Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


யார் சிறந்த பிரதமர்? தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

Posted: 13 Mar 2014 10:58 PM PDT

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்து வரப்போகும் பிரதமர் யார் என்பதுதான் தற்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு ஒரு முன்னோட்டமாக இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியது. இப்போட்டியில் பா.ஜ.கவின் நரேந்திர மோடி, காங்கிரஸின் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல் மந்திரி அரவிந்த்

குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்த புதிய அமைப்பு தொடக்கம்

Posted: 13 Mar 2014 09:42 PM PDT

நாட்டில் உள்ள ஆரம்பப்பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய-அமெரிக்க கூட்டுறவு வாசிப்பு முனையம் ஒன்று நேற்று தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது. THE READ (படிக்க-ஈடுபட-அடைய-கனவு) என்ற இந்த அமைப்பு சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் இந்திய அறிவு ஆய்வுகள் மையம் இணைந்து செயல்படவிருக்கும் ஒரு அமைப்பாகும். ஒரு குழந்தை வாசிக்கக் கற்றுக்கொள்கின்ற தருணமே அதன் வாழ்க்கையின் சிறப்பான வாய்ப்புகளை அடைய உதவும் முக்கியமான திறனைப் பெறுவதாக கருதப்படுகின்றது என்று இந்த அமைப்பின் அமெரிக்கப் பொறுப்பாளரான மைக்கேல் பாலட்டியர் தெரிவித்தார்.

கேரளாவில் வீட்டில் துப்பாக்கி குண்டு பதுக்கிய டி.எஸ்.பி. கைது

Posted: 13 Mar 2014 09:39 PM PDT

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் நாயர் (வயது 46). போலீஸ் டி.எஸ்.பி.யாக உள்ளார். பத்திரிகையாளர் உன்னிதான் என்பவரை கொல்ல முயன்றதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதுபற்றி விசாரித்த போலீஸ் உயர் அதிகாரிகள் இவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர் பணியில் சேராமலேயே இருந்தார்.

திருப்பதி கோவிலுக்கு நடந்து சென்ற தமிழக பக்தர்கள் 4 பேர் பலி

Posted: 13 Mar 2014 09:15 PM PDT

தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் என ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதயாத்திரை தொடங்கினர். நேற்று காலை 8 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாகாலா கோடரெட்டிபள்ளி அருகே பக்தர்கள் அனைவரும் சாலையோரம் நடந்து

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 13 Mar 2014 08:48 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த 5-ந்தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாம், அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.

கறுப்பு பண புழக்கத்தை தடுக்க 700 அதிகாரிகள் நியமனம்

Posted: 13 Mar 2014 05:16 PM PDT

தேர்தலில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க 700 பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமனம் செய்கிறது. இவர்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்துக்கும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கும் நடக்க உள்ள தேர்தல்களில் கறுப்பு பண புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்தும் விதத்தில் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன், வருமான வரி நுண்ணறிவு மற்றும் புலனாய்வு, நிதி புலனாய்வு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய பொருளாதார நுண்ணறிவு கழகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு கழகம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட 10 அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்படும் அரசியல் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி

Posted: 13 Mar 2014 04:43 PM PDT

பொதுத் தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரபல இணையதள நிறுவனமான கூகுள் தனது தேடுபொறியில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்ததாக ஆந்திரபிரதேசத்தில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதியாக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இந்த தகவல், கடந்த 90 நாட்களாக ஆந்திரபிரதேச மாநிலத்தில் சராசரியாக தேடப்பட்ட தேடுதல் அளவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெகனின் தேடுதல் அளவு கெஜ்ரிவாலின் அளவில் மூன்றில் இரண்டு பங்காகவும், மோடியின் தேடுதல் அளவில் பாதி அளவிற்கும்

ரூ.30 ஆயிரம் கோடி தேர்தல் செலவின் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும் என எதிர்பார்ப்பு

Posted: 13 Mar 2014 03:02 PM PDT

நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்துடன் உள்ள நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரூ.30 ஆயிரம் கோடி செலவிட உள்ளது. இந்த தேர்தல் செலவு மூலம் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார சீரழிவு ஏற்பட்டபோது அதன் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற அளிக்கப்பட்ட 4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகைக்கு சமமாகும். தேர்தல் செலவு பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்

டெல்லியில் பிரதமருடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு

Posted: 13 Mar 2014 01:30 PM PDT

டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய மு.க.அழகிரி, இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என கூறினார். முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு டெல்லியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த மு.க.அழகிரி, அங்கு கூடியிருந்த நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி-பதில் விவரம் வருமாறு:- கேள்வி:- உங்களின் இந்த திடீர் டெல்லி பயணத்துக்கு காரணம் என்ன? பதில்:- கடந்த 4 ஆண்டுகளாக பிரதமருடன் அவருடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் இணைந்து பல நல்ல காரியங்களை நாட்டுக்கு ஆற்றியுள்ளேன். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்தேன்.

நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி

Posted: 13 Mar 2014 12:34 PM PDT

காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகை நக்மாவுக்கு மீரட் தொகுதியும், மத்திய மந்திரி நாராயணசாமிக்கு புதுவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது. நேற்று 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பட்டியலில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னடா தொகுதியில் ஜனார்தன பூஜாரியும், சிக்கபல்லபூர் தொகுதியில் மத்திய மந்திரி வீரப்ப மொய்லியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வடகரா தொகுதியில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சாலக்குடியில் பி.சி.சாக்கோ, எர்ணாகுளத்தில் கே.வி.தாமஸ்

மேகாலயாவில் தனியார் பல்கலைக்கழக வேந்தர் கைது

Posted: 13 Mar 2014 12:25 PM PDT

தன்வந்த் சிங் மத்தாரோ என்பவர் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் சுயநிதி பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வருகிறார். மேலும் அமிர்தசரசை சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களின் இயக்குநராகவும் உள்ளார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய மெகாலயாவின் சி.எம்.ஜே. சுயநிதி பல்கலைக்கழகத்தின் மூலம் நாடு முழுவதும் போலி பி.எச்.டி பட்டங்களை விற்றதாக தன்வந்த் சிங்-ஐ போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாநில குற்ற புலனாய்வுத்துறை (சி.ஐ.டி.) அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட தன்வந்த் சிங் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்

ஆதார் அட்டை ஆணைய தலைவர் நந்தன் நீல்கேனி ராஜினாமா

Posted: 13 Mar 2014 10:43 AM PDT

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நீல்கேனி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு விலகினார். பின்னர், ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான, இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நந்தன் நீல்கேனி கடந்த 9-ந்தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் கட்சி 'சீட்' வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய தலைவர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி வைத்தார்.

பா.ஜ.க. 3-வது வேட்பாளர் பட்டியல்: விதிஷா தொகுதியில் சுஷ்மா போட்டி

Posted: 13 Mar 2014 09:26 AM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. 74 பேர் கொண்ட இந்த பட்டியலில் மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச

ஆழ்நிலை தியானம்: இறந்துபோன மதகுருவை ப்ரீசரில் வைத்து காத்திருக்கும் பக்தர்கள்

Posted: 13 Mar 2014 08:14 AM PDT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம் நூர்மஹால். அங்குள்ள ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த அஷுதோஷ் மகாராஜ் (70) என்பவர் திவ்ய ஜோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின் மத குருவாக இருந்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகக்

காங். 2-வது வேட்பாளர் பட்டியல்: நாராயணசாமி புதுவையில் மீண்டும் போட்டி

Posted: 13 Mar 2014 07:49 AM PDT

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 71 பேர் கொண்ட இந்த பட்டியலில் மத்திய மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கு 35 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 பேருக்கு தூக்கு உறுதி: மாணவியின் தாயார் கருத்து

Posted: 13 Mar 2014 07:07 AM PDT

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டும் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையிலே தற்கொலை செய்து கொண்டான். இவ்வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ந் தேதி முகேஷ், அக்சய், வினய் சர்மா, பவன் ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 600 கட்டிடங்கள் பாதிப்பு

Posted: 13 Mar 2014 07:01 AM PDT

காஷ்மீரில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் அங்கு குடியிருப்பு வீடுகள் உட்பட 600க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஜம்மு, காஷ்மீர் அரசு இன்று தெரிவித்துள்ளது.

பெல்லாரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்ரீராமுலு போட்டி

Posted: 13 Mar 2014 06:19 AM PDT

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இன்று நடந்த பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் 20 ஆண்டுகளில் 1290 பயணிகள் விமானங்கள் தேவை: ஏர்பஸ் தகவல்

Posted: 13 Mar 2014 06:07 AM PDT

இந்தியாவில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்ற வரும் 2032ஆம் ஆண்டிற்குள் 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 1,290 புதிய விமானங்கள் தேவைப்படும் என்று ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம்

முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி

Posted: 13 Mar 2014 03:56 AM PDT

கடந்த 1999ல் இந்திய அழகி பட்டம் பெற்றவர் குல் பனாக்(வயது 35). தனது திறமையால் சில பாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவரது தந்தை எச்.எஸ்.பனாக், லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™