Tamil News | Online Tamil News |
- எனக்கு பிரதமர் பதவி லட்சியம் இல்லை:நவீன் பட்நாயக்
- எது ஆபாச புகைப்படம்? சுப்ரீம் கோர்ட் விளக்கம்
- கடத்தல் தங்கத்தால் அரசுக்கு ரூ.6,200 கோடி இழப்பு
- செங்கல்பட்டு- விழுப்புரம் இரட்டை பாதை: மார்ச் 2015க்கு மேல் ரயில்கள் இயங்க வாய்ப்பு
- எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்: விஜயகாந்த் அதிரடி கேள்வி
- காங்., அல்லாத ஆட்சியே எங்கள் கொள்கை: தேவர் நினைவிடத்தில் முழங்கிய ஜெயலலிதா
- அரசியலுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை என்கிறார் கெஜ்ரிவால்
- 'முடியாது' என்பது மாணவர் அகராதியில் இருக்கக்கூடாது: நரேந்திர மோடி அறிவுரை
- ஆறு ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிறைவேறுமா? பத்து நாட்களில் சாதனை படைப்பது சாத்தியமல்ல!
- தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு பதிவுஒரே நாளில்...: பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பேட்டி
- ஒரு குடும்பம் ஒரு கார்: மும்பை ஐகோர்ட் அறிவுரை
- மக்களை வஞ்சிக்கிறது காங்., : நரேந்திர மோடி குற்றச்சாட்டு
- விவசாயத்தில் முன்னேற்றம் : பவாருக்கு பிரணாப் பாராட்டு
| எனக்கு பிரதமர் பதவி லட்சியம் இல்லை:நவீன் பட்நாயக் Posted: புதுடில்லி:லோக்சபா தேர்தலுக்கு பிறகு எனக்கு பிரதமர் பதவியை அடையவேண்டும் என்ற எந்த ஒரு லட்சியமும் கிடையாது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.நேற்று துவாராகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒடிசா மக்களின் ஆசிர்வாதத்தால் தான் முதல்வராக இங்கே இருக்கி்ன்றேன். எனவே, நான் இந்த மாநிலத்திற்கு சேவை செய்வதையே விரும்புகிறேன்.அதனால் தான் பிரதமர் ஆவது ஒன்றும் எனது லட்சியம் இல்லை என தெரிவித்தாக கூறினார்.நவீன் பட்நாயக்கின் இந்த ... |
| எது ஆபாச புகைப்படம்? சுப்ரீம் கோர்ட் விளக்கம் Posted: புதுடில்லி : 'உணர்ச்சிகளை கொந்தளிக்க செய்து, தவறு செய்ய தூண்டி விடும் வகையில் இருக்கும் புகைப்படங்கள் தான், ஆபாச புகைப்படங்கள்' என, சுப்ரீம் கோர்ட், விளக்கம் அளித்துள்ளது.டென்னிஸ் வீரர்: கடந்த, 1993ல், ஜெர்மனி யைச் சேர்ந்த, முன்னாள் டென்னிஸ் வீரர், போரிஸ் பெக்கரும், அவரின் தோழியும், நிர்வாணமாகத் தோன்றும் புகைப்படம், பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது. இதற்கு எதிராக, கோல்கட்டாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார்.இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பத்திரிகை, சுப்ரீம் கோர்ட்டில் மனு ... |
| கடத்தல் தங்கத்தால் அரசுக்கு ரூ.6,200 கோடி இழப்பு Posted: புதுடில்லி : தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, சட்டத்திற்கு புறம்பாக, அதை இந்தியாவிற்கு கடத்தி வருவது அதிகரித்துள்ளது.கடந்த, 2013ம் ஆண்டு, இந்தியாவிற்கு, 150 - 200 டன் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இதனால், சுங்கம் உள்ளிட்ட இதர வரிகள் வாயிலான, 6,200 கோடி ரூபாய் வருவாயை, மத்திய அரசு இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மோகம்:கள்ளத்தனமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 200 டன் தங்கத்திற்கும், சந்தையில் தேவை உள்ளது. இது, இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம் சற்றும் குறையவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.அதனால், ... |
| செங்கல்பட்டு- விழுப்புரம் இரட்டை பாதை: மார்ச் 2015க்கு மேல் ரயில்கள் இயங்க வாய்ப்பு Posted: செங்கல்பட்டு - விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதை பணிகள், 80 சதவீத அளவில் முடியும் நிலையில் உள்ளன. மீதமுள்ள பணி முடிந்து, 2015 மார்ச்சுக்குப் பின், இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.தெற்கு ரயில்வே பிரதான பாதையாக உள்ள திருச்சி மார்க்கத்தில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை, இருவழிப் பாதையில், ரயில்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டிலிருந்து ஒரு வழிப்பாதை தான் உள்ளது.அதிகரித்து வரும் போக்கு வரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரை, இரட்டை ரயில்பாதையும், இரண்டாம் கட்டமாக, ... |
| எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்: விஜயகாந்த் அதிரடி கேள்வி Posted: லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட, 'சீட்' கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த், நேற்று நேர்காணல் நடத்தினார். அப்போது, 'எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், வெற்றி பெறலாம்' என, அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட விரும்பும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து, ஜனவரி, 23ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.விருப்ப மனு தாக்கல் மூலம், 1 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை இலக்கு நிர்ணயித்தது. அதனால், விருப்ப மனு சமர்ப்பிப்போர், அதற்கான, ... |
| காங்., அல்லாத ஆட்சியே எங்கள் கொள்கை: தேவர் நினைவிடத்தில் முழங்கிய ஜெயலலிதா Posted: 'காங்கிரஸ் அல்லாத ஆட்சியே, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையாக இருந்தது; அதுவே, அ.தி.மு.க.,வின் கொள்கை. தேவரின் கொள்கைகளை, வென்றெடுக்கும் காலம், வெகுதூரத்தில் இல்லை,'' என, பசும்பொன். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், முதல்வர், ஜெயலலிதா பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. 2010, அக்டோபர், 30ல் நடந்த, ஜெயந்தி விழாவிற்கு, ஜெ., வந்த போது, தேவர் சிலைக்கு, தங்கக் கவசம் அணிவிப்பதாக அறிவித்தார். அதன்படி, நேற்று, நினைவிடத்திற்கு வந்த, முதல்வர் ஜெ., தேவர் சிலைக்கு, தங்கக் கவசம் அணிவித்து, மலர் தூவி ... |
| அரசியலுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை என்கிறார் கெஜ்ரிவால் Posted: புதுடில்லி: ''நான் அரசியலுக்கு வருவேன் என, கனவிலும் நினைத்ததில்லை,'' என, 'ஆம் ஆத்மி' தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களிடம் கூறியதாவது:நான் அரசியலில் ஈடுபடுவேன் என, கனவிலும் நினைத்தது இல்லை. ஊழல் அரசியல்வாதிகள், கம்பெனி தலைவர்கள், சில அதிகாரிகள், சில மீடியாக்களின் தலைவர்கள், மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், சாதாரண அப்பாவி மக்களிடம் அந்த மகிழ்ச்சியை பார்க்க முடியவில்லை.நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், ஆட்சியை கலைத்துவிட்டு, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தயாராக ... |
| 'முடியாது' என்பது மாணவர் அகராதியில் இருக்கக்கூடாது: நரேந்திர மோடி அறிவுரை Posted: சென்னை : ''மாணவனுக்கு, அவன் பெற்ற பட்டங்கள் மீதும், மக்களுக்கு அரசு மீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கை இல்லை; இந்த நம்பிக்கையின்மையை போக்க, அனைவரும் பாடுபட வேண்டும்'' என, மாணவர்களுக்கு, நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.எஸ்.ஆர்.எம்., பல்கலையின், ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று, அப்பல்கலையின் வேந்தர் பாரிவேந்தர், தலைமையில் நடந்தது. குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10,290 மாணவ, மாணவியருக்கு, பட்டங்கள் வழங்கி பேசியதாவது:நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை ... |
| ஆறு ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிறைவேறுமா? பத்து நாட்களில் சாதனை படைப்பது சாத்தியமல்ல! Posted: அடுத்த லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் நாளை அறிய, நாடே காத்திருக்கிறது. இந்த நேரத்தில் பார்லிமென்ட் கடைசி கூட்டத் தொடர் நடக்கிறது. இதில், ராகுல் விரும்பும், குறிப்பிட்ட, ஆறு ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான்.முக்கியமான மசோதாக்கள் நிறைவேறும் என, பிரதமர், மன்மோகன் சிங் கூறுகிறார். ஆனால், இந்த தடவை பார்லிமென்ட் கூட்டத் தொடர், இயல்பாக முடங்காமல் விவாதங்களுடன் நடக்குமா என்ற சந்தேகத்தை, நிதியமைச்சர் சிதம்பரம் கிளப்புகிறார். இது அரசிடம் உள்ள பலவீனத்தை வெளிக்காட்டும் தகவல்.பார்லிமென்ட் முடங்கினால், ஒரு நாளைக்கு 3 கோடி ... |
| Posted: சென்னை: ''லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின், சட்டசபை தேர்தலும் நடத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர், சம்பத் தெரிவித்தார். தமிழகத்தில், ஒரே நாளில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து, பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த, தலைமை தேர்தல் கமிஷனர், சம்பத், நேற்று முன்தினம், சென்னை வந்தார். நேற்று காலை, அவர், தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தில், லோக்சபா தேர்தலை, எத்தனை கட்டமாக நடத்துவது, பாதுகாப்பு ... |
| ஒரு குடும்பம் ஒரு கார்: மும்பை ஐகோர்ட் அறிவுரை Posted: மும்பை: போக்குவரத்து நெரிசலை குறைக்க, "ஒரு குடும்பம் ஒரு கார்' என்ற முறையை கடைபிடிக்குமாறு, மும்பை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.போக்குவரத்து நெரிசல் : மும்பையில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும், தனித்தனி கார்களை பயன்படுத்துவதே, போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது. குடியிருப்பு சங்கங்களிடம் இருந்து, என்.ஓ.சி., பெற்றால் மட்டுமே, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், காரை பதிவு செய்கின்றனர்.வாகனங்களை நிறுத்த, போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், ஒரு வீட்டில் ... |
| மக்களை வஞ்சிக்கிறது காங்., : நரேந்திர மோடி குற்றச்சாட்டு Posted: கொச்சி: ""மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்., கட்சி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அபகரித்து, அவர்களை வஞ்சிக்கிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.கேரள மாநிலம், கொச்சியில், நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி, 60 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் உள்ளது. மக்கள் இடையே, பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய்கிறது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான உரிமைகளை பரிக்கும் சதிச் செயலை, காங்., கட்சி மேற்கொண்டு உள்ளது. தலித் மக்களுக்காக, டாக்டர் அம்பேத்கர் அளித்துள்ள சில உரிமைகளை ... |
| விவசாயத்தில் முன்னேற்றம் : பவாருக்கு பிரணாப் பாராட்டு Posted: நாக்பூர்: ""மத்திய அமைச்சரவையில், கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, விவசாயத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்,'' என, மத்திய அமைச்சர், சரத் பவாரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டினார். நாக்பூரில், "கிரிஷி வசந்த் 2014' என்ற ஐந்து நாள் தேசிய விவசாய கண்காட்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கிவைத்தார்.அப்போது அவர் கூறியதாவது: கடந்த பத்தாண்டுகளில், விவசாய துறையில் பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்து வியத்தகு சாதனை படைத்துள்ளோம். இந்த கால கட்டத்தில், விவசாய அமைச்சராக, சரத் பவார் பதவி வகித்து, புதிய வழியை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |