Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் டெல்லியில் 17–ந்தேதி தர்ணா போராட்டம்

Posted: 08 Feb 2014 09:22 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதா பாராளுமன்றத்தில் வருகிற 21–ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜெகன்மோகன்ரெட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். வருகிற 17–ந்தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: வெங்கையா நாயுடு

Posted: 08 Feb 2014 08:56 PM PST

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையாநாயுடு பெங்களூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மக்கள் மனம் மோடி மீது திரும்பி இருக்கிறது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் மோடி பற்றிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. எனவே பா.ஜ.க.வுக்கு 300–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் இன மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்து வருகிறார்கள். ராஜஸ்தானில் மொத்தம்

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்

Posted: 08 Feb 2014 08:43 PM PST

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் ஏராளமான நிலங்களை வதேரா வாங்கியுள்ளார். இந்த நிலையில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி வதேரா நில மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சி உதவியுடன் வருவாய் துறையில் குறுக்கிட்டு, நிலங்களை அவர் மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட திருவனந்தபுரத்தில் இன்று நரேந்திர மோடி பேசுகிறார்

Posted: 08 Feb 2014 08:35 PM PST

குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி இன்று மாலை திருவனந்தபுரம் சங்கு முகத்தில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக அவர், விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வருகிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் எர்ணாகுளம் செல்கிறார். அங்கு கேரள மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநில தலைவர் முரளிதரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு எர்ணாகுளத்தில் இருந்து விமானம் மூலம்

ரெயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாது: மத்திய மந்திரி கார்கே பேட்டி

Posted: 08 Feb 2014 04:16 PM PST

பெங்களூர்-நாகர்கோவில் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா, பெங்களூர் பானசாவடி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு, புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ராஜ்யசபா தேர்தலில் தில்லுமுல்லு: காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அசாம் சட்டசபை முன்பு நிர்வாண போரட்டம்

Posted: 08 Feb 2014 04:04 PM PST

அனைத்து மாநிலங்களிலும் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலையொட்டி அசாம் மாநில எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: தீவிரவாதி யாசின் பத்கலிடம் போலீசார் தீவிர விசாரணை

Posted: 08 Feb 2014 03:46 PM PST

மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர் ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் இறந்தனர். 141 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில்

மும்பையில் மேற்கிந்திய வக்கீல்கள் சங்கத்தின் 150-வது ஆண்டுவிழா: ஜனாதிபதி கலந்து கொண்டார்

Posted: 08 Feb 2014 03:32 PM PST

மேற்கிந்திய வக்கீல்கள் சங்கத்தின் 150-வது ஆண்டுவிழா நேற்று மும்பையில் நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம், மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மகாராஷ்டிரா முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் காரில் இருந்த சுழல் விளக்கு அகற்றம்

Posted: 08 Feb 2014 03:23 PM PST

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு சமீபத்தில் பதவி ஏற்றது. அப்போது முதல்-மந்திரி, மந்திரிகள் தங்களது கார்களில் சைரன் சுழல் விளக்குகளை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்றும் தெரிவித்தனர்

முதல்வரான பின்னர் முதல் முறையாக அன்னா ஹசாரேவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

Posted: 08 Feb 2014 01:00 PM PST

அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனிக்கட்சி தொடங்கியபோது அதை கடுமையாக எதிர்த்த அன்னா ஹசாரே, 'அரசியலே சாக்கடை ஆகிவிட்டது. அதில் விழுந்தால் அரவிந்த் கெஜ்ரிவால்

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் விமான ஊழியர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்ட பயணிகள்

Posted: 08 Feb 2014 10:12 AM PST

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ-433 விமானம் 50 பயணிகளுடன் நேற்று பிற்பகல் கயாவிலிருந்து வாரணாசி வழியாக டெல்லி புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கமாக கொடுக்கப்படும் காலை உணவிற்குப் பதிலாக பிஸ்கட், டீ கொடுத்து உபசரித்துள்ளார்கள்

ஜன் லோக்பால் மசோதாவை கொண்டுவர எந்த எல்லைக்கும் போவேன்: கெஜ்ரிவால்

Posted: 08 Feb 2014 08:21 AM PST

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி மாநில அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், தற்போது ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதால் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக

ராமர் கோவில் பிரச்சினையை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறது பா.ஜனதா: முலாயம் சிங்

Posted: 08 Feb 2014 08:11 AM PST

ராமர் கோவில் கட்டுவதற்கு பிரச்சினைக்குரிய இடத்தை தவிர்த்து வேறு ஒரு இடத்தை வழங்கியும் பா.ஜ.க அதனை ஏற்கவில்லை. தோ்தல் ஆதாயத்துக்காகவே ராமர் கோவில் பிரச்சினையை பயன்படுத்துகிறது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் குற்றம்சாட்டியுள்ளார். லக்னோவில் நடந்த விவசாயக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:- நான் உத்தரபிரதேச

இந்தியா சிறந்த மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி

Posted: 08 Feb 2014 07:33 AM PST

மும்பையிலுள்ள கிஷின்சாந்த் செல்லராம் கல்லூரியின் வைர விழாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று துவக்கி வைத்து பேசியதாவது:- உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழங்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது கவலை அளிக்கிறது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு வீட்டுக்காவல்

Posted: 08 Feb 2014 06:02 AM PST

மருத்துவ பரிசோதனைக்காக புதுடெல்லிக்கு சென்ற காஷ்மீர் பிரிவினைவாத ஹரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை, ஹைதர்போராவில்

அந்தமான் விமான நிலையத்தில் இரவிலும் தரையிறங்கும் வசதியை விரைந்து அமைக்க முடிவு

Posted: 08 Feb 2014 04:50 AM PST

அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் உள்ள சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் இறங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் அந்தப் பகுதி வழியே செல்லும் 96 விமானங்களில் எதுவும் அங்கு இறங்குவதில்லை. அதுமட்டுமின்றி சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமான இங்கு சென்ற வருடம் 2,50,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். விமான நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை

டெல்லியில் மணிப்பூர் சிறுமி கற்பழிப்பு: பண்ணையார் மகன் கைது

Posted: 08 Feb 2014 04:37 AM PST

புதுடெல்லியின் தெற்கு பகுதியான முனிர்காவில், மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு விட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றாள். ஒரு மெடிக்கல் முன்னால் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பண்ணையாரின் மகனான விக்கி, அவளை தாக்கியுள்ளான். பின்னர், அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அருகில் காலியாக இருந்த அறையில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

உ.பி. நிவாரண முகாமில் நிமோனியா காய்ச்சலுக்கு சிறுமி பலி

Posted: 08 Feb 2014 04:18 AM PST

உத்திர பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்திற்கு அருகிலுள்ள மலாக்பூர் கிராம நிவாரண முகாமில் தங்கியிருந்த சம்ரின் சாகித் என்ற ஏழு வயது சிறுமி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சிறுமியின் குடும்பத்தினர் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து

ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற்ற சிபுசோரன் கட்சி எம்.எல்.ஏ.க்கள்

Posted: 08 Feb 2014 04:08 AM PST

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சவீதா மகதோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் கட்சி தலைமை அவரது பெயரை நீக்கிவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர்,

பாகிஸ்தான் செல்ல உதவுங்கள்: சோனியா-மன்மோகன் சிங்கிற்கு குஜராத் மீனவரின் மகள் கடிதம்

Posted: 08 Feb 2014 03:59 AM PST

குஜராத்தின் காரல் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஷியால் (35). அவர் பாகிஸ்தானிய அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜனவரி 4ம் தேதி அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். எனவே அவரது உடலை பெறுவதற்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™