Daily Thanthi |
- அமேதியில் ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது தாக்குதல்
- குற்ற சம்பவங்கள் நடந்தால் ரெயில் பயணிகள் எங்கிருந்தும் புகார் செய்யலாம்
- பத்திரிகையாளர் ஞாநி, ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்
- குஜராத்தில் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
- மத்திய மந்திரியை எதிர்த்து மிஸ் இந்தியா போட்டி ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்குகிறார்
- இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
- சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாத புகார் ஆம் ஆத்மியினர் மீது குஜராத் போலீசார் வழக்கு
- ராகுலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை: வருண் காந்தி
- டெல்லி ராம்லீலா மைதானம்
- சென்னையில் இன்று வெயில்
| அமேதியில் ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது தாக்குதல் Posted: 14 Mar 2014 08:21 AM PDT அமேதி, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் போட்டியிடவுள்ளார். இதையடுத்து, அவர் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். "ஜாடு (துடைப்பம்) சந்தேஷ் யாத்ரா' என்ற பெயரில் பேரணியும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் சிங்கோலி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குமார் விஷ்வாஸ் மீது 15-20 கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஜாடு யாத்ரா பேரணியின் போது நடைபெற்ற தாக்குதலில் நானும் காயமடைந்தேன். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு பெண்களும் காயம் அடைந்தனர்" என்று விஷ்வாஸ் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். category:Tagging:News Group Category: |
| குற்ற சம்பவங்கள் நடந்தால் ரெயில் பயணிகள் எங்கிருந்தும் புகார் செய்யலாம் Posted: 14 Mar 2014 08:00 AM PDT புதுடெல்லி, ஓடும் ரெயிலில் திருட்டு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்கிறபோது, பாதிக்கப்பட்ட நபர் எந்த போலீசில் புகார் செய்வது, எந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் வழக்கு பதிவு செய்வது என்பதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, ஓடும் ரெயிலில் ஒரு குற்றச்சம்பவம் நடக்கிறபோது, பாதிக்கப்பட்ட நபர் இனி எங்கிருந்து வேண்டுமானாலும் புகார் செய்யலாம். ரெயிலை விட்டு இறங்கியபிறகுகூட போலீசில் புகார் செய்யலாம். எந்தப் போலீசாரும் அதன்பேரில் வழக்கு பதிவு செய்வார்கள். அதைத் தொடர்ந்து குற்றச்சம்பவம் நடந்த எல்லைக்குள் அமைந்த போலீஸ் நிலையத்துக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் அனுப்பி வைக்கப்படும். சம்மந்தப்பட்ட போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைந்து எடுப்பார்கள்.இது தொடர்பான முடிவு, டெல்லியில் நடந்த உயர்மட்டக்கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. இதை டெல்லி போலீஸ் இணை கமிஷனர் முகேஷ் மீனா தெரிவித்தார்.
image: category:Tagging:News Group Category: |
| பத்திரிகையாளர் ஞாநி, ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார் Posted: 14 Mar 2014 07:57 AM PDT ஆலந்தூர், தமிழக அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ஞாநி, ஆம் ஆத்மி பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அப்போது ராம்சுப்பிரமணியன், பிரபாகர், ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஞாநி, பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் ஆம்ஆத்மி கட்சி மாற்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாற்றத்தை நோக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் மற்றும் அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றார். ஆம்ஆத்மி பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் கூறும்போது, தமிழகத்தில் 15-ல் இருந்து 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றார். image: category:Tagging:News Group Category: |
| குஜராத்தில் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து Posted: 14 Mar 2014 06:54 AM PDT பாரூச், குஜராத் மாநிலத்தில் உள்ள பஹாராச் மாவட்டத்தில் உள்ள அன்கலேஷ்வர் பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்தை அடுத்து 7க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் விரந்துள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. image: category:Tagging:News Group Category: |
| மத்திய மந்திரியை எதிர்த்து மிஸ் இந்தியா போட்டி ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்குகிறார் Posted: 14 Mar 2014 06:46 AM PDT புதுடெல்லி, முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால். இவரது மருமகன் விஜய்சிங்லா ரெயில்வே வாரிய உறுப்பினர் பதவி நியமனத்துக்கு ரூ.10 கோடி லஞ்சமாக கேட்ட வழக்கில் கைதானார். இந்த பிரச்சினையில் பவன்குமார் பன்சால் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் ஆட்சியில் 3 முறை மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் சண்டிகார் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மறைந்த நடிகர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா பட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அந்த தொகுதியில் 1999-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி குல்பனாக், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பல இந்தி படங்களிலும் நடித்துள்ள குல்பனாக்கின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எச்.எஸ்.பனாக். இவர் ஆம் ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். 35 வயதான நடிகை குல்பனாக் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
image: category:News Group Category: |
| இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி Posted: 14 Mar 2014 06:23 AM PDT லண்டன், இங்கிலாந்து நாட்டின் கிழக்கே உள்ள நார்போல்க் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன? பலியானோர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தில் அடுத்தடுத்து ஹெலிகாப்டர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 45 மைல்களுக்கு அப்பால் ஜனவரி மாதம் ஏற்பட்ட விபத்தில் 4 பேரும், ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கவ் நகரில் நவம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 10 பேரும் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
image: category:News Group Category: |
| சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாத புகார் ஆம் ஆத்மியினர் மீது குஜராத் போலீசார் வழக்கு Posted: 14 Mar 2014 06:16 AM PDT ஆமதாபாத், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ந்தேதி முதல் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் சுமார் 20 வாகனங்களில் கட்சியினரும் சென்றனர். இவ்வாறு ஆம் ஆத்மியினர் படான் மாவட்டத்தில் வராகி பகுதியில் சென்ற போது அங்குள்ள சுங்கச்சாவடியில் 20 வாகனமும் கட்டணம் செலுத்தவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர் முகேஷ் காத்வி போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ஆம் ஆத்மியினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாகனங்களின் ஓட்டுனர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதைப்போல கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட சம்கியாலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியிலும் ஆம் ஆத்மியினரின் 15 வாகனங்கள் பணம் செலுத்தவில்லை. இது குறித்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் தோமர் என்பவர் புகார் செய்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| ராகுலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை: வருண் காந்தி Posted: 14 Mar 2014 06:00 AM PDT புதுடெல்லி, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அவரது சகோதரரும் பாரதீய ஜனதாபொதுச்செயலளர்களில் ஒருவருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பில், ராகுல் காந்தியின் சகோதரர் வருண் காந்தி சுல்தான்பூரில் போட்டியிடுவார் என தெரிகிறது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வருண் காந்தி,அரசியலில் சில கோட்பாடுகளை பின்பற்றுகிறேன். அரசியல் தொடர்பாக சில நேர்மையான மனநிலையை கொண்டுள்ளேன். அரசியல் நாகரீகத்தை எப்போதுமே மீறுவதில்லை எனற நம்பிக்கையை நான் வைத்துள்ளேன்.எனவே நான் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். வருண் காந்தி தற்போது பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.அனோலா மக்களவை தொகுதி எம்.பியாக உள்ள மேனகா காந்தி, பிலிபிட்டில் இம்முறை போட்டியிடுவார் என்பதால் வருண் காந்தி சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனகூறப்படுகிறது. image: Tagging:News Group Category: |
| Posted: 14 Mar 2014 05:58 AM PDT |
| Posted: 14 Mar 2014 05:55 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

