Tamil News | Online Tamil News |
- கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம்: கம்யூ., திரிணமுல் கலக்கம்
- நாட்டில்ஏழைகளின் எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு
- இரண்டே நாளில் ஏழு கோடி ரூபாய் தண்டம்: பார்லிமென்ட் கூடி, கலைந்ததால் வரிப்பணம் வீண்
- 'இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும்': காங்கிரசுடன் கூட்டணிக்கு கருணாநிதி நிபந்தனை
- இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ.,வுக்கு நிம்மதி: அமித் ஷாவுக்கு தொடர்பில்லை என சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை
- நேர்காணலுக்கு ஜாதி, கல்வி சான்றிதழுடன் வாங்க...: தே.மு.தி.க.,வினருக்கு விஜயகாந்த் அழைப்பு
- சோனியா அறிவிப்புக்கு கருணாநிதி வரவேற்பு
- விக்டோரியா மகாராணியை விட புகழ்பெற்றவை என் எருமை மாடுகள்: உ.பி., அமைச்சர் அசம் கான்
- 'என் மீது சந்தேக பார்வை': அரசு வழக்கறிஞர் வருத்தம்
- சிவாஜிக்கு உலகின் மிகப் பெரிய சிலை: மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு முடிவு
- நடிகர், நடிகைகள், பிரபலங்கள் இனி நேரடியாக புகார் தர முடியாது
| கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம்: கம்யூ., திரிணமுல் கலக்கம் Posted: ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கோலோச்ச ஆரம்பித்தது. தற்போது, திரிணமுல் காங்கிரசையும் அசைத்துப் பார்க்கும் வகையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்றுள்ளது. கோல்கத்தாவின் பிரிகேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்க, ஒருவருக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்படிருந்தது. இந்த பேரணி மூலம் பா.ஜ.,வுக்கு ரூ.25 லட்சம் வசூலானது. இந்த பேரணிக்காக, கடந்த மாதம் இணையதளம் மூலம் பதிவு செய்யும் பணியை பா.ஜ., துவக்கியது. 18 வயது முதல் 40 வயது வரையானவர்கள் இந்த பேரணியில் ... |
| நாட்டில்ஏழைகளின் எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு Posted: புதுடில்லி: நாட்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 27 கோடியாக குறைந்துள்ளது எனமத்திய் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் திட்டத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சு்க்லா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2011-12-ம் ஆண்டில் நாடு மழுவதும் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. வீடுகளில் நுகர்வுக்காக செலவிடப்படும் தொகையின்அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கடந்த 2004-05-ம்ஆண்டில் இருந்த ஏழைகளின்எண்ணிக்கையான 40 கோடியிலிருந்து 2011-12-ல் 27 கோடியாக குறைந்துள்ளது.நாட்டிலேயே உ.பி.,மாநிலத்தில் தான் அதிக அளவிலான ... |
| இரண்டே நாளில் ஏழு கோடி ரூபாய் தண்டம்: பார்லிமென்ட் கூடி, கலைந்ததால் வரிப்பணம் வீண் Posted: பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, பார்லி மென்டின் இரு சபைகளிலும், பல கட்சிகளின் எம்.பி.,க்கள், இரண்டாவது நாளாக நேற்றும் அமளியில் ஈடுபட்ட தால், எந்த அலுவலும் நிறைவேற்ற முடியாமல், பார்லிமென்ட் ஸ்தம்பித்தது. இந்த, இரண்டு நாட்களில், 7 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணானது.குளிர்கால கூட்டத்தொடரின், இரண்டாவது அமர்வு, கடந்த புதன் கிழமை கூடியது. நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம், வரும் மே மாதம் முடிவடைவதால், முழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ய, தற்போதைய, மன்மோகன் சிங் அரசால், முடியாமல் போயுள்ளது. இரண்டாவது அமர்வு: அதனால், மூன்று ... |
| 'இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும்': காங்கிரசுடன் கூட்டணிக்கு கருணாநிதி நிபந்தனை Posted: ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படியொரு நிலையை இந்தியா எடுக்குமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மீண்டும் தி.மு.க., இணைவதற்கான வாய்ப்பு உருவாகும்; தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என, காங்கிரஸ் தலைமைக்கு, தி.மு.க., திடீர் நிபந்தனை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தூதராக, டில்லியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவள வன், தி.மு.க., நிலை குறித்து, சில விஷயங்களை தெளிவுபடுத்தி ... |
| Posted: ஆமதாபாத்: கடந்த, 2004ல், குஜராத்தில் நடந்த, இஷ்ரத் ஜஹான் உட்பட, நான்கு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், உ.பி., - பா.ஜ., பொறுப்பாளரும், குஜராத், முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு தொடர்பில்லை என, சி.பி.ஐ., நேற்று தன் குற்றப்பத்திரிகையில் தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால், பா.ஜ., நிம்மதி அடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த படுகொலைகளை நிகழ்த்தியது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐ.பி., உளவு அமைப்பே என, தெரிவித்துள்ள, சி.பி.ஐ., நான்கு அதிகாரிகளை குற்றவாளிகள் என, நேற்று அறிவித்தது.'என்கவுன்டர்': ... |
| நேர்காணலுக்கு ஜாதி, கல்வி சான்றிதழுடன் வாங்க...: தே.மு.தி.க.,வினருக்கு விஜயகாந்த் அழைப்பு Posted: சென்னை: லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல், வரும் 9ம் தேதி துவங்குகிறது. 'நேர்காணலில் பங்கேற்போர், ஜாதி, கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களுடன் வரவேண்டும்'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் உத்தரவிட்டு உள்ளார்.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட விரும்பும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், கடந்த ஜன., 23ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு சமர்ப்பித்தோர், பொது தொகுதிக்கு, 20 ஆயிரம், தனி தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்தினர். விருப்ப மனு ... |
| சோனியா அறிவிப்புக்கு கருணாநிதி வரவேற்பு Posted: சென்னை: 'ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு முறை நீடிக்கும் என்ற, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ராஜ்யசபாவில், காங்கிரஸ் பொதுச் செயலர், ஜனார்த்தன் திவேதி பேசுகையில், 'ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, முடிவுக்கு வர வேண்டும். பொருளாதார ரீதியில், பின்தங்கிய அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்றார். அவரின் இந்த கருத்தை, பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், கடுமையாக எதிர்க்கின்றனர். இதையடுத்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து, பார்லிமென்ட் ... |
| விக்டோரியா மகாராணியை விட புகழ்பெற்றவை என் எருமை மாடுகள்: உ.பி., அமைச்சர் அசம் கான் Posted: லக்னோ: என் எருமை மாடுகள், விக்டோரியா மகாராணியை விட புகழ்பெற்றுவிட்டன,'' என, உ.பி., மாநில, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், அசம் கான், கிண்டலாக நேற்று கூறினார்.அமைச்சர் அசம் கானின் சொந்த ஊரான ராம்பூரில், அவருக்கு, பெரிய மாட்டுப்பண்ணை உள்ளது. அங்கிருந்த, சில எருமை மாடுகள், ஐந்து நாட்களுக்கு முன், திடீரென காணாமல் போய்விட்டன. அவற்றை கண்டுபிடிக்க, போலீசாருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். காணாமல் போன மாடுகளை, போலீசார் கண்டுபிடிக்காததால், மூன்று போலீஸ் அதிகாரிகளை, அமைச்சர், பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மூன்று ... |
| 'என் மீது சந்தேக பார்வை': அரசு வழக்கறிஞர் வருத்தம் Posted: 'சொத்து குவிப்பு வழக்கில், ஆரம்பத்திலிருந்தே, தி.மு.க., பொது செயலர் அன்பழகன் தரப்பினர், என்னை சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றனர்' என, அரசு வழக்கறிஞர், பவானி சிங் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று விசாரணை நடந்தது. கோர்ட் கைப்பற்றியிருந்த, ஜெயலலிதாவின் வெள்ளிப் பொருட்களை, பாஸ்கரன் என்ற அவரின் உதவியாளர் பெற்றுச் சென்றது குறித்து, விவாதம் நடந்தது. அப்போது, வழக்கு விசாரணையை தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர், பவானி சிங் முயற்சிக்கிறார் என, தி.மு.க., பொதுச் ... |
| சிவாஜிக்கு உலகின் மிகப் பெரிய சிலை: மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு முடிவு Posted: மும்பை: உலகிலேயே மிக உயரமான சிலையை, மாவீரன் சிவாஜிக்கு அமைக்கப் போவதாக, மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்காக, 100 கோடியை ஒதுக்கியுள்ளது.குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நாட்டின் முதல், உள்துறை அமைச்சரும், 'இரும்பு மனிதர்' என, போற்றப்படுபவருமான, சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தில், 182 மீட்டர் உயர, இரும்பு சிலை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக, 2,500 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிலை அமைப்பதற்காக, பா.ஜ.,வினர், நாடு முழுவதும் இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து ... |
| நடிகர், நடிகைகள், பிரபலங்கள் இனி நேரடியாக புகார் தர முடியாது Posted: சென்னை: 'குற்றங்கள் தொடர்பாக, முதலில், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம், புகார் கொடுக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், உயர் போலீஸ் அதிகாரிகளை அணுகலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.பிரபல நடிகை ஒருவர், சினிமா பைனான்சியர் குறித்து, பகிரங்கமாக புகார் கூறியிருந்தார். பைனான்சியருடன், கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், தன்னிடம் பெற்ற கணிசமான தொகையை, திருப்பித் தரவில்லை என்றும், தற்போது, வீட்டுக்கு வருவதில்லை என்றும், அந்த நடிகை, புகார் கூறியிருந்தார். இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், கடந்த ஆண்டு, நவம்பரில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 07,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |