Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மக்களவை தேர்தலில் பா.ம.க 8 இடங்களில் போட்டி

Posted: 20 Mar 2014 09:00 AM PDT

சென்னை,

பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பதற்காக, அந்தக் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்  சென்னை வந்தார். அவர் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில், தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட்டார் பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.இந்த 8 தொகுதிகளின் விவரமும் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. பாமக போட்டியிடும் 8 தொகுதிகள் விவரம்:  அரக்கோணம்,  கிருஷ்ணகிரி,  தருமபுரி,  ஆரணி, சிதம்பரம்,  மயிலாடுதுறை,  திருவண்ணாமலை,  நாகப்பட்டினம், ஆகிய இடங்களில் பா.ம.க. போட்டியிடும் என்று ராஜ்நாத் சிங்  அறிவித்தார்.
 

category:

News Group Category:

மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு? கப்பல்கள்-விமானங்கள் விரைகின்றன

Posted: 20 Mar 2014 08:49 AM PDT

புதுடெல்லி,

சென்னை பெண் சந்திரிகா சர்மா உள்ளட 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் என்று யூகிக்கப்படுகிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த ஆஸ்திரேலியாவின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் 26 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானம் மாயமாகி 2 வாரங்களை எட்டியும், அதுதொடர்பாக உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தின் சிதைவுகளும் கிடைக்கவில்லை. இதனால் விமானம் என்ன ஆனது என்பதில் அதில் பயணித்த பயணிகள், சிப்பந்திகளின் குடும்பங்கள் மட்டுமல்ல, உலகமே தீராக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

இந்த நிலையில், அந்த விமானத்தின் தேடுதல் வேட்டையில் ஒரு சிறிய நம்பிக்கைகீற்று தென்பட்டுள்ளது. மாயமாகிப்போன அந்த விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படுகிற இரண்டு பொருட்கள் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படுகிற 2 பொருட்களும் கடலில் இருந்து மீட்கப்பட்டு, அவை அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் தான் என உறுதி செய்யப்பட்டு விட்டால், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அல்லது நாச வேலையில் சிக்கி கடலில் மூழ்கி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

category:

News Group Category:

எனக்கு ஆதரவாக மக்களே பிரசாரம் செய்கிறார்கள் மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

Posted: 20 Mar 2014 08:24 AM PDT

பெங்களூர்,

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மத்திய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன கார்கே குல்பர்காவில்  கூறியதாவது:–

குல்பர்காவில் கடந்த 5 ஆண்டுகள் நான் செய்த பணிகளை பற்றி மக்கள் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். அதனால் நான் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. எனக்கு ஆதரவாக மக்களே பிரசாரம் செய்கிறார்கள். வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் பணியாற்றியதால் மக்கள் இந்த ஆதரவை வழங்குகிறார்கள்.

அதனால் இந்த தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள். என்னை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஜனநாயகத்தில் தேர்தல் நடைபெற்று தங்கள் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் எழுச்சி எனது பக்கம் இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் மெத்தனமாக இருக்காமல் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அதிகமான தன்னம்பிக்கையை வைப்பது சரியாக இருக்காது.

இவ்வாறு கார்கே கூறினார்.
 

category:

News Group Category:

தொலைகாட்சி தொடர்களிலும் நடிக்க தயார் நடிகை சன்னிலியோன் பேட்டி

Posted: 20 Mar 2014 08:21 AM PDT

போபால்,

நடிகை சன்னிலியோன் நடித்துள்ள ராகினி, MMS 2'  ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியல் மிக பிரபலமானவை.

நடிகை சன்னிலியோன் இன்று போபால் வந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சன்னிலியோன் கூறியதாவது;

என்னுடைய சில படங்கள் பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்துள்ளது. படத்தை படமாக பார்க்க வேண்டும் ரசிகர்கள் படத்தை எதிர்மறையாக பார்க்க வேண்டாம். தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்க்கு மறுக்கமால தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தாயாராக உள்ளேன் என்று கூறினார். மேலும் நான் கடுமையாக உழைக்கும் பெண் என்றும் நல்ல மனைவியாக இருப்பேன் என்று நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார்.
 

image: 

category:

News Group Category:

மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் தேவேகவுடா வேண்டுகோள்

Posted: 20 Mar 2014 08:02 AM PDT

பெங்களூர்,

பாராளுமன்ற தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) சார்பில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேவேகவுடா பெங்களூரில்  வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சரி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சரி கர்நாடகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கர்நாடகத்திற்கு வழங்கவில்லை. இந்த 2 தேசிய கட்சிகளும் கர்நாடகத்திற்கு துரோகம் செய்துவிட்டன.

மாநிலத்தின் நலனை காக்க வேண்டுமென்றால் அது மாநில கட்சியால் மட்டுமே முடியும். அதனால் மாநில மக்கள் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது."
 

category:

News Group Category:

மக்களவை தேர்தலில் குஜராத் காந்தி நகரில் போட்டியிட சம்மதம் அத்வானி பேட்டி

Posted: 20 Mar 2014 07:25 AM PDT

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவுப்படி, காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவுப்படி, காந்திநகர் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என டெல்லியில் இருந்து தகவல்கள் வெளியாயின.அதனை தொடர்ந்து இது பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தியது. குஜராத் முதல்-மந்திரி மோடி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது;

மக்களவை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். போபாலில் போட்டியிடுவது பற்றி கருத்தை தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தேன். கடந்த பல ஆண்டுகளாக குஜராத் காந்திநகர் தொகுதியில் தான் போட்டியிட்டு வருவதாகவும்  எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குஜராத் மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
 

category:

News Group Category:

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கைது செய்யபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் விடுவிப்பு

Posted: 20 Mar 2014 07:10 AM PDT

நாகை

கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி  இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் 25 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்  இவர்கள் அனைவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

category:

News Group Category:

விரும்பும் தொகுதியில் அத்வானி போட்டியிடலாம் ராஜ்நாத் சிங்

Posted: 20 Mar 2014 07:03 AM PDT

சென்னை,

பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பதற்காக, அந்தக் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்  சென்னை வந்தார். அவர் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில், தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட்டு, நிருபர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது அவரிடம், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவுப்படி, காந்திநகர் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என டெல்லியில் இருந்து தகவல்கள் வெளிவந்திருப்பதாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராஜ்நாத் சிங், எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை அத்வானி தனது விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என பதில் அளித்தார்.

மேலும், குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியின் பரிந்துரைப்படி, அத்வானி காந்திநகர் தொகுதியில் போட்டியிட மத்திய தேர்தல் குழு முடிவு செய்த பின்னர், அவர் போபால் தொகுதியில் போட்டியிட மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதன் பின்னர் காந்தி நகர், போபால் ஆகிய இரு தொகுதிகளில் எதில் வேண்டுமானாலும் அத்வானி போட்டியிடலாம் என அவரது முடிவுக்கே நான் விட்டு விட்டேன் என கூறினார்.

category:

News Group Category:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் ராஜ்நாத்சிங் பேட்டி

Posted: 20 Mar 2014 06:59 AM PDT

சென்னை,

மக்களவை தேர்தலில் சில குறிப்பிட்ட தொகுதி களை ஒதுக்குவதில் பா.ஜ.க. - பா.ம.க. இடையே கடும் இழுபறி நீடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு  தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க.  பொதுச்செய லாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள்,  வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் ராஜ்நாத்சிங் சென்னை ராயப்பேட்டை நியூஉட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு மதியம் 1 மணிக்கு வந்தார். அங்குள்ள ஒரு அறையில் ராஜ்நாத்சிங் தங்கினார். பிறகு தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்,  மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது  பா.ஜ.க. கூட்டணி யில் சுமூக முடிவு எட்டப் பட்டது.கூட்டணியில் சுமூக முடிவு எட்டபட்டதை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியதாவது ;

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து முக்கிய தீர்வுகாணப்படும் என்று  கூறினார்.

 

 

category:

News Group Category:

ராஜ்நாத்சிங்குடன், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி சந்திப்பு

Posted: 20 Mar 2014 06:46 AM PDT

சென்னை,

பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று  பகல் 11.45 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க.  பொதுச்செய லாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள்,  வரவேற்றனர்.விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் ராஜ்நாத்சிங் சென்னை ராயப்பேட்டை நியூஉட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு மதியம் 1 மணிக்கு வந்தார்.அங்குள்ள ஒரு அறையில் ராஜ்நாத்சிங் தங்கினார். பிறகு தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்,  மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி  சந்தித்து பேசினார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™