Tamil News | Online Tamil News |
- உ.பி.,யில் சிறப்பான சட்டம், ஒழுங்கினை எப்படி எதிர்பார்க்க முடியும்: மத்திய அரசுக்கு முலாயம் கேள்வி
- பற்றி எரிகிறது தீபாவளி வசூல் தீ ; காட்டி கொடுத்தது டைரி : அம்பலமானதால் தீயணைப்புத்துறை அலறல்
- 'பணாலாகிப்'போன மரக்கன்று வளர்ப்பு திட்டம்: முதல்வர் பிறந்தநாளுக்கு இந்தாண்டும் ஏற்பாடு
- முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பு
- 'கேப்டன் உறவே வேண்டாம்': தி.மு.க., மாவட்ட செயலர்கள் கடுப்பு
- 'ராணி'யை வீழ்த்த ராஜாவை ஒதுக்கு!கேப்டனின் கனவு கூட்டணி கணக்கு
- அரிசிக்கு சேவை வரியா? கருணாநிதி கடும் எதிர்ப்பு
- ஹெலிகாப்டர் 'டீல்' போட 'மாஜி'க்கு இத்தாலியில் விருந்து
- டில்லி கவர்னருடன் முதல்வர் கெஜ்ரிவால் தகராறு: ஜனலோக்பால் மசோதா விவகாரத்தில் காரசார கடிதம்
- மோடி பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள 5 லட்சம் பேர் ஆர்வம் : பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னையில் பிரமாண்ட விழா
| உ.பி.,யில் சிறப்பான சட்டம், ஒழுங்கினை எப்படி எதிர்பார்க்க முடியும்: மத்திய அரசுக்கு முலாயம் கேள்வி Posted: லக்னோ: 21 கோடி மக்கள் தொகை கொண்ட உ.பி.,மாநிலத்தில் நல்லதொரு சட்டம் ,ஒழுங்கை எப்படி எதிர்பார்க்க முடியும் என சமாஜ்வாதிகட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சிஆட்சி நடக்கிறது. முதல்வராக அகிலேஷ்யாதவ் உள்ளார். இம்மாநிலத்தில் நிலவும் மத மோதல்கள்,வன்முறைகளால் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. கடந்தாண்டு நடந்த முசாபர்நகர் கலவரம் மாநிலத்தை ஆளும் முதல்வர் அகிலேஷ் அரசிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின.அதிகரிக்கும் மத மோதல்கள்இந்நிலையில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் ... |
| பற்றி எரிகிறது தீபாவளி வசூல் தீ ; காட்டி கொடுத்தது டைரி : அம்பலமானதால் தீயணைப்புத்துறை அலறல் Posted: கோவை : ஓட்டல், லாட்ஜ், பள்ளி மற்றும் கல்லூரிகளில், தீயணைப்புத்துறையின் நடத்திய வசூல் வேட்டை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தீயணைப்புத்துறையின் முத்திரையுடன் சிக்கியுள்ள 'டைரி' யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு அரசு துறை அதிகாரிகள் அவரவர் பதவிக்கு தகுந்தாற்போன்று, வசூலில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. ஆனால், கோவை தீயணைப்புத்துறையினர் வழக்கமான இந்த நடைமுறையில் இருந்து, தங்களை வித்தியாசப்படுத்தியுள்ளனர். தீபாவளி முடிந்து இரண்டு மாதமாகியும், இன்னும் வசூல் தொடர்ந்து கொண்டுள்ளனர்.'தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம், கோவை ... |
| 'பணாலாகிப்'போன மரக்கன்று வளர்ப்பு திட்டம்: முதல்வர் பிறந்தநாளுக்கு இந்தாண்டும் ஏற்பாடு Posted: உத்தமபாளையம்:கடந்த ஆண்டில், முதல்வர் ஜெ., பிறந்த நாளுக்கு திட்டமிடப்பட்ட 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பராமரிப்பின்றி, நிதி மட்டும் 'ஸ்வாகா' செய்யப்பட்டதால், 'பணாலாகிப்' போன நிலையில், இந்தாண்டும் 66 லட்சம் கன்றுகள் நடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.முதல்வர் ஜெ., 66வது பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், இந்த பிறந்தநாளில், குறிப்பிடும் படியான திட்டங்களை அறிவித்து, மக்களிடையை கொண்டு சேர்க்க ஏற்பாடுகள் நடக்கிறது. கடந்தாண்டு முதல்வரின் 65வது பிறந்தநாளையொட்டி, சமூகநலத் திட்டமாக, தமிழகமெங்கும் 65 லட்சம் ... |
| முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பு Posted: ஆமதாபாத்: ''எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என, விரும்புகின்றன. ஆனால், பா.ஜ., மட்டும் தான், மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.சம உரிமை கொண்ட சமுதாயம்:குஜராத்தின், ஆமதாபாத் நகரில், முஸ்லிம் தொழில் துறையினர் ஏற்பாடு செய்துள்ள, மூன்று நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, முதல்வர், நரேந்திர மோடி நேற்று, துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது:ஆரோக்கியமான சமுதாயத்தை படைப்பதே, எங்கள் லட்சியம். அனைத்து சமுதாயங்களும் இணைந்த, சம உரிமை கொண்ட சமுதாயத்தை ... |
| 'கேப்டன் உறவே வேண்டாம்': தி.மு.க., மாவட்ட செயலர்கள் கடுப்பு Posted: 'தி.மு.க.,வின் கூட்டணி அழைப்பை உதாசீனப்படுத்தி வரும், தே.மு.தி.க.,வுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை. அவரின் கூட்டணி உறவே வேண்டாம்' என, தி.மு.க.,வில், 16 மாவட்ட செயலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியும், ஸ்டாலினும் வெளிப்படையாக விடுத்த அழைப்புக்கு, விஜயகாந்திடம் இருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. 'பரிசீலிக்கிறோம்' எனக் கூட, அவர் வாய் திறந்து சொல்லவில்லை.அதற்கு மாறாக, தே.மு.தி.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், அழைப்பு விடுத்த, ... |
| 'ராணி'யை வீழ்த்த ராஜாவை ஒதுக்கு!கேப்டனின் கனவு கூட்டணி கணக்கு Posted: 'பிரதமர் கனவில் உள்ள ஜெயலலிதாவை, வீழ்த்தும் வகையில், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைய வேண்டும்' என, விஜயகாந்த் விரும்புகிறார். இதுதொடர்பாக, சில யோசனைகளையும், அந்தக் கட்சிகளின் தலைமைக்கு தெரிவித்து உள்ளார் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலுக்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும், கூட்டணி தொடர்பாக, உறுதியான முடிவு எதையும் அறிவிக்காமல், இரு கட்சிகளுக்கும், போக்கு காட்டி வருகிறார் விஜயகாந்த்.காரணம் என்ன?அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், ஜெயலலிதாவை ... |
| அரிசிக்கு சேவை வரியா? கருணாநிதி கடும் எதிர்ப்பு Posted: அரிசிக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கை:மத்தியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்போருக்கு, விரைவில் லோக்சபா தேர்தல் வரப்போகிறது என்ற உணர்வே, அற்றுப் போய்விட்டது போலும். அந்த அளவிற்கு பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ள இயலாத அறிவிப்புகள், என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம், தொடர்ந்து சவால் விட்டுச் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒன்றாக, தென்னக மக்களின் அடிப்படை உணவான அரிசிக்கு, வரி விதித்துள்ளனர். அதற்கு பெயர் சேவை வரியாம். ... |
| ஹெலிகாப்டர் 'டீல்' போட 'மாஜி'க்கு இத்தாலியில் விருந்து Posted: புதுடில்லி:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழ லில் தொடர்புடைய இத்தாலி நிறு வனம், இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, பாலி மேஜருக்கு விருந்தளித்து உபசரித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.ரூ. 3,600 கோடி ஒப்பந்தம்:நம் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி போன்றோர் பயணிக்க, இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்துடன், நம் ராணுவ அமைச்சகம், 3,600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இதற்காக, அந்த இத்தாலி நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, 360 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து ... |
| டில்லி கவர்னருடன் முதல்வர் கெஜ்ரிவால் தகராறு: ஜனலோக்பால் மசோதா விவகாரத்தில் காரசார கடிதம் Posted: புதுடில்லி : ஜனலோக்பால் மசோதா விவகாரத்தில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர், நஜீப் ஜங்கிற்கும், மோதல் ஏற்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி நடக்கிறது. ஊழல்வாதிகளை தண்டிக்கும், ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில், ஆம் ஆத்மி அரசு தீவிரமாக உள்ளது. இந்த மசோதாவின் வரைவு, கவர்னர், நஜீப் ஜங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.மசோதா தொடர்பாக, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரனிடம், கவர்னர், கருத்து கேட்டதாகவும், அதற்கு அவர், 'மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், மசோதாவை நிறைவேற்ற கூடாது' என, ... |
| Posted: சென்னை:சென்னையை அடுத்த, வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இன்று சென்னை வருகிறார். இதை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில், 5 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக, பா.ஜ., கூறியுள்ளது.சென்னையை அடுத்த, வண்டலூரில், இன்று, பா.ஜ., பொதுக்கூட்டம் நடக்கிறது. அதை அடுத்து, நாளை, எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவும் நடக்கிறது. இவற்றில் பங்கேற்க, இன்று மாலை, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, சென்னை வருகிறார். அசாம் மாநிலம், கவுகாத்தியில், இன்று பிற்பகல், தேர்தல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |