Tamil News | Online Tamil News |
- உ.பி.,யில் 20 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு
- 'ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை'
- சுனந்தா மரணம்: புதிய வழக்கு இல்லை: சொல்கிறார் டில்லி போலீஸ் கமிஷனர்
- அமைச்சர் சரத் பவாருக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்'
- ஓட்டு கேட்க செல்லும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மிரட்சி : பல தொகுதிகளில் மக்கள் எதிர்ப்பால் கவலை
- மத்திய அரசின் 'ஆதார்' திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது 'ஆப்பு!'
- பாதுகாப்பு தர மறுக்கும் மத்திய அரசு: பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு
- கொலை, கொள்ளை, பலாத்காரம் தான் நடக்கிறது: அ.தி.மு.க.,மீது ஸ்டாலின் 'பாய்ச்சல்'
- "உள்கட்சி மோதலை தீர்க்க 40 கருணாநிதி வந்தாலும் முடியாது' : விஜயகாந்த் கிண்டல்
- மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரசுக்கு தடை
- விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி
- கோவை பள்ளி சிறுமி, சகோதரனை கொன்றவருக்கு தூக்கு! உறுதி செய்தது ஐகோர்ட்
| உ.பி.,யில் 20 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு Posted: இந்த லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் யாருக்கு அதிகளவில் ஓட்டு விழும்? இதுவரை நடந்த வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தால், இதற்கு பதில் கிடைக்கும்.* மண்டல் சகாப்தம் என, சொல்லப்படும், 1960 முதல், 1990கள் வரை, காங்., தான் அந்த மாநிலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தது* 1989ல், போபர்ஸ் ஊழலால், காங்., தன் ஓட்டு வங்கியை, ஜனதா தளத்திடம் இழந்தது. ஜனதா தளத்திற்கு 'மேல் ஜாதி' மற்றும் தலித்துகளின் ஓட்டுகள் பெரும்பான்மையாக கிடைத்தன* இந்த ஊழல் எதிர்ப்பலையை பயன்படுத்தி, 'மேல் ஜாதி'யான, ராஜ்பத் ஜாதியைச் சேர்ந்த வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் ஆகிய தலைவர்கள் ... |
| 'ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' Posted: புதுடில்லி: 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்தது.கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, பல ஆண்டு கால தாமதம் ஆனதை எதிர்த்து, ராஜிவ் கொலையாளிகள், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட, தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை, பிப்ரவரி, 18ல் விசாரித்த, தலைமை நீதிபதி, சதாசிவம் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்'அளித்த தீர்ப்பில், மூவரின் தண்டனையை, ஆயுளாக குறைத்தது. ஆயுள் தண்டனை காலத்தை ஏற்கனவே, அவர்கள் சிறையில் ... |
| சுனந்தா மரணம்: புதிய வழக்கு இல்லை: சொல்கிறார் டில்லி போலீஸ் கமிஷனர் Posted: புதுடில்லி: ''காங்கிரசை சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூரின், மூன்றாவது மனைவி, சுனந்தா மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்காக, புதிதாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் எண்ணம் எதுவும் இல்லை,'' என, டில்லி போலீஸ் கமிஷனர், பி.எஸ்.பாசி கூறினார்.மத்திய, மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக இருப்பவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, திருவனந்தபுரம் தொகுதி, எம்.பி., சசி தரூர். இவர், இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், மூன்றாவதாக, காஷ்மீரை சேர்ந்த, சுனந்தா புஷ்கரை, 2010ல் முன் திருமணம் செய்தார். இந்நிலையில், பாகிஸ்தான், பெண் பத்திரிகையாளர், மெஹர் தரார் ... |
| அமைச்சர் சரத் பவாருக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்' Posted: புதுடில்லி: 'மையை அழித்து விட்டு, இரண்டு இடங்களில் ஓட்டளியுங்கள்' என, நேற்று முன்தினம் பேசிய, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர், சரத் பவாரிடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. 27ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கமிஷன் கூறியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர், மத்திய, விவசாய அமைச்சர், சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை நடத்தி வரும் இவர், தன் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். நவிமும்பை என்ற இடத்தில், கூலித்தொழிலாளர்கள் ... |
| ஓட்டு கேட்க செல்லும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மிரட்சி : பல தொகுதிகளில் மக்கள் எதிர்ப்பால் கவலை Posted: இலவசங்கள் மூலம் தமிழக மக்களை கவர்ந்தாகிவிட்டது. இனி டில்லியில் ஆட்சி அமைத்து, நாடு முழுவதும், 'அம்மா' உணவகங்களை திறப்பதே குறிக்கோள் என்ற நோக்கோடு, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் பிடிக்க, அ.தி.மு.க.,வினர் கடும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.இந்த நிலையில், அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், வேட்பாளர்கள், தமிழக அமைச்சர்கள் என, பிரசாரத்திற்கு செல்லும் பிரமுகர்கள், பல இடங்களில் மக்கள் காட்டி வரும் எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால், கட்சி தலைமையும், நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.அ.தி.மு.க.,வினர் ... |
| மத்திய அரசின் 'ஆதார்' திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது 'ஆப்பு!' Posted: புதுடில்லி : 'திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் வசிக்கும், அனைத்து குடிமக்களுக்கும், அவர்களை பற்றிய, அனைத்து விவரங்களையும், முறையாக பதிவு செய்வதற்காக, 'ஆதார்' என்ற திட்டத்தை, 2009ல், மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொருவருக்கும், 12 இலக்கங்களை உடைய எண்ணுடன் கூடிய, அடையாள அட்டை ... |
| பாதுகாப்பு தர மறுக்கும் மத்திய அரசு: பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு Posted: புதுடில்லி:'பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி உட்பட, பா.ஜ., தலைவர்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு மறுத்து வருகிறது' என, பா.ஜ., நேற்று குற்றம் சாட்டியது.அச்சுறுத்தல்:'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட, பல தரப்பிலிருந்தும், பா.ஜ., தலைவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, பா.ஜ., தலைவர்களை கொல்லவும், அவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து கொள்ளவும், 'இந்தியன் முஜாகிதீன்' பயங்கர வாதிகள் திட்டமிட்டுள்ளனர்' என, அக்கட்சி தலைவர்கள், கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்து ... |
| கொலை, கொள்ளை, பலாத்காரம் தான் நடக்கிறது: அ.தி.மு.க.,மீது ஸ்டாலின் 'பாய்ச்சல்' Posted: உளுந்தூர்பேட்டை:''தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தான் நடக்கிறது,'' என, உளுந்தூர்பேட்டையில் ஸ்டாலின் பேசினார்.உளுந்தூர்பேட்டையில், விருத்தாசலம் சாலை சந்திப்பில், விழுப்புரம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர், முத்தையனை ஆதரித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:நிறைவேற்றவில்லை:மக்களைச் சந்திக்காமல், வானத்தில் பறந்து வந்து, ஜெ., பிரசாரம் செய்கிறார். நேற்று முன்தினம், இரண்டு ஹெலிகாப்டரில் வந்தார்; கேட்டால், ஒரு ஹெலிகாப்டர் ஸ்பேருக்காம்.விலைவாசி உயர்வைக் குறைப்பதாக கூறினார்; ஆனால் கட்டுப்படுத்தவில்லை. மின் வெட்டு ... |
| "உள்கட்சி மோதலை தீர்க்க 40 கருணாநிதி வந்தாலும் முடியாது' : விஜயகாந்த் கிண்டல் Posted: தஞ்சாவூர்: ""தி.மு.க.,வில், டி.ஆர்.பாலுவும், பழநிமாணிக்கமும் மோதி வருகின்றனர். அந்த கட்சியில் உள்கட்சி மோதலை தீர்க்க இனிமேல், 40 கருணாநிதி வந்தாலும் தீர்க்க முடியாது,'' என, தஞ்சை பிரச்சாரத்தில் விஜயகாந்த் கிண்டலாக பேசினார்.பா.ஜ., வேட்பாளருக்கு, தஞ்சை லோக்சபா ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் அக்கட்சி வேட்பாளர் யார்? என, அறிவிக்கவில்லை. தஞ்சையில், பனகல் கட்டிடம் முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிவிக்கப்படாத, பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து நேற்றிரவு பேசியதாவது:என் பிரச்சார வாகனம் நேற்றிரவு முதல் (நேற்றுமுன்தினம்) பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய முடியவில்லை. ... |
| மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரசுக்கு தடை Posted: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில், காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஆதரவாக, எவ்வித தேர்தல் பணிகளும் மேற்கொள்ள, இப்பகுதி, பழங்குடியின கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.மணிப்பூரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், ஒக்ராம் இபோபி சிங், தலைமையிலான அரசு, பொறுப்பில் உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக, இந்த மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போதிலும், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும், நாகா மற்றும் குகி பழங்குடியின ... |
| விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி Posted: மெல்போர்ன்:''கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,'' என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், ... |
| கோவை பள்ளி சிறுமி, சகோதரனை கொன்றவருக்கு தூக்கு! உறுதி செய்தது ஐகோர்ட் Posted: சென்னை:கோவையில், பள்ளி சிறுமியை பாலியல் வன்முறை செய்து, அந்த சிறுமியையும், அவளது சகோதரனையும், கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.கோவையைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின்; தொழில் அதிபர். இவருக்கு, 10 வயதில், பெண் குழந்தையும், ஏழு வயதில், ஆண் குழந்தையும் இருந்தனர். இவர்கள், தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.காரில் கடத்தல்:பள்ளிக்கு செல்வதற்காக, காத்திருந்த, இரண்டு குழந்தைகளையும், மோகனகிருஷ்ணன் என்பவர், காரில் கடத்தினார்.பின், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த, தன் நண்பர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 25,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |