Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 18 Feb 2014 06:23 AM PST

ஸமார்ட் கடிகார உற்பத்தியில் அப்பிள், கூகுள், ஹுவாவி, சம்சுங் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ள நிலையில், வளையும் தன்மை கொண்ட திரையை உடைய ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒன்று அறிமுகமாகவுள்ளது. Watch-Me எனப்படும் இந்த கடிகாரம் ஆனது Yoo Kwan என்பவரால் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2013ம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ஸமார்ட் கடிகாரமானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் முரளிதரன்

Posted: 18 Feb 2014 06:21 AM PST

கிரிக்கெட்டின் இணையதளமான கிரிக் இன்போ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது. 7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது. தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும், பரிந்துரை பட்டியலில் வார்னே (அவுஸ்திரேலியா), லாரா, முரளிதரன் (இலங்கை), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். கிரிக்கெட் பங்களிப்பு விருதை […]

கட்டுமாணப் பணிகளுக்கு உதவும் நவீன ரோபோ வடிவமைப்பு

Posted: 18 Feb 2014 06:20 AM PST

ஹவார்ட் கல்லூரியின் பொறியியல் மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு, ஹவார்ட் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரியல் ஈர்ப்பு பொறியியல் பகுதியான Wyss நிறுவனம் என்பன இணைந்து நவீன ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளனர். Termes என அழைக்கப்படும் இந்த ரோபோவானது சுயமாகவே கட்டுமாணப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் பூமியிலும், விண்வெளிகளிலும் மிகவும் பயன்மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பந்தா இல்லாத எளிமையான மனிதர் அஜித்: புகழும் நடிகர் ஜெயபிரகாஷ்

Posted: 18 Feb 2014 06:16 AM PST

ajith_jayaprakash_001.w245

ajith_jayaprakash_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ். பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள்

Posted: 18 Feb 2014 06:14 AM PST

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குரூப், டினோ குரூப் ஆகிய இரண்டு பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்ய வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களே இவ்வாறு குறித்த இளைஞர்களுக்கு பணம் வழங்கியுள்ளனர். […]

வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வில் 29 பிரேரணைகள் நிறைவேற்றப்ப​ட்டுள்ளது!

Posted: 18 Feb 2014 06:12 AM PST

வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வில் 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுகாணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் உள்ளிட்ட பிரேரனைகள் அடங்குகின்றது. வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையின் கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றுமு; எதிர்க்கட்சியாபன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்ட 29 பிரேரனைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக […]

காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு….. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த மனிதர்!…..

Posted: 18 Feb 2014 06:10 AM PST

car_bomp_001.w245

car_bomp_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் – செல்வம் எம்.பி

Posted: 18 Feb 2014 06:08 AM PST

திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை வெளிவந்தால் மட்டுமே வடக்கின் இனப்படுகொலை தெரியவரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாணம் முற்றிலும் எலும்புக்கூடுகளால் நிறைந்துள்ளது.காணாமல் போனோர் வடக்கிலேயே புதைக்கப்பட்டு விட்டனரா எனவும் கேள்வி எழுப்பினார்.   இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,   திருகோணமலையிலும் மனித எழும்புத் துண்டுகள் ஒரு தொகை […]

வரலாற்றில் முதன்முறையாக பத்திரிக்கை ஆசிரியராக பெண் நியமனம்

Posted: 18 Feb 2014 06:06 AM PST

வரலாற்றில் முதன்முறையாக சவுதி அரேபியாவில் ஆங்கில நாளேடு ஒன்றின் ஆசிரியராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியாக கடைவீதிக்கு செல்ல கூடாது, தலை முதல் கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிந்து ஆண் துணையுடன் தான் வெளியே செல்ல வேண்டும், வாகனங்களை ஓட்டும் உரிமம் மறுப்பு எனப் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் சவுதியின் ஜெட்டாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான சவுதி கெஸட் என்ற பத்திரிக்கையின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து

Posted: 18 Feb 2014 06:04 AM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இருதரப்பு […]

பொலிஸ் முகத்துல துப்பினால் சும்மாவா இருப்பாங்க!…..

Posted: 18 Feb 2014 06:01 AM PST

police_spit_001.w245

police_spit_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: விக்னேஸ்வரன்

Posted: 18 Feb 2014 05:59 AM PST

வடக்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தீர்வுகேட்டு நிற்பதாகவும் அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து பிபிசி செய்தியாளருக்கு அளித்திருந்த செவ்வியொன்றில் கூறியிருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் என்ன தவறு என்றும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். […]

குழந்தையை தவிக்க விட்டு “பாரில்” ஆட்டம் போட்ட தாய்

Posted: 18 Feb 2014 05:57 AM PST

mum_leaves_toddler_001

mum_leaves_toddler_001பிரான்சில் மூன்று வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு பாருக்கு சென்ற தாயின் அலட்சிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் முல்ஹவுஸ்(Mulhouse) நகரில் நேற்று முன்தினம், மூன்று வயது குழந்தையின் தாய்(22) குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு நண்பர்களுடன் பாருக்கு சென்றுள்ளார்.

தாய் சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை அழத்தொடங்கியதால் அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பொலிசார் குழந்தையை மீட்டதுடன், குழந்தையின் தாயார் இருக்கும் இடத்தை அறியும் நோக்கில், அவரது தொலைபேசிக்கு தொடர்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் பலமுறை அழைத்தும் அவர் அழைப்பினை ஏற்கவில்லை. இந்நிலையில் வெகு நேரங்களித்து வீடு திரும்பிய அவர், தன் குழந்தை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றதால் பொலிசாரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் இவரிடம் விசாரணை செய்த போது, தான் அமர்த்திய குழந்தை பராமரிப்பாளர் சரியாக குழந்தையை பார்த்துக்கொள்ளாமல் சீக்கிரம் வீடு திரும்பியதாக கூறியுள்ளார்.

எனினும் இதை நம்பாத பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைதொடர்ந்து தாம் குடிபோதையில் பாரில் படுத்துறங்கியதாக குற்றத்தை ஒப்புகொண்டதால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்று குழந்தைகளை தவிக்கவிட்டு தாயார் ஒருவர் வெளியே சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு!

Posted: 18 Feb 2014 05:55 AM PST

போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உலகில் எந்த நாடும் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பதில்லை எனவும் அவரது கோரிக்கை புலிகளின் பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று கூறியதாக திவயின தெரிவித்துள்ளது. போரில் கொல்லப்பட்ட புலிகளை நினைவுகூர அரசாங்கம் இடமளிப்பதில்லை என மனித உரிமை ஆணையாளரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் […]

பாகிஸ்தானில் இராணுவப்படை வீரர்களின் தலையை துண்டித்த தலிபான்கள்

Posted: 18 Feb 2014 05:54 AM PST

பாகிஸ்தானில் எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து தலிபான்கள் கொலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஒரு பிரிவினரான முகமது ஏஜென்சி நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யப்படாத பட்சத்தில், 23 பேரை கொலை செய்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிட […]

புலிக்கு உணவாக கூண்டிற்குள் குதித்த வாலிபர்….. கடைசியில் காப்பாற்றப்பட்டாரா?….

Posted: 18 Feb 2014 05:51 AM PST

tiger_man_001.w245

tiger_man_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மனித நேயத்துக்கு கிடைத்த வெற்றி: சீமான்

Posted: 18 Feb 2014 05:49 AM PST

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள்; 3 பேருடைய தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இது 22 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நீதியரசர் சதாசிவம் இந்த தீர்ப்பு மூலம் தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ் பற்றாளர்கள், ஆர்வலர்கள், சட்டக் கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, […]

தாடி, மீசையுடன் வலம் வரும் இளம்பெண்

Posted: 18 Feb 2014 05:46 AM PST

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆணாக மாற முடியாமலும், பெண்ணாக வாழ முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார். பிரித்தானியாவின் பெர்க்ஷையர் நகரில் வசித்து வருபவர் கர்னாம் கவுர்(வயது 23). 11 வயதாக இருந்த போது பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் தாக்கியதில் முகத்தில் முடி முளைக்க தொடங்கியது. பள்ளிக்கு சென்றபோது சக மாணவிகள் கேலி செய்தனர், இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்கத் தொடங்கினார். முகம் மட்டுமின்றி பின்னர் கை, கால், மார்பு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கணவனை புதைத்த பெண்

Posted: 18 Feb 2014 05:42 AM PST

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜியாஃப்ரே (60) என்பவருக்கு அந்நாட்டு அரசு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறி சில ஆண்டுகளாக அவரது மனைவி ரெபேக்கா ஸ்டர்டி ஓய்வூதியத்தை பெற்று வந்தார். எனினும், கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஜியாஃப்ரே யார் கண்களிலும் தென்பட்டதில்லை என்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அவரது ஓய்வூதிய கணக்கில் இருந்து 57 ஆயிரம் பவுண்டுகள் மனைவியின் கணக்குக்கு கைமாறியதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு – 67 ஆக அதிகரிப்பு

Posted: 18 Feb 2014 05:39 AM PST

திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராத புரம் சட்ட வைததிய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையில் 25 வது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனித புதை குழியின் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது. இதன் போது மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. -இந்த […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™