Daily Thanthi |
- சென்னையில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி பரிசீலனை
- நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி போராடி தோல்வி தவானின் சதம் வீண்
- பாபுவா நியூ கென்யா தீவில் பயங்கர நிலநடுக்கம்
- இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை நீங்குகிறது
- கர்நாடகாவுக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 201 ரன்னில் சுருண்டது
- சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து: மத்தியபிரதேசத்தை வென்றது தமிழகம்
- ‘2017–18–ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்’ சூரியனின் செயல்பாடை ஆராய ‘ஆதித்யா’ செயற்கைகோள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
- நடிகை நஸ்ரியா–நடிகர் பகத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி திருமணம்
- தி.மு.க. கொடுத்த புகார் மனு பரிசீலிக்கப்படுகிறது இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் பேட்டி
- இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
| Posted: 09 Feb 2014 11:54 AM PST சென்னை, பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்து இந்த மாதம் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஆலோசனை இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.சி.சம்பத், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அவர் சென்னை வந்தார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:– டெல்லியில் இன்று ''இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பின்னர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம், வருகிற 20–ந்தேதி (வியாழக்கிழமை) நடத்தப்படும். அதன்பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டுசெல்வது குறித்து ரெயில்வே துறையிடமும், தகவல் பரிமாற்றம் குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமும் ஆலோசனை நடத்தப்படும். ஒரே நாளில் தேர்தல்? இதுபோன்ற கூட்டங்களில், தேர்தல் நடத்தும் நடைமுறைகள், வாக்குச்சாவடியில் செய்து தரப்பட வேண்டிய வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, உள்ளிட்ட அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்படும். அதன்பின்னர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அகில இந்திய அளவில் கடந்த 4–ந்தேதி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் எந்த தேதியில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி.யின் (ராமானுஜம்) பதவிகால நீட்டிப்பு குறித்தும், அவரை தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது என்றும், ஒரு கட்சி (தி.மு.க.) சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். விரைவில் அது குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்படும். 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 10–ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் புதிய வாக்காளர்களாக 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட சரிபார்ப்பு பணியின் அடிப்படையில் 10 லட்சம் பேர், முகவரி இல்லை என்ற காரணத்துக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களை போலி வாக்காளர்கள் என்று கூறி விட முடியாது. ஏனென்றால் பலர் இடம் மாறி சென்று இருக்கலாம். பலர் வாடகை வீடுகள் மாறி இருக்கலாம். என்றாலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முகவரி சம்பந்தபட்ட ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் 'பூத் சிலிப்' கடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனி இதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குசாவடி சீட்டு (பூத் சிலிப்) கொடுத்துவிடுவோம். அதை வைத்தோ அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வைத்தோ ஓட்டு போட முடியும்''. இவ்வாறு சம்பத் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி போராடி தோல்வி தவானின் சதம் வீண் Posted: 09 Feb 2014 11:51 AM PST ஆக்லாந்து, நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த திரிலிங்கான முதலாவது டெஸ்டில் இந்திய அணி போராடி தோற்றது. ஆக்லாந்து டெஸ்ட் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க்கில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 503 ரன்களும், இந்தியா 202 ரன்களும் எடுத்தன. இந்தியா 'பாலோ-ஆன்' ஆன போதிலும் அதை கொடுக்காமல் 301 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அதிர்ச்சிகரமாக வெறும் 105 ரன்னில் சுருண்டது. இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மலைப்பான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 49 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தவான் சதம் இந்த நிலையில் வெற்றிக்கு மேலும் 320 ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்தனர். புஜாரா மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து ஷிகர் தவானும், துணை கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். ஷாட்-பிட்ச் பந்து வீச்சை அதிக கவனமுடன் எதிர்கொண்ட இவர்கள், பெரும்பாலும் அவ்வகை பந்தை அடிப்பதை தவிர்த்தனர். அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர் ஈஷ் சோதியின் பந்து வீச்சை நொறுக்கினர். இவரது ஒரே ஓவரில் கோலி 3 பவுண்டரிகளை விளாசினார். இதே போல் தவான் தொடர்ந்து சிக்சர், இரண்டு பவுண்டரிகளை ஓட விட்டு தனது 2-வது சதத்தை கடந்தார். 1979-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் வெளிநாட்டு டெஸ்டில் 4-வது இன்னிங்சில் செஞ்சுரியை பதிவு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாடிய விதம் அணிக்கு நம்பிக்கையை உருவாக்கிய நிலையில், கோலி தேவையில்லாத ஒரு ஷாட்டை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் ஆப்-சைடுக்குக்கு ரொம்ப வெளியே வீசிய பந்தை 'கட்' செய்வதற்கு பதிலாக புல்ஷாட் அடிக்க முயற்சித்த போது பந்து பேட்டை உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச்சாக போய் விழுந்தது. கோலி 67 ரன்களுடன் (102 பந்து, 12 பவுண்டரி) வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 222 ரன்களாக இருந்தது. ரஹானேவுக்கு தவறான அவுட் இதன் பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தன. வாக்னெர் திடீரென வீசிய பயங்கரமான ஒரு பவுன்சரை ஷிகர் தவான் (115 ரன், 211 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) துள்ளி குதித்து தவிர்க்க முயற்சித்த போதிலும், அது அவரது கையுறையில் (க்ளோவ்ஸ்) உரசியபடி விக்கெட் கீப்பரின் கையில் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக ரஹானே 18 ரன்னிலும், ரோகித் ஷர்மா 19 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதில் ரஹானேவுக்கு, பேட்டின் உள்பகுதியில் பட்ட பந்துக்கு நடுவர் அநியாயமாக எல்.பி.டபிள்யூ. கொடுத்து விட்டார். இதையடுத்து கைகோர்த்த கேப்டன் டோனியும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்ததுடன், ஆட்டத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. இவர்களின் அதிரடியை கண்டு, நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் பதற்றத்திற்குள்ளானார். பீல்டிங் வியூகங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். அணியின் ஸ்கோர் 324 ரன்களாக உயர்ந்த போது, ஜடேஜா 26 ரன்களில் (21 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜாகீர்கான் தனது பங்குக்கு 17 ரன்கள் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். இந்தியா தோல்வி என்றாலும் கேப்டன் டோனி களத்தில் நின்றதால் ரசிகர்களின் நம்பிக்கை தளரவில்லை. அதே நேரத்தில் நியூசிலாந்து வீரர்களிடம் பீதியும் குறையவில்லை. கடைசியில் டோனி (39 ரன், 41 பந்து, 6 பவுண்டரி) நீல் வாக்னெரின் பந்து வீச்சை அடித்து விளையாட முற்பட்ட போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்த ஓவரில் இஷாந்த் ஷர்மாவும் (4 ரன்) நடையை கட்ட பரபரப்பு அடங்கியது. முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 366 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து திரில் வெற்றியை ருசித்தது. இந்தியா மட்டும் இந்த ஸ்கோரை எட்டிப்பிடித்திருந்தால் நியூசிலாந்து மண்ணில் 400 ரன்களுக்கு மேலான ஸ்கோரை சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கும். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் இந்த இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். முதலாவது இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 12 ஆண்டுக்கு பிறகு... டெஸ்டில் நியூசிலாந்து அணி இந்தியாவை தோற்கடிப்பது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2002-ம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த டெஸ்டில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதன் பிறகு இந்தியாவுடன் விளையாடிய 10 டெஸ்டுகளில் (4 தோல்வி, 6 டிரா) ஒரு வெற்றி கூட பெறாமல் தவித்த நியூசிலாந்து, நீண்ட நாள் வெற்றி தாகத்தை இப்போது தணித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து 503 இந்தியா 202 2-வது இன்னிங்ஸ் நியூசிலாந்து 105 இந்தியா விஜய்(சி)வாட்லிங்(பி)சவுதி 13 தவான் (சி) வாட்லிங் (பி) வாக்னெர் 115 புஜாரா (சி) வாட்லிங் (பி) சவுதி 23 கோலி (சி) வாட்லிங் (பி) வாக்னெர் 67 ரோகித் ஷர்மா (சி) வாட்லிங் (பி) சவுதி 19 ரஹானே எல்.பி.டபிள்யூ (பி) பவுல்ட் 18 டோனி (பி) வாக்னெர் 39 ஜடேஜா (சி) சோதி (பி) பவுல்ட் 26 ஜாகீர்கான் (சி) டெய்லர் (பி) வாக்னெர் 17 இஷாந்த் ஷர்மா(சி)வாட்லிங் (பி) பவுல்ட் 4 முகமது ஷமி (நாட்-அவுட்) 0 எக்ஸ்டிரா 25 மொத்தம் (96.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 366 விக்கெட் வீழ்ச்சி: 1-36, 2-96, 3-222, 4-248, 5-268, 6-270, 7-324, 8-349, 9-362 பந்து வீச்சு விவரம் டிரென்ட் பவுல்ட் 23.3-2-86-3 டிம் சவுதி 23-4-81-3 வாக்னெர் 25-8-62-4 ஆண்டர்சன் 7-1-22-0 சோதி 15-2-78-0 வில்லியம்சன் 3-0-18-0 'மோசமான கேப்டன் டோனி' இந்தியாவின் வெற்றிகரமாக கேப்டன் யார் என்றால் அது டோனி என்பதை மறுக்க முடியாது. ஆனால் இப்போது வெளிநாட்டு மண்ணில் சொதப்பும் கேப்டன் என்ற அவப்பெயருக்கும் ஆளாகி இருக்கிறார். இதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. * வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்டுகளில் தோற்ற இந்திய கேப்டனாக டோனி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை 22 வெளிநாட்டு டெஸ்டுகளில் விளையாடி அதில் 5–ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11–ல் தோல்வியும், 6–ல் டிராவும் கண்டுள்ளது. இந்த வகையில் இதற்கு முன்பு அன்னிய தேசத்தில் அதிக முறை மண்ணை கவ்விய இந்திய கேப்டன்களாக முகமது அசாருதீன் (27 டெஸ்டில் 10 தோல்வி), சவுரவ் கங்குலி (28 டெஸ்டில் 10 தோல்வி), பட்டோடி (13 டெஸ்டில் 10 தோல்வி) ஆகியோர் இருந்தனர். * இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் வெற்றியை பதிவு செய்து இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டது. 2011–ம் ஆண்டு ஜூனில் இருந்து தற்போது வரை வெளிநாட்டு மண்ணில் களம் இறங்கிய 13 டெஸ்டுகளில் 10–ல்தோல்வியும், 3–ல் டிராவும் சந்தித்துள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடிய 13 டெஸ்டுகளில் 11–ல் இந்தியா வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. * டெஸ்டின் 4–வது இன்னிங்சில் சதம் அடித்த 4–வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முஷ்டாக் அலி, சுனில் கவாஸ்கர் (4 முறை), வாசிம் ஜாபர் ஆகியோர் இந்த சாதனைக்குரியவர்கள் ஆவர். * இந்த டெஸ்டில் இந்தியாவின் 20 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களே கழற்றினர். டெஸ்டில் 20 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இது 12–வது நிகழ்வாகும். மெக்கல்லம் கருத்து நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் கூறுகையில், ' ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றம் இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு பலமான நெருக்கடியை அளித்தனர். நீல் வாக்னெரின் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெற்றி பெறுவது சாதாரண காரியமல்ல. இந்த வெற்றி நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும். நீங்கள் சொந்தமாக ஒரு முடிவு எடுக்கும் போது, அதை நினைத்து வருத்தமடைய கூடாது. பாலோ–ஆன் விஷயத்தில் பந்து வீச்சாளர்கள், சீனியர்களிடம் பேசும் போது, சிலர் வேறு விதமான கருத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் இறுதியில் ஒரு முடிவு மட்டுமே எடுக்க முடியும். இந்தியாவுக்கு பாலோ–ஆன் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற முடிவால் நான் எந்த ஒரு நேரத்திலும் வருத்தம் அடையவில்லை. ஒரு வேளை இந்தியாவுக்கு பாலோ–ஆன் கொடுத்து அவர்களை நாங்கள் 100 ரன்களுக்குள் சுருட்ட முடியும் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது?' என்றார். image: category:Tagging: |
| பாபுவா நியூ கென்யா தீவில் பயங்கர நிலநடுக்கம் Posted: 09 Feb 2014 11:45 AM PST லண்டன், பாபுவா நியூ கென்யா தீவில் நேற்று இரவு 8.26 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த தகவலை அமெரிக்க புவியியல் அமைப்பு அறிவித்து உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை நீங்குகிறது Posted: 09 Feb 2014 11:39 AM PST புதுடெல்லி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நிர்வாகிகள் தேர்தல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த 65 வயதான என்.ராமச்சந்திரன் உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். இவரது இளைய சகோதரர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் ஆவார். இந்திய கோ-கோ சம்மேளன தலைவர் ராஜீவ் மேத்தா, ஐ.ஓ.ஏ.-யின் பொதுச் செயலாளராகவும், இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில்கண்ணா பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதே போல் ஒரு சீனியர் துணைத்தலைவர், 6 இணைச் செயலாளர்கள் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வானார்கள். 8 துணைத்தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டதால் அதற்கு மட்டும் தேர்தல் நடந்தது. மொத்தம் 138 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் 2016-ம் ஆண்டு வரை நீடிப்பார்கள். பிரச்சினை என்ன? இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முந்தைய தேர்தல், ஒலிம்பிக் சாசனப்படி நடக்கவில்லை. அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) விதிமுறை அதில் கடைபிடிக்கப்படவில்லை. ஊழல் புகாரில் சிக்கிய அபய் சிங் சவுதாலா, லலித் பனோட் உள்ளிட்டோர் நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனை ஏற்க மறுத்த ஐ.ஓ.சி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை 2012-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஐ.ஓ.சி.யின் புதிய சட்ட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி தற்போது தேர்தல் நடந்துள்ளது. தடை நீங்குகிறது ஐ.ஓ.சி.யின் 3 பேர் கொண்ட கமிட்டி தேர்தல் கண்காணிப்பாளராக செயல்பட்டது. அந்த கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராபின் மிட்செல் கூறுகையில், 'ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் தேர்தல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் சோச்சி நகருக்கு நாளை (இன்று) சென்று விடுவோம். அங்கு ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பாச்சிடம் எங்களது அறிக்கையை சமர்ப்பிப்போம். அவர் செயற்குழு கூட்டத்தை கூட்டியதும், இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். கூடிய சீக்கிரம் ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை தளர்த்தப்படும் என்று நம்புகிறோம்' என்றார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள் இந்திய தேசிய கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் கவுன்சிலின் கொடியின் கீழ் தான் விளையாடி வருகிறார்கள். ஆனால் ஐ.ஓ.சி.யின் செயற்குழு கூட்டம், குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு முன்பாக நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட்டால், மூன்று இந்திய வீரர்களும் நிறைவு விழாவில் நமது தேசிய கொடியின் கீழ் அணிவகுத்து செல்வார்கள். image: category: |
| கர்நாடகாவுக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 201 ரன்னில் சுருண்டது Posted: 09 Feb 2014 11:28 AM PST பெங்களூர், ரஞ்சி சாம்பியன் கர்நாடகா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த கர்நாடக கேப்டன் வினய்குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் செய்த ஹர்பஜன்சிங் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கர்நாடகாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 91 ரன்களும், அமித் மிஸ்ரா 47 ரன்களும் எடுத்தனர். முன்னதாக டாப்–4 பேட்ஸ்மேன்களான ஜிவான்ஜோத் சிங் (0), பாபா அபாரஜித் (2 ரன்), கெதார் ஜாதவ் (2 ரன்), கவுதம் கம்பீர் (22 ரன்) ஆகியோர் வரிசையாக எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கர்நாடகா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் வினய்குமார் 6 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளும் அள்ளினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி முதல் நாள் முடிவில் உத்தப்பாவின் (0) விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. image: category:Tagging: |
| சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து: மத்தியபிரதேசத்தை வென்றது தமிழகம் Posted: 09 Feb 2014 11:24 AM PST சென்னை, சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் கால்ஸ் 36–வது சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் தொடர்ந்து அசத்தி வரும் நடப்பு சாம்பியன் தமிழக அணி நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 25–10, 25–12, 25–5 என்ற நேர் செட்டில் தோற்கடித்தது. ராஜஸ்தான், ஆந்திரா, பஞ்சாப், கேரளா அணிகளும் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் தமிழக அணி 25–12, 25–9, 25–6 என்ற நேர் செட்டில் பஞ்சாப்பை வீழ்த்தியது. டெல்லி, குஜராத், மேற்கு வங்காளம், மராட்டிய அணிகளும் தங்களது லீக்கில் வெற்றி கண்டன. image: category:Tagging: |
| Posted: 09 Feb 2014 09:58 AM PST சேலம் 'சூரியனின் செயல்பாடை ஆராய 'ஆதித்யா' செயற்கைகோள் 2017–18–ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்' என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். நிறைவு விழா சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்ததின நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில், பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்திட்ட இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, விவேகானந்தரின் பிறந்தநாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சந்தர்ப்பம் முக்கியம் சந்திரன், செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து தற்போது சூரியனையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. விண்வெளியில் நான் செய்த சின்ன சின்ன சாதனைகள் தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தி காட்டுகிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய கால கட்டத்தில் சந்தர்ப்பம் என்பது மிக மிக குறைவு. வாழ்க்கையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நேர்திசையுடனும், வேகத்துடனும் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சந்தர்ப்பங்கள் கிடைப்பதைவிட கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 1982–ல் பெங்களூரில் சாதாரண விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இருந்தது. அதன்பிறகு நாளடைவில் நாசா, ஈசா என உலகத்தரத்திற்கு இணையாக தற்போது அங்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விரைவில் உருவாக வாய்ப்புள்ளது.' இவ்வாறு அவர் கூறினார். 'ஆதித்யா' செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் இதைத்தொடர்ந்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:– 'சந்திரயான் விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது சந்திரயான்–2 திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலம் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 24–ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுபாதையை சென்றடையும். சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அடுத்து சூரியனின் செயல்பாடை ஆராய்ச்சி செய்ய 'ஆதித்யா' செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் சூரியனின் இயக்கத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். 'ஆதித்யா' செயற்கை கோள், 2017–18 ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும். அதற்கான பணியை மேற்கொண்டுள்ளோம். அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மற்ற நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்' இவ்வாறு அவர் கூறினார்.
image: category:Tagging:News Group Category: |
| நடிகை நஸ்ரியா–நடிகர் பகத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி திருமணம் Posted: 09 Feb 2014 09:56 AM PST திருவனந்தபுரம், நடிகை நஸ்ரியா நசீம்– நடிகர் பகத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் நடந்தது. நடிகை நஸ்ரியா நசீம் ''நையாண்டி'', ''நேரம்'' என்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நஸ்ரியா நசீம். பல மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ''கையெத்தும் தூரத்து'', ''டய டண்ட் நெக்லஸ்'' போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பகத் பாசில். நிச்சயதார்த்தம் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வதற்கு, இவர்களது பெற்றோர்கள் தீர்மானித்தனர். அதன்படி, நேற்றுமுன்தினம் பகல் 12.30 மணியளவில் திருவனந்தபுரம் தாஜ்விவான்டா அரங்கில் நடிகை நஸ்ரியா நசீம் – நடிகர் பகத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான விருந்து வருகிற 24–ந் தேதி நடைபெறும் என்றும் அது பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடிகை நஸ்ரியா–நடிகர் பகத் பாசில் திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள அன்சாஜ் கன்வென்சன் சென்டரில் நடை பெறுகிறது. நிச்சயதார்த்தம் நடந்ததும் நடிகர் பகத் பாசில், கூறுகையில் ''திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா தொடர்ந்து படத்தில் நடிப்பார். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. நஸ்ரியா நடித்த நேரம் என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் அவரது நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இருவருக்கும் பல திரைப்படங்கள் படப்பிடிப்பில் இருப்பதால் திருமணம் ஆகஸ்டில் நடத்த தீர்மானிக்கப்பட்டது'' என்றார். குடும்ப வாழ்க்கை நடிகை நஸ்ரியா நசீம் கூறியதாவது:– நானும் பகத்தும் தற்போது ''பெங்களூர் டேய்ஸ்'' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறோம். பகத் நடித்த திரைப்படங்களை நான் மிகவும் விரும்பி பார்த்து ரசித்தேன். அதன் மூலம் அவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்தார். எதிர்பாராமல் நடிப்புலகில் கால் பதித்த நான், குடும்ப வாழ்க் கைக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். இவ்வாறு நடிகை நஸ்ரியா நசீம் கூறினார் image: category:News Group Category: |
| தி.மு.க. கொடுத்த புகார் மனு பரிசீலிக்கப்படுகிறது இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் பேட்டி Posted: 09 Feb 2014 09:50 AM PST சென்னை, தமிழக டி.ஜி.பி.யை தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது என்று தி.மு.க. கொடுத்த புகார் மனு பரிசீலிக்கப்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார். ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்திய தேர்தல் கமிஷனின் தலைமை ஆணையர் சம்பத் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:– இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பின்னர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோரை இணைத்து ஆலோசனை கூட்டம் வரும் 20–ந்தேதி(வியாழன்கிழமை) நடத்தப்படும். அதன்பின்பு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டுசெல்வது குறித்து ரெயில்வே துறையிடமும், தகவல் பரிமாற்றம் குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமும் ஆலோசனை நடத்தப்படும். தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது இதுபோன்ற கூட்டங்களில், தேர்தல் நடத்தும் நடைமுறைகள், வாக்குச்சாவடியில் செய்து தரப்பட வேண்டிய வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்படும். அதன்பின்னர் தேர்தல் தேதியானது அறிவிக்கப்படும். அகில இந்திய அளவில் கடந்த 4–ந்தேதி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலகட்டம் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி.யின் பதவிகால நீட்டிப்பு குறித்தும் அவரை தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது என்றும் ஒரு கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். விரைவில் அதுகுறித்து முடிவு செய்யப்படும். பெயர் நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 10–ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் புதிய வாக்காளர்களாக 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட சரிபார்ப்பு பணியின் அடிப்படையில் 10 லட்சம் பேர், முகவரி இல்லை என்ற காரணத்துக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களை போலி வாக்காளர்கள் என்று கூறி விட முடியாது. ஏனென்றால் பலர் இடம் மாறி சென்று இருக்கலாம். பலர் வாடகை வீடுகள் மாறி இருக்கலாம். என்றாலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முகவரி சம்பந்தபட்ட ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம். கடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனி இதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குசாவடி சீட்டு(பூத் ஸ்லிப்) கொடுத்துவிடுவோம். அதை வைத்தோ அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வைத்தோ ஓட்டு போட முடியும். இவ்வாறு அவர் கூறினார். category:Tagging:News Group Category: |
| இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள். Posted: 09 Feb 2014 09:46 AM PST |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
