Tamil Star |
- இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள போர்க்குற்றங்கள்:அல்ஜசீரா தகவல்
- தவானின் சதம் வீணானது: இந்தியா போராடி தோல்வி
- சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்
- ஷிகர் தவான் சதம்: வெற்றியை நோக்கி இந்தியா
- சாரதிகளுக்கு சவாலாக திகழும் மற்றொரு சாரதி……
- மொபைல் போனால் சீரழியும் பெண்ணின் வாழ்க்கை…….
- உடலில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லாமல் பிறந்த குழந்தை…..
- வித்தை காட்டுறதுல இவங்கள அடிச்சிக்க யாருமே இல்லை…..
- லண்டன் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிவசேனை……
- அடப்பாவிங்களா!… தூங்குற மனுஷனை இப்படியா எழுப்புவீங்க?….
- புதிய வசதிகளுடன் Angry Birds Star Wars II அப்டேட்
- புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்
- புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம்
- 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு
- நெல்சன் மண்டேலாவின் காதிற்குள் மறைந்துள்ள முயலை நீக்குமாறு உத்தரவு
- பிரித்தானிய தமிழ் அமைப்புக்களை சந்தித்த பின்னரே கமரூன் இலங்கை வந்தார்
- ஐநா உதவிச் செயலாளர் இலங்கை விஜயம்
- 22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி
- ஜப்பானில் திடீர் பனிப்பொழிவு
- பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் ரயில் விபத்து
| இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள போர்க்குற்றங்கள்:அல்ஜசீரா தகவல் Posted: 08 Feb 2014 10:48 PM PST இலங்கையில் போர்க்குற்றங்கள் மீண்டமட் தலைதூக்கியுள்ள என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அல்ஜசீரா வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2009 மார்ச் மாதம் வடக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கிய கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் செல் தாக்குதல்கள் இடம்பெற்றன. உணவுக்காக அப்பாவித் தமிழ்மக்கள் வரிசையில் நிற்கும்போது, செல் தாக்குதல் இடம்பெற்றது. அதன்போது, வரிசையில் நின்ற […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தவானின் சதம் வீணானது: இந்தியா போராடி தோல்வி Posted: 08 Feb 2014 10:44 PM PST நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்கள் குவித்தது, பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 202 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 'பாலோ-ஆன்' ஆன போதிலும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்கவில்லை. மாறாக 301 ஓட்டங்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம் Posted: 08 Feb 2014 10:43 PM PST சர்ச்சைக்குரிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாக வியூகம் தொடர்பான சட்ட மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.3 சிங்கப்பூரில் கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னிலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிப்பதில் இருந்து இலங்கை விலகியிருந்தது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எட்டு உறுப்பு நாடுகள் புதிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் பங்கேற்கவில்லை என்று சர்வதேச […] |
| ஷிகர் தவான் சதம்: வெற்றியை நோக்கி இந்தியா Posted: 08 Feb 2014 10:41 PM PST
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்கள் குவித்தது, பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 202 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 'பாலோ-ஆன்' ஆன போதிலும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்கவில்லை. மாறாக 301 ஓட்டங்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து தொடங்கியது, 41.2 ஓவர்களில் 105 ஓட்டங்கள் எடுத்தது. முடிவில் 407 ஓட்டங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 3-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 4 நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. ஓரளவு சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். அதைதொடர்ந்து புஜார 23 ஓட்டங்களுக்கும், கோஹ்லி 67 ஓட்டங்களுக்கும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 366 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாரதிகளுக்கு சவாலாக திகழும் மற்றொரு சாரதி…… Posted: 08 Feb 2014 10:40 PM PST |
| மொபைல் போனால் சீரழியும் பெண்ணின் வாழ்க்கை……. Posted: 08 Feb 2014 10:38 PM PST |
| உடலில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லாமல் பிறந்த குழந்தை….. Posted: 08 Feb 2014 10:35 PM PST
சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் சோதனை செய்த பார்த்த போது, குழந்தையின் உடலில் ஒருதுளி ரத்தம் கூட இல்லை என்பது தெரியவந்தது. மருத்துவர்களின் கணிப்பின் படி இக்குழந்தை கிட்டதட்ட 80 சதவிகித ரத்தத்தை தாயின் கர்ப்பத்திலேயே இழந்துள்ளது, இது கடுமையான ரத்த சோகையைக் குறிக்கிறது. பிரசவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்பே, குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லாததால் மருத்துவரை அணுகியுள்ளார் ஜெனிபர். இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையும், தாயும் காப்பாற்றப்பட்டனர். ஜெனிபரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே அவரையும்,அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இக்குழந்தை உயிருடன் பிறந்தது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது, இக்குழந்தையை பரிசோதித்த பிறகே நேரடியாக கருவிலேயே ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம் என சாரோன் பிலிகிரிம் என்ற நர்ஸ் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வித்தை காட்டுறதுல இவங்கள அடிச்சிக்க யாருமே இல்லை….. Posted: 08 Feb 2014 10:33 PM PST |
| லண்டன் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிவசேனை…… Posted: 08 Feb 2014 10:32 PM PST
புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 28ம் திகதி லண்டன் Cineworld Cinemas திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது. முழுக்க முழுக்க ஐரோப்பா குறிப்பாக லண்டன் நகரிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் சுஜித், கதாநாயகி தர்ஷியா, இன்னொரு கதாநாயகி அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிவசேனையின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்.ராதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் மட்டுமல்லாது அவர்கள் அனைவருமே புலம்பெர்ந்து வாழும் தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஒருவரான N. ராதா என்று அழைக்கப்படும் நாகரத்தினம் ராதா ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் சித்ரா என்கிற தொலைக்காட்சித் தொடரை 176 எபிசோடுகளுக்கும் மேலாக எழுதி இயக்கி தயாரித்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடப்பாவிங்களா!… தூங்குற மனுஷனை இப்படியா எழுப்புவீங்க?…. Posted: 08 Feb 2014 10:30 PM PST |
| புதிய வசதிகளுடன் Angry Birds Star Wars II அப்டேட் Posted: 08 Feb 2014 10:29 PM PST பேஸ்புக்கில் ஆரம்பித்து ஹேம் பிரியர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற Angry Birds ஹேம் ஆனது பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது. தற்போது Angry Birds Star Wars II எனும் பெயரில் 8 புதிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Carbonite Han Solo, Jabba the Hutt, Wicket the Ewok, Lando Bird, Royal Crimson Guard மற்றும் Tusken Raider எனும் கதாபாத்திரங்களும், போனஸ் கதாபாத்திரங்களாக Red Clone Trooper மற்றும் Jedi […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட் Posted: 08 Feb 2014 10:27 PM PST அப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் iPhone மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi வசதியினூடாகவோ அல்லது நேரடி இணைய இணைப்பின் ஊடாகவோ Mega தளத்தில் பேக்கப் செய்துகொள்ளும் PhotoSync எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு Passcode Lock எனும் மற்றுமொரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஊடாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம் Posted: 08 Feb 2014 10:26 PM PST உலகின் பிரபலமான இணைய உலாவிகளுள் ஒன்றாகத் திகழும் Firefox உலாவியின் மற்றுமொரு பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது. Windows, Mac மற்றும் Linux கணனிகளில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Firefox Aurora எனப்படும் இப்புதிய பதிப்பானது புதிய பயனர் இடைமுகத்தினையும், Firefox Sync எனும் வசதியையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இப்புதிய பதிப்பு Firefox உலாவியின் 29வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கச் சுட்டி |
| 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு Posted: 08 Feb 2014 10:24 PM PST
ஆப்ரிக்காவில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேலான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தடங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. இதனை முதன்முதலாக பார்த்த போது, என்ன என்பதை எங்களால் உறுதிபடுத்த முடியவில்லை என பிரிட்டிஷ் மியூசியத்தை சேர்ந்த நிக் ஆஷ்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தடங்களை ஆய்வு செய்த போது தான், பண்டையகால மனிதர்களின் தடங்கள் என்பது தெரியவந்துள்ளது. வடக்கு ஐரோப்பா பகுதியில் வாழ்ந்த மனிதர்களை ஆய்வு செய்ய இந்த தடங்கள் உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெல்சன் மண்டேலாவின் காதிற்குள் மறைந்துள்ள முயலை நீக்குமாறு உத்தரவு Posted: 08 Feb 2014 10:22 PM PST
தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலைக்குப் பின் அந்நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் 95வது வயதில் கடந்த மாதம் காலமானார். மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு, 30 அடி உயர வெண்கல சிலையை அமைத்துள்ளது. மண்டேலாவின் இறுதி சடங்கு முடிந்த, அடுத்த நாள் இந்தச் சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில், மண்டேலாவின் சிலையை வடித்த சிற்பிகள், சிறிய முயல் சிற்பத்தை, சிலையின் காதில் வடிவமைத்திருந்தனர். இந்த முயல், தலைவரது சிலைக்கு அவமான சின்னமாக உள்ளதாக, அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதையடுத்து, சிலையின் காதிற்குள் மறைவாக செதுக்கப்பட்ட, முயல் சிற்பத்தை நீக்கும்படி, சிலை அமைத்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரித்தானிய தமிழ் அமைப்புக்களை சந்தித்த பின்னரே கமரூன் இலங்கை வந்தார் Posted: 08 Feb 2014 10:15 PM PST
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பத, இலங்கைத் தமிழர் பிரச்சினை, இறுதிக்கட்ட போர், மனித உரிமைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்து தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐநா உதவிச் செயலாளர் இலங்கை விஜயம் Posted: 08 Feb 2014 10:12 PM PST
இரண்டு நாள் விஜத்தை மேற்கொண்டு இவர் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளார். இவர் நாளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் பீ.வி. ஜயசுந்தர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை ஐநாவின் உதவி செயலாளர் நாயகம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| 22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி Posted: 08 Feb 2014 10:07 PM PST பிரான்ஸ் நாட்டில் 22 வருடங்களுக்கு பிறகு இரட்டை சகோதரிகள் பேஸ்புக் உதவியால் ஒன்று சேர்ந்துள்ளனர். சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஷிம் மற்றும் பேபினி என்ற இரட்டையர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தனித்தனியாக தத்து கொடுக்கப்பட்டனர். இந்நிலையில் 21 வருடங்களாக வளர்க்கப்பட்டபின் ஷிம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட மற்றொரு 21 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தையும் அதில், பேபினி என்ற பெயரையும் பார்த்து அவளைக்காண மிகவும் முயற்சித்துள்ளார். அவர்கள் இருவரும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Feb 2014 10:05 PM PST ஜப்பான் தலைநகர் டோக்கியோவை திடீர் என தாக்கிய பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. காலையில் இருந்து இயல்பாகவே இருந்த டோக்கியோ வானிலையில் நன்பகல் நேரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் பஞ்சு பொதிகளைப் போல் பனி கொட்ட தொடங்கியது. சமீப காலமாக இதைப்போன்ற பனிப்பொழிவை சந்தித்திராத டோக்கியோ வாசிகள் நிலமையை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி போயினர். சாலைகளின் மீது 4 அங்குல கனத்துக்கு பனி மூடி இருந்ததால் பாதசாரிகளில் சிலர் வழுக்கி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் ரயில் விபத்து Posted: 08 Feb 2014 10:03 PM PST பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தென்பகுதியில் சுற்றுலா பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர். இந்த ரெயில் கடற்கரை நகரமான நைசிலிருந்து டிக்னே-லெ-பெய்ன்ஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது பாறை ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் தடம் புரண்டுள்ளது. தகவல் அறிந்தவுடன் அவசர சேவைப் பிரிவினரும், அருகிலிருந்த தீயணைப்பு படையினரும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். மொத்தம் 110 தீயணைப்பு வீரர்கள், 32 வாகனங்களுடன் இரண்டு ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விபத்து நடந்த சமயத்தில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














