Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

Posted: 18 Feb 2014 10:20 PM PST

தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கிரண்குமார் ரெட்டி இன்று முதல்– மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். நீண்ட போராட்டத்துக்குப் பின் பாராளுமன்றத்தில் நேற்று மாலை தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் தீர்மானம் நிறைவேறியது. தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மந்திரிகளுடன் டெல்லிக்கு

கொலையுண்ட டி.பி. சந்திரசேகரன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மனைவியிடம் ஒப்படைப்பு

Posted: 18 Feb 2014 10:13 PM PST

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் டி.பி. சந்திரசேகரன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசினார். இதனால் கடந்த 2012–ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேருக்கு கொச்சி கோர்ட்டு

தெலுங்கானாவை எதிர்த்து பந்த்: பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைப்பு

Posted: 18 Feb 2014 09:34 PM PST

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1953–ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளை இணைத்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதே தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் சில தலைவர்கள் கூறினார்கள். பின்னாளில் இதுபற்றி பேசி தீர்வு காணலாம்

பாராளுமன்றத்துக்கு 6 கட்டமாக தேர்தல்: அட்டவணை விரைவில் வெளியாகிறது

Posted: 18 Feb 2014 09:08 PM PST

பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக் காலம் வரும் மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து முடித்து தயாராக உள்ளது. வரும் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகளில்

திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு போதை சிகரெட் விற்பனை செய்த 2 பேர் கைது

Posted: 18 Feb 2014 09:03 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர். இவரது சகோதரர் நசீர். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடைக்கு அருகில் ஒரு அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் இந்த கடைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கடையில் ரகசியமாக மாணவர்களுக்கு வெளிநாட்டு போதை சிகரெட்டுகள் விற்கப்படுவ தாக புகார் எழுந்தது.

சீமாந்திராவில் பந்த்: வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

Posted: 18 Feb 2014 08:59 PM PST

தெலுங்கானா மசோதா நிறைவேற்றம் காரணமாக சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்

நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ள மகாராஷ்டிர அரசு

Posted: 18 Feb 2014 07:44 PM PST

நாடெங்கும் நகரமாயமாக்கலும், தொழில்மயமாக்கலும் பெருகி வரும் நிலையில் அவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே ஓடும் நதிகளில் கலப்பதால் அவற்றின் தன்மை மாசடைந்து வருகின்றது. இந்த சூழ்நிலை மாசுபாட்டை களைந்து அவற்றைத் தூய்மையாக்க நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தை மகாராஷ்டிர அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கழிவு நீர் நேரடியாக நதிகளில் கலப்பது தடை செய்யப்பட்டு மறுசுத்திகரிப்பின்மூலம் அந்த நீர் விவசாயத்திற்கும், தொழில்துறை பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்படும் என்று

மோடி பொதுக்கூட்ட கட்டண வசூல்: பா.ஜனதாவுக்கு அனுப்பிய நோட்டீசை கலால் வரித்துறை வாபஸ் பெற்றது

Posted: 18 Feb 2014 07:19 PM PST

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அவரது பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களிடம் அக்கட்சியின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண வசூலுக்கு சேவை வரி விதிக்க மத்திய அரசு தீர்மானித்தது. இது தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கலால் வரி புலனாய்வு இயக்குனரகத்தின் லூதியானா பிரிவின் மூத்த அதிகாரி ராஜேஷ் கே அரோரா, சண்டிகார் நகர பாரதீய ஜனதா கட்சிக்கு கடந்த 12-ந்தேதி ஒரு நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- சண்டிகார் பிராந்தியத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு பல இடங்களில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. இந்த கூட்டங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று டிக்கெட் கட்டணம் வசூலிப்பது சேவைவரிக்கு உட்பட்டது ஆகும். மத்திய கலால் வரி சட்டத்தின் 14-வது பிரிவின்படி, இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அது

‘காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள்': நரேந்திர மோடி கடும் தாக்கு

Posted: 18 Feb 2014 04:23 PM PST

"காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள்" என்று நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். கர்நாடக பா.ஜனதா சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தாவணகெரேயில் நேற்று நடைபெற்றது.

உலகின் அதிக வயதான மனிதர் சதீஸ்கரில் வாழ்கிறாரா?

Posted: 18 Feb 2014 12:31 PM PST

உலக சாதனைகளை பதிவு செய்யும் 'கின்னஸ்' புத்தகத்தில் கண்டுள்ளபடி, இன்றைய தேதியில் உலகில் வாழும் அதிக வயதான ஆணாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 115 வயது நபரான மிசாவோ ஒக்காவோ அறியப்படுகிறார்.

சிறுத்தை தாக்கி 5 வயது சிறுவன் பலி

Posted: 18 Feb 2014 11:51 AM PST

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரபரா பகுதியை சேர்ந்த சிறுவன் அமன் துர்வே(5) தனது வீட்டு வாசலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பெட்ரோல் பங்கில் பங்குதாரர் ஆக்குவதாக ரூ.3.70 கோடி மோசடி: ராணுவ வீரரின் மனைவி கைது

Posted: 18 Feb 2014 11:08 AM PST

இந்தியா- சீன எல்லைப்பகுதியில் காவல் பனியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் கபூர் கடந்த 1992-ம் ஆண்டு எதிரிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.

'மகன் என்று உரிமை கோருபவருடன் சமரசம் செய்து கொள்கிறேன்’: ஐகோர்ட்டில் என்.டி.திவாரி புதிய மனு

Posted: 18 Feb 2014 10:03 AM PST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி(89). உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த இவர் மீது ஆந்திர கவர்னராக இருந்தபோது செக்ஸ் புகார் கூறப்பட்டது.

மம்தா பானர்ஜியுடன் அன்னா ஹசாரே சந்திப்பு: பிரதமராவதற்கு நேரில் ஆதரவா?

Posted: 18 Feb 2014 09:21 AM PST

காந்தியவாதியும் ஊழலுக்கு எதிராக போராடி வருபவருமான அன்னா ஹசாரே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் தனது கொள்கையை ஒத்திருப்பதாக கடந்த வாரம் புகழாரம் சூட்டினார்.

ஆம் ஆத்மி அரசு அறிவித்த திட்டங்கள் அடுத்த மாதம் வரை தொடரும்: ஆளுநர் ஒப்புதல்

Posted: 18 Feb 2014 08:15 AM PST

புதுடெல்லியில் கடந்த 14ம் தேதி ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில்

மக்களவைத் தேர்தலுக்குப்பின் மத்தியில் நிலையான அரசு: மம்தா விருப்பம்

Posted: 18 Feb 2014 07:39 AM PST

மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை சந்திப்பதற்காக மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி சென்றார். இதற்காக கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திற்கு வந்த மம்தா,

பழிக்கு பழி வாங்கியதா பாம்பு?: கடித்த பின் வாசலில் நின்று தடுத்ததால் வாலிபர் பலியான சோகம்

Posted: 18 Feb 2014 06:38 AM PST

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அமருஜாலா பகுதியில் தனது குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்த நபரை நள்ளிரவில் பாம்பு ஒன்று கடித்தது. அதோடு விடாமல் மறுநாள் காலை வரை வீட்டு வாசலில் அந்த பாம்பு நின்று கொண்டு, கடிபட்ட

தெலுங்கானா மசோதா நிறைவேறியதால் ஆந்திர மந்திரி ராஜினாமா

Posted: 18 Feb 2014 06:23 AM PST

தனித்தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் அம்மாநில கட்டுமான மற்றும் முதலீட்டுத்துறை மந்திரியுமான கண்டா ஸ்ரீரினிவாசா ராவ் தனது பதவியை இன்று ராஜினாமா

பாலியல் வழக்கில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் மந்திரிக்கு முன்ஜாமீன்

Posted: 18 Feb 2014 06:09 AM PST

ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷபீர் அகமது கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டாக்டர் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் சர்ச்சையில் சிக்கிய ஷபீர் அகமது கான் தனது மந்திரி

தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியது ஜனநாயக படுகொலை: ஜெகன் மோகன் ரெட்டி தாக்கு

Posted: 18 Feb 2014 05:32 AM PST

மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பின்போது பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், இந்த மசோதாவை நிறைவேற்றியதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், "மக்களவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இம்மசோதாவை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™