Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Posted: 14 Mar 2014 11:17 AM PDT

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனது இலக்கான 272+ தாண்டி வெற்றி பெறும் என என்.டி.டி.வி., நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2014 லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பை என்.டி.டி.வி., வெளியிட்டுள்ளது. இதன்படி, அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 இடங்களில், பா.ஜ., 7 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் பா.ஜ., சிவசேனா கூட்டணி, 33 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களையும் கைப்பற்றும். ம.பி.,யில் மொத்தமுள்ள ...

15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

Posted: 14 Mar 2014 06:36 AM PDT

போதிய உறக்கமின்மை காரணமாக ஏற்படும் குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம் சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டல் பெவர்லியில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. உலக உறக்க விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று குறட்டை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். இக்கருத்தரங்கில் ...

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா

Posted: 14 Mar 2014 06:33 AM PDT

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த ஜோதியாக விளங்கும் சிவபெருமான் பல்வகைத் திருவுருவம் கொண்டு எழுந்தருளிய தலங்களுள் ஒன்று மயிலை. உமையவள் மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும் கடலைச் சார்ந்த இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர் என்பைப் பெண்ணுருவாக்கி அருளியதும், வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. அனைத்து உலகங்களுக்கும் ...

இயற்கை அழகு குறிப்புகள்

Posted: 14 Mar 2014 04:28 AM PDT

முகம் பளபளக்க: கால் தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள் கால் தேக்கரண்டி ஜாதிக்காய் தூள் கால் தேக்கரண்டி சர்க்கரை தூள் கால் தேக்கரண்டி வெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தோல் சுருக்கம் நீங்க: ( பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வரும் வயிறு தோல் சுருக்கத்திற்கு) ஒரு தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள் அரை தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் தூள் கால் தேக்கரண்டி பால் அனைத்தும் கலந்து சுருக்கத்தின் மேல் ஒரு மாதம் தடவி வர சுருக்கம் குறையும். ரோஜா நிற ...

தெருவென்று எதனைச் சொல்வீர்?

Posted: 14 Mar 2014 03:49 AM PDT

அழகும் நேர்த்தியும் மிகுந்த தெருக்களை இப்போதெல்லாம் காண முடிவதில்லை. தெருக்களைச் சாலைகள் சாப்பிட்டுவிட்டன. நகரமயமாதலின் விளைவாக நம்மை விட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வாழ்வின் அடையாளங்களில் ஒன்றாகத் தெருவும் ஆகிவிட்டது. சின்னச் சின்னத் தெருக்களும்கூட சிமென்ட் சாலைகள் ஆகிவிட்டன. அதாவது, அவை வாகனங்களுக்கான வழித்தடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. ஆம், தெருக்களைச் சாலைகள் சாப்பிட்டுவிட்டன. ஓசையும் புகையும் உண்டாக்கியபடி சீறிச்செல்லும் வாகனங்களின் கூட்டாளியாகச் சாலைகள் உள்ளன. தெருக்களைப் போலின்றி ...

குழந்தை

Posted: 14 Mar 2014 03:36 AM PDT

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்

Posted: 14 Mar 2014 02:57 AM PDT

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள் * காற்றின் சிறகுகள் முறிபடும் முட்களில் வருந்தும் மேகம். * மெல்ல நட குருவியே உடைந்து விடப் போகிறது புல்லில் பனித் துளி. * பழம் கோயில்களில் நூற்றாண்டு கதை பேசும் ஆலமரங்கள். * இரவு முழுவதும் தூங்க விடவில்லை குயிலின் சோகம். * பின்னிக் கிடக்கும் சிலந்தி வலைச் சிக்கல்கள் வாழ்க்கை. * பறி போனது அணிலின் சுதந்திரம் கிளைகளில் தேன் கூடு.

சுய விளம்பரம் ...

Posted: 14 Mar 2014 02:57 AM PDT

பெயர்: அம்மையப்பன் (புனை பெயர்)
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: எல்லாம் தெரிஞ்சவங்க சொல்லி தான் ...
பொழுதுபோக்கு: கணினி கணினி கணினி கணினி ........
தொழில்: கணினி வித்தகன்
மேலும் என்னைப் பற்றி: நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் இந்த உலகத்திலோ நிறைய இருக்கு ...

அறிமுகம்

Posted: 14 Mar 2014 02:49 AM PDT

பெயர்: அனிருத் இராமகிருட்டிணன்
சொந்த ஊர்: கோவை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: தமிழ், வரலாறு
தொழில்:பன்னாட்டு நிறுவனத்தில் வேலை
மேலும் என்னைப் பற்றி:உறுப்பினராக இணைத்து கொண்டதற்கு மிக மிக நன்றிகள்

அறிய வேண்டிய குறிப்புகள்

Posted: 14 Mar 2014 01:26 AM PDT

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது, படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ...

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்

Posted: 14 Mar 2014 12:31 AM PDT

கூகுள் நிறுவனத்தின், அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.4. கிட்கேட் எனப் பெயரிட்டுக் கிடைக்கும் என சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தோம். இப்போது அக்டோபர் 31 அன்று, வெளியான, கூகுள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனுடன், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. மேலும், கூகுள் நிறுவனம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் கிட் கேட், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இயங்கக் கூடியதாய் இருக்கும். இதன் மூலம், ஆண்ட்ராய்ட் பயன்படுத்த விரும்பும், ...

இன்று காரடையான் நோன்பு

Posted: 14 Mar 2014 12:29 AM PDT

சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் ...

சித்த மருத்துவ குறிப்பு:-

Posted: 14 Mar 2014 12:27 AM PDT

சித்த மருத்துவ குறிப்பு:- அஜீரணம் அகல: 1. ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். 2. ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். 3. சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும் உடல் வலி தீர: துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும். சளியை விரட்ட: சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும். இருமலுக்கு: மிளகு, அதிமதுரம், ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (226)

Posted: 14 Mar 2014 12:11 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Posted: 13 Mar 2014 11:24 PM PDT

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும். எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ...

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை

Posted: 13 Mar 2014 09:52 PM PDT

இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். .

ஐயகோ !இதை கேட்க யாருமே இல்லையா ?

Posted: 13 Mar 2014 09:18 PM PDT

ஐயகோ !இதை கேட்க யாருமே இல்லையா ? அலைக்கற்றை ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு சீட்டு பி.எஸ்.என்.எல் இணைப்புகளை திருடி பூமிக்குள் புதைத்து சென்று சன்டிவியின் உபயோகத்திற்கு கொடுத்த தயாநிதி மாறனுக்கும் சீட்டு நிலக்கரி ஊழலில் சிக்கிய ஜெகத்ரட்சகனுக்கும் சீட்டு சேது சமுத்திர திட்டத்தில் ஆட்டைய போட்ட டி.ஆர்.பாலுவுக்கும் சீட்டு. ஆனால் வெறும் எட்டாயிரம் கோடி உர இறக்குமதி ஊழலில் சிக்கிய அழகிரிக்கு மட்டும் சீட்டு இல்லையா ? ஐயகோ ! இதை கேட்க யாருமே இல்லையா.... நன்றி : பேஸ் புக்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™