Tamil News | Online Tamil News |
- ராகுலின் வினோத போக்கு
- அமெரிக்கா மீது பாய்கிறார் இலங்கை அதிபர் ராஜபக் ஷே
- திருச்சி தி.மு.க., மாநாடு: தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு?
- கேப்டனுடன் பேசி பேசி கட்சிகள் களைப்பு: ஒரே நேரத்தில் தி.மு.க., - காங்., - பா.ஜ.,வுடன் பேரம்
- மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள்
- ஜெ., பிரதமரானால் சந்தோஷம்: கருணாநிதி
- '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் 'திடுக்' தகவல்கள் வெளியீடு
- தமிழக மீனவர்களுக்கு முதல் முறையாக அனைத்து கட்சி தலைவர்கள் ஆதரவு
- லோக்பால் தேர்வு குழு நியமனத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு : பிரதமர் பரிந்துரைத்த வக்கீலை நீக்க போர்க்கொடி
- ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை கிடையாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
| Posted: மிக அரிதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பேதே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் வழக்கம். அத்தகைய பேட்டிகளிலும், அவரது சுவாரஸ்யமற்ற செயல்பாடுகளே வெளிப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு ராகுல் அளித்த பேட்டியிலும் இது வெளிப்பட்டது. நாட்டின் அதிக பலம்வாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவாலான கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவதும், தனது பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வெளியே வரவும் தயங்குவது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், கூடியிருந்த கட்சி ... |
| அமெரிக்கா மீது பாய்கிறார் இலங்கை அதிபர் ராஜபக் ஷே Posted: கொழும்பு: ஜெனிவாவில் நடைபெற உள்ள, ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. இதற்கு, இலங்கை அதிபர், ராஜபக் ஷே கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ராஜபக் ஷே கூறியதாவது:இலங்கையின் சூழல், வளர்ந்த நாடுகளுக்கு புரிவதில்லை. இலங்கை அரசு மீது மட்டும் குற்றஞ்சாட்டும் நாடுகள், விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை பற்றி விமர்சிப்பதில்லை.தற்போது மனித உரிமைகள் பற்றி பேசும் நாடுகள், இந்திய பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்ட போது அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்கள், அந்த அமைப்பினரால் கொல்லப்பட்டபோது, ஏன் வாய் ... |
| திருச்சி தி.மு.க., மாநாடு: தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு? Posted: சென்னை: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அவர்களை திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.அவரது பேட்டி: திருச்சியில், வரும், 15, 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள, தி.மு.க., மாநாட்டிற்கான ஏற்பாடுகள், சிறப்பாக நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன், நடைபெறும். இந்த மாநாடு, முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனை மாநாடாக அமையும். முந்தைய, தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, தமிழகம் முழுவதும், துண்டு பிரசுரங்கள், இளைஞரணி சார்பில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.தி.மு.க., கூட்டணியில், எந்தெந்த கட்சிகளில் இடம் பெறும் என்பதை, ... |
| கேப்டனுடன் பேசி பேசி கட்சிகள் களைப்பு: ஒரே நேரத்தில் தி.மு.க., - காங்., - பா.ஜ.,வுடன் பேரம் Posted: தி.மு.க., - பா.ஜ.,வுடன் மட்டுமே, கூட்டணி பேரம் பேசி வந்த தே.மு.தி.க.,வுடன், தற்போது காங்கிரஸ் தலைமையும் பேசி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, கூட்டணியை முடிவு செய்ய முடியாத இழுபறி நிலைக்கு, தே.மு.தி.க., தள்ளப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கூட்டணி அறிவிப்பை வெளியிடும் திட்டத்தோடு, உளுந்தூர்பேட்டை மாநாட்டை தே.மு.தி.க., நடத்தியது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல், 'தனித்துப் போட்டியிடுவதே தொண்டர்கள் விருப்பம்; ஆனால், தலைமை எடுக்கும் முடிவை, அவர்கள் ஏற்பர்' என, விஜயகாந்த் அறிவித்தார். கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சிகளை மட்டுமல்ல; ... |
| மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் Posted: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கும், தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம், சென்னை அருகே வண்டலூரில், வரும், 8ம் தேதி நடக்கிறது. இதற்காக, பிரமாண்ட ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ., தலைவர்கள் செய்து வருகின்றனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக, திருச்சியில் இளந்தாமரை மாநாட்டில், நரேந்திர மோடி பேசினார். அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அதன்படி, தமிழகத்தின் தலைநகர் சென்னையில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேச உள்ளார்.உற்சாக வரவேற்பு:இதற்காக, 8ம் தேதி ... |
| ஜெ., பிரதமரானால் சந்தோஷம்: கருணாநிதி Posted: சென்னை : ''மூன்றாவது அணி சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், சந்தோஷம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:'ஆம் ஆத்மி' சார்பில், பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டியில், ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர், 'டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களையெல்லாம் திருத்தியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? எல்லாம் பொய்.உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறாரே? நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே; சொத்து குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று, ... |
| '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் 'திடுக்' தகவல்கள் வெளியீடு Posted: புதுடில்லி :'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான, பிரசாந்த் பூஷண், நேற்று ஒரு பரபரப்பு தகவலை, டில்லியில் வெளியிட்டார்.அப்போது, '2ஜி' விவகாரத்தில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்தும், ஆவணங்கள் திருத்தப்பட்டது குறித்தும், 'கலைஞர் டிவி' உயரதிகாரியாக இருந்த சரத் ரெட்டி, மற்றவர்களுடன் பேசியதாக கூறப்படும், 'சிடி' பதிவை, பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.மேலும் அவர் கூறுகையில்,''இந்த விவகாரங்கள் அனைத்தும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இந்த உரையாடல் பதிவின் உண்மை தன்மை ... |
| தமிழக மீனவர்களுக்கு முதல் முறையாக அனைத்து கட்சி தலைவர்கள் ஆதரவு Posted: 'தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. இலங்கையின் செயல், கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில், மத்திய அரசு, உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.கண்டுகொள்வதில்லை:கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை குறித்து, பார்லிமென்ட்டில், தமிழக, எம்.பி.,க்கள் பிரச்னை எழுப்பினால், தமிழகத்தை சேர்ந்த, எம்.பி.,க்கள் ... |
| லோக்பால் தேர்வு குழு நியமனத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு : பிரதமர் பரிந்துரைத்த வக்கீலை நீக்க போர்க்கொடி Posted: புதுடில்லி: லோக்பால் அமைப்பின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட உள்ள தேர்வுக்குழுவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ள, மூத்த வழக்கறிஞர், பி.பி.ராவுக்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'தேர்வுக் குழுவினர், கட்சி சார்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, டிச., 17ல் ராஜ்யசபாவிலும், மறுநாள் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்ட, லோக்பால் மசோதாவுக்கு, இந்த ஆண்டு, ஜன., 1ல், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து, அது சட்டமாகியது.அதையடுத்து, மத்தியில் லோக்பால் அமைப்பும், இந்த அமைப்பு இல்லாத ... |
| ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை கிடையாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம் Posted: புதுடில்லி: 'ராஜிவ் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண் டனையாக குறைக்க கூடாது' என, மத்திய அரசு தரப்பில், வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், ஒத்தி வைத்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ், படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர்.தூக்கு தண்டனை:இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு தூக்கு தண்டனையை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 05,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |