Daily Thanthi |
- அரியலூர் மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
- தூய லூர்து அன்னை ஆலய கொடியேற்று விழா
- இலவச கட்டாய கல்வி விழிப்புணர்விற்காக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிள் பயணம்
- தமிழகத்தில் மின்சார உற்பத்திக்காக புதிய திட்டங்கள்: மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படும் சட்டசபையில் ஜெயலலிதா உறுதி
- தென் மண்டல தகுதி சுற்றில் ஆந்திராவை வீழ்த்தி முதலிடம் சந்தோஷ் கோப்பை கால்பந்து இறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேற்றம்
- இலங்கை–வங்காளதேசம் மோதும் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
- 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது இந்திய வீரர்கள் ரஹானே, ரோகித் ஷர்மா அரை சதம் அடித்தனர்
- ஆஸ்திரேலிய சாலையில் மயங்கி கிடந்த நீச்சல் வீரர் இயான் தோர்ப் ஆஸ்பத்திரியில் அனுமதி
- இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹர்பஜன் கேப்டன்
- துளிகள்
| அரியலூர் மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை Posted: 03 Feb 2014 12:04 PM PST அரியலூர், அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க.–தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. அரியலூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. காமராஜர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சித் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து திருச்சி சாலை, சத்திரம், வெள்ளாழத் தெரு, எம்.பி. கோவில் தெரு, தேரடி மார்க்கெட் தெரு வழியாக அண்ணா சிலைக்கு வந்து மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமரை ராஜேந் திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகராட்சி கவுன்சிலர் சிவஞானம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளமுத்து, கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்ட னர். தி.மு.க. அரியலூர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறு முகம், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாள ரும் நகராட்சி தலைவருமான முருகேசன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் குணா, பாபு, ராஜேந்திரன், மாலா தமிழர சன், அமுதலட்சுமி காசிநாதன் மற்றும் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க. அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில் கட்சி பொறுப் பாளர்கள் பஸ் நிலையத்தில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிமடம் காடுவெட்டி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம் மற்றும் ஆண்டிமடம் ஒன்றியக் குழுத்தலைவர் சுகுணா தவச் செல்வன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் பொறுப் பாளர்கள் தொண்டர் கள் கலந்து கொண்டனர். ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.க. கட்சி சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிமடம் திருமுட்டம் சாலையில் கவரப் பாளையத் தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் எம்.பி. சிவசுப்பிர மணியன் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். உடன் ஒன்றிய செயலா ளர் தர்மதுரை மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர் கள் கலந்து கொண்டனர். திருமானூர் திருமழபாடியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய அவைத் தலைவர் சுயம் பிரகாசம் தலைமை தாங்கி னார். ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் துரை.அலெக் சாண்டர் மாலை அணி வித்தார். தி.மு.க. சார்பில் அண்ணா படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் தனபால் தலைமை தாங்கி னார். ஒன்றிய கலைஞர் பகுத் தறிவு பாசறை துணை அமைப் பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி கழக செயலாளர் சுந்தரசக்திவேல், அவைத் தலைவர் கணபதி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். திருமானூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் அண்ணா படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டது. ஒன்றிய செய லாளர் ஜான் வின் சென்ட் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். image: category: |
| தூய லூர்து அன்னை ஆலய கொடியேற்று விழா Posted: 03 Feb 2014 11:59 AM PST அரியலூர், அரியலூரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலய 10 நாள் பெருவிழா நிகழ்ச்சியின் முதல் நாளான கொடியேற்று விழா நடந்தது. அரியலூர் பங்குதந்தை அந்தோணி சாலமோன் மற்றும் பங்கு மக்கள் முன்னிலையில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் மாதா மற்றும் விழா கொடியுடன் ஊர்வலம் கோவில் வளாகத்திற்குள் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆலயத்தின் முன்புறம் உள்ள கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அதன்பின்பு சிறப்பு பூஜை நடந்தது. 2ம் தேதி முதல் 11–ந் தேதி வரை நடைபெறும் இந்த பெருவிழாவில் தினசரி சிறப்பு பூஜைகளும், சிறுதேர் பவனியும் நடைபெறுகிறது. 10ம் நாள் நிகழ்ச்சியாக பெரிய தேர்பவனி குடந்தையின் மறைமாவட்ட முதன்மை குரு பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. மாதாவின் பெரிய தேர்பவனி திருச்சி சாலை, பெரிய கடைத் தெரு, சின்ன கடைத்தெரு, வெள்ளாழத்தெரு, எம்.பி. கோவில் தெரு, கைலாசநாதர் கோவில் தெரு, பொன்னுசாமி அரண்மனைத் தெருவின் வழியாக நடைபெற உள்ளது. image: category: |
| இலவச கட்டாய கல்வி விழிப்புணர்விற்காக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிள் பயணம் Posted: 03 Feb 2014 11:48 AM PST பெரம்பலூர், இலவச கட்டாய கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி பெரம்பலூ ரில் தொடக்க பள்ளி ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் நடை பெற்றது. மோட்டார் சைக்கிள் பயணம் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கட்டாயக்கல்வி விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பிரசார பயணம் நடந்து வருகிறது. பெரம்பலூரில் நடைபெற்ற பயணத்தை அகில இந்திய பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டத்திற்கு பெற்றோர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்திடவேண்டும். அனைவருக்கும் கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் நிலையை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் அவசர, அவசியமான திட்டங் களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நடை முறைப்படுத்திடவும், அதன் மூலம் கல்வி மேம்பாடு அடையச் செய்திட உத்தர வாதம் அளிக்கும் வகையில் நடந்த ரதயாத்திரை மற்றும் இருசக்கர, இலகு ரக வாகன பிரச்சார பயணத்தை பெரம்ப லூர் புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து அகில இந்திய ஆசிரி யர் கூட்டணி பொதுச் செய லாளர் சு.ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் இதில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் என்.ரெங் கராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஈ.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் து.சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செ.புகழேந்தி, மாவட்ட பொறுப்பாளர்கள் திருவாரூர் மதிவாணன், நாகை லட்சுமி நாராயணன், திருச்சி ஆல்பர்ட் தாஸ், அரியலூர் பாண்டியன், மாநில துணைத்தலைவர் அருமைக்கண்ணு மற்றும் அரியலூர் மாவட்ட பொறுப் பாளர்கள், ஓய்வு பெற்றோர் பிரிவின் நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் திரளான பேர் கலந்து கொண்டனர். image: category: |
| Posted: 03 Feb 2014 11:47 AM PST சென்னை, சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சாதனை மின்சாரத்தில் அரசு எடுத்த பகீரத முயற்சிகளால், இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. 1991–96 வரையிலான எனது முதல் ஆட்சி காலத்தில், 1,300 மெகாவாட் மின் நிறுவு திறன், 2001–06 வரையிலான எனது இரண்டாவது ஆட்சி காலத்தில், 2,500 மெகாவாட் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது. தற்போது தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேட்டூர் அனல் மின் திட்ட மூன்றாம் அலகிலிருந்து 600 மெகாவாட், வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 700 மெகாவாட், வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 1,200 மெகாவாட் என ஏறத்தாழ 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது 9 ஆயிரம் மெகாவாட் என இருந்த மின் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி 29 அன்று 12,799 மெகாவாட்டை எட்டி சாதனை படைத்துள்ளது. மீண்டும் மின்வெட்டு புதிய மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கூடுதலாக 1,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இதுபற்றி நான் தெரிவித்தவுடனே தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''இந்த 1,700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலம் கிடைத்தது தான்'' என்று கூறி, சாதனையில் பங்கு போட முயற்சி செய்தார். இதனையடுத்து ஒரு சில நாட்களிலேயே தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உள்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்தது. மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தும் சூழ்நிலைக்கு எனது அரசு தள்ளப்பட்டது. மக்கள் முடிவு இதுபற்றி பிரதமருக்கு கடந்த நவம்பர் 25–ந் தேதி கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில், மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 2,500 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி குறைந்து இருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கச்செய்யும் செயல், திட்டமிட்ட சதி என்று தமிழக மக்கள் நம்பும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதுபற்றி கருணாநிதியும் விளக்கம் அளித்திருந்தார். பிரதமர் தனது டிசம்பர் 16–ந் தேதியிட்ட கடிதத்தில், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் என்ன காரணங்களினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, ''தமிழ்நாட்டில் மின்சார துறையில் ஒரே சமயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்துள்ளது எதேச்சையாக ஏற்பட்டது. இருப்பினும், விரைவில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார். இதற்கு என்ன பொருள் என்பதை தமிழக மக்களின் முடிவிற்கே நான் விட்டுவிடுகிறேன். நீண்டகால திட்டங்கள் 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தற்போது நமக்கு கிடைக்கிறது. இதுதவிர, 3,330 மெகாவாட் அளவு மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு பெறத்தக்க வகையில், நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 74 மெகாவாட், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தனியார் மின் நிலையத்திலிருந்து 1–1–2014 முதல் பெறப்பட்டு வருகிறது. மேலும், 1,098 மெகாவாட் மின்சாரம், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டு வரும் தனியார் மின் நிலையங்களில் இருந்து, 2014–15–ல் பெறப்படும். மீதமுள்ள 2,158 மெகாவாட் மின்சாரம், சத்தீஷ்கார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும், மராட்டிய மாநிலங்களில் உள்ள தனியார் மின் நிலையங்களில் இருந்து பெறப்படும். தற்போது, பரிசோதனையில் உள்ள சோலாப்பூர் – ரெய்ச்சூர் மின் வழித்தடம், வணிக உபயோகத்திற்கு விரைவில் கொண்டு வரப்படும் போது, வரும் ஆகஸ்டு மாதத்திலிருந்து 1,426 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும். எனது தலைமையிலான அரசின் தொடர் முயற்சி காரணமாக, கூடங்குளம் அணுமின் திட்டமும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம், தனது முழு உற்பத்தி திறனையும் எட்டும் நிலையில் உள்ளது. எதிர்கால தேவை எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, 3,300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களுக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வெகு விரைவில் இறுதி செய்யப்படும். 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான தொடக்க ஆய்வு பணிகள் முடிவு பெற்றுள்ளன. விரைவில் முதற்கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் எடுத்துக்கொள்ளப்படும். 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 3,572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் புதிதாக ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், பதிநான்கு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் அமைத்து, தமிழ்நாட்டின், குறிப்பாக சென்னையின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளிகள் ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில், இரண்டு துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஒரு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மீதம் இரு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன. பதிநான்கு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் நான்கு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. ஆறு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வில் உள்ளன. நான்கு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் இந்த மாதம் கோரப்படவுள்ளன. வேலூரில் துணை மின்நிலையம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் திருவலத்தில், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும், அதனைச் சார்ந்த மின் தொடரமைப்பும் அமைப்பதற்கான ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்ததில், 9 துணை மின் நிலையங்கள் இயக்கி வைக்கப்பட்டுவிட்டன. 24 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன. 9 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவை விரைவில் இறுதி செய்யப்படும். மீதமுள்ள 6 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளன. மின்வெட்டு இருக்காது சீரான மின்சாரம் வழங்க, இந்த நிதியாண்டில் இதுவரை 16,151 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த டிசம்பர் வரை 27.5 லட்சம் புதிய மின் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி, மின் வெட்டே இல்லை என்ற நிலைமையை தமிழகம் விரைவில் எட்டிவிடும். இவ்வாறு அவர் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 03 Feb 2014 11:45 AM PST சென்னை, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது. தகுதி சுற்று கால்பந்து சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் வருகிற 24–ந் தேதி முதல் மார்ச் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள், 5 மண்டல அளவிலான தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற தென்மண்டல தகுதி சுற்றில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபர் அணிகள் மோதின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சந்தோஷ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். அமீருதீன் அபாரம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தென் மண்டல தகுதி சுற்று போட்டியில் நேற்று மாலை நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு–ஆந்திரா அணிகள் மோதின. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தி தமிழக அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11–வது நிமிடத்தில் தமிழக அணி முதல் கோல் போட்டது. இந்த கோலை அமீருதீன் அடித்தார். 14–வது நிமிடத்தில் கேப்டன் சுதாகரும், 16–வது நிமிடத்தில் மீண்டும் அமீருதீனும் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார்கள். முதல் பாதியில் தமிழக அணி 3–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தமிழக அணி வெற்றி பின் பாதி ஆட்டத்திலும் தமிழக அணியின் கையே ஓங்கி இருந்தது. 59–வது நிமிடத்தில் அமீருதீன் 'ஹாட்ரிக்' கோலை திணித்தார். ஆந்திர அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் தமிழக அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை எளிதில் தோற்கடித்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா–கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டிரா செய்தாலே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கர்நாடக அணி ஆடியது. கேரள அணி வெற்றி இதில் முதல் பாதியில் கர்நாடக அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தாலும், கடைசி கட்டத்தில் கேரள அணியின் அதிரடி தாக்குதலில், கர்நாடக அணியின் தடுப்பு ஆட்டம் நிலைகுலைந்து போனது. 'இஞ்சுரி' நேரத்தில் அடித்தடுத்து 2 கோல்கள் அடித்த கேரள அணி 3–2 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது. தோல்வியை சந்தித்ததால் கர்நாடகம் தகுதி இழந்தது. கர்நாடக அணியில் குர்னிலால் 25–வது நிமிடத்திலும், கேப்டன் சேவியர் விஜயகுமார் 28–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கேரள அணியில் ஷிபின்லால் 37–வது நிமிடத்திலும், உஸ்மான் 94–வது நிமிடத்திலும், ஷிபின்லால் 98–வது நிமிடத்திலும் (இரண்டும் இஞ்சுரி நேரம்) கோல் அடித்தனர். தமிழகம், கேரளா தகுதி 3 வெற்றி (கேரளா, அந்தமான், ஆந்திராவுக்கு எதிராக), ஒரு டிரா (கர்நாடகாவுடன்) கண்டு 10 புள்ளிகளுடன் தமிழக அணி முதலிடம் பிடித்தது. ஒரு தோல்வி (தமிழகத்திடம்), மற்றும் 3 வெற்றி ( ஆந்திரா, அந்தமான், கர்நாடகா அணிக்கு எதிராக) கண்ட கேரள அணி 9 புள்ளிகளுடன் 2–வது இடம் பெற்றது. முதல் இரண்டு இடங்களை பிடித்த தமிழகம், கேரளா அணிகள் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி இறுதி சுற்றுக்கு தென் மண்டலத்தில் இருந்து தகுதி பெற்றன. வெற்றி பெற்ற தமிழக அணியினருக்கு, தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் கிலிட்டஸ் பாபு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். image: category:Tagging: |
| இலங்கை–வங்காளதேசம் மோதும் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் Posted: 03 Feb 2014 11:43 AM PST சிட்டகாங் இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் இலங்கை கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை–வங்காளதேச அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மஹேலா ஜெயவர்த்தனே இலங்கை அணியில் கடந்த ஆட்டத்தில் மஹேலா ஜெயவர்த்தனே ஆட்டம் இழக்காமல் இரட்டை சதமும், குஷல் சில்வா, விதனாஜ் ஆகியோர் சதமும் அடித்தனர். அத்துடன் அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் எரங்கா, ஹெராத் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார்கள் என்று தெரிகிறது. வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய மூன்றிலும் முதல் ஆட்டத்தில் பலவீனமாக காணப்பட்டது. அதனை சரி செய்தால் மட்டுமே இலங்கை அணிக்கு ஈடுகொடுக்க முடியும். 16–வது முறை மோதல் இலங்கை–வங்காளதேச அணிகள் இடையே இதுவரை 15 டெஸ்ட் போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் இலங்கை அணி 14 டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இதில் 8 டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது. இந்த போட்டி குறித்து வங்காளதேச அணியின் ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசன் கூறுகையில், 'டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் கண்ட தோல்வி எல்லோருக்கும் வருத்தம் அளித்தது. தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கும் நாங்கள் அடுத்த ஆட்டம் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். ஆட்டங்கள் மோசமாக போகலாம். ஆனால் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. பீல்டிங் உள்பட எல்லா அம்சங்களிலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது' என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இலங்கை அணியின் சீனியர் வீரர் சங்கக்கரா கருத்து தெரிவிக்கையில், 'முதலாவது டெஸ்ட் போட்டி போல் இந்த போட்டியிலும் வெற்றி பெறுவோம்' என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. image: category: |
| 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது இந்திய வீரர்கள் ரஹானே, ரோகித் ஷர்மா அரை சதம் அடித்தனர் Posted: 03 Feb 2014 11:38 AM PST வாங்கரே, இந்தியா–நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. ரஹானே, ரோகித் ஷர்மா அரை சதம் அடித்தனர். 2 நாள் பயிற்சி ஆட்டம் இந்தியா–நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் வாங்கரேயில் நடந்தது. கேப்டன் டோனி ஆடாததால் ரோகித்ஷர்மா கேப்டன் பொறுப்பை கவனித்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 78 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஒடொனெல் 80 ரன்னும், ஜோனே ஹிக்கே 45 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஐஸ்வர் பாண்டே 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், ஜாகீர்கான், உமேஷ்யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஷிகர் தவான் 26 ரன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் எம்.விஜய் 19 ரன்னுடனும், ஷிகர்தவான் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. எம்.விஜய் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார். ஷிகர்தவான் 26 ரன்னில் ரன்–அவுட் ஆனார். புஜாரா தன் பங்குக்கு 33 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 93 ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ரஹானே, ரோகித்ஷர்மா அரை சதம் 4–வது விக்கெட்டுக்கு ரஹானே, பொறுப்பு கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று சிறப்பாக ஆடியது. இருவரும் அரை சதம் அடித்தனர். ரஹானே 60 ரன்களும், ரோகித் ஷர்மா 59 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்து கொண்டனர். விரித்திமான் சஹா 4 ரன்னிலும், அஸ்வின் 46 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். டிராவில் முடிந்தது இந்திய அணி முதல் இன்னிங்சில் 93 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது அம்பத்தி ராயுடு 49 ரன்னுடனும், புவனேஷ்வர்குமார் 3 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. image: category: |
| ஆஸ்திரேலிய சாலையில் மயங்கி கிடந்த நீச்சல் வீரர் இயான் தோர்ப் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 03 Feb 2014 11:34 AM PST சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி புறநகர் பகுதியில் உள்ள சாலையில் மயங்கிய நிலையில் கிடந்த முன்னாள் பிரபல நீச்சல் வீரர் இயான் தோர்ப் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நீச்சல் வீரர் இயான்தோர்ப் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல முன்னாள் நீச்சல் பந்தய வீரர் இயான் தோர்ப். 31 வயதான இயான் தோர்ப் 2000–ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், 2004–ம் ஆண்டில் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றார். இது தவிர உலக நீச்சல் போட்டியில் 1998–ம் ஆண்டில் 2 தங்கமும், 2001–ம் ஆண்டில் 6 தங்கமும், 2003–ம் ஆண்டில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 10 தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். 2006–ம் ஆண்டில் சர்வதேச நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரரான இயான் தோர்ப் மன அழுத்த நோய் மற்றும் போதை அடிமைத்தனத்தில் சிக்கி தவித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. கார் முன் விழுந்தார் இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னி புறநகர் பகுதியில் உள்ள ரோட்டில் வாகனங்கள் செல்லும் பாதையில் இயான் தோர்ப் நேற்று அதிகாலை 3 மணியளவில் தெளிவாய் சிந்திக்க இயலாத நிலையில் ஒரு கார் முன்பு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த டிரைவர் வண்டியை அவசரமாக நிறுத்தியதால் இயான் தோர்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து பார்த்த போது மயங்கிய நிலையில் இருந்தவர் பிரபல நீச்சல் வீரர் இயான் தோர்ப் என்று தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காரணம் என்ன? இயான் தோர்ப் மயக்க நிலைக்கு காரணம் என்ன? அவர் அதிகாலையில் சாலைக்கு வந்தது ஏன்? என்பது குறித்து எதுவும் விளக்கம் அளிக்கப்படவில்லை. நீண்ட நேரத்துக்கு பின்னர் தான் மயங்கிய நிலையில் இருந்தது இயான் தோர்ப் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இது குறித்து இயான் தோர்ப்பின் மானேஜர் ஜேம்ஸ் எர்ஸ்கின் கருத்து தெரிவிக்கையில், 'மன அழுத்த நோய்க்கும், தோள்பட்டை காயத்துக்கும் இயான் தோர்ப் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மது எதுவும் அருந்தவில்லை' என்றார். image: category: |
| இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹர்பஜன் கேப்டன் Posted: 03 Feb 2014 11:31 AM PST புதுடெல்லி, ரெஸ்ட் ஆப் இந்தியா–ரஞ்சி சாம்பியன் கர்நாடக அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஷேவாக், யுவராஜ்சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. பிரக்யான் ஓஜாவுக்கு அணியில் இடம் கிட்டவில்லை. ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:– ஹர்பஜன்சிங், ஜிவான்ஜோத்சிங், கவுதம் கம்பீர், பாபா அபராஜித், கேதர் ஜாதவ், அங்கித் பாவ்னே, தினேஷ்கார்த்திக், அமித் மிஸ்ரா, பங்கஜ்சிங், அசோக் திண்டா, வருண் ஆரோன், பர்வீஸ் ரசூல், அனுரீத்சிங், நட்ராஜ் பெஹெரா, மன்தீப்சிங். image: category:Tagging: |
| Posted: 03 Feb 2014 11:24 AM PST தமிழக ஆண்கள் அணி தோல்வி 16–வது தேசிய இளையோர் கைப்பந்து சாம்பியன் ஷிப்போட்டி ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு–சாய் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 26–28, 25–22, 26–28, 24–26 என்ற செட் கணக்கில் சாய் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. ஸ்குவாஷ்: ஜோஸ்னா சாம்பியன் உலக டூர் ஸ்குவாஷ் போட்டி கனடாவின் வின்னிபெக்கில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எகிப்து நாட்டை சேர்ந்த ஹெபா எல் டோர்கியை சந்தித்தார். இதில் ஜோஸ்னா சின்னப்பா 11–13, 11–8, 11–5, 3–11, 12–10 என்ற செட் கணக்கில் ஹெபாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். கிளாசிக் செஸ்: 4–வது சுற்றில் ஆனந்த் வெற்றி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் கிளாசிக் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் கலந்து கொண்டு மோதி வருகிறார்கள். இதில் நேற்று நடந்த 4–வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), போரிஸ் ஜெல்பான்டை (இஸ்ரேல்) 36–வது காய் நகர்த்தலில் வீழ்த்தி முதல் வெற்றி கண்டார். இந்த போட்டியில் முதல் இரண்டு சுற்றில் தோல்வியும், 3–வது சுற்றில் ஆனந்த் டிராவும் கண்டு இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: விராட்கோலி 4–வது இடம் 20 ஓவர் கிரிக்கெட் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் பின்தங்கி 4–வது இடம் பெற்றார். இந்திய வீரர்கள் சுரேஷ்ரெய்னா 5–வது இடத்திலும், யுவராஜ்சிங் 6–வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் எந்தவொரு இந்திய வீரரும் 'டாப்–10' இடத்துக்குள் வரவில்லை. ஆல்–ரவுண்டர் தர வரிசையில் யுவராஜ்சிங் 3–வது இடம் பெற்றுள்ளார். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |