Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காமல் காங்கிரஸ் திணறல்: நாடு முழுவதும் இதே நிலைதானா என விரக்தி

Posted:

வரும் லோக்சபா தேர்தலில், நாட்டின், எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும், காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள கட்சிகளும், விலகி ஓடுகின்றன. இதனால், நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைக்க, போதுமான கட்சிகள் கூட கிடைக்காமல், திணறும் நிலை, காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவித்த கையோடு, தேசிய ஜனநாயக கூட்டணியை, பலப்படுத்தும் நடவடிக்கைகளை, பா.ஜ., துவங்கியது. ஆரம்பத்தில், தொய்வு காணப்பட்டாலும், இப்போது, பா.ஜ.,வின் முயற்சிக்கு பலன் கிடைக்கத் ...

தி.மு.க., தொகுதி பங்கீட்டில் 'கும்மாங்குத்து': புதிய தமிழகத்திற்கு தென்காசி, ம.ம.க.,வுக்கு மயிலாடுதுறை

Posted:

தி.மு.க., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. ஒரு தொகுதிக்கு, மூன்று கட்சிகள் போட்டி போடுவதால், தி.மு.க., கூட்டணிக்குள், 'கும்மாங்குத்து' துவங்கியுள்ளது.சிதம்பரத்தில் வெற்றி: தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் என, நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம், விழுப்புரம் என, ...

முசாபர்பூரில் மோடி போட்டி: நிதிஷ்குமார் மூக்குடைக்க திட்டம்

Posted:

புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, உ.பி.,யின், வாரணாசி லோக்சபா தொகுதிக்குப் பதில், பீகாரின், முசாபர்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள மோடி, உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில், பல இடங்களில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மொத்தமுள்ள, 543 லோக்சபா தொகுதிகளில், இவ்விரு மாநிலங்களில் இருந்து மட்டும், 120, எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதால், இந்த மாநிலங்களில், பா.ஜ.,வினர் முழு கவனமாக உள்ளனர். மோடி போட்டியிடும் தொகுதி ...

கூட்டணி பேச்சா, சினிமாவா... எது முக்கியம்? விஜயகாந்த் பேச்சால் தே.மு.தி.க.,வில் கொந்தளிப்பு

Posted:

லோக்சபா தேர்தல் தேதி, ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப தமிழக அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணியில் இடம் பெற்றுள்ள, கம்யூ., கட்சிகளை கண்டு கொள்ளாமல், ஆளும் கட்சியான, அ.தி.மு.க., 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, அக்கட்சியின் பொதுச் செயலர், ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தையும் துவக்கிவிட்டார்.வாய்ப்பு இல்லை: தி.மு.க.,வும், வேட்பாளர் நேர்காணலை முடித்த கையோடு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான, ...

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டி? ஜெ., பேச்சில் வெட்டவெளிச்சம்

Posted:

காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி களை, அ.தி.மு.க., கழற்றிவிட முடிவு செய்திருப்பது உறுதியானது.அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நேற்று, இரண்டாவது நாளாக, ...

இழுத்து மூடும் நிலையில் 'நிர்பயா' மையம்

Posted:

புதுடில்லி: டில்லியில், பெண்கள் பாதுகாப்பிற்காக துவக்கப்பட்ட, 'நிர்பயா ஹெல்ப்லைன்' சேவை, இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. அந்த மையத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.கடந்த, 2012, டிசம்பரில், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் எழுந்த அதிர்ச்சி அலையை அடுத்து, டில்லியில், பெண்கள் பாதுகாப்புக்காக, 'நிர்பயா சேவை மையம்' என்ற பெயரில், 24 மணி நேர, உதவி அமைப்பு துவக்கப்பட்டது. முழுவதும் பெண்களால் இயக்கப்படும் அந்த சேவை மையத்தின், '181' என்ற தொலைபேசி எண்ணை, ...

பாதுகாப்பு துறையை காங்கிரஸ் பாதுகாப்பற்ற துறையாக்கி விட்டது: முதல்வர் ஜெ., கடும் தாக்கு

Posted:

சென்னை: மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்த, காங்கிரசுக்கும், அதற்கு ஆதரவு அளித்த, தி.மு.க.,விற்கும், லோக்சபா தேர்தலில், சரியான பாடம் புகட்ட வேண்டும்,'' என, பொதுமக்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்தார்.சென்னை, மீனம்பாக்கத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, நேற்று, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழக அரசுக்கும், துரோகம் இழைத்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு, மாநிலத்தின் அதிகாரங்களை பறிக்கிறது; வருவாயை குறைக்கிறது; மக்கள் விரோத நடவடிக்கைகளை, ...

அரசியல் கூட்டங்களுக்கு மின் சப்ளை; வீடுகளுக்கு 'கட்!'

Posted:

காலை, மாலை நேரங்களில், பரவலாக மின்தடை செய்யப்படுவதால், பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாமல், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.பிளஸ் 2, பொதுத் தேர்வு, நேற்று முன்தினம், தமிழ் முதல்தாளுடன் துவங்கியது. வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு, 26ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 9ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு நேரத்தில், லோக்சபா தேர்தல் பரபரப்பும் துவங்கியிருப்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பிரசாரம் ஆகியவற்றால், மாணவர்கள், தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். போதாத குறைக்கு, காலை, மாலை நேரங்களில், மின்தடை செய்யப்படுவதால், தேர்வுக்கு படிக்க முடியாமல், ...

அடுத்தும் நமது ஆட்சி தான்: எம்.பி.,க்களை உற்சாகப்படுத்திய சோனியா

Posted:

ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளை, பெரிதுபடுத்த வேண்டாம். நம்பிக்கையோடு, இருங்கள்; நம் அரசின், சாதனைகளை, மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். அடுத்து, அமையப் போவதும், நம் ஆட்சிதான்,'' என, காங்கிரஸ் எம்.பி.,க்களிடம், சோனியா கூறியுள்ளார்.பார்லிமென்ட் கூட்டத் தொடர் நிறைவு பெறும் போதும், இறுதி நாளின் போதும், காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சி கூட்டத்தை நடத்தி, தன் கட்சி, எம்.பி.,க்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, விருந்து அளிப்பது வழக்கம்.தெலுங்கானா: விவகாரத்தால், பார்லிமென்ட் முடங்கியதால், விருந்து நிகழ்ச்சி, நடைபெறவில்லை. இதனால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™