பீம்(தமிழ்) தரவிறக்கம் செய்வதற்கு லிங்க் இருந்தால் குடுங்கோ நண்பர்களே |
| நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்! Posted: 23 Mar 2014 07:09 PM PDT நடிகர் : ஜெயம் ரவி நடிகை : அமலாபால் இயக்குனர் : சமுத்திரகனி இசை : ஜீ.வி.பிரகாஷ் ஓளிப்பதிவு : சுகுமார் நாசர் நடத்தும் ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள், சிக்னலில் டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா பேப்பர்களும் சரியாக இருந்தும் பைன் கட்டச் சொல்கிறார் டிராபிக் போலீஸ். இல்லையென்றால் 100 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார். ஆனால், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |