Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வாராது வந்த அமைச்சர்கள்: பசியில் வாடிய பக்தர்கள்

Posted:

சென்னை: அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி, கோவில்களில் நடந்த சமபந்தி விருந்துக்கு, அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், சாப்பிட வந்தவர்கள், பசியால் தவித்தபடி காத்திருந்தனர்.அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, 'முக்கிய கோவில்களில், சமபந்தி விருந்து நடக்கும்' என, அரசு அறிவித்தது.சென்னையில், 31 கோவில்களில், அமைச்சர்களும், மூன்று கோவில்களில், சபாநாயகர், துணை சபாநாயகர், மேயர், ஆகியோர் கலந்து கொள்வர் என, அறிவிக்கப்பட்டது. சமபந்திக்கு பிந்து:எனவே, கோவில் நிர்வாகிகள், விருந்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். பகல், 12:00 மணிக்கு, உணவு தயாரானது; பகல், 1:00 மணிக்கு, ...

ஸ்டாலினுக்கு ஆபத்து: முதல்வர் ஜெ., சந்தேகம்

Posted:

சென்னை : ''கருணாநிதி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதம், கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் குழப்பம், ஆகியவற்றை ஒப்பிடுகையில், மு.க.அழகிரி மூலம், ஸ்டாலினுக்கு ஆபத்து என்பது, மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:தன் இளைய மகன் ஸ்டாலின் வாழ்வு குறித்து, லோக்சபா எம்.பி., அழகிரி கூறியதை, பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி தெரிவித்து உள்ளார். அதோடு நின்று விடாமல், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.அதில், 'விடுதலை புலிகள், மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால், ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது' ...

தே.மு.தி.க., மாநாடு: கூட்டணிக்கு காவடி தூக்கிய கட்சிகள் கலக்கம்

Posted:

கூட்டணி குறித்து, கருத்து கேட்பதாகக் கூறி, மாநாட்டு மேடையில், 'போட்டு வாங்கிய' விஜயகாந்த், தன் முடிவைத் தெளிவாக அறிவிக்காததால், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அத்துடன், விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, காவடி தூக்கிய கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன. அதே நேரத்தில், 'அரசியல் பேரத்திற்காகவே' விஜயகாந்த் மாநாடு நடத்தியதாக, விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.கட்சி துவக்கியது முதல், 'கடவுளுடனும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி' எனக் கூறி வந்த, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன், கூட்டணி அமைத்தார். அதற்கு முன், கூட்டணி ...

மாநாட்டில் பங்கேற்க அழகிரிக்கு ஸ்டாலின் அழைப்பு? சமரச முயற்சியில் தீவிரம்

Posted:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வரும்படி, மு.க.அழகிரிக்கு, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், கட்சியில் நிலவும், சகோதர யுத்தத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க, கருணாநிதியும், அவரின் குடும்பத்தினரும் தீர்மானித்துள்ளனர்.தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த, அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய, சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தினால், அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மன்னன் உட்பட, 11 பேர், 'சஸ்பெண்ட்' ...

தேர்தலுக்கு முன் பிரதமர் கோஷமில்லை: முடிவை மாற்றினார் ஜெ.,

Posted:

''பிரதமர் யார் என்பதை, லோக்சபா தேர்தலுக்கு முன் விவாதிப்பதில்லை; தேர்தல் முடிந்த பின்னரே, பிரதமர் யார் என்ற கேள்வி எழும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, நேற்று திடீரென அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம், 'அடுத்த பிரதமர் ஜெயலலிதா' என்ற, அ.தி.மு.க.,வினரின் கோஷம், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.முதல்வர், ஜெ.,யை, நேற்று முன்தினமும், நேற்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசிய போது, தமிழகத்தில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளதோடு, தேசிய அளவில், அமைக்கப்பட உள்ள, மூன்றாவது அணியில், அ.தி.மு.க., இடம் பெற வேண்டும் எனவும், ...

ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக 'ஆம் ஆத்மி' கட்சி அலறல்: ரூ.20 கோடி கொடுக்க முன்வந்ததாக எம்.எல்.ஏ., தகவல்

Posted:

'டில்லியில் நடைபெறும், 'ஆம் ஆத்மி' அரசை, எப்படியும் கவிழ்த்தே தீருவது என, காங்கிரசும், பா.ஜ.,வும் கூட்டுச் சேர்ந்து, சதி திட்டம் தீட்டியுள்ளன. இதை அம்பலப்படுத்தும் விதத்தில், டில்லி முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, சஞ்சய் சிங், நிருபர்களிடம் கூறியதாவது:சதித் திட்டம்: ஆம் ஆத்மி, ஆட்சிக்கு வந்ததை, காங்கிரசாலும், பா.ஜ.,வாலும், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், எப்படியும், இந்த ஆட்சியை, கவிழ்க்க வேண்டுமென்று, கூட்டுச் சதித் திட்டம் ...

பார்லி.,யில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் தயார்

Posted:

புதுடில்லி: பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், நாளை, மீண்டும் துவங்கவுள்ள நிலையில், முக்கிய பிரச்னைகளில், அரசு தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்க, கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குளிர்கால கூட்டத்தொடர்: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின், இரண்டாவது பாதி தொடர், நாளை மீண்டும் துவங்குகிறது. பெரும்பாலும், நடப்பு லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடராகவும், இது இருக்கலாம். இதில், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போட, எதிர்க்கட்சியான, பா.ஜ., முடிவு செய்துள்ளது.இந்நிலையில், பார்லிமென்டில் ...

இன்னும் விட்டபாடில்லை 'ஆதார்' குழப்பம்

Posted:

புதுடில்லி : மத்திய அரசு, மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயு உருளை பெற, 'ஆதார்' அட்டை தேவையில்லை என, கடந்த வாரம் அறிவித்தது. இருந்த போதிலும், 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை செயல்படுத்தும் மாவட்டங்களில், சமையல் எரிவாயு வழங்க, 'ஆதார் அட்டை' விவரம் கேட்கப்படுவதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.அரசாணை: இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜனவரி 30ம் தேதி, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை, 12ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.மேலும், மானிய விலை சமையல் எரிவாயு ...

பிரேமலதா விமர்சனத்தால் தி.மு.க., 'அப்செட்!': கூட்டணி முயற்சிக்கு தடை என கருத்து

Posted:

தே.மு.தி.க., மாநாட்டில், கூட்டணி குறித்து, தெளிவான முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி, பிரேமலதாவின் ஆவேச பேச்சும், ஊழல் குற்றச்சாட்டும், தி.மு.க.,வை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இரு கட்சிகளின் கூட்டணி முயற்சிக்கு, இது பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும், தி.மு.க., வட்டாரம் கருதுகிறது. அதேநேரத்தில், பா.ஜ., மீது, எந்த விமர்சனமும் செய்யப்படாததால், 'கூட்டணி வாய்ப்பில் பாதிப்பு இல்லை' என, அக்கட்சி வட்டாரம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.குழப்பம் : யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதற்காக, உளுந்தூர்பேட்டை அருகே, எறஞ்சி ...

பார்லி.,யில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் தயார்

Posted:

புதுடில்லி:பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், நாளை, மீண்டும் துவங்கவுள்ள நிலையில், முக்கிய பிரச்னைகளில், அரசு தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்க, கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குளிர்கால கூட்டத்தொடர்:பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின், இரண்டாவது பாதி தொடர், நாளை மீண்டும் துவங்குகிறது. பெரும்பாலும், நடப்பு லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடராகவும், இது இருக்கலாம். இதில், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போட, எதிர்க்கட்சியான, பா.ஜ., முடிவு செய்துள்ளது.இந்நிலையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™